Tuesday, March 07, 2017

புதுப் பிள்ளையார்.

பல்லவி:

மூத்தபிள்ளை சுந்தரா...
முழுமதிநிறை மந்திரா...

கனிகொண்ட கள்வனே - மாங்
கனிகொண்ட கள்வனே - என்மேல்
கனிவாய்நீ கணபதியே...


அனுபல்லவி:

தந்தைக்குத் துணைவன்நீ
தம்பிக்கு நண்பன்நீ
அன்னைக்கு அன்பன்நீ
அன்பர்க்கோ யாவும்நீ... (மூத்தபிள்ளை)



சரணம் 1:

அவ்வைக்குத் தமிழைத் தந்து,
அவள்தமிழில் குளுமை கொண்டு,
அழகனுக்குக் கன்னி தந்து,
அரசடியிலே அமர்ந்த.. (மூத்தபிள்ளை)



சரணம் 2:

எல்லோர்க்கும் செல்லப்பிள்ளை
எவரிடத்தும் மறுப்புமில்லை
பொல்லார்க்கும் பொறுமைகாட்டி
நல்லார்க்கு நலமூட்டும்... (மூத்தபிள்ளை)


No comments: