Thursday, June 26, 2008

கொசு கடித்தது.

'னிய காலை வணக்கம்'. விக்கி அசிஸ்டெண்ட் குரல் தேனாய்ப் பாய்ந்தது. ஃபோம் மெத்தையின் பஞ்சுப் பொதிகள் அட்டோமேட்டிக்காக சுருங்கிக் கொள்ள, லேஸர் தட்டில் இரண்டு டாப்லெட்டுகளுடன், ஸிந்தட்டிக் சூரியக்கதிர்கள் ஜன்னல் வழி பாய மற்றொரு தினம் துவங்கியது.

இது வழக்கமாக எழும் நேரம் அல்ல. கொஞ்சம் தாமதம் தான். காரணம்... அதை விடுங்கள். அலுவலகம் விட்டுக் கிளம்பும் போது அரசாங்கத்தின் புகை அறிவிப்பு வந்தது. வழக்கமாக புகை அறிவிப்பு வராது. அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் சின்னமோன் பிடிக்கும் போது, புகையில் அறிவிப்பு வரும். 'இன்றைய கோட்டா முடிகின்றது..'.

நேற்று வந்த அறிவிப்பு முற்றிலும் நான் எதிர்பாராதது. ட்ரான்ஸ்போர்ட்டிங் டிவைஸின் முன் காத்துக் கொண்டிருந்து, எனது முறை வந்த போது, C654 நிறுத்தி புகை அறிவிப்பை விரித்துக் காட்டியது.

'நாளை உஷாராக இருக்கவும். புது வைரஸ் அட்டாக் நிகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.'. மறைந்தது.

ட்ரான்ஸ்போர்ட்டிங் டிவைஸின் கதவுகள் திறந்து கொள்ள, புகுந்தேன். வழக்கமான ப்ராசஸ் நிகழ்ந்து, மெகா அல்ட்ரா ஹை ஃப்ரீக்வன்ஸி அலைகளாகப் பயணம் செய்த போது, மனம் எனும் வஸ்து சிந்தித்தது. வஸ்து என்றால் திடமான வஸ்து அல்ல. அது கிகாஹெர்ட்ஸ் ரேஞ்சில் காரியர் வேவாக அனுப்பப்படும்.

திடீரென எட்வர்டு பேஜ் மைக்கேலின் கதை போல் எங்காவது பேட்டரி தீர்ந்து போனால் என்னாகும்? அலைகளாகவே சுற்ற வேண்டியதாகவே இருக்கும் என்று தோன்றியது.

கொஞ்ச நாட்களாகவே இந்த சிந்தனை, பயம் வந்து கொண்டே இருக்கின்றது. கூடிய சீக்கிரம் ஏதோ நிகழப் போகின்றது என்பதற்கான அடையாளமாகத் தோன்றியது.

'ணக்கம். அரசாங்கத்தின் அறிவிப்பு இது. இன்று உங்கள் வேலைகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்படுகின்றன. உங்கள் வீட்டைச் சுற்றிலும் செக்யூரிட்டி அதிகரிக்கப்பட்டுள்ளது. காலை உணவை எடுத்துக் கொண்டு விஷன் ஸ்பெக்ஸில் அமிழ்ந்து கொள்ளவும்.'.

சொல்லி விட்டு விக்கி தலை வணங்கி, கை குவித்து நின்றான். இந்த போஸ் நன்றாகவே இருக்கிறது. ஒரு முறை ஏர் இந்தியா பற்றி தேடச் சொல்ல, 'மஹாராஜா' பிக்சர் பார்த்து விட்டு, 'பாஸ், எனக்கும் இந்த போஸ் எடுத்துக்கறேன்.'

பிட் மேப் பிக்சர்ஸ் எல்லாம் சேர்ச் பண்ணி விட்டு, அந்த பிக்சர்ஸை வயர்லெஸ் வழி ப்ரிண்ட் எடுத்து, அணிந்து கொண்டான். விக்கி அசிஸ்டெண்ட் உண்மையிலேயே நன்றாகவே வேலை செய்கிறான். கான்ஃபிக்யூரேஷன் அட்டகாசம். அவனுக்கு காலை உணவிட வேண்டும்.

