"He is a Fantastic Man...!"
படம் துவங்கி இரண்டாம் காட்சியில் தொண்டைப் புற்றுநோயின் உச்சத்தில் படுக்கையில் இறக்கப் போகும் அப்பா சூர்யாவைப் பார்க்கும் டாக்டர் சொல்கிறார். நிஜமாய் அதை ஒரிஜினல் சூர்யாவைப் பார்த்துச் சொல்ல வேண்டும்.
கதை சாதாரணம்.
சூர்யா பின்னி இருக்கிறார். படம் முழுகும் விதம் விதமாய் வருகிறார். அப்பா - இதிலேயே பல கெட்டப்புகள்.ஸ்கூல் பையன். காலேஜ் இளைஞன். தசாவதார மேக்கப் பயமுறுத்தல்கள் இல்லாமல் உடலைப் பரிசோதனை செய்து பார்த்திருக்கிறார்.
சமீரா அழகோ அழகு..! கழுத்தோர மச்சமும், தெற்றுப் பல் சிரிப்பும், கவி பேசும் கண்களும், ஸ்டைலான கேசமும், இளமையான ஆடைகளும்...! அழகி!
சிம்ரன் நல்ல நடிப்பு! திவ்யாவும் உண்டு!
படம் முழுதும் இங்க்லீஷிலேயே பேசிக் கொண்டிருக்கிறார்கள். வழக்கமான கெளதம் கேரக்டர்கள் அச்சுத் தவறாமல் இருக்கிறார்கள். தங்கை சூர்யாவிடம்,'whats goin(g) on here..?' என்று தான் சாதாரணமாகப் பேசுகிறார்கள். தமிழ் அவர்களுக்கு வீட்டுக்கு வெளியே தான் தேவைப்படும் போல் இருந்தது.
அமெரிக்கக் காட்சிகள் நல்ல முறையில் காட்டப்பட்டிருக்கின்றன. பாயும் அதி வேகக் கார்கள். சுழலும் காமிராவில் மேக மூட்டத்தில் ப்ரூக்ளின் ப்ரிட்ஜ், மஞ்சள் ஈசல் பூச்சிகளாய் பறக்கும் தெருவோர மின் விளக்குகள்...! படத்தின் வேகம் காட்சிகள் நகரும் வேகத்தில் இல்லை என்பதை கெளதம் எப்போது உணர்வார் என்று தெரியவில்லை.
படம் எதைப் பற்றிச் சொல்ல வருகிறது என்றே தெரியவில்லை.
எந்த அப்பாவும் பையன் கெட்ட வழியில் செல்வதாகக் கண்டால், அவனைத் திருத்தத்தான் முயல்வார் என்பது நிதர்சனம். அதனைப் பையன் "டேட்..! யு ஆர் க்ரேட்.." என்று சொல்வது ஓ.கே. ஆனால் டாக்டரும் 'Fantastic Man' என்று சொல்லுமளவிற்கு என்ன செய்தார் என்று காட்டப்படவில்லை. அட, அப்பா என்ன வேலை செய்கிறார் என்றே தெரியவில்லை. எதனால் அவ்வளவு கடன்கள்..?
பாடல்கள் கேட்க இனிமை போல், படத்திலும் நன்று. சிம்ரன் பாடலில் '70 காலத்தைக் காட்ட முயன்று ஓரளவு செய்திருக்கிறார்கள். ஆனால் அப்போதே 'தமிழ்நாடு அரசுப் பேருந்து' என்றா சென்னை பஸ்கள் ஓடின..? பல்லவன் இல்லையா..?
கேரளா, கல்கத்தா, சென்னை, திருச்சி, ப்ரூக்ளின், காஷ்மீர், டெல்லி, நார்த் ஈஸ்ட் டெரிடரிஸ் என்று கதை சுற்றுகிறது.
நிறைய இடங்கள் கத்திரி போட்டிருக்கலாம். சில நாட்களில் தியேட்டர் ஆபரேட்டர்கள் அந்தப் பணியை மேற்கொள்வார்கள் என்று நினைக்கிறேன்.
சூர்யா அடிக்கடி சிக்ஸ் பேக்ஸைக் காட்டுகிறார். திகட்டுகிறது (காதில் புகை...!).
தாடிவாலா சூர்யா, கார்த்தி போல் இருக்கிறார்.
ஆட்டோகிராப், தவமாய் தவமிருந்து, காக்க காக்க, வே.வி., எல்லாம் கலந்து கட்டி ஒரு படம் பாருங்கள். அது இது போல் இருக்கும். கடைசி சீனில் சிம்ரன் 'வாரணம் ஆயிரம்' என்று ஆரம்பித்து ஒரு டயலாக் பேசுகிறார். அதற்காக இப்படி ஒரு பெயர். அழகான தமிழ்ப் பெயரை வைத்து விட்டு, ஓர் இங்கிலீஷ் ஃபிலிம் எப்படி எடுப்பது என்பது கெளதமுக்கு மட்டுமே சாத்தியம்.
அப்பா - பையன் பாசமா, காதலா, தேச பக்தியா, குடும்பமா...என்று எதைப் பற்றிச் சொல்கிறது என்று குழப்பம் இருந்தாலும், நிஜத்தில் வாழ்க்கை என்பது அப்படி எளிதில் வரையறுக்க முடியாததாகத் தான் இருக்கின்றது என்பதால், ஒரு முறை பார்க்கலாம், கெளதம் அவர் அப்பாவிற்காக எடுத்த இப்படத்தை!
படத்தின் சுவாரஸ்யத்தை விட, ஓவர் ப்ரிட்ஜ் அஞ்சலி தியேட்டருக்குப் போகும் முன் பஸ்ஸில் நிகழ்ந்த கண்டக்டர் - பயணி சண்டையும், எதிர்பாராமல் அதே பஸ்ஸில் வந்த சுந்தருடனான சந்திப்பும், டிபனில் சாப்பிட்ட நெய் தோசை - வடைகள் காம்பினேஷனும், லஞ்ச் ஆரியாஸில் எடுத்துக் கொண்ட டொமேட்டோ சாஸும் சுவையாக இருந்தன.
12 comments:
Good review!
So why no one compared it with Forest Gump? Is it not the same oneline?
So you do travel in Chennai bus?
காலையில பட்சி கூவுச்சு.... எல்லோரும் 'வாரண்ம் ஆயிரம்' விமர்சனம் எழுதுறாங்களே.. வசந்த் எழுதுனா என்ன எழுதுவாருன்னு...? அட அந்தாளு தியேட்டரு பக்கமே போக மாட்டாரு.அப்படியே போனாலும் 'ஓவர் பிரிட்ஜில் ஓர் மழைநாளில்...' அப்படின்னு பயணக்கட்டுரைதான் போடுவாரு அப்படின்னுதான் எதிர்பார்த்தேன். இருந்தாலும் ஒரு நப்பாசை இருந்தது.
நிறைவேத்திட்டீங்க....
//கடைசி சீனில் சிம்ரன் 'வாரணம் ஆயிரம்' என்று ஆரம்பித்து ஒரு டயலாக் பேசுகிறார். அதற்காக இப