"ஸோ..! நீங்களும் சென்னை தான் இல்லையா..?" மென்மையாகச் சிரித்தாள்.
எனக்கு அவளிடம் கொஞ்சம் விளையாடிப் பார்க்கத் தோன்றியது. அட்லீஸ்ட் விபின் வரும் வரை. விபின் நேராக ஆபீஸில் இருந்து வந்து விடுவதாகச் சொல்லி, நான் வீட்டில் - ஷேர்ட் வீட்டில் - இருந்து அவனது பேக்கேஜை எடுத்து ஸ்டேஷனுக்கு கொண்டு வந்து வைத்து, அவனுக்காக காத்திருக்கும் வேளையில்,
"எக்ஸ்க்யூஸ் மீ..?"
"எஸ்! நானும் சென்னை தான் வருகிறேன்..! நீங்கள்..?" என்றேன்.
இரண்டு நொடிகள் கழித்து, "மீ டூ..! நீங்க தமிழா?"
"எஸ்...!"
அவளுக்கு கொஞ்சம் ரிலீஃபாக இருந்திருக்க வேண்டும். மொழி தெரியாத மாநிலத்தில் எல்லையைக் கடக்கும் ஆறு மணி நேரம் வரை பயணம் செய்யும் போது, பேசி வருவதற்கு ஒரு குரல் கிடைத்தால் யாருக்கும் சந்தோஷமே!
அவளைப் பார்வையால் தடவினேன்.
பனாமா ஐலண்ட் போட், சில தென்னை மரங்கள் பதித்திருந்த ஃப்ரீ டீ-ஷர்ட், ஸ்கை ப்ளூ ஜீன்ஸ், அழகான பூனை மூடி வாட்ச், மென் பொன்னிற ரப்பர் பேண்ட் ஹேர், சம்பந்தமே இல்லாமல் ஒரு ருத்ராட்ச மாலை, கையில் The Sky is Falling...சுத்தமான ஐ.டி. பெண்.
கம்பார்ட்மெண்ட்டில் சிலர் மட்டுமே இருந்தனர். நான், அவள், ஒரு குடும்பம், ஒரு கிழவன், ஒரு பெண். மிடில் பர்த் இன்னும் நீட்டப்படாததால், லோயரிலேயே எதிரெதிரில் அமர்ந்து கொண்டோம். "சாயா...சாயா..." ரெயில்வே டீ வந்தது. இரண்டு கப்கள் வாங்கிக் கொண்டு...
"மை நேம் இஸ் ப்ரீத்தி! இங்க ஈ அண்ட் ஒய்ல சாஃப்ட்வேர்ல இருக்கேன். நீங்க..?"கை நீட்டினாள்.
"மீ ஷ்யாம்...! இன்ஃபில! ஊருக்குப் போகணும். ஃப்ரெண்ட் மேரேஜ்." மிருதுவாக இருந்தது. எனக்கு ஆச்சரியமாக இருந்தது. எப்படி என்னால் சரளமாகப் பொய் சொல்ல முடிகின்றது? அவனது ஃப்ரெண்ட் மேரேஜுக்காக விபின் தான் போகப் போகிறான். ஐ கம் ஃபார் ஜஸ்ட் சென்ட் ஆஃப். சரி, விளையாடுவோம். எதுவரைக்கும் போகிறதோ போகட்டும்.
"நானும் எங்க கஸின் சிஸ்டர் மேரேஜுக்குத் தான் போய்ட்டு இருக்கேன். விஜயசேஷ மஹால்ல. கமிங் வெட்னஸ்டே..!"
"சேம் பிஞ்ச்! அதே வெட்னஸ்டே தான் என் ஃப்ரெண்ட் மேரேஜும்! ட்வெண்ட்டி எய்ட்த் தானா?"
"ஆமா..! அதே தான்..!"
"கடைசில சினிமா மாதிரி இருக்கப் போகுது! உங்க கஸின் சிஸ்டரைத் தான் என் ஃப்ரெண்ட் பண்ணிக்கறானோ என்னவோ..? அவங்க பேர் என்ன..?"
"காயத்ரி..! ஐ திங்க் நீங்க நிறைய தமிழ் ஃபிலிம்ஸ் பாக்கறீங்கனு தோணுது..!"
"ஊப்ஸ்! அவன் உட்பி பேரு சசி! ஒரு வேளை அது அவங்க நிக் நேமா இருக்குமோ..?"
""இம்பாஸிபிள்! என் கஸின் சிஸ்டர் சிங்கப்பூர்ல இருந்து, இந்த மேரேஜுக்காக வர்றா. அவளோட உட்பி ஜெர்மன்ல இருந்து ஃபிஃப்டீன் டேஸ் லீவ் எடுத்திட்டு வர்றார். அவர் உங்க ஃப்ரெண்ட்டா இருக்க சான்ஸே இல்ல..!"
"ஓ.கே. இட்ஸ் ஃபைன்...!"
கால் அடித்தது.