'இட்லி, மசால் வடை, கெட்டிச் சட்னி, சாம்பார், அஸ்ஸாம் டீ' என்று சியர்ச் செய்யச் சொல்லி விட்டேன். எனர்ஜி ஃப்ரம் இன்ஃபர்மேஷன். விக்கி அசிஸ்டெண்ட் அப்படித் தான் அஸெம்பிள் செய்யப்பட்டு உள்ளான்.

லேஸர் தட்டில் இருந்த டாப்லெட்ஸை எடுத்துக் கொண்டேன். மெர்க்குரி ரசாயனத்தில் கலந்து குடித்து முடித்து, விஷன் ஸ்பெக்ஸை அணிந்து கொண்டேன்.

'வணக்கம். இன்றைய நாள் முழுதும் உங்களுடன் பேசிப் பொழுது போக்க நான் அனுப்பப்பட்டுள்ளேன். ஏதேனும் கேட்க விரும்புகிறீர்களா..?' வசீகரமாய் சிரித்தாள். ஃபைபர் தொகுப்புகளில் மல்டிகலர் ஆப்ஷனில் லேஸர்களைச் செலுத்தி உண்டாக்கப்படும் பிம்பம். நமக்கு எப்படிப்பட்ட எதிராளி வேண்டும் என்பதை செட் செய்ய ஆப்ஷன்கள் இருந்தன. வேறு மாதிரி செட் செய்து விடுவார்களோ என்ற சர்வைவல் பயம் இன்றி சிரித்துக் கொண்டு இருந்தாள்.

பேசத் தொடங்கினோம்.

'முதலில் உன் பெயர் என்ன..?' பேஸிக் இன்ஸ்டின்க்ட்.

'எனது பெயர் Thg4de3.'

இதற்கு மேல் ஏதும் அவளிடம் இருந்து பெயராது. தர்க்கவியலின் உச்சபட்ச கான்செப்ட்களைக் கொண்டு உருவாக்கப்படும் சாதனங்களில் மிக எளிமையான பதில்களே காத்திருக்கும்.

'சரி. இன்று எனக்கு என்ன நிகழப் போகின்றது?'

'மன்னிக்கவும். அதைப்பற்றிய ரிப்போர்ட்கள் எனக்குத் தரப்படவில்லை.'

'கொஞ்ச நாட்களாக எனக்கு ஏற்படும் சிந்தனைக்கு காரணம் என்ன?'

'நீங்கள் க்ளாஸிக் சயின்ஸ் பிக்ஷன் ஸ்டோரிஸ் எடுத்துக் கொள்ளும் போது கொஞ்சம் கூட டோஸ் எடுத்துக் கொண்டீர்கள். அதன் மிச்ச விளைவுகளே நீங்கள் கொள்ளும் தேவையற்ற பயம்.'

கொஞ்ச நேரம் இது போல் பேசிக் கொண்டிருந்து விட்டு, அணைத்தேன். தொலைந்தாள்.

படுத்துக் கொண்டேன். தூங்கி இருப்பேன் என்று நினைக்கிறேன்.

'சுரீர்...'.

ஒரு புது மாதிரி பறவை. பூச்சி. வாயால் முத்தமிட்டுக் கொண்டிருந்தது. வியப்பாகப் பார்த்தேன். கொஞ்ச நேரத்தில் அந்த இடத்தில் ஒரு மாதிரி நமைச்சல் எடுத்தது. புது உணர்வு.

இது போன்ற உணர்வை இது வரை கண்டதில்லை. இது போன்ற பூச்சியையும்!

உடனடியாக ஒன்று செய்தேன். ஸ்பெக்ஸை ஆன் செய்து, ஸ்கேன் செய்தேன். விக்கியை அழைத்து ஸ்கேன்ட் வீடியோவைக் காட்ட, உடனடியாக சியர்ச்சில் இறங்கி, மைக்ரோ செகண்டில் சொன்னான்.

