Friday, May 22, 2009

சிறுகதைப் போட்டியாளர்களுக்கு ஓர் உதவி!

சிவராமன் என்ற புனைபெயர் வைத்திருக்கும் பைத்தியக்காரன், அதிகாரத்தின் உரையாடலைத் தகர்க்கும் உத்தேசத்துடன் தொடங்கியிருக்கும் 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' என்ற மையமற்ற தொகுப்பு, கைக்காசைப் போட்டு ஒரு சிறுகதைப் போட்டி நடத்துகின்றது. 20 கதைகளுக்கு 30K தருகிறார்.

கோதாவில் குதித்து எழுதத் துவங்கும் முன்பாக, சிறுகதை பற்றியும், அதை எழுதுவது பற்றி அனுபவசாலிகள் என்ன சொல்லியிருக்கிறார்கள் என்றும் கொஞ்சம் தெரிந்து கொள்வது அதிகாரத்தின் உரையாடலைச் சுக்கு நூறாக உடைத்து நொறுக்கி ஊதித் தள்ளிவிடும் என்பது கார்க்கி மேல் சத்தியமாதலால் ('பேட்டி என்பது பலகாரத்தைத் தின்று கொண்டே உரையாடல் அல்லவா?' எனக் கேட்கும் அர்ஜூனனின் கேள்விக்கு கிருஷ்ணன் சொன்ன பதில் என்னவாக இருக்கும்?), சில கண்ணிகள் ::

ஜெயமோகன் சொல்கிறார் ::

சிறுகதையில் என்ன நடக்கிறது?
சிறுகதை ஒரு சமையல்குறிப்பு

யெஸ்.பாலபாரதி சொல்வது ::

ஒரு நல்ல சிறுகதை எழுதுவது எப்படி?

திண்ணையின் இலக்கியக் கட்டுரைகள் பகுப்பில், சில நல்ல கட்டுரைகள் வரையறை செய்கின்றன.

சிறுகதை தியானங்கள் (மூலம் : கர்ட் வானகட்)
சிறுகதை - அதன் அகமும் புறமும் - சுந்தர ராமசாமி
அறிவியல் புனைவுகள் - ஓர் எளிய அறிமுக வரலாறு - அரவிந்தன் நீலகண்டன்
படைப்பிலக்கியத்துக்கு அச்சாரம் - இந்திரா பார்த்தசாரதி
'கதைச்சொல்லி'யும், கதையும் - கே. ராமப்ரசாத்.
சிறுகதை என்னம் களம் துரும்படியில் யானை படுத்திருக்கும் - எஸ்.ஷங்கரநாராயணன்
கதை சொல்லுதல் என்னும் உத்தி - தேவமைந்தன்

வே.சபாநாயகம் ஒரு 40 பேரின் குறிப்புகளைத் திண்ணையில் தொகுத்திருக்கிறார். என்ன சொல்கிறார்கள் கீழ் வருபவர்கள்..?

தேவன்
தி.ஜானகிராமன்
சுஜாதா
லா.ச.ராமாமிர்தம்
கி.சந்திரசேகரன்

அகிலன்
தி.ஜ.ரங்கநாதன்
கு.ப.ராஜகோபாலன்
இந்திரா பார்த்தசாரதி
த.ஜெயகாந்தன்

சி.சு.செல்லப்பா
க.நா.சுப்ரமண்யம்
புதுமைப் பித்தன்
அ.ச.ஞானசம்பந்தன்
ஜெயமோகன்

தொ.மு.சி.ரகுநாதன்
வி.ஆர்.எம்.செட்டியார்.
வாசந்தி
அசோகமித்திரன்
கி.ராஜநாராயணன்

மகாகவி பாரதியார்
எம்.டி.வாசுதேவன் நாயர்
அகஸ்தியன்
ந.பிச்சமூர்த்தி.
ந.சிதம்பரசுப்பிரமண்யம்

ரா.ஸ்ரீ.தேசிகன்
லியோ டால்ஸ்டாய்
மாப்பசான்
பி.எஸ்.ராமையா
விந்தன்

பேராசிரியர் கல்கி
ஹெப்ஸிபா ஜேசுதாசன்
அனுராதா ரமணன்
பிரபஞ்சன்
தாலமி

ச.து.சு.யோகி
கஸ்டவ் ஃப்ளாபேர் (Gustave Flaubert)
மாக்சிம் கார்க்கி
ராஜாஜி
சாலை இளந்திரையன்

இவர்களையெல்லாம் படிக்காமலும் அற்புதமான சிறுகதைகள் வருகின்றன. முடிந்த அளவிற்கு படித்துப் பார்க்கலாம்.

போட்டியில் கலந்து கொள்வனவற்றில் ஒரு நல்ல சிறுகதையாவது இவற்றைப் படித்துப் பார்த்து வந்தால், இப்பதிவிற்குச் செலுத்திய உழைப்பு வீணில்லை என்று மகிழ்வேன்.

***

இன்னும் கொஞ்சம், நாளை வேறொரு பதிவில் எழுதுகிறேன்.

***

போட்டிக்குத் தொடர்பு :
சிறுகதைப் போட்டி: 20 கதைகளுக்கு தலா ரூ. 1,500 பரிசு

பைத்தியக்காரன் : 9840907375
(சென்னை நம்பர்.)
sivaraman71@gmail.com

9 comments:

வால்பையன் said...

எனக்கு பரிசு வாங்கும் நம்பிக்கை வந்துருச்சு!

வெட்டிப்பயல் said...

Great Work boss...

நீங்களும் களம் இறங்கறீங்க தானே?

தமிழ்ப்பறவை said...

கலக்கிட்டீங்க வசந்த்...
அருமை...(ஹூம்... இதையெல்லாம் படிச்சித்தான் சிறுகதை எழுதணுமா..? நமக்கில்லை... நமக்கில்லை)

ILA said...

//இதையெல்லாம் படிச்சித்தான் சிறுகதை எழுதணுமா..? //
நல்ல வேளை நானும் ஒரு கதய எழுதிட்டு இந்த இடுகையெல்லாம் படிச்சு இருந்தேனா தூக்கி கடாசி வேண்டி இருக்கும். இந்த அளவுக்கு இல்லாட்டாலும் என் அளவுக்கு முயற்சி பண்ணனும்

இரா. வசந்த குமார். said...

அன்பு வால்பையன்...

thats the spirit. கலக்குங்க.

***

அன்பு வெட்டிஜி...

tnx. எழுதலாம் என்று தான் இருக்கிறேன். நீங்களும் உண்டு தான...? கேள்வியே கேட்க வேண்டாம். வெட்டி இல்லாமலா..?

***
அன்பு தமிழ்ப்பறவை...

நன்றிகள். அதாம் சொல்லியிருக்கோம்ல..! இதையெல்லாம் படிக்காமயும் எழுதலாம்னு..! அப்புறம் என்ன..? ஆரம்பிங்க..!

இரா. வசந்த குமார். said...

அன்பு இளா...

நானும் இதையெல்லாம் ஒரு லுக் விட்டதற்கப்புறம், ஒரு மூலையில் உட்கார்ந்துகிட்டு மூளையில் கை வெச்சு யோசிச்சுக்கிட்டிருக்கேன்..! என்ன எழுதலாம்..? ம்ம்...

பைத்தியக்காரன் said...

Great Work. Thanks nanba. Please participate in our competition...

Bee'morgan said...

வாவ்.. அருமையான தொகுப்பு :) பதிந்தமைக்கு நன்றி.. :)

பிரியமுடன் ரமேஷ் said...

அருமையான தொகுப்பு நன்றி நண்பரே.