Tuesday, August 05, 2008

நீ ரஜினி ரசிகனா? ரஜினி வெறியனா? - பதில்.

ன்பு வெண்பூ,

ஷா - இன் - ஷா என்ன சொன்னார்? என்ற எனது பதிவிற்கான உங்களது கமெண்ட் இது ::


வசந்த்.. கண்டிப்பாக நான் உங்கள் கருத்தில் இருந்து வேறுபடுகிறேன் என்பது உங்களுக்கு ஏற்கனவே தெரியும். ரஜினியைத் தாக்கி எழுதினால் உடனே எல்லோரும் கவனிப்பார்கள் என்பதால் நான் உட்பட பெரும்பாலோர் அதைச் செய்யவில்லை. உங்களுக்கு என் பதில்கள்:

1. ஒகேனக்கல் பிரச்சினை கிடப்பில் இருப்பது குறித்து எத்தனையோ முறை நானே பின்னூட்டமிட்டுள்ளேன். அது குறித்த எல்லா தகவல்களையும் பெற முடியாததால் என்னால் அதுகுறித்து பதிவிட முடியவில்லை. அது அரசியல்வாதிகளால்தான் கிடப்பில் இடப்பட்டுள்ளது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

2. ஊருக்கு இளைத்தவன் என்பதால் அவர் மீது மட்டும் சேறு வாரி இறைப்பதாக சொல்வதில் சிறிதும் உண்மையில்லை. அரசியல்வாதிகள் அத்தனை பேருமே அவரவர் சுயநலங்களால் பதிவர்களால் சாடப்படுவது கண்கூடு.

3. உங்கள் தலைவர் உத்தமராகவே இருக்கட்டும். வேண்டாம் என்று சொல்லவில்லை. அவர் வருத்தம் தெரிவித்தது அரசியல்வாதிகளாலேயே என்று இருக்கட்டும். அவர் வருத்தம் தெரிவித்ததற்கு 17 பிரிண்ட் ஓடவேண்டும் என்பது காரணம் இல்லை என்பது உண்மையாகவே இருக்கட்டும். ஆனால் இத்தனை நாள் கழித்து மிக மிகச் சரியாக அந்த 17 பிரிண்ட்கள் ரிலீஸ் ஆவதற்கு 1 நாள் முன்னால் எதற்கு சாமி மன்னிப்பு கேட்க வேண்டும்? அதற்கு பின்னால் அவர்க்கு பிஸினஸ் மைண்ட் இல்லை என்று நீங்கள் நம்பலாம். எல்லோரும் அதையே செய்வார்கள் என்று எப்படி எதிர்பார்க்கிறீர்கள்?

அவரைப் பொறுத்தவரை அவரால் தான் சொன்னதைக் காப்பாற்றமுடியவில்லை என்றால் படத்தில் மட்டும் நடிக்கட்டும். அதுதான் அவரது எல்லா படங்களையும் ரசிக்கும் என் போன்றோர் எதிர்பார்ப்பது. நானும் ரஜினி ரசிகன் தான். வெறியன் இல்லை.


எனது பதிவில் குறிப்பிடப்பட்டு இருக்கும் பல பதிவர்களில் நீங்களும் ஒருவர் என்று நீங்கள் எவ்வாறு சரியாகப் புரிந்து கொண்டீர்களோ, அதே போல் நானும் ரஜினி ரசிகன் தான். வெறியன் இல்லை என்று நீங்கள் சொல்லியிருப்பதன் வாயிலாக நீ ரசிகனா இல்லை வெறியனா என்ற கேள்வி என்னை நோக்கி எறியப்பட்டு இருக்கின்றது என்பதை மிகச் சரியாக புரிந்து கொண்டுள்ளேன் என்பதையும் இங்கே தெளிவுபடுத்துகிறேன்.

மூன்று நாட்கள் தாமதமாக உங்களுக்கு பதில் கொடுப்பதற்கு மன்னிக்கவும்.