'இது ஒரு பழைய பூச்சி வகையைச் சார்ந்தது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அழிக்கப்பட்டு விட்டது. இதன் பெயர் கொசு.'

ரோபாட் காவலர்கள் எங்கிருந்தோ வந்தார்கள். சிவப்பு நிறப் புகையும் சிறு குமிழில் அதனை பிடித்துக் கொண்டார்கள்.

'சார்.. நீங்களும் வர வேண்டும். ரிசர்ச் இன்ஸ்டிட்யூட்டில் அட்மிட் ஆக வேண்டும்.'

'என்ன செய்யப் போகிறீர்கள்..?'

'இந்த புதிய வகை பூச்சியினால் உங்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை அனலைஸ் செய்ய வேண்டும். உங்களது பாதையில் நீங்கள் போகக் கூடாது. எங்களது ட்ரான்ஸ்மிஸன் பாதை மிக செக்யூரிட்டியானது. அதில் செல்லலாம். வாருங்கள்..'

அவர்கள் கொண்டு வந்திருந்த டிவைஸில் உட்புகுந்து கொண்டோம்.

'டாக்டர். இந்த புது விதப் பூச்சி எங்கிருந்து வந்திருக்க வேண்டும்..?' கேட்டேன்.

'எனக்கு அரசாங்கம் அளித்துள்ள தகவல் படி, இந்த கொசு பல நூற்றாண்டுகள் பயணம் செய்து வந்திருக்கின்றது. பழைய நூற்றாண்டு மனிதர்கள் டைம் மெஷின் தயாரித்து விட்டார்கள். அதனை டெஸ்ட் ட்ரைவ்வுக்கு உட்படுத்துகையில், வழக்கமான மெதட் படி நாய், பூனை போன்றவற்றை அனுப்ப முடியவில்லை. காரணம் ப்ளூ க்ராஸ், ரெட் க்ராஸ் போன்று பல வண்ணங்களில் விலங்குகளைக் காக்கும் அமைப்புகள் தடுத்து விட்டன. எனவே கேட்க ஆளில்லாத கொசுவைப் பிடித்து அனுப்பி உள்ளார்கள். டோண்ட் வொர்ரி. எப்படியும் உங்களைக் காப்பாற்றி விடுவோம். பழைய மெடிஸினரி ஆர்டிக்கிள்ஸை எல்லாம் எல்லா டாக்டர்களும் லோட் செய்து கொண்டிருக்கிறோம். அரசாங்கம் ஸ்பெஷல் கேர் எடுக்கச் செய்துள்ளது.'

'இந்த கொடிய பூச்சியை எப்படி கொல்லப் போகிறீர்கள்..?' ஆர்வமாக இருந்தது.

'இதனை எப்படி அழிப்பது என்பதைப் பற்றி பல வகைகளில் சிந்தித்துக் கொண்டுள்ளோம். பழைய புக்ஸ் எல்லாம் லோட் செய்து பார்க்கிறோம். கவலைப்படாதீங்க..' சென்று விட்டார்.

சுற்று முற்றும் பார்த்தேன். மிகப் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது, புரிந்தது.

வெளியே மேலும் பல சிகிச்சையாளர்கள் படுத்திருப்பதை பார்த்தேன். வழக்கமான மெதட்படி டெலிபதியில் அழைத்தேன்.

'சார்.. உங்க கூட பேச எனக்கு பயமா இருக்கு. உங்களுக்கு மிக புதிதான நோய் வர வாய்ப்பிருக்குன்னுட்டு சொல்லி இருக்காங்க..'

'சரி.. நீங்க எதுக்காக அட்மிட் ஆகி இருக்கீங்க..?'

'ரொம்ப சிம்பிள் சார். ஒரு சின்ன ஆப்ரேஷன். ப்ரெய்ன்ல ஒரு சின்ன பார்ட் டேமேஜ் ஆகி இருக்காம். பிட்யூட்டரி க்ளாண்ட்க்கு ஒரு ரீப்ளேஸ்மெண்ட் வெக்கப் போறாங்க. அவ்ளோ தான். அதுக்கு தான் வந்திருக்கேன்.'

