Tuesday, March 31, 2009

தலைவர் விளையாடல்கள் - 2.

லைவர் ஒரு முறை பஸ்ஸில் பயணம் செய்தார். பஸ் சென்ற பாதை வளைந்து வளைந்து, மேடேறி இறங்கிச் சென்று கொண்டிருந்தது.

ரோடு வலது புறமாக திரும்பும் போது, எல்லோரும் இடது புறம் சரிந்தனர். நின்று கொண்டிருந்தவர்கள் எல்லாம் இடது புறமாக சாய்ந்து தம் கைகளை பஸ்ஸின் சைடுவாக்கில் அழுத்தி, தம் உடல் பேலன்ஸ் செய்து நின்றனர். தலைவருக்கு அன்று அதிர்ஷ்டவசமாக சீட் கிடைக்கவில்லை.

பின்னொரு நாள் இதைப் பற்றிப் பேசும் போது தலைவர் சொன்னார்.

"நான் நின்னுட்டு தான் வந்தேன். நானும் பஸ் வளையும் போதெல்லாம் அதே பக்கமா சாஞ்சு பேலன்ஸ் பண்ணினேன். அதில ஒரு ஆச்சரியம்..."

"என்ன, சொல்லுங்க தலைவரே...!!!"

"பஸ் ரைட்ல திரும்பும் போது, எல்லோரும் லெப்ட் சைட் சாயறாங்க. நிக்கறவங்க எல்லாம் லெப்ட் சைட்லயே சாஞ்சு கையை ஊன்றி அந்த ஃபோர்ஸ்ல அவங்க உடம்பை ரைட் சைடுக்குத் தள்ளி பேலன்ஸ் பண்ணிக்கறாங்க. அப்போ நியூட்டன் தேர்ட் லாபடி அவங்க கைல இருந்து சமமான ஃபோர்ஸ் போய் பஸ்ஸை இன்னும் லெப்ட் சைடுக்குத் தள்ளும். அப்போ பஸ் இன்னும் லெப்ட் சைட்ல சாயும். நிக்கறவங்க இன்னும் பேலன்ஸ் பண்றதுக்காக கைக்கு இன்னும் ஃபோர்ஸ் கொடுப்பாங்க...! இந்த சைக்ளிக் ஏக்ஷன்ஸோட முடிவு தான் என்ன...?"

யாரும் ஒன்றும் பேசவில்லை.

ட்ரான்ஸ்மிஷன் லைன்ஸ் அண்ட் நெட்வொர்க்ஸ் (TLN) என்ற தியரி பேப்பர். அதில் ஓர் அசைன்மெண்ட்டுக்குப் பதிலாக ஒன் மார்க் கேள்விகள் கொண்ட தேர்வு வைக்கப்பட்டது. எல்லோரும் ரோல் நம்பர் படி அமர்ந்தோம். தலைவருக்கு மிக்க மகிழ்ச்சி. காரணம் அவருக்குப் பின் அமர்ந்திருந்தது ஒரு டாப்பர். (யோகா..?)

ஆனால் மேடம் அடுத்தடுத்த மாணவர்களுக்கு கேள்விகளை ஜம்பிள் செய்து கொஸ்டீன் பேப்பர் தயார் செய்திருந்தது தலைவருக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை.

சில கேள்விகளுக்குத் தலைவர் தானாகவே பதில் எழுதினார். ஒரு கேள்விக்கு (இந்த சர்க்யூட்டில் யூஸ் செய்ய வேண்டியது சீரிஸ் கனெக்ஷனா இல்லை ஷண்ட் கனெக்ஷனா?) என்ன பதிலென்று தெரியாமல் பின்னால் கேட்க, அவன் "(2n + 1) / lamda" என்று சொல்ல, அதை எழுதி விட்டு வந்தார்.

தலைவர் நினைத்துக் கொண்டார் : 'சீரிஸா இல்லை ஷண்ட்டா என்று கேட்டு என்னை ஃபூல் செய்யப் பார்க்கிறார்களா..? அது தான் முடியாது. என்னையா எமாற்ற முடியும்..? (2n + 1) / lamda தான் சரி'.

2 comments:

நட்புடன் ஜமால் said...

\\"பஸ் ரைட்ல திரும்பும் போது, எல்லோரும் லெப்ட் சைட் சாயறாங்க. நிக்கறவங்க எல்லாம் லெப்ட் சைட்லயே சாஞ்சு கையை ஊன்றி அந்த ஃபோர்ஸ்ல அவங்க உடம்பை ரைட் சைடுக்குத் தள்ளி பேலன்ஸ் பண்ணிக்கறாங்க. அப்போ நியூட்டன் தேர்ட் லாபடி அவங்க கைல இருந்து சமமான ஃபோர்ஸ் போய் பஸ்ஸை இன்னும் லெப்ட் சைடுக்குத் தள்ளும். அப்போ பஸ் இன்னும் லெப்ட் சைட்ல சாயும். நிக்கறவங்க இன்னும் பேலன்ஸ் பண்றதுக்காக கைக்கு இன்னும் ஃபோர்ஸ் கொடுப்பாங்க...! இந்த சைக்ளிக் ஏக்ஷன்ஸோட முடிவு தான் என்ன...?"
\\

உள்ளுக்கு வேற எதுனாக்கீதா!

இரா. வசந்த குமார். said...

அன்பு நட்புடன் ஜமால்...

உள்ள ஒன்னியும் கெடயாது. அப்டி எதுனா கீதான்னு நானும் தலைவராண்ட கேட்டுப் பாத்தேன். ஒண்ணும் இல்லியாம். நீ ரொம்ப திங்க் பண்ணி மெர்சலாய்டாத.. இன்னா...??