இந்நேரத்திற்கு உங்களுக்கே ரஜினி அவர்களின் குரலுக்கான காரணங்களும், விளக்கங்களும், ஆதரவுக் குரல்களும் கிடைத்திருக்கும். இல்லாவிடில் சில இணைப்புச் சுட்டிகள் இதோ ::

http://www.rajinifans.com/

http://onlysuperstar.blogspot.com/

http://mayavarathaan.blogspot.com/

நான் ரஜினி ரசிகனா இல்லை வெறியனா என்ற கேள்விக்கு எனது சில பழம் பதிவுகளைப் பார்க்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

ரஜினியும் நாசரின் முகமும்...!

இப்ப என்ன செய்ய?

மோக்ளியின் ஷா - இன் -ஷா.

வளர் பருவத்தில் நீங்கள் அவரது படங்களோடு வளர்ந்திருப்பின் மட்டுமே அவரின் தாக்கம் உங்களால் புரிந்து கொள்ள முடியும் என்று ஒரு பதிவில் படித்தது நினைவுக்கு வருகின்றது.

நான் ஒரு சாதாரண ரஜினி ரசிகன். புதுப்படங்களை பார்த்து விசிலடித்துக் கொண்டாடி, அதே சமயம் அவரது பழைய படங்களைப் பார்த்து இனி இது போல் நடிக்க மாட்டாரா என்று வருந்தி, மீண்டும் அவர் இளமை வேஷம் பூசி வேக நடையில் வரும் போது, அத்தனையையும் மறந்து விசிலடித்து, டிக்கெட் கிழித்து பறக்க விட்டு, ஆட்டம் போடும் கோடிக்கணக்கான அவரது ரசிகர்களில் ஒருவன்.

மற்றுமொரு நண்பருடன் பேசிய ஈ-மெயில் உங்கள் பார்வைக்கு (கீழிருந்து படித்து வரவும்.)::

From: Vasantha Kumar R.
Sent: Monday, August 04, 2008 3:41 PM
To:
Subject: RE:



Yes.. I have to publish another post to ask sorry for mentioning “apologise” in my post.



Some loosus told why he worried about 1.5 crores which come from Karnataka zone..?



They forgot or don’t want to remember that thalaivar returned crores to the distributors who got lose from BABA. If these sathyaraj, TR guys start to pay like that, they have to come to platform and have to start begging.



If he doesn’t bother abt Karnataka market, he won’t have any problem. But it will lead a new way. That all tamil films get stopped showing in KA, because all the film ppl attended that fast. It will lead that effect in all the areas. Like udipi hotel should be shut down in TN. Hotel Sangeetha has to be closed in TN.



All nair tea shops to be closed in TN. The lakhs of ppl who settled in all the other states has to return to their home state…

Then it leads to disintegration of India. And the country will break into pieces like USSR got broken into Russia and all other ‘…isthan’ countries.



His one speech stops all these things. He is the leader.


--------------------------------------------------------------------------------

From:
Sent: Monday, August 04, 2008 3:26 PM
To: Vasantha Kumar R.
Subject: RE:



Even now he has not apologised any where.He just clarified what he has said before to those karnataka chamber guys and others.


--------------------------------------------------------------------------------

From: Vasantha Kumar R.
Sent: Monday, August 04, 2008 3:11 PM
To:
Subject: RE:

Even a man with very small common-sense can understand that thalaivar’s “we have to kick them” was towards who were all oppose to the hogenakkal water project.



These guys are always waiting for chances to remove thalaivar’s supremo from the Tamil Film Industry.. but they fail as usual.



In tamil blogosphere also everyone shout “Rajini is disloyal to tamilians..blah..blah” all these craps..!



I opposed them very strongly in my blog.



All of main guys in the industry as KB, Bharathiraja, ameer, seeman all appreciate thalaivar’s speech.



These waste guys like sathyaraj (he thinks he became periyar because of he acted as that legend. Poor guy…!), Sarath kumar (another poor man… he is trying to popularize his party’s name(I think max 100 ppl know the name) by any means..) and TR (I wonder why this guy still not recognized that he is getting treated as a comedian in tamil cinema and political arena. He has a lot of other works to do. For example controlling his son’s finger and middlefinger and advised him to stop destroying a beautiful actress’s life... sure, that will take a lifetime effort…) all are stomach burning ppl…



We fans are behind him.. He is a true leader…who betted his fame for his film’s distributors, producers and fans in Karnataka…! And not only for his film’s, but for the entire tamil cinema!



