ஸ்ட்ராபெர்ரி நிறம் விரும்புவாள்.
சீதாப்பழத்தைத் தோல் வரை தின்பான்.
பாயும் ரயிலுக்குள் பின்னே நடப்பாள்.
கடப்பாறை நீச்சல் தெரிவான்.
தோல் என்பதால் ஷூ வெறுப்பாள்.
தனியாய் மலையேற்றம் போவான்.
தோழியிடம் பிணக்கென்றால் நிலவுடன் சண்டையிடுவாள்.
ஹாங்காங் படப் பேய்களின் ரசிகன்.
பப்பி1, பப்பி2 என்று பூனைகள் வளர்க்கிறாள்.
கண்களைக் கட்டி ரேடியோ அஸெம்ப்ளிங் செய்வான்.
நகங்களை ரத்தம் வரை கடிப்பாள்.
வாட்ச் கட்ட மாட்டான்.
கணக்கில் எப்போதும் அவள் நூறு.
டாய்லெட்டில் புத்தகம் படிப்பான்.
ஊட்டியில் பாட்டி வீட்டுக்குப் பக்கத்தில் முதல் தற்கொலை பார்த்தாள்.
லாரிக்கடியில் பிராய்ந்ததில் வலதுகாலில் அவனுக்கு ஒரு தழும்பு.
வானம் பார்த்து மேகம் எண்ணுவாள்.
பஜ்ஜி படர்ந்த தந்தியை உதறிப் படிப்பான்.
45க்குள் ஒருமுறை அண்டார்ட்டிகா அவள் ஆசை.
டாம் சாயருக்கு ஒரு ஃபேன் ஃபிக்ஷன் அவன் கனவு.
மழையென்றால் அவளுக்கு ஆஹா.
மழையென்றால் அவனுக்கு ஆகா.
கார்த்திகை கடைசி முகூர்த்த முன்னிரவில்,
மண்டபத்தில் டெக்கெடுத்து
'சிங்கார வேலன்' ஓடுகையில்,
சாத்திய அறைக்குள்
பூக்கட்டில் நடுங்க,
அவர்கள்
வேகமாய்ப் புணர்ந்தனர்.
***
(உரையாடல் கவிதைப் போட்டிக்காக எழுதியது.)
37 comments:
a class !
//மழையென்றால் அவளுக்கு ஆஹா.
மழையென்றால் அவனுக்கு ஆகா.//
வாவ்!
தலை கலக்கிட்டீங்க....
ஜ்யோவ்ராம்சுந்தருக்கு இக்கவிதை ரொம்பப் பிடித்துப் போகும்...
வெற்றிபெற வாழ்த்துக்கள்...
முரண் அருமை.
வித்யாசமான முயற்சி....
வெற்றி பெற வாழ்த்துக்கள் ...
அன்பு ...
நன்றிகள்.a Classனு சொல்றீங்களா.. இல்ல 'A' classனு சொல்றீங்களான்னே புரியலைப்பா..!! கவிதை மாதிரியே குழப்பறீங்களே..!!
***
அன்பு வால்ஜி...
நன்றிகள் பாஸ்.
***
அன்பு தமிழ்ப்பறவை..
நன்றிகள். சுந்தர்ஜிக்குப் பிடுக்கும்னு சொல்றீங்க..? சந்தேகம் தான்.
***
அன்பு நிலாரசிகன்...
நன்றிகள்..!
***
அன்பு ரமணன்...
முதல் வருகைக்கு நன்றிகள். கமெண்ட்டிற்கும்..! :)
நல்ல கவிதை.இதுக்கெதுக்கு மலையாள பிட்டுப் படம் ரேஞ்சுக்கு `A' போட்டு விட்டீங்க.முரணை உணர்கிறேன்.அருமை.
அருமையான கவிதை
நல்ல வரிகள்
நடையும் சிறப்பாக உள்ளது.
பாராட்டுகள்
வெற்றிபெற வாழ்த்துகிறேன்.
அன்பு ஸ்ரீ...
நன்றிகள். வழக்கமா படிக்கற மாதிரி இல்லாம கொஞ்சம் மேட்டரா வர்றதுனால, நம்ம கடமை அதைச் சரியாக எச்சரிக்கை செய்து விடுவது தானே..! விரும்பாதவர்கள் விலகி விடட்டும் என்பதற்காகத் தான்.!
***
அன்பு தியாவின் பேனா...
நன்றிகள்.
ரசித்தேன்...
வெற்றி பெற வாழ்த்துகள்
-ப்ரியமுடன்
சேரல்
ம்ம். சூப்பர். இதைத்தான் அன்றே சொன்னேன். வேறு எழுதிப் போடுங்கப்பான்னு.