'அந்தப் பக்கம் இருக்கறவர்..?'

'அவருக்கு இன்னும் மைனர். மெண்டல் தாட்ஸ் எல்லாம் ரொம்ப பழசாயிடுச்சுனு வந்திருக்கார். புது இமாஜினேஷன், தாட்ஸ் எல்லாம் பண்டல் பண்ணி, பாக்கேஜ்ல டவுன்லோட் ஆகிட்டு இருக்கு. நீங்களே சொல்லுங்க, இவ்ளோ சின்ன வயசில அவருக்கு ந்யூ தாட்ஸ் தேவையா..?'

'அப்படியா.. என்ன ஏஜ்?'

'4694னு சொல்றார்..'

டெலிபதி சேனலை டிஸ்கனெக்ட் செய்து விட்டு, யோசித்தேன்.

இவ்ளோ பேர் இருக்கும் போது எனக்கு மட்டும் ஏன் இது மாதிரி அதிசயமாக நடக்க வேண்டும்? வித்தியாச சிந்தனைகளுக்கெல்லாம் அர்த்தம் புரிந்தது எனக்கு. இது போன்ற சமயங்களில் தான் கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்ற சந்தேகமே வருகிறது. கடவுள் கான்செப்ட் என்பது எப்போதோ வழக்கொழிந்து போய், ஜீன்கள் எல்லாம் பேக்டரிகள் மூலமாக உற்பத்தியாகி விரும்பியபடி ஜெனரேஷன் உருவாக்கம் செய்கின்ற போது, கடவுள் என்ற பழைய கருத்துக்கு வேலை இல்லாமல் போய் விட்டது.

எனினும் கொஞ்சமே கொஞ்சம் ஒட்டிக் கொண்டிருக்கும் வாசனை ஞாபகங்கள் அவ்வப்போது எழும்பி விடுகின்றன.

அகஸ்மத்தாய் விக்கி அசிஸ்டெண்ட் ஞாபகம் வந்தது. பைபர் பெண்ணின் ஞாபகம். நமைச்சல் என்ற அந்த உணர்வு கொஞ்சம், கொஞ்சமாக அழிந்து போனது, வியப்பாக இருந்தது.

டாக்டர் வந்தார்.

'அந்த பூச்சியை எப்படி அழிக்கறதுனு கண்டுபிடிச்சிட்டோம்.'

'எப்படி டாக்டர்..?'

'பழங்காலத்தில கையிலேயே அடிச்சுக் கொன்னிருக்காங்க. நாமும் அதே தான் பண்ணப் போறோம்..' சொல்லி விட்டு வெற்றிகரமாக சிரித்தார்.

புன்னகைத்து கண்கள் மூடி படுத்துக் கொண்டேன். உடல் வெப்பம் உயர்வதை உணர முடிந்தது.

(தேன் சிறில் அலெக்ஸ் அறிவியல் சிறுகதை போட்டிக்காக.)

***

ஒரு குட்டிக் கவிதை.

யாரும் சொல்வது
காதல் ஒரு Brinjal..!
பாரதியாரும் சொன்னது
சாதல் அதனைப் பிரிஞ்சால்..!

16 comments:

வேளராசி said...

அமர்ர் சுஜாதாவை நினைக்கும் வகையில் இருந்தது.

சென்ஷி said...

//ஒரு குட்டிக் கவிதை.

யாரும் சொல்வது
காதல் ஒரு Brinjal..!
பாரதியாரும் சொன்னது
சாதல் அதனைப் பிரிஞ்சால்..!//

சூப்பர் கவிதை :))

கதையும் நன்றாக இருக்கிறது. போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்..

ஒரு சிறிய வேண்டுகோள்..!

