Monday, November 03, 2008

அமானுஷ்ய அடையாளம்.

agki768548A791$5%7575#$@*&%&*$^3%&%2$#&@!8vt87t5965e8724765$453%^#Cfjax57641xvc765678ci7567476cx743563*%*%*&^$!VT64&^!$7c&%4^!%e^%!35653x6bg46747663#^6c^67cr53^%# v747vLOGIN CONFIRMED.

அவன் விரல்கள் தடதட விளையாட்டில் இருந்து கொஞ்சம் சந்தோஷமாய் ஓய்ந்தன, சில நொடிகள்! லேப்டாப் மானிட்டரையே உற்றுப் பார்த்தான். உதடுகளில் நெளிந்த புன்னகை!

பச்சை எழுத்துக்கள் சட்டென்று பஸ்பமாகித் தொலைந்து மறைந்தன. பென்குயின் பிக்சர் ஒன்று தோன்றி, எங்கிருந்தோ ஒரு மாய வெளியில் இருந்து ஐகான்கள் உற்பத்தி ஆகின.

'வாழ்க அயர்லாந்து நண்பா!' உள்ளுக்குள் உற்சாகமாய் உணர்ந்தான். பழக்கமான ஐகான்களில் அம்புக்குறி தடவியது. யூ.எஸ்.பி. புள்ளியில் கனெக்ட் செய்திருந்த மெமரி டிவைஸ் சிவப்புப் புள்ளியை நொடிகளில் மினுக்கியது.

அடிப்படை இதயச் செயல்பாட்டில் நுழைந்து அனிச்சையாக கட்டளைகள் கொடுத்தான்.

ஒரு பிரதி எடு இதை எல்லாம்!
யூ.எஸ்.பி. போர்ட்டைப் பிடி!
அங்கேயே ஒட்டு!

மனித பாஷை எழுத்துக்கள் கணிணி மூளையில் எண்களாகி சிலிக்கான் நியூரான்களில் பாய்ந்து, எலெக்ட்ரான்கள் இடம் மாறத் தொடங்கின.

டைம் பார்த்தான். 02:34 லிருந்து 02:35க்கு மாறியது.

"கார்த்திக்..! ஐ டோண்ட் வாண்ட் ஃபர்தர் எக்ஸ்ப்ளனேஷன்ஸ்..! நீங்க செஞ்சது கம்பெனி ரூல்ஸ்படி மட்டுமில்ல, சைபர் லா படியும், ஹியூமன் எதிக்ஸ் படியும் ஒத்துக் கொள்ள முடியாத செயல்! யு ஆர் இம்மிடியேட்லி டிஸ்மிஸ்ட் ஃப்ரம் யுவர் சர்வீசஸ் அஃப் திஸ் கம்பெனி! யூ மே கோ!"

மறு வார்த்தை பேசாமல் வெளி வந்து விட்டான்.

இது ஒரு மாதிரி எதிர்பார்த்தது தான். ஆனால் கொஞ்சம் சீக்கிரம் நடந்து விட்டது.

கூடிய விரைவில் எதிர்பார்க்கப்படுகின்ற ஒரு போரில் பயன்படுத்தப்படும் புதிய இலகு ரக எரிகலன் தயாரிக்கும் ஆர்டர் கொடுக்கப்பட்ட கம்பெனி அது. மத்திய அரசின் சீக்ரெட் அமைப்பில் இருக்கும் சயின்டிஸ்ட்களால் டிசைன் செய்யப்பட்டு படு இரகசியமாக இயங்கும் மேனுஃபாக்சரிங் யூனிட்டில் கம்ப்யூட்டர் அனலிசிஸ் மற்றும் சிமுலேஷன் செக்ஷனில் ஒரு இடை நிலை இஞ்சினியன் அவன்.

