Thursday, September 28, 2006

தனிமை நடை!


மாலையின்
நீள நிழல்கள்
படிகின்ற சாலையில்
நடக்கின்றேன்,
தனிமையில்!

உன் நினைவுகளைக்
கைத்தடியாக
ஊன்றிக் கொண்டு,
நிலத்தைத் தட்டுகையில்,
உடைகின்றன
என் கனவுகள்!

மெல்ல
போர்வையாய்ப் போர்த்துகின்ற
மஞ்சள் வெயில்,
நிரப்புகின்றது
வெம்மை சூழ்ந்த
சில நினைவுகளை!

பருவத்தின் பாதையில்
பூத்த
நம் மலர்களைப்
ப்றித்தது,
வலுவான
வாடைக் காற்று!

கைகோர்த்து நடந்த
நாட்களின்
உறைந்த கனம்
தாங்காமல்,
தவிக்கும்
இன்றைய தினம்!

பனி பெய்கின்ற
மெல்லிரவில்,
ஏதோ ஒரு
படுக்கையின் மேல்,
கரைந்து போய்க்
கொண்டேயிருக்கின்றன
நம் சத்தியங்கள்...!

2 comments:

Anonymous said...

வாவ்!!!...மிகவும் அழகிய கவிதை வசந்த்...வாழ்த்துக்கள்...

///ஏதோ ஒரு
படுக்கையின் மேல்,
கரைந்து போய்க்
கொண்டேயிருக்கின்றன
நம் சத்தியங்கள்...!///

கரையும் வாழ்க்கையைப் போல்...

இரா. வசந்த குமார். said...

அன்பு மல்லிகைக்கு... மிக்க நன்றிகள்...