The political leaders ordered their followers if they feel problems to cut down the trees or to burn three young students in a bus and to kill innocent workers even they are not responsible for any thing


But our thalaivar never order his fans to do such things even he was attacked severely by many ppl. Amma, manorama , Bharathiraja, PMK and now sathyaraj!


A true leader is the one who leads his followers by simply showing his life. Not necessarily he has to speech or advise.



After this incident, I am really happy for being a fan to such a big man and really proud to call him “THALAIVAR”.

--------------------------------------------------------------------------------

From:
Sent: Monday, August 04, 2008 2:47 PM
To: Vasantha Kumar R.
Subject: RE:

stupid people.This T.R dirty fellow,as if some body asked him he is giving comments...

every one making politics of it...

actually this is the most clear of all the thalaivar's speech.

--------------------------------------------------------------------------------

From: Vasantha Kumar R.
Sent: Monday, August 04, 2008 2:41 PM
To:
Subject: RE:

Officially 1 hour. Ok..!

Unofficially how much time…?

Did you notice how thalaivar’s speech is transformed by ugly magazines and news channels..?


--------------------------------------------------------------------------------

From:
Sent: Monday, August 04, 2008 2:34 PM
To: Vasantha Kumar R.
Subject: RE:

Here 1 hour power cut afternoon 12 -1

***

எனது வாதங்கள் முட்டாள்தனமாக தோன்றினால் நன்றி.

இங்கே சிலருக்கு (உங்களை அல்ல!) ரஜினி ரசிகன் என்று கூறிக் கொள்வதில் தயக்கமும், ஏதோ ப்ரெஸ்டீஜ் இஷ்யூவும், இருப்பது போல் தோன்றுகின்றது. தமிழ் வலையுலகத்தில் இதை விட மகா ஆட்களை கேள்விப்பட்டும் பார்த்தும் வருகிறோம்.

எங்களுக்கு அதில் தயக்கம் இல்லை.

ஆனால் இது போன்ற எந்த வித ஆதாரமும் இல்லாத, உடனடி பரபரப்பு செய்திகளை நம்பி இந்த நல்ல மனிதரை இழிவு படுத்த யார் விரும்பினாலும் நாங்கள் அதை எதிர்த்து உண்மைக்கு கொஞ்சம் அருகே கூட்டிச் செல்ல முயல்வோம்.

அன்றி, நாங்கள் வம்புகளுக்கு ஒதுங்கிப் போவதும் இல்லை; ஒடுங்கிப் போவதும் இல்லை.

இனியும் உங்களுக்குப் புரியவில்லை என்றால், ஸாரி தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்புவதற்கு எங்களுக்கு நேரம் இல்லை.

நன்றி!

6 comments:

கிரி said...

//ஆனால் இது போன்ற எந்த வித ஆதாரமும் இல்லாத, உடனடி பரபரப்பு செய்திகளை நம்பி இந்த நல்ல மனிதரை இழிவு படுத்த யார் விரும்பினாலும் நாங்கள் அதை எதிர்த்து உண்மைக்கு கொஞ்சம் அருகே கூட்டிச் செல்ல முயல்வோம்.//

:-)))

வெண்பூ said...

வசந்த்,

உங்கள் விளக்கங்களுக்கு நன்றி. இது குறித்து மேலும் விவாதிக்க நான் விரும்பவில்லை. காரணம் உங்களை பொறுத்தவரை அவர் தலைவர் (லீடர்). என்னைப் பொறுத்தவரை அவர் ஒரு நடிகர் (என்டெர்டெய்னர்) அவ்வளவே.

திரையில் தெரிவது பிம்பம்தான் அது நிஜமல்ல என்பது புரியாததால்தான் அடுத்த முதலமைச்சரை நாம் இன்னும் திரையில் தேடிக்கொண்டிருக்கிறோம்.