ஐம்பது லட்சம் என்ற வலை விரிப்பில் சிக்கினான். மிஷல் டிசைனை சிப்பில் பதிய வைத்து, வெளிவர முயல்கையில், இடுக்குகளில் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் புள்ளிக் கேமிராக்களால் சிறை பிடிக்கப்பட்டு...மாட்டிக் கொண்டான்.

ப்போது கிடைத்திருப்பது சுதந்திரம் இல்லை. எனது வீடு முழுக் கண்காணிப்பில் இருக்கும். எனது தொலைபேசி லைன்கள், செல்போன் அழைப்புகள், கம்ப்யூட்டர் நெட்வொர்க் அத்தனையும் அரசாங்கத்தின் ட்ரேஸ் பார்வைக்குள் கொண்டு வரப்பட்டிருக்கும். என்னை எய்தவனைக் கண்டறியத் தான் இந்த விடுவிப்பு. செய்திருக்கும் குற்றத்திற்கு மிலிட்டரி ஜெயில் கிடைத்திருக்க வேண்டும். 'போய் வா மகனே' என்று விட்டிருப்பது மொத்தமாய் அமுக்கத் தான்!

எனக்கா தெரியாது..?

பிரச்னை வந்தால், 'அயர்லாந்தில் தொடர்பு கொள்' என்று தனக்குத் தரப்பட்டிருந்த, தலை நகரின் பிரபல எஃப்.எம். கேரியர் ஃப்ரீக்வன்ஸியில் சிக்னல் ட்ரான்ஸ்மிஷன் செய்து, தகுந்த டீகோடர் மூலமாக, நாய்ஸ் கலைத்து, சிக்னல் அடைந்து பெற்ற இரண்டாம் திட்டப்படி, இங்கு துவங்கி, ஐந்து கண்டங்களைக் கடந்து, மீண்டும் இந்தியாவுக்கு வந்து, கம்பெனியின் சர்வரை ஹேக் செய்து... தகவல்கள், படங்கள்... தடம் பல கடந்து, தீப்பெட்டி சைஸ் யூ.எஸ்.பி.டிவைசில் ஜாகை மாறிக் கொண்டிருக்க...

டைம் பார்த்தான்.

டிஜிட்டல் க்ளாக் 03:09 லிருந்து 03:10க்கு மாறியது.

அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது.

இத்தனை நாட்கள் அவன் பார்த்திருக்கும் போது இன்று தான் முதன் முறையாக டைம் மாறுவதைப் பார்க்கிறான். சட்டென்று ஏதோ தோன்றி, லேப்டாப்பின் நேரத்தைப் பார்க்க, 03:11 -> 03:12.

என்ன நேர்கிறது எனக்கு..? இது ஏதேனும் நோயா..? இல்லை எனக்கு ஏதேனும் நடக்கப் போவதன் அறிகுறியா..? ஜன்னல் திரையை மெல்ல விலக்கிப் பார்க்க, சிவப்புக் கண்களாய் ஒரு ஜீப் தொலைவில் நின்று கொண்டிருந்தது.

சரி தான். போக விட்டுப் பிடிக்கப் பார்க்கிறார்கள்.

கிச்சன் அறைக்குச் சென்றான். மைக்ரோ ஓவனில் வைத்திருந்த பால் டம்ளரை எடுக்க முயல்கையில், டைமர் 03:15 மாறி 03:16 என்றது.

வியர்த்துப் போனான். என்னைச் சூழ்ந்து ஏதோ நடக்கின்றது. காரணம் கூற இயலாத அமானுஷ்ய அடையாளங்கள். சம்திங் எங்கோ ப்ராப்ளம். இல்லை.. நான் வீண் ப்ரமை கொள்கிறேனா..? யதேச்சையாக நான் பார்க்கும் பகுதிகளில் எல்லாம் நேர மாற்றம் என் கண்ணில் படுகின்றதோ..?

ஒரு முடிவுக்கு வந்தான்.

ஹாலுக்கு ஓடி வந்து, லேப்டாப்பைப் பார்த்து (03:17 -> 03:18), உடனே வால் க்ளாக்கைப் பார்க்க (03:17 -> 03:18).

