Thursday, March 19, 2009

இரு நூல்கள்.

ப்போது சமீபமாக இரண்டு ஈ-நூல்களைப் படித்துக் கொண்டிருக்கிறேன்... இல்லை, அப்படி சொல்வதை விட செம்மையாக ரசித்து ருசித்துக் கொண்டிருக்கிறேன் என்று சொல்லலாம். நாற்கரச் சாலைகளில் செல்வதைப் போல் சும்மா ஜிவ்வென்று பறக்கின்றன. துவங்கினால் முடிக்கும் வரை மூச்சு விடவும், மூச்சா விடவும் மறந்து கதைக்குள்ளேயே கலந்து விடுகிறோம்...அதாவது நாம் கலந்து விடுகிறோம்.

அ. Brother and Sister.



1920-ல் வெளிவந்த நாவல் என்று சொன்னால் சத்தியமாக நம்பமாட்டீர்கள். எனென்றால் 1921-ல் தான் வெளிவந்தது.

ஜோஸஃபின் லாரன்ஸ் என்ற அம்மணி எழுதி இருக்கிறார். ஏழு குழந்தைகள் இருக்கும் ஒரு நடுத்தரக் குடும்பத்தில் கடைசி இரு குழந்தைகளான ரோட்ஸ் மற்றும் பெட்டியைச் சுற்றி நகரும் புனைவு இது. ரோட்ஸின் ஆறாவது பிறந்த நாளுக்கான கொண்டாட்ட ஏற்பாடுகளில் துவங்கி அவர்கள் இருவரும் பள்ளிக்குச் செல்லத் துவங்கும் வரையான கதை. ஓர் பெண்ணால் மட்டுமே எழுத முடிகின்ற குழந்தைகளைப் பற்றிய சரளமான எழுத்து இது. ஹாலிவுட் படங்களைப் போல் அவர்கள் பள்ளிக்குச் சென்றதைப் பற்றி மற்றொரு நாவல் எழுதி இருக்கிறார்.

இந்தப் புத்தகம் எழுபத்தாறு பக்கங்கள் கொண்டது என்றால் நீங்கள் நம்ப மாட்டீர்கள். ஏனெனில் இது 76 பக்கங்கள் மட்டுமே கொண்டது!

இங்கே பெறலாம்...!!!


ஆ. Yellow on the Outside, Shame on the Inside



அன்சான் சி என்பவர் எழுதியிருந்தாலும் 'ச்சீ...' என்று சொல்லும் வகையில் இன்றி, 'ச்சோ.... ச்வீட்', என்று சொல்லும் வகையில் எழுதப்பட்டிருக்கும் இந்த நாவல் கி.பி.2008-ல் தான் வெளியிடப்பட்டது. தன்னுடைய தளத்திலேயே இலவசமாக இறக்கிக் கொள்ளச் சொல்லும் இவர் ஆர்வமாக நமது கமெண்ட்டுகளை அனுப்பக் கேட்டு, லைலா போல் 'இப்டி..இப்டி..' சிரிக்கிறார்.

அமெரிக்காவில் வசிக்கும் ஆசியக் குடும்பங்களின் போலி அலங்காரங்களை, ஆசியத்தன்மையை அறுத்தெறிந்து விட்டு, அமெரிக்கத்தன்மையை அணிந்து கொள்வதில் அரங்கேற்றும் அபத்தங்களை அழகாக அவிழ்க்கிறார்.

இன்னும் படித்து முடிக்கவில்லை. ஆனால் படித்துக் கொண்டிருக்கும் போதே, புன்னகைத்துப் புன்னகைத்து முகம் மேல் முக்கால் இஞ்சுக்கு சிரிப்பு செருகிக் கொள்கிறது. ஆசியர்கள் என்று பொதுவாகச் சொல்லி இருந்தாலும், 'மஞ்சள் மேனிப் பாவைகள்... தங்கம் மின்னும் அங்கங்கள்...' தேசத்தவரான தென் கிழக்காசிய வியட்நாம், லாவோ, ஜப்பான், தைவான், கொரியா நாட்டினரை வாரிக் கவிழ்த்து தூக்கி வீசுகிறார்.

படித்தவரையிலுமே 'சூப்பர்..!' என்பதால், முடிக்கும் முன்னமே உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.

இங்கே கிடைக்கும்!

ஆசிரியரின் தளம்.

4 comments:

வினோத் கெளதம் said...

சார்,
உங்களுடுய பதிவுகளை வாய்ப்பு கிடைக்கும் பொழுது எல்லாம் படித்து இருக்கிறேன்.
எனக்கு உங்களுடுய பயண கட்டுரைகளை படிக்கும் பொழுது
S.ராமகிருஷ்ணன் அவர்களின் கட்டுரையை படிப்பது போல் அவ்வளவு அழகாக உள்ளது.

இரா. வசந்த குமார். said...

அன்பு vinoth gowtham...

மிக்க நன்றிகள்.

பயணக் கட்டுரைகள் மட்டும் அல்ல, இன்னும் நிறைய வெரைட்டியாக இருக்கும். பொறுமையாகப் படித்துப் பார்த்துச் சொல்லுங்கள்.

எதற்குச் சொல்கிறேன் என்றால், ரிசஷன் காலத்தில் ஊர் சுற்றுவதைக் குறைத்துக் கொள்ள முடிவு செய்திருக்கிறேன். மற்றபடி புனைவுகள் நிறைய எழுதலாம் என்று நினைப்பு.

கற்பனைப் பயணங்களை எந்த ரிசஷனும் ஒன்றும் செய்ய முடியாது அல்லவா..?

மெனக்கெட்டு said...

//படித்தவரையிலுமே 'சூப்பர்..!' என்பதால், முடிக்கும் முன்னமே உங்களுக்கு அறிமுகம் செய்கிறேன்.//

pdf file download செய்தாகி விட்டது. படித்துப் பார்க்கிறேன். நன்றி.

இரா. வசந்த குமார். said...

அன்பு மெனக்கெட்டு...

படித்து விட்டு மறக்காமல் சொல்லுங்கள்.