Friday, June 08, 2007

நான்... ஒரு கூழாங்கல்.


சும்மா கிடக்கின்றது ஒரு கல்.

எவ்வாறோ, எதனாலோ நகர்த்தப்பட்டு, நகர்ந்து கொண்டு வந்து சேர்ந்தது ஆற்றின் போக்கிற்கு!

எங்கோ கிடந்த அதை, பேரோசையோடு தன்னுள் அணைத்து, உருட்டிப் பிரட்டி, அருவிகளில் விழுக்காட்டி, சரிவுகளில் முழுக்காட்டி, வேறு எங்கோ ஒரு புள்ளியில் கொண்டு வந்து சேர்க்கின்றது, நதி.

அப்போதைய புள்ளிக்கும், இப்போதைய புள்ளிக்குமான தொலைவை நீரால் நிரப்பி இருக்கின்றது ஒரு பயணம்.

நதியின் போக்கிற்கே தன்னை ஒப்படைத்த கல், எண்ணிய முடிவுப் புள்ளியை எட்டாமல் எங்கெங்கோ கொன்டு சேர்க்கின்றது, தன்னுள் இணைத்துக் கொண்ட ஆறு..!

எங்கெங்கோ பயணங்கள்...! ஏதேதோ நினைவுகள்..!

பாதையெங்கும் கீறிச்சென்றும், கல்லின் மேல் பாய்கின்ற நீர்த் துளிகளால், நிலை மாறுகின்றது, வெறுங்கல், கூழாங்கல்லாய்..!

2 comments:

Anonymous said...

பலரின் வாழ்க்கையும் நதியோடு நகர்த்தப்படும் கல்லாகத்தான் போய்விடுகிறது..:)

நல்ல comparision வசந்த்...

கல்லுக்கும் கூழாங்கல்லுக்கும் என்ன வித்தியாசம்?

இரா. வசந்த குமார். said...

கல்-ங்கறது சும்மா கல்லு மாதிரி இருக்கும்.. கூழாங்கல்லுங்கறது, நீர்நிலைகளிலேயே இருப்பதால் Cool-ஆக இருப்பதால், Coolaங்கல்னு பேர் வந்திருக்குமோ...?