Tuesday, August 05, 2008

5. someone.

நேற்று கொஞ்சம் உடல் நலம் சரியில்லை. லைட்டாக ஃபீவர் போல் இருந்தது. எனவே அவ்வளவாக இணையத்தில் சுற்றாமல், மெயில் மட்டும் படித்து விட்டு படுத்துக் கொண்டேன். ஆனால் வழக்கமாக தூங்கும் நேரம் இரவு 10 மணி இல்லையாதலால், என்ன செய்வது என்று கொஞ்சம் போல் குழம்பினேன்.

ஒரு மாதமாக அறிவியல் கதைப் போட்டிக்காக சிந்தித்துக் கொண்டேயும் (?) எழுதிக் கொண்டேயும் இருந்ததால், வாங்கி வைத்திருந்த புத்தகங்கள் புத்தம் புதிதாக தூசி படிந்து இருந்தன.

எனவே இன்று இரவு படிக்க என்று முடிவு செய்து, கையில் கிடைத்த புத்தகத்தை எடுத்தேன்.

five point someone from chetan bhagat.

இரண்டு நாட்களின் இரவைப் பங்கு போட்டுக் கொண்டது புத்தகம்.

ர்யான், ஹரி, அலோக் என்ற மூன்று நண்பர்களின் IIT வாழ்க்கையை நகர்த்திச் செல்கின்ற இப்புத்தகம் என் கல்லூரி வாழ்க்கையை நினைவூட்டியது.

வழுக்கிச் செல்லும் நகைச்சுவையோடு நாவல் பறக்கின்றது. முதல் நாளின் நிர்வாண ரேக்கிங்கில் துவங்கி, கடைசி நாள் கான்வகேஷன் செரமனி வரை சீரான வேகத்தில் ஃப்ளோவில் ஓடுகின்றது.

I reccommend this one to everyone, especially who dreamt IIT in their school days.

புத்தகம் : five point someone.

புத்தக வகை : புனை கதை.

ஆசிரியர் : சேதன் பகத்.

கிடைக்குமிடம் : உங்கள் அபிமான நூல் விற்பனையகங்கள்.

பதிப்பகம் : Rupa.

விலை : 95 ரூ.

3 comments:

thamizhparavai said...

நண்பர் வசந்த்துக்கு....
நான் படிச்சு முடிச்ச இரண்டு ஆங்கில நாவல்களுல் இதுவும் ஒன்று. இன்னொன்று 'ஒன் நைட் அட் கால் சென்டர்'.
இரண்டும் இந்தியன் ஆங்கில நடையாதலால் நன்கு உள்வாங்க முடிந்தது..
நல்ல நகைச்சுவையோடு சென்றதால் ஒரே நாளிலேயே முடித்து விட்டேன்.
இத்துடன் ஒப்பிடுகையில் 'ஒன் நைட் அட் கால் சென்டர்' கொஞ்சம் மொக்கைதான்.

இரா. வசந்த குமார். said...

அன்பு தமிழ்ப்பறவை...

மிக்க நன்றிகள் தங்கள் கருத்துக்கு!

உண்மை தான். 5pS உடன் ஒப்பிட்டால் சேதன் பகத்தின் இரண்டாம் நாவல் கொஞ்சம் மொக்கை தான்.

ஆனால் மூன்றாம் நாவலான The 3 mistakes of my life படியுங்கள். செம ஸ்பீட் ரோலர் கோஸ்டர் + கான்ட்ரவர்ஸியல் இஷ்யூ!

Karthik said...

FPS உடன் ஒப்பிட்டால் சேத்தன் பகத்தின் மற்ற இரண்டு நாவல்களுமே கொஞ்சம் மொக்கைதான்.

C2D என்றொரு அட்டகாசமான கான்செப்டை நான் காலேஜுக்கு வருவதற்கு முன்னாலேயே கற்றுக் கொடுத்தது இந்த நாவல்தான்.

I LOV RYAN!
:)