சைக்காலஜி டாக்டரைப் பார்க்க வேண்டும். எங்கோ ஏதோ நேர்கின்றது; நேரப் போகின்றது. யாருக்கு..? எனக்கா..?

"றுக்கி கட்டி விட்டீர்களா..?"

"இறுக்கமாக..!"

"இந்தப் பார்சல் எங்கே போகப் போகின்றது..?"

"சவுத் எக்ஸ்டென்ஷன் தேர்ட் ப்ளாக்..!"

"சுத்தமாக வெடிக்கும் அல்லவா..?"

"சுத்தமாக..! சத்தமாக..!"

"நேரம்..?"

"நாளை! முற்பகல் பதினொன்று முப்பதுக்கு செட் செய்யப்ப்ட்டிருக்கின்றது..! மார்க்கெட்டில் மிக நடமாட்டம் இருக்கும் நேரம் அது! நகைக் கடைகள், பழக் கடைகள், பான் ஷாப்ஸ்...! அத்தனை வர்க்கமும் குவியும் இடம் அது! வர்த்தகிக்கும் நேரம் அது!"

"இலக்கு..?"

"குறைந்தது இருநூறு!"

"நல்லது!"

சைக்காலஜி டாக்டர் ம்ருதுள் சர்மா க்ளினிக் காலியாக இருந்தது.

வழக்கமாக மனநிலைக் கோளாறு, குழப்பமான மெண்டாலிட்டி, ஸ்ட்ரெஸ் மேனேஜ்மெண்ட் என்று சைக்காலஜி டாக்டரைப் பார்க்க வருபவர்கள் அனைவரும் மேற்குடி ஜீவர்கள் என்பதால், பார்க்கிங் ஸ்லாட் மட்டும் பெரிதாகக் கட்டி, க்ளினிக் குட்டியாக நான்கு அறைகளில் இருந்தது.

கார்த்திக் சென்ற போது ஒரே ஒரு நாய் மட்டும் முன்னங்கால்களில் முகம் பதித்து தூங்கிக் கொண்டிருக்க, மின்சாரக் கம்பிகளில் முந்தின இரவு மழைத் துளிகள். கறுப்புக் கேபிள் லைன்களில் காக்காய்க் கூட்டம் கத்திக் கொண்டிருக்க,

"இன்னிக்கு பி.வி.எஸ். கப் ஃபைனல் பாருங்க..! ஒரு ஆள் இல்லை. க்ளினிக்ல. தியேட்டர்ஸ்ல. ஷாப்பிங் மால்ஸ்ல. நாளைக்கு யாராச்சும் ஒருத்தர் ஹார்ட் அட்டாக்ல இறந்திட்டார்னு ந்யூஸ் வரும். ரெண்டு பேருக்கு சித்தப் பிரம்மை ஏற்பட்டு இங்க கூட்டிட்டு வருவாங்க. அதனால தான் நான் இந்த மேட்சஸ் எல்லாத்தையும் சப்போர்ட் பண்றதே..? என்ன சொல்றீங்க..?

டாக்டர் ரூமில் இருந்த சின்ன கலர் டி.வி.யில் 'பஜ்ஜி' தர்க்கம் பண்ணிக் கொண்டிருக்க,

"டாக்டர்..! கொஞ்சம் நான் சொல்றதையும் கவனிக்கறீங்களா..?"

ரிமோட்டால் ம்யூட்டிட்டு அவன் பக்கம் திரும்பினார். அவன் டி.வி.யைப் பார்க்கையில், 127/4லிருந்து 131/4க்கு மாறியது.

"இது தான் டாக்டர் என் ப்ராப்ளம். எப்ப ஆரம்பிச்சுதுனு தெரியல. இட் சீம்ஸ் நேத்து நைட்ல இருந்துனு சொல்லலாம். கேக்கறீங்களா..?"

