
13-ஆவது கேரள சர்வதேசத் திரைப்படத் திருவிழா இந்த ஆண்டு டிசம்பர் 12 முதல் 19 வரை திருவனந்தபுரத்தில் நடைபெற இருக்கின்றது.
http://tvmrising.blogspot.com/2008/11/iffk-comes-round-again.html
http://www.iffk.in/
http://www.iffk.keralafilm.com/
சென்ற ஆண்டு தவற விட்டு விட்டேன். இந்த முறை கொஞ்சமாகவாவது பார்க்க வேண்டும் என்று முடிவு செய்திருக்கிறேன். இருந்தாலும் சில சந்தேகங்கள் இருந்தன. அவற்றைத் தீர்ப்பதற்கான தகவல்கள் எதுவும் இணையத் தளங்களில் இல்லாததால், யாரைக் கேட்பது என்ற குழப்பம்.
சட்டென நினைவுக்கு வந்தது ஒரு பேர்.
தமிழ் கூறும் வலை நல்லுலகில், நீ....................ள் பதிவு நாயகரும், சென்னைக் குறும்பட விழாக்கள் தகவல் serverம், கைகளை மட்டும் காட்டியே குறும்படம் எடுத்து சாதனை புரிந்த உண்மைத்தமிழன் அவர்களைக் கேட்டேன்.
அவரது சமீப பதிவுக்கான எக்கச்சக்க பின்னூட்டங்களில் மூழ்கிக் கிடந்தவரை எழுப்பி விட்டு விடைகள் பெற்றேன்.
'திண்டுக்கல் தீப்பொறி' உண்மைத் தமிழன் அவர்களுக்கு நன்றி!
3 comments:
இப்போதுதான் பார்த்தேன் தம்பி..
சங்கிலி போட்டுக் கட்டி வைச்சதுக்கும், அறிமுகத்திற்கும் நன்றி.
அந்த திண்டுக்கல் தீப்பொறி தேவையா எனக்கு..
ஏற்கெனவே இருக்குற பேர் போதாதா..
நல்லபடியா பெஸ்டிவல் முழுசையும் பாருங்க..
ஒரு பதிவுக்கு அஞ்சு படம்.. ஒரு படத்துக்கு ஒரு பாரான்னு முடிஞ்சு வந்து கொஞ்சம் தட்டிவிடுங்க..
எல்லோருக்கும் பயன்படட்டும்..
வாழ்க வளமுடன்..
அன்பு உண்மைத்தமிழன்...
மிக்க நன்றி சார், நீங்கள் கொடுத்த பதில்களுக்கு! கண்டிப்பாக கொஞ்சமாவது பார்ப்பேன். அவற்றைப் பற்றி எழுதுகிறேன்.
யார் சொன்னாலும் நீங்கள் 'திண்டுக்கல் தீப்பொறி' தான். அதில் மாற்றாம் கிஞ்சித்தும் இல்லை. :)
காலப்பயணி,
உண்மை தமிழனோட அந்த பதிவ நானும் படிச்சேன் . நிறைய விஷயங்கள் வாக்கியத்தோரனைக்காக எழுத பட்டுள்ளது.
புலிகள் இந்த போருக்கு எப்படி தள்ளப்பட்டார்கள்?
ஏன் மற்ற இயக்கங்களை சார்ந்த தலைவர்களை மட்டும் அல்லாமல் அடி மட்ட தொண்டன் வரை அழித்து ஒழித்தார்கள் என்பதற்கு எல்லாம் நீண்ட வரலாறு ஒன்று உண்டு .
சும்மா 20 பாயிண்ட் போட்டு எழுதிட முடியாது .
(பி.கு - எல்லா சகோதர இயக்கங்களையும் புலிகள் அழிக்க வில்லை. சில இயக்கங்கள் கலைக்கப்பட்டன, சில இயக்கங்கள் புலிகளோடு இணைக்கப்பட்டன )
பாலஸ்தீன விடுதலை இயக்கங்களின் வரலாறும் இதை போன்றதே.
(புலிகள், ப்ளோ இரண்டிற்கும் ஒன்றாக CIA வும் , ரஷ்யர்களும் வெவ்வேறு காலக்கட்டங்களில் ஒரே பயிற்ச்சிகளங்களில் பயிற்ச்சி அளித்த வரலாறு மிக சுவாரசியமான ஒன்று ..ஏன் இது போன்ற நல்ல பிளாட் வைத்து எல்லாம் நம்ம ஆளுங்க படம் எடுப்பது இல்லை. சும்மா காதல கட்டி அழுகுறானுங்கப்பா )
யாரவது இந்தியா'வுக்கு அஹிம்சை மூலமாக தான் விடுதலை கிடைச்சதுன்னு சொல்றது relay race 'ல கடைசில ஓடி வந்தவனுக்கு தான் மெடல் கொடுக்கணும் , அவன் மட்டும் தான் அதற்க்கு தகுதியானவன் ... மத்தவனுங்க எல்லாம் சும்மா போங்குன்னு சொல்றத போன்ற முட்டாள்த்தனம்.
வலைப்பதிவர்கள் நிறைய நேரங்களில் சும்மா அடுக்கு மொழிக்காகவும் , விளம்பரத்துக்க்காகவும் மேலோட்டமா எழுதுறது கண்டிக்க தக்கது. அதுவும் இது போன்ற sensitive ஆன விஷயங்களில்
அதுக்கு சும்மா மொக்கையா பதிவு எழுதலாம்
nothing is better than nonsense
Post a Comment