Saturday, January 12, 2008

இராஜாங்கம்.



சைஞானியின் இளவல் யுவன்சங்கர் ராஜாவிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு (பருத்தி வீரனுக்குப் பிறகு என்று நினைக்கிறேன்.) 'எப்போது 'தென்றல் வந்து தீண்டும் போது' போல் நான் பாட்டு போடுகிறேனோ அப்போது தான் நானும் இசையில் ஏதேனும் கொஞ்சம் செய்திருக்கிறேன் என்று நம்புவேன்' என்று கூறியிருந்தார்.

என்ன ஓர் அற்புதமான பாடல்.

இப்பாடல் என் வாழ்வில் ஒரு துயரமான (அத்துயரம் அப்போது தெரியவில்லை..! பள்ளி வயது..!) நிகழ்வோடு பிணைந்திருப்பதால், எப்போது கேட்கையிலும் மனம் எங்கோ பறக்கத் தொடங்கும்.

இப்போது தெரிகிறது, அப்படி எந்நிகழ்வும் இல்லாவிடினும் இப்பாடல் காதுகள் வழி இசையாய் நுழைந்து, கண்கள் வழி நீராய்ப் பெருகும் வல்லமை வாய்ந்தது என்பது புரிகிறது.

பாடலோடு இயைந்த காட்சியமைப்புகளும், திரையை நிரப்பும் வண்ணங்களின் சிதறல்களும், ஒரு மெல்லிய நூலாக இயைந்து வரும் சோக உணர்வும் இப்பாடலை எக்காலத்துக்கும் நிலைத்திருக்கச் செய்யும்.

சுக ராகம் சோகம் தானே..!



இராஜா அவர்கள் நல்ல கதைக்காகவும் படங்களுக்காகவும் காத்திருக்காமல், தன் உள் ஆற்றல் வெளிப்பாடாக இது போன்ற பாடல்களை வெளியிட வேண்டும். தமிழ் ஆல்பமாகவே போடலாம். சத்தியமாகத் தோற்காது.

ஏனெனில் காசுக்கான கலை வெளிப்பாடு காற்றோடு கரைந்து போகும். தன் ஜீவனின் ரசத்தை வெளிப்படுத்திய கலை வடிவம் காலத்தோடு உறைந்து நிற்கும். மோனலிசா தவிர டா-வின்சியின் வேறு படங்கள் எத்தனை பேருக்குத் தெரியும்...?

1 comment:

Anonymous said...

வசந்த்
உன்னுடைய ராஜாவின் இராஜாங்கம் படித்தேன் .excellent super. பள்ளியில் படிக்கும் போது ஒரு நிகழ்வு நடந்தது என்றும் அப்பொழுதுதான் இந்த பாட்டை கேட்டதாகவும் எழுதி இருந்தாய். அது என்ன என்று சொல்வாயா .நீ இசையரசரிடம் விண்ணபித்துள்ளதை அவர் பார்த்தால் கட்டாயம் நிறைவேற்றுவார் என்று நினைக்கிறேன்