"ம்.. சொல்லுங்க. தட்ஸ் வாட் மை ப்ராக்டிஸ்..!"

"நேத்து நைட்ல இருந்து என் கண்கள்ல எண்கள் விளையாடுது. எந்த டிஜிட்டல் நம்பர் போர்டா இருந்தாலும் நான் பார்க்கும் போது மாறுது. சிஸ்டத்தில க்ளாக், வால் க்ளாக், ஓவன்ல டைம், இன்னிக்கு பாருங்க... மெட்ரோ ட்ரெய்னுக்கு நிக்கும் போது டைம் போர்ட், பச்சை எல்.இ.டி.க்களாலான ஸ்டாப் நம்பர்ஸ், இங்க வந்தா உங்க டி.வி.ல க்ரிக்கெட் ஸ்கோர்...எல்லாமே நான் பார்க்கும் போது மாறுது. இல்லைனா, அது மாறும் போது கரெக்டா நான் பார்க்கறேன். ஏன் இந்த மாதிரி நடக்கணும் எனக்கு..? இது ஏதாவது புது நோயா..?"

"நிமிட் க்ளாக்ல டைம் மாறுவது ஒரு நிமிஷத்துல ஒரு தடவை நடக்கற விஷயம். நீங்க அதைப் பார்ப்பது ஒரு தற்செயலாக் கூட இருக்கலாம் இல்லையா..?"

"இத்தனை தற்செயல்கள் எப்படி டாக்டர் இருக்க முடியும்..? இப்ப பாருங்க உங்க டிஜிட்டல் தெர்மாமீட்டரைப் பார்க்கறேன்... பாருங்க, முப்பதிலிருந்து இருபத்தொன்பதுக்கு மாறுது.."

திரும்பிப் பார்த்தார். அமைதியாக இருபத்தொன்பது காட்டியது.

"உங்களுக்குள்ள எதோ ஒரு சலனம் அந்த டைம்ல எழுகின்றதா..?"

"அப்படி எதுவும் இல்லையே! சாதாரணமா இருக்கேன். சட்டென பார்க்கும் போது, மாறுது. இதெல்லாம் ஏதாவது சிம்பல்ஸா..? ஏதாவது நடக்கப் போகுதுன்னு சொல்றதுக்காக அசரீரி மாதிரியா, டாக்டர்..!"

"டோண்ட் பி சில்லி..! இப்படி மாறுவது போல் தோன்றுவது உங்களுக்கு மட்டுமே இருக்கலாம். உங்க மனதில் ஏற்படுகின்ற ஒரு பிம்பமாக! நிஜத்தில் ஏற்படாத ஒன்றாக..! எனக்கும் இது போல தோன்றலாம். மனதில் ஏதாவது குழப்பம் இருந்தா இப்படி தோன்றலாம். பாருங்க இப்ப ஒரு எக்ஸ்ப்ரிமெண்ட் பண்ணுவோம். இந்த டேபிள் க்ளாக்கை வெச்சுக்குவோம். நாம ரெண்டு பேரும் யதேச்சையா பார்ப்போம். யார் பார்க்கும் போது மாறுதுனு செக் செய்வோம். ஓ.கே..? இதற்குத் தொடர்பில்லாம ஏதாவது பேசுங்க..! ம்ம்.. அந்த மரத்தைப் பத்திப் பேசுங்க..!"

"மரம். பச்சை இலை. குருவி. பறவைகள். மேகம்..." சட்டென க்ளாக்கைப் பார்த்தான்.

11:25 என்று தொடர்ச்சியாக காட்டிக் கொண்டிருக்க, நடுக் கோலன் மட்டும் துடித்துக் கொண்டிருந்தது.

"டாக்டர்..! ஆச்சரியம். இப்ப டைம் மாறலை..! எப்படி டாக்டர்..?"

