Thursday, May 31, 2007

துணை நீயே.


ள்ளானா,
இல்லானா..?

இல்லாள்,
இல்லான்,

ஏதும்
அல்லான்,

ஒரு போதும்
பொய் சொல்லான்,

உள்ளே
சூது இல்லான்,

தீவழி
செல்லான்

உள்ளத்தில்
உள்ளானா,
இல்லானா..?

உருவு கொண்டானா,
அருவு என்றானா.

அருவிலிருந்து
கருவாகி,

கருவிலிருந்து
உருவாகி,

உருவிலிருந்து
எருவாகி,

எருவிலிருந்து
அருவானானா..?

ஒருபோதும்
முடியாத சக்கரமாய்
உருள்கின்ற நேரங்களில்,

ஒருநாளும்
அடையாத கதவுகள்
கொண்டவனா?

மனம் வெதும்பி,
மெளனம் பூசிக் கொள்ளும்
போதும்,

தினம் போராடும்
கணங்கள் நிறைந்து
கலங்கிடும் போதும்,

துணை நானே,
உனைக் காக்க,
நினை எனையே
என்பவனா...?

2 comments:

Anonymous said...

இந்தக் கவிதையின் அர்த்தம் புரிந்தும் புரியாமலும் இருக்கு எனக்கு...:(

unga page open seidhadhum enoda compu-la edho virus infect aayidhuchunu nenaichen... :))))

idhuku andha adikara blue-vey betternu thonudhu...:))

இரா. வசந்த குமார். said...

அன்பு மல்லிகை... இறையின் ஆற்றலைச் சொல்லப் புகுந்தேன். வேறு மாதிரி ஆகி விட்டது..;-)

புள்ளி வெச்சுப் பார்த்தேன்... இதுவும் நல்லாயில்லைனு சொல்லிட்டீங்க... பரவாயில்லை.. வேறு ஏதாவது அம்புடுற வரைக்கும் இதைச் சகிச்சுக்கோங்கோ...