ஒரு நடிகனாக அவர் என்னை மிகவும் கவர்ந்தவர் (இன்றும் டி.வி.யில் பாட்ஷா படம் போட்டால் தவறாமல் பார்ப்பவன் நான், ஏற்கனவே பல முறை பார்த்திருந்தாலும்). ஆனால் அதற்காக நிஜத்திலும் அவர் அதே போன்று வல்லவர் என்று நம்புவது என்னைப் பொறுத்தவரை (மன்னிக்கவும் வசந்த்) முட்டாள்தனம்.

தலைமை என்ன தவறு செய்தாலும் அதை சரியென்று ஏற்றுக்கொண்டு சப்பைக்கட்டு கட்டும் அரசியம் தொண்டர்களுக்கும் இந்த பதிவில் இருக்கும் உங்கள் மின்னஞ்சல்களுக்கும் எந்த வேறுபாடும் கிடையாது.
எந்த ஒரு பிரச்சினையையும் சரி என்று சிலர் சொன்னால், அதையே தவறு என்று சொல்வதற்கும் சிலர் இருப்பார்கள் என்பது உங்களுக்குத் தெரியாததல்ல. இந்த பிரச்சினையில் நான் இரண்டாவது வகை நீங்கள் முதல் வகை. வேறொரு பிரச்சினையில் நீங்கள் இரண்டாவதாகவும் நான் முதலாகவும் இருக்கலாம்.

எனவே இது குறித்து மேலும் விவாதிக்க விரும்பவில்லை. நீங்கள் உங்கள் தலைவனை அடியொற்றி செல்லுங்கள். நான் எனக்கு சரியென்பதைச் செய்கிறேன் / சொல்கிறேன்.

இது பிரச்சினைக் குறித்த விவாதமே அன்றி வசந்த், வெண்பூ குறித்த விவாதமல்ல, எனவே,


நட்புடன்,
வெண்பூ

பி.கு: புதிய இடுகைகள் குறித்து நீங்கள் எனக்கு பின்னூட்டமிடத் தேவையில்லை, காரணம் உங்கள் வலைப்பூ என் ரீடரில் இருப்பதால் நான் எதையுமே தவற விடுவதில்லை. காரணம் என் பதிவின் பின்னூட்டத்தில் சொல்லியிருப்பேன்.

-- //வசந்தகுமாரும் மிக நன்றாக எழுதுகிறார். என்னைக் கேட்டால் இருவருக்கும் கொடுத்து விடுவேன்//

மீண்டும் நன்றிகள் அனுஜன்யா.. வசந்தகுமார் என்னை விட சரளமாக எழுதுகிறார், அதிக எண்ணிக்கையிலும், நானும் அவரது எழுத்துக்களை மிகவும் ரசிக்கிறேன். --

இரா. வசந்த குமார். said...

அன்பு வெண்பூ...

மிக்க நன்றிகள் தங்கள் வருகைக்கும், 'வாழ்த்துக்கும்'...! ;-))

இரா. வசந்த குமார். said...

அன்பு கிரி...

உங்கள் வாய் கொள்ளா சிரிப்புக்கு என்ன அர்த்தம் என்று விளங்கவில்லையே... ஹூம்...

ஆயில்யன் said...

//நான் ஒரு சாதாரண ரஜினி ரசிகன். புதுப்படங்களை பார்த்து விசிலடித்துக் கொண்டாடி, அதே சமயம் அவரது பழைய படங்களைப் பார்த்து இனி இது போல் நடிக்க மாட்டாரா என்று வருந்தி, மீண்டும் அவர் இளமை வேஷம் பூசி வேக நடையில் வரும் போது, அத்தனையையும் மறந்து விசிலடித்து, டிக்கெட் கிழித்து பறக்க விட்டு, ஆட்டம் போடும் கோடிக்கணக்கான அவரது ரசிகர்களில் ஒருவன்.//

இந்த கருத்தோடு நானும் ஒன்றிப்போகின்றேன்!
நன்றி வசந்த் அண்ணா!

இரா. வசந்த குமார். said...

அன்பு ஆயில்யன்...

மிக்க நன்றி தங்கள் வருகைக்கும், ஒத்துப் போன வாழ்த்துக்கும்!

மறுபடியும் அண்ணாவா..?

என்னமோ விஷயம் இருக்கு...!