"சிம்பிள்..! உங்க மனம் ஏதோ குழப்ப நிலையில் இருக்கும் போது, கண்டபடி சிந்தித்து தற்செயல்களை ஏற்படுத்தி உங்களை இன்னும் குழப்ப ஸ்டேட்டுக்குத் தள்ளி விட்டுடுது. இப்ப என்ன பண்ணீங்க..? தெளிவா ஒரு பொருள், மரம், பற்றி சிந்திச்சீங்க. சோ உங்களை குழப்ப நினைத்த மனதிற்கு வேற வேலை குடுத்தீங்க..? தட்ஸ் ஆல். கேள்விப்பட்டதில்லையா..? 'சும்மா இருக்கும் மனம், சாத்தான் விளையாடும் மைதானம்.' மனசை சும்மா இருக்க விடாதீங்க. ஆக்க பூர்வமா எதிலயாவது நுழைச்சிடுங்க..!"

"தேங்க்ஸ் டாக்டர்..! உங்க ஃபீஸ் எவ்ளோ...?"

தெளிவாக வெளியே வந்தான்.

வானம் வெளுத்திருந்தது. சாலைகள் சுத்தமாக கூட்டம் இன்றி இருக்க, தனியாக நடப்பது போல் உணர்ந்தான். எதையாவது சிந்திக்க வேண்டும். இந்த வியாதியில் இருந்து தப்பிக்க..! என்ன.. என்ன..?

பாஸ்போர்ட் க்ளியரன்ஸ் செய்ய வேண்டும். ஃபோட்டோ மாற்ற வேண்டும். பாம்பே போய், மொரிஷீயஸ் தாவி, சவுத் ஆஃப்ரிக்கா கடந்து...

பான் வண்டியின் இருள் மூலையில் பார்க்க, ஒரு கரிய பார்சலின் திறந்த கிழிசலில், டைமர் ஒன்று 11:29லிருந்து 11:30க்கு மாறுவதாகக் கண்டான்.

16 comments:

Anonymous said...

Good start! next part!? :)

இரா. வசந்த குமார். said...

Completed...!!! :)

Veera said...

I should say, I've guessed the ending where they setup the time bomb. :-(

இரா. வசந்த குமார். said...

Dear Sundar,

If it happens then i have to sccept my failure in narrating this story...!

:(

Have to improve a lot...!!!

Anonymous said...

சரி .சரி ,,,,, என் மகனுக்கு சீக்கிரம் திருமணம் செய்து வைக்க வேண்டும்

வெண்பூ said...

ஹாய் வசந்த்..

கதையின் மிக நீளமாக இருப்பதாகத் நினைக்கிறேன். அதேபோல் மிக அதிக தகவல்கள் (உதாரணமாக முதல் 40%) தேவையில்லாதது போல் தோன்றுகிறது. இந்த கதையில் உங்கள் டச் இல்லை வசந்த்.. பல கதைகளை எழுதி வெட்டி ஒட்டியது போல் தோன்றுகிறது..

இரா. வசந்த குமார். said...

அன்பு அம்மா...

நன்றிகள் தங்கள் குக்கும் கருத்துக்கும்..!:)

***

அன்பு வெண்பூ...

யாருக்கும் பிடிக்கவில்லையே...!! ஹூம்...!

இன்னும் கடின முயற்சி செய்ய வேண்டும்..!!

நன்றிகள்...!!

thamizhparavai said...

//
யாருக்கும் பிடிக்கவில்லையே...!! ஹூம்...!
//
அது எப்படி வசந்த் நீங்களா முடிவு செய்ய முடியும்?
நான் வேற ஒரு குடும்பப் பிரச்சினையைப் பத்தித் திங்க் பண்ணிட்டு,சரி, வசந்த் ரொம்பநாள் கழிச்சு கதை வுட்டிருக்காருன்னு பார்க்க வந்தேன்.
really i enjoyed a lot..each lines..
மத்தவங்க சொல்றாங்கன்னு மாத்தி சொல்லலை.ரொம்ப வித்தியாசமான அனுபவத்தை உணர்ந்தேன்.
அதெப்படி டைமர்ல டைம் மாறுற கருவைப் பிடிச்சீங்க...
எனக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது.
என்னால வீரசுந்தர் சொன்ன இடத்துல கூட முடிவை யூகிக்க முடியலை.
வாழ்த்துக்கள் வசந்த்...
அடடா... பின்னூட்டம் போட்டு மானிட்டர் ஓரத்துல பார்த்தா 10:43 ல் இருந்து 10:44 க்கு நேரம் மாறுது. எனக்கு என்ன ஆச்சு...?சைக்யாட்ரிஸ்டைப் பார்க்க வேண்டியது நான் தானா...?
10:44 லிருந்து 10:45...
ஹெல்ப் ப்ளீஸ்.....