"சொல்லு நர்மி. ஆமா, நான் ட்வெண்ட்டி மினிட்ஸ் முன்னாடியே வந்திட்டேன். ஐ ஏம் வெய்ட்டிங் ஃபார் யூ..! சீக்கிரம் வாடி! பை..! நர்மி..! நர்மதா. நம்ம கூட ட்ராவல் பண்ணப் போறா..! வந்திட்டு இருக்கா..!" என்றாள்.
அடி பேதைப் பெண்ணே! நான் விளையாடுவது தெரியாமல் இவ்வளவு அப்பாவியாக இருக்கின்றாயே! விபின் இஸ் எ லக்கி கை! ரெண்டு பொண்ணுங்களோடு சென்னை வரைக்கும் ட்ரெய்ன் ட்ராவல். ஹூம்!
உயிரே..! என் உயிரே..! என்னவோ நினைக்குதடி..!
இப்போது எனக்கு.
"சொல்டா..! எங்க சிக்கிக்கிட்ட..? பி.எம்.ஜி.லயா..? அவ்ளோ ட்ராஃபிக்கா..? டக்குனு ஜம்ப் பண்ணி ஆட்டோ ஏதாவது பிடிச்சு, க்ரவுண்ட் வழியா வரப் பாரு. இன்னும் ஃபிவ் மினிட்ஸ் தான் இருக்கு..! ஓ.கே. பை..!" கட் செய்து விட்டு, "ஃப்ரெண்டுங்க. அவனும் வர்றான். இப்ப ட்ராஃபிக்ல மாட்டிக்கிட்டான். வந்திடுவான்..! விபின்..! என்ன புக் கைல வெச்சிருக்கீங்க..?"
பிறகு எங்கள் பேச்சு அண்டர் த சன் எல்லா பக்கமும் சென்று வந்து கொண்டே இருந்தது.
விபின் வந்தான்.
"டா..! எவ்ளோ ட்ராபிக்..! சரி..! நீ கி..!"
அப்போது தான் அவளைப் பார்த்தான்.
"ஓ.! ஸாரி..! ஏதோ பேசிட்டு இருந்தீங்க போல! டிஸ்டர்ப் பண்ணிட்டனா..?"
"நோ ப்ராப்ளம். நீ வா. இவங்க தான் உன் கூட ட்ராவல் பண்ணப் போறாங்க. ஆமாங்க. ஸாரி. இவன் தான் ட்ராவலர். ஐ ஜஸ்ட் கேம் ஃபார் செண்டிங் ஆஃப் ஹிம். சும்மா உங்க கூட பேசிட்டு இருக்கலாம்னு தோணிச்சு. அதான்...! ஓ.கே. தேங்க்ஸ் ஃபார் எ நைஸ் கன்வர்சேஷன்..."
அவள் சற்று அதிர்ச்சி அடைந்தவள் போல் ஆனாள். "ஹாய் ப்ரீத்தி..!" என்று சொல்லியவாறு ட்ராவலர்ஸ் பேக்கைச் சுமந்து ஒரு பெண் எங்களை நோக்கி வந்தாள்.
கொஞ்சம் செகண்டுகள் கழித்து என்னைப் பார்த்தவாறே எழுந்து, "ஸாரி! நானும் தான்..!" என்றாள்.
5 comments:
என்னங்க வசந்த்...
எனக்கு 43வது வரியிலேயே முடிவு தெரிஞ்சிருச்சி.இல்லை கதையில வேறு ஏதேனும் உள்குத்து ஸாரி உள்கூறு இருக்கா...?
உடனே முடிச்சிட்டதால தெரியல....
அதுல பாருங்க தமிழ்ப்பறவை...
ரொம்ப நாள ட்ராஃப்ட்லயே இருந்திச்சு இந்த கதை. சர்தான் கழுதய சீக்கிரம் முட்டிச்சிருவமேன்னு எழுதி முடிச்சிட்டேன்.
இதுல எதுவும் உள் குத்து/ கூறு எல்லாம் எதுவும் இல்லை.
ஆமா.. அதெப்படி 43-வது லைன்னு சொல்றீங்க..? அதென்னது 43-வது லைன்...?
ஒரு குத்து மதிப்பா எண்ணிப் பார்த்தேன். எப்ப நர்மதாகிட்ட இருந்து கால் வந்துச்சுன்னு.அப்போதான் எனக்குப் புரிஞ்சது.தல ரொம்ப வித்தியாசமா,நார்மலா முடிக்கப் போறாருன்னு...
நல்ல கதை & நடை. ஆனால் ப்ரீத்திக்கு ஃபோன் வந்ததுமே முடிவை யூகிக்க முடிந்தது. உண்மைக் கதையா??? :))))
அன்பு தமிழ்ப்பறவை அண்ட் வெண்பூ...
எழுதும் போதே நெனச்சேன். அந்த கால் வரும் போதே சஸ்பென்ஸ் காலி ஆகுதேன்னு..! அதே மாதிரி ஆகிடுச்சு...!
ஊப்ஸ்...!!
இனிமேல் உஷாரா இருக்கணும்..!! ;-)
Post a Comment