Friday, August 01, 2008

சக்கரக்கட்டி!

ன்று மதியம் டெக்னோபார்க்கின் எதிரில் இருக்கும் ஹோட்டல் சென்னையில் சாப்பிட்டு விட்டு கோவளம் டு கொல்லம் நெடுஞ்சாலையைக் கடக்கையில் கண்ட இரு சம்பவங்கள் அவற்றின் மீதான சிந்தனையை ஊற்றின.

1. கையில் சர்ட்டிபிகேட்ஸ் ஃபைல் வைத்து ஒருவர் கோவளம் போகும் திசையில் செல்லும் வாகங்களுக்கு முன் தம்ஸ் அப் காட்டி பிஃப்ட் கேட்டுக் கொண்டிருந்தார். இந்த தடத்தில் பேருந்து சர்வீஸ் அவ்வளவாக இல்லை. பைக், கார், ஸ்கூட்டர், சைக்கிள் என்று வரிசையாக கடந்து கொண்டிருந்தனர், நிற்காமல்! இவரும் சளைக்காமல் கை நீட்டிக் கொண்டிருந்தார்.

'சடக்' என்று கையை தொங்கப் போட்டு விட்டு ப்ளாட்பாரத்தில் ஏறிக் கொண்டார். இப்போது வந்த வாகனத்தை அவர் நிறுத்த முயற்சிக்கவில்லை. அப்படி ஒரு வாகனம் வருவதை பார்த்ததாக கூட அவர் காட்டிக் கொள்ளவில்லை.

எது தெரியுமா?

போலீஸ் ஜீப்.

2. ஓர் ஆட்டோ ட்ராஃபிக் சிக்னல் காவலரின் மறுப்பு கை அடையாளத்தினால் ப்ரேக் போட்டு நிறுத்தியது, டெக்னோபார்க்கின் வாசலில்! என்ன நடந்தது. உள்ளே மூன்று இளைஞிகள். பேச்சு சுவாரஸ்யத்தில் ஆட்டோ வாசற்புறம் இருந்த இளம்பச்சை சுடிதாரின் துப்பட்டா இவ்வளவு நேரமும் வேளியே காற்றாடிக் கொண்டு வந்து, ஆட்டோ நிற்கும் போது வகையாக சக்கரத்தின் கீழ் சென்று மாட்டிக் கொண்டது.

துப்பட்டாவை ஸ்டைலாக எடுத்துப் போட முயற்சிக்கும் போது தான் அபாயம் புரிந்தது அவருக்கு. ஆட்டோ கிளம்பப் போகின்றது. முன்னோக்கி ஓடினால், இன்னும் சிக்கலாகி சிக்கிக் கொள்ளும். நல்லவேளை ஆட்டோ ட்ரைவர் பார்த்து ஒரு ரிவர்ஸ் அடித்து காப்பாற்றினார்.

படித்த பெண்கள்!

ண்டு முடித்து விட்டு சில்லறை இல்லாததால் எதிரில் இருக்கும் ஒரு ஃபேன்ஸி ஸ்டோர்க்கு சென்று மாற்றி வரப் போன போது கிட்காட் இருக்கிறதா என்று கேட்டேன். தீர்ந்து போயிருந்தது. வேறு என்ன இருக்கின்றது என்று பார்த்தால், நெடுங்கால சினேகிதன் Parle Poppins 'என்னப்பா என்னை எல்லாம் மறந்து விட்டாயா?' என்று கேட்டது.

இரண்டு பாக்கெட்டுகள் வாங்கிக் கொண்டேன். 4 ரூபாய் தான்.

கிட்காட் எல்லாம் 5ரூக்கு வாங்கி வாயில் போட்ட மூன்றரை செகண்டுகளில் கரைந்து பல் இடுக்குகளில் மட்டும் கொஞ்சம் அடையாளம் வைத்து விட்டு காணாமல் போய் விடுகின்றது. லைபாய் சோப் தான் நினைவுக்கு வருகினறது. இரண்டுமே கரையவே மாட்டேன் என்கிறது. 2ரூ பாக்கெட்டில் 12 மிட்டாய்கள், வித வித ஃப்ளேவர்களில்!

சீட்டுக்கு வந்து பார்லே வெப் சைட்டுக்கு போனேன்.

அடிக்கின்ற கலர்களில் வெப் சைட்.

நீங்களும் போய்த் தான் பாருங்களேன்.

ன்று தான் சக்கரக்கட்டி பாடல்கள் கேட்டேன்.

காதலர் தினம் வந்த போது நான் கல்லூரியில் முதலாண்டு. அப்போது என்ன விதமான குளிர் உணர்வுகளை தட்டி எழுப்பியதோ (ரோஜா..! ரோஜா..!), அதே மாதிரி மீண்டும் கேட்பது போல் புத்துணர்வோடு மறுபடியும் இரகுமானின் அட்டகாசமான துள்ளல், மெலோடிகளுடன் பட்டையைக் கிளப்பி இருக்கின்றது

இங்கே இறக்கிக் கொள்ளலாம்.

சாம்பிள் ::

மருதாணி விழியில் ஏன்? ::


Get Your Own Hindi Songs Player at Music Plugin

நான் எப்போது பெண்ணானேன்? ::


Get Your Own Hindi Songs Player at Music Plugin

இன்று இரவு முழுதும் ஓடிக் கொண்டே இருக்கும் என்று தோன்றுகின்றது.

உண்மையில் சக்கரக்கட்டி ரஹ்மானின் பாடல்கள் தான்...!

4 comments:

வெண்பூ said...

நன்றாக விவரித்து எழுதியிருக்கிறீர்கள். ரசிக்கும்படி இருந்தது வசந்த். பாராட்டுக்கள்..

இரா. வசந்த குமார். said...

நன்றிகள் வெண்பூ...!

Veera said...

@1

டெக்னோபார்க்கில் இருந்து கழக்கூட்டம் ஜங்க்சனுக்கு பேருந்து இல்லாததனால், தினமும் ஆட்டோவுக்கு 15 ரூபாய் அழ வேண்டியிருக்கிறது. இந்த இரண்டு வருடங்களில், இரண்டு மூன்று முறைதான் அந்த வெள்ளைப் பேருந்தை டெக்னோபார்க் வாசலில் பார்த்திருக்கிறேன். :-(

@2

வசந்தகுமார் என்பவர் அந்தப் பெண்ணைக் காப்பாற்றி, டூயட் எதுவும் பாடினார்களா என்பதை அடுத்த பதிவில் விளக்கவும். :-))))

இரா. வசந்த குமார். said...

@@1 ::

அன்பு சுந்தர்,

சரி தான். இரண்டாண்டிலேயே நீங்கள் சில முறைகள் தாம் பார்த்துள்ளீரா?

@@2 ::

நான் பாய்ந்தோடிப் போய்க் காப்பாற்றப் போவதற்குள், ஆட்டோ கிளம்பி விட்டதே! ஆட்டோக்காரர்களே மோசம்.