பின்னூட்ட பெட்டி தனியாக பாப் அப் விண்டோவில் திறக்காமலிருக்க முயற்சி செய்யுங்களேன். பின்னூட்டமிட சற்று கடினமாக உள்ளது. :((

தொந்தரவுக்கு மன்னிக்கவும்.

இரா. வசந்த குமார். said...

அன்பு வேளராசி... மிக்க நன்றி தங்கள் வருகைக்கு...! வாத்தியார் ஸ்டைல் தவிர்த்து, சயின்ஸ் ஃபிக்ஷன் எழுதுவது கொஞ்சம் கஷ்டம் தாங்க...!

அன்பு சென்ஷி... மிக்க நன்றிகள் தங்கள் வருகைக்கு...!

//சூப்பர் கவிதை :))

மிக்க நன்றிங்க. எல்லோருக்கும் தெரிஞ்சதையே கொஞ்சம் மாத்தி யோசிச்சா வர்றது தாங்க, அது..!

In science one tries to tell people, in such a way as to be
understood by everyone, something that no one ever knew before.
But in poetry, it's the exact opposite.
- Paul Dirac

பால் டைரக் சொல்றதை ஒத்துக்கிட்டோம்னா இதை கவிதைனே ஒத்துக்கலாங்க...! ;-)

கதையை வேற நல்லா இருக்குன்னு சொல்லிட்டீங்க...!

உங்க ஆசைப்படி பாப் அப் விண்டோக்கு ஆப் வெச்சு அனுப்பிச்சாச்சு.. இப்ப சந்தோஷம் தானே..!!

உங்கள் தொந்தரவுக்கு மிக்க நன்றிகள்...! ;-))

சென்ஷி said...

//In science one tries to tell people, in such a way as to be
understood by everyone, something that no one ever knew before.
But in poetry, it's the exact opposite.
- Paul Dirac

பால் டைரக் சொல்றதை ஒத்துக்கிட்டோம்னா இதை கவிதைனே ஒத்துக்கலாங்க...! ;-)
//

ஹா..ஹா.. கவிதைக்கான அருமையான வர்ணனை..

நன்றிகள் மீண்டும் பின்னூட்ட பெட்டியை மாற்றியமைத்ததற்கு:)

யோசிப்பவர் said...

வார்த்தைகளில் சில இடங்களில் சுஜாதா வாசம். ஒரே கதையில் பல கான்சப்ட்களை சொல்ல முயல்கிறீர்கள். இதை தவிர்த்திருக்கலாம். மற்றபடி கதை ஓகே!!;-)

இரா. வசந்த குமார். said...

அன்பு யோசிப்பவர்...

மிக்க நன்றி தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும்...!

சயின்ஸ் பிக்ஷன் எழுத வந்தாலே ஆரம்ப காலத்தில் வாத்தியாரின் பிம்பம் விழுவது என்னால் தவிர்க்க முடியாமல் இருக்கின்றது. கூடிய சீக்கிரம் நமக்கு என்று ஒரு ஸ்டைல் அமைத்துக் கொள்ள முயல்கிறேன்.

தொடர்ச்சியாக யோசித்துக் கொண்டே கதை ஃப்ளோ போகும் போது பல கான்செப்டுகள் கோர்த்து வந்து விடுகின்றன.

வெண்பூ said...

நல்ல கதை வசந்த குமார். வாழ்த்துக்கள்..

இரா. வசந்த குமார். said...

அன்பு வெண்பூ... (ஆஹா..!)

மிக்க நன்றி தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும்...!

anujanya said...

நல்ல நடை, சுஜாதாவை நினைவூட்டினாலும். கதை மட்டுமில்லை, கவிதை கூட அவர் எழுதியிருந்தால் இப்படித்தான் tongue-in-cheek ஆக இருக்கும். scifi என்றாலும் ஒரு முடிச்சு, அது அவிழ்க்கப்படும் உச்சகட்டம் என்ற சம்பிரதாய சமாச்சாரங்கள் நிச்சயம் இந்த 2008 இக்கு வேண்டும். அது கொஞ்சம் missing இந்த கதையில். நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.

அனுஜன்யா

இரா. வசந்த குமார். said...