இரா. வசந்த குமார். said...

அன்பு தமிழ்ப்பறவை...

மிக்க நன்றிகள் தங்கள் கருத்துக்களுக்கு...!

ஒவ்வொரு கதையையும் வித்தியாசமாக வேறு வேறு தளங்களில் எழுத வேண்டும் என்ற ஆசையில் முற்படுகையில், சில இடங்களில் சறுக்கி விடுகின்றது. இன்று கூட ஒரு கருவை யோசித்து வைத்திருந்தேன். மெஜாரிட்டி ஒபீனியன்களில், இன்னும் கொஞ்சம் மெருகேற்றிக் கொண்டு இறக்கலாம் என்று தள்ளி வைத்திருக்கிறேன்.

நீங்கள் சொன்ன பிறகு தான் கவனித்தேன். கதை எழுதி இரண்டு வாரங்கள் ஆகி இருக்கின்றன. கொஞ்சம் லேட் தான். :)

உங்கள் ப்ரச்னைக்கு நீங்கள் சைக்யாரிஸ்டைப் பார்க்க வேண்டியதில்லை. சிஸ்டம் க்ளாக்கைப் பார்க்காமல் இருந்தாலே போதும் அல்லவா..?

இதைப் பற்றி சிந்தியுங்கள் : கேட்க ஆளில்லாத காட்டில், மரம் விழுந்தால் சத்தம் வருமா..?

thamizhparavai said...

//கேட்க ஆளில்லாத காட்டில், மரம் விழுந்தால் சத்தம் வருமா//
வசந்த்... ஏற்கெனவே...இதப் பத்தி உங்க பதிவுல படிச்சு..தொடர்ந்து இயற்பியல் பத்தி உங்க பதிவுகளை(ரீடரில்) படித்து விட்டேன் ஒரு மாதத்திற்கு முன்பே... மண்டை காய்ந்ததுதான் மிச்சம்.
அலுவலகத்தில் படித்ததால் இன்னும் குழப்பம் அதிகம். சரி பிறகு பொறுமையாகப் படித்துவிட்டு கேட்டுக்கொள்ளலாம் எனவிட்டுவிட்டேன்.
விரைவில் இவ்வாரத்திற்குள் அதைப் படித்துவிட்டு வருகிறேன் வசந்த். பிறகு வைத்துக் கொள்ளலாம் கச்சேரியை....

சத்தம் வரும்.. கேட்கவே ஆளில்லை ... எப்படிச்சொல்வது சத்தம் வருமெனெ...? ஜெனரல் ட்ரூத் என வைத்துக் கொள்ளலாமா...?
இக்கதையில் நீங்கள் சறுக்கியதாக எனக்குத் தெரியவில்லை..

இரா. வசந்த குமார். said...

அன்பு தமிழ்ப்பறவை...

இந்த இடத்தில் இந்த இயற்பியல் கேள்வியைக் கேட்க காரணம் : நீங்கள் சிஸ்டம் க்ளாக்கைப் பார்க்காமல் இருந்தால், இப்படி ஒரு பிரச்னை இருப்பதை அறிவீர்களா என்பதற்கு ஈடாகத் தான்..! :)

இயற்பியல் படித்து விட்டு வாருங்கள். பேசலாம்.