வாழ்த்துக்கள்.
-வித்யா
அன்பு சேரல்...
நன்றிகள்.
***
அன்பு விதூஷ்...
மிக நன்றிகள். ஆமா, அது என்ன, எப்ப 'வேற எழுதிப் போடுங்கன்னு சொன்னீங்க..?' கொஞ்சம் கண்ணி குடுத்தீங்கன்னா படிப்போமே..!
உங்கள் கூட்ட, கூட்டவும்... கவிதையில் என் பின்னூட்டத்தை சொன்னேன். :))
//////////
Vidhoosh said...
:) ! ஆனா போட்டிக்கு? ஏன்ன்ன்?
December 3, 2009 9:25 AM
Vidhoosh said...
வேற கவிதை எழுதி இதை மாத்திருங்க வசந்த். கொஞ்சம் உக்காந்து யோசிங்க.
--வித்யா
December 3, 2009 9:25 AM ////////////
விதூஷ்...அது வேற வசந்த் மாதிரி தெரியுதுங்க...இந்தக் கண்ணியைக் க்ளிக் பண்ணுங்க...!
'ஆகா..! ஏரியா விட்டு ஏரியா வந்து வாய் விட்டு மாட்டிக்கிடயேடா சீனா தானா..'ன்னு நீங்க நெனச்சுக்கறது, இங்க கேக்குதுங்கோவ்...!!! :)))
ரசிக்கும்படியான முரண் மிகவும் அருமை !
வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!
வெற்றிபெற வாழ்த்துகிறேன்
மிகவும் பிடித்தது.
முரண் கவிதை மிக மிக முரணாகவே இருக்கிறது. ஆணுக்கு முரண் பெண் தானே.
வெற்றி பெற வாழ்த்துகள்.
muran than suvarasiyam muran niranthathu thaan vaazhakai
nalla kavithai nadakum kavaithai
all the best
padma
இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துகள் & வெற்றி பெற வாழ்த்துகள்
அன்பு அவனி அரவிந்தன்...
மிக்க நன்றிகள்.
***
அன்பு தேனம்மைலக்ஷ்மணன்...
மிக்க நன்றிகள்.
***
அன்பு இராவணன்...
எனக்கும் உங்கள் பின்னூட்டம் ரொம்பப் பிடிக்கிறது..! :)
***
அன்பு இராதாகிருஷ்ணன்...
மிக்க நன்றிகள்.
***
அன்பு பத்மா...
மிக்க நன்றிகள்.
***
அன்பு சக்தியின் மனம்...
உங்களுக்கும் நன்றிகள் மற்றும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்..!
மறுபடியும் ரசிக்கிறேன்....
:-)
//ஸ்ட்ராபெர்ரி நிறம் விரும்புவாள்.
பாயும் ரயிலுக்குள் பின்னே நடப்பாள்.
தோல் என்பதால் ஷூ வெறுப்பாள்.
தோழியிடம் பிணக்கென்றால் நிலவுடன் சண்டையிடுவாள்.
பப்பி1, பப்பி2 என்று பூனைகள் வளர்க்கிறாள்.
நகங்களை ரத்தம் வரை கடிப்பாள்.
கணக்கில் எப்போதும் அவள் நூறு.
வானம் பார்த்து மேகம் எண்ணுவாள்.
மழையென்றால் அவளுக்கு ஆஹா.//
நல்ல ரசனை...
மறுபடியும் ரசிக்கிறேன்....
:-)
அன்பு தமிழ்ப்பறவை...
உங்கள் ரசிப்புக்கு நன்றிகள்..! :)
பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள்!
அன்புடன்
உழவன்
வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துகள் வசந்த்! :-)
வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துகள் வசந்தகுமார்!
-ப்ரியமுடன்
சேரல்
வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள் நண்பரே...
வாழ்த்துக்கள் வசந்த். :-)
வெற்றிப் பெற்றமைக்கு வாழ்த்துக்கள் நண்பரே... கவிதை யதார்த்தமாகவும் இருக்கிறது..
அன்பு உழவன், பா.ராஜாராம், சேரல், கமலேஷ், முரளிகுமார் பத்மநாபன்...
நன்றிகள்..! :)
அன்பு க.பாலாசி...
நன்றிகள்..! :)
வாவ் வாழ்த்துக்கள்!! :)
ரொம்ப நல்லா இருக்குங்க, வாழ்த்துகள்
அன்பு கார்த்திக், யாத்ரா...
நன்றிகள்..! :)
வெற்றிபெற்றமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்....
அன்பு கவிநா...
நன்றிகள்.
Post a Comment