அன்பு அனுஜன்யா...

மிக்க நன்றிகள் தங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும்.

இன்னும் கொஞ்சம் நன்றாக எழுத முயல்கிறேன்....! ;-)

"கருவெளி" said...

ஆரம்பித்த உடனே எனக்கு சுஜாதா அவர்களின் ஞாபகமே வந்தது.... நன்றாக இருக்கிறது. போட்டியில் வெற்றி பெற அனைவரின் சார்பிலும் வாழ்த்துக்கள். தலைப்பு மட்டும் வேறு விதமாக (கொசு பெயர் குறிப்பிடப்படாமல்) இருந்திருந்தால் இன்னும் விருவிருப்பாக இருந்திருக்கும் கதை...

இரா. வசந்த குமார். said...

அன்பு இராச.மகேந்திரன்...

உண்மையில் இக்கதையை நான் போட்டிக்காக எழுதவில்லை. போட்டி அறிவிப்பு வருவதற்கு சற்று முன் (போட்டியைப் பற்றி அறியாமலே) எழுதி இருந்தேன். எனவே தலைப்பை சூசகமாக்க தெரியவில்லை.

;-)

மிக்க நன்றிகள் தங்கள் வருகைக்கும், வாழ்த்துகளுக்கும்....!

Anonymous said...

மிக அருமையான அறிவியல் கதை அய்யா ... ஆனால் அந்த அறிவியல் கருவிகளை தமிழில் பதிவு செய்துர்க்க்லாம் ..

இங்கே நம்முடைய எண்ணங்களை(கமெண்ட்ஸ்) தமிழில் எப்டி பதிவு செய்வது ..நான் என் ப்லோக் சென்று "புது பதிவு" சென்று அங்கே அடித்து இங்கே கோப்பி-பேஸ்ட் செய்தேன்

இரா. வசந்த குமார். said...

அன்பு ஸ்ரீவத்ஸன்...

மிக்க நன்றிகள் தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும்! பிற்கால அறிவியல் புனை கதைகள் என்றால் ஒஞ்சம் ஆங்கிலம் கலந்திருந்தால், நவீனமாகத் தெரியும் என்று அப்படி எழுதினேன். தமிழ் மட்டுமே கொண்டு அறிவியல் புனைகதை வேண்டும் எனில், இக்கதையைப் படித்து, கருத்து சொல்லுங்களேன்.

கமெண்ட்டிற்கு தாங்கள் இந்த வெப்சைட்டைப் பயன்படுத்திப் பாருங்களேன்.

thamizhparavai said...

கதை ஓ.கே.
//வழக்கமான மெதட் படி நாய், பூனை போன்றவற்றை அனுப்ப முடியவில்லை. காரணம் ப்ளூ க்ராஸ், ரெட் க்ராஸ் போன்று பல வண்ணங்களில் விலங்குகளைக் காக்கும் அமைப்புகள் தடுத்து விட்டன. எனவே கேட்க ஆளில்லாத கொசுவைப் பிடித்து அனுப்பி உள்ளார்கள்//
//'பழங்காலத்தில கையிலேயே அடிச்சுக் கொன்னிருக்காங்க. நாமும் அதே தான் பண்ணப் போறோம்..' சொல்லி விட்டு வெற்றிகரமாக சிரித்தார்.//
கொஞ்சம் ,கொஞ்சமாக tongue-in-cheek concept புரிந்தது...

யோசிப்பவரின் கருத்துடன் உடன்படுகிறேன் வசந்த்...
அந்தக் கவிதை...’பிரிஞ்சால்’ அருமை...
இப்படித்தான் சில சீரியஸ் மேட்டருக்கிடையில சின்னதா கிச்சுக்கிச்சு மூட்டணும்...

இரா. வசந்த குமார். said...

அன்பு தமிழ்ப்பறவை...

நன்றிகள். ஆனால் நான் அறிவியல் கதைகள் எழுத வேண்டும் என்று ஆரம்பித்தது, இக்கதையில் தான்.