அன்புக்கு நன்றிகள் தமிழ்ப்பறவை...!

இரா. வசந்த குமார். said...

அன்பு வெண்பூ...

இப்போது சொல்கிறேன்.

இது போன்று டைம் மாறுவதாகத் தோன்றும் ஒருவன் டாக்டரைக் கன்சல்ட்டி விட்டு, வெளியே வரும் போது, டைம் பாம் டைமர் மாறுவதாகப் பார்ப்பதாக முடித்திருந்தால் கச்சிதமான சிறுகதை ஆகி இருக்கும் என்பது தானே உங்கள் கருத்து?

ஆனால் அத்தகைய குண்டுவெடிப்பிற்கு அவன் ஏன் இலக்காக வேண்டும்? moral & ethics படி ஏதாவது அவன் தவறு செய்திருக்க வேண்டும் என்று விரும்பினேன்.

எனவே தான் முதல் பாராக்களில் அவன் தவறு செய்யும் படலங்கள். எனவே தான் குண்டு வெடிப்பின் போது சம்பந்தம் இல்லாத அப்பாவி மக்கள் பாதிக்கப்பட்டு விடக் கூடாது; குண்டு வெடிப்பது இவன் செய்த குற்றத்திற்கான தண்டனையாகவே இருக்க வேண்டும் என்பதற்காகவே, அன்றைய நாளில் வேறு யாரும் அந்தப் பகுதியில் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளப்பட்டது.

இப்படி விளக்கமாகப் புரிந்து கொள்ள முடியாதவாறு எழுதி இருந்தால் என் பிழையே!

***

அன்பு தமிழ்ப்பறவை...

இந்த எண் மாறுவது திங்கட்கிழமை மாலைகளில் எனக்கு ஏற்பட்டது. இந்த அமானுஷ்ய நிகழ்வு என்னை உறுத்திக் கொண்டே இருந்தது. இதை ஏதாவது செய்தாக வேண்டுமே!; அப்படியே விட்டு விடக் கூடாது என்று யோசித்துக் கொண்டே வந்ததில், கதை உருவாகி விட்டது.

ஆஃபீஸ் மேகசீனுக்கு அனுப்ப இதை எழுத விரும்பினேன். ஆனால், கதை அலுவலகத் தகவல் திருட்டைக் கொண்டு வந்து விட்டதால், ஐடியா ட்ராப் செய்யப்பட்டது.

ஏனெனில், 'பேரு கெட்டுப் போச்சுதுன்னா... நம்ம பொழப்பு என்னாகுங்க...?'னு கவுண்டரே பாடி இருக்காரே...!

Wandering Dervish said...

கதை நல்லா இல்லைடா, நிறைய லூஸ் நாட்ஸ்.
எதுக்காக இப்படி ஒரு முயற்சி ? :(

இரா. வசந்த குமார். said...

அன்பு நாடோடி...

தாங்களும் கதை சரியில்லை என்று சொல்கிறீர்கள். இன்னும் கடின உழைப்பை இறக்க வேண்டும் என்பதையே உங்கள் சொல்லிலும் காண்கிறேன்.

thamizhparavai said...

அடடா... எனக்கு உண்மையிலேயே வியாதிதான். யாருக்குமே பிடிக்காதது எனக்கு ஏன் பிடிச்சது...?!

வசந்த் மேற்குறிப்பிட்ட வரிகள் கூட உங்களின் அடுத்த கதைக்கு அல்லது அதற்கடுத்த கதைக்கு நல்ல கருவாக அமையலாம்.

இரா. வசந்த குமார். said...

அன்பு தமிழ்ப்பறவை...

மிக்க நன்றிகள் தங்கள் கம்மிங்குக்கும், கருத்துக்கும்! மற்ற கதைகளோடு ஒப்பிட்டுப் பார்த்தால், இதில் கொஞ்சம் 'பெப்' குறைவு தான். அதிகமாக்க முயற்சிக்கிறேன். ;-)