Sunday, August 31, 2008

D.S.P. - சொந்த துறையை எழுத ஆசை!

ற்போது பணியாற்றிக் கொண்டிருக்கும் Digital Signal Processing என்ற தொழில்நுட்பத்தைப் பேசலாம் என்று இந்த தொடர். The History of Time நூலில் ஸ்டீபன் ஹாக்கிங் சொல்லியுள்ளது போல், எவ்வளவுக்கு எவ்வளவு கணிதச் சமன்பாடுகளைக் குறைத்து, வாக்கியங்களாய்த் தர முடிகின்றதோ, அப்படி முயல்கிறேன்.

படிப்பவர்களுக்கு சில அடிப்படைத் தகுதிகள் மட்டும் இருந்தால் போதும் என்ற எண்ணத்தில் இதைப் பற்றிப் பேச இயல்கிறேன். தகுதிகள் = தமிழ் படிக்கத் தெரிதல்,சில எளிய ஆங்கில வார்த்தைகளை அறிந்திருத்தல் மற்றும் புதிதாக எதையாவது தெரிந்து கொள்ளும் ஆர்வம்.

னிய தமிழில், தொழில்நுட்பங்களைப் பற்றி அலசும் பற்பல பதிவுகள் உள்ளன.

http://tamilmarketing.blogspot.com/

http://stock.tamilsasi.com/

http://tamilnithi.blogspot.com/

http://porulsey.blogspot.com/

http://masivakumar.googlepages.com/588leather-collection.html

http://masivakumar.googlepages.com/annotated-economics.html

http://fuelcellintamil.blogspot.com/

http://tedujobs.blogspot.com/

இத் தொடர் எப்போது வரும், எப்படி வரும் என்பது யாருக்கும், என்னையும் சேர்த்து தான், தெரியாது. எப்போது வேண்டுமானாலும் வரலாம். ரொம்ப காலத்திற்கு வராமலும் இருக்கலாம். திடீரென நான்கைந்து பதிவுகள் ஒரேயடியாக வரலாம். சுருங்கச் சொன்னால், சிறு பத்திரிக்கைகள் போல!

இப்படி ஒரு தொடரைத் துவங்க என்ன காரணம்?

1. கல்லூரி முடிந்ததும் விட்டதோடு சரி. அதற்குப் பிறகு தியரிட்டிகலாக இத்துறையைப் பார்க்கவில்லை. பணி சார்ந்த சிந்தித்தலோடு மூளை வேலை செய்வதை நிறுத்தி விடுவதால், அதற்குப் படிப்பு பக்கமும் கவனம் கொடுக்க இப்பதிவு.

2. இப்பதிவிடும் நோக்கிலாவது, புதிய செய்திகளைப் படிக்கலாம் என்ற எண்ணம்.

3. மீண்டும் அடிப்படைக் கொள்கைகளை அலசிப் பார்ப்பதால், ‘பில்டிங் மட்டும் ஸ்ட்ராங்காக வைத்துக் கொள்ளாமல், பேஸ்மெண்ட்டை வீக்காக மாறி விடாமல்’ இருக்கவும் இப்பதிவு.

4. வேறு யாரெல்லாம் இத்துறையில் இருக்கும் பதிவர்கள் என்று தெரிந்து கொள்ளவும், குழுமம் அமைக்கவும் எண்ணம்.

யாரேனும் பழைய கதைகளைத் தேடிப் புரட்டிப் பார்த்து, கையை உயர்த்தி, என் மேல் கல்லெறிவதற்கு முன் இப்போதே சொல்லி விடுகிறேன். இப்பாடத்தில் எனது மதிப்பெண்கள் குறைவு தான். ஆனால் வாழ்வின் விசித்திரம் பாருங்கள், அதி உயர் மதிப்பெண்கள் பெற்ற நண்பர்கள் அனைவரும் மென்பொருள் பணிக்குச் சென்று விட, குறை மதிப்பெண் பெற்ற என்னைப் போன்ற சிலர் Core துறையிலே பணி செய்கிறோம்.

ஆனால் படிக்கும் காலத்தில் DSP மேல் ஒரு தனிப்பட்ட ஆர்வம் இருந்தது உண்மை. இப்போது அதிலேயே பணி பார்ப்பதால், கொஞ்சம் மகிழ்ச்சி. அப்போது புரியாமல் விட்ட, தாண்டி வந்த அடிப்படைகளை பார்ப்பதற்காகவும் இதை எழுத உள்ளார்ந்த நிறைவு.

அவ்வப்போது பார்க்கலாம்.

No comments: