சிந்தாநதியின் பாவனா கவுஜ/வஜனப் போட்டிக்காக எழுதிய வஜனம் ::
"ஹாய் பாவ்.."
"ஹாய்டா..!"
"அதிகாலையில் இருந்து தண்ணீரில் நீ நிற்கலாமா? தண்ணிக்கே ஜல்பு பிடிச்சுற போகுது..!"
"ரொம்ப Ice வைக்காத..!"
"என்கிட்ட இருக்கறதே ரெண்டு Eyes தான்! அதை தான் உன் மேல ஆல்ரெடி வெச்சிட்டேனே..!"
"சரி..! நான் அதிகாலையில் இருந்து நிற்கிறேன்னு உனக்கு எப்படி தெரிந்தது..?"
"விடிகாலையில் வானம் நீல நிறமா இருந்தது. அது அப்படியே மெல்ல மெல்ல குளத்தில் படர்ந்தது. நீ வந்து நின்ற உடன் உன் ஆடையில் ஏறி.. இப்போது குளம் நீல நிறத்தை இழந்து விட்டது.. உன் உடைகள் மட்டுமே நீல நிறமாய்..!"
"ஸ்...!"
"அது மட்டுமா? உன் நீல வளையல்களைப் பார்த்து தான் கொஞ்சமாய் குழம்பி, கிறங்கி ஐன்ஸ்டீனும் வானம் வளைவானது என்று சொன்னார் போலும்!"
"அவரை ஏண்டா இங்க கொண்டு வர்ற? ப்ளூ கலர் ட்ரெஸ்ல ஏறுவதற்கு முன்னாடி என் ட்ரெஸ் என்ன வொய்ட் கலர்லயா இருந்தது?
"சந்தேகம் என்ன? தேவதைகள் எல்லாம் வெள்ளை நிற ஆடைகள் தானே அணிந்திருப்பர். சரி! அது என்ன கையில் ஐந்து தலை பாம்பு?"
"ம்..! உன்னைப் போன்ற ஜொள்ளர்கள் வந்தால் தீண்ட விட..!"
"ஓ..! அப்படி எனில் ஒரு கவிதை சொல்லி விட்டு ஓடி விடுகிறேன்.."
"சொல்லு! பார்க்கலாம்..!"
"சூரியனைச் சுற்றி வட்டமாய் புயல்கள் இருந்தால், அங்கே கரோனா!
நிலாவைச் சுற்றி கூட்டமாய் பயல்கள் இருந்தால், அங்கே பாவனா...!"
"வசந்த் இவிட வரணும்! ஞான் இறுக்கி அணைச்சு ஒரு உம்மா தரான்...!"
எல்லோரும் புகுந்து கலக்குங்க....! வாங்க...!
2 comments:
டேய் உனக்குள்ள இவ்ளோ பெரிய காதல் கம்முனாட்டி ஒளிஞ்சி இருக்கானா என்னா???
இந்நேரம் எதுனா சேச்சி'கிட்ட இப்படி சில பல வசனம் பேசி இருப்பியே மாமா....
அனீஸ் கண்ணா...
காதல் கம்முNaughty எல்லாம் இல்லடா...
சேச்சிங்க எல்லாம் சீச்சீன்னு சொல்லிட்டாங்க, இந்த டயலாக்குக்கெல்லாம்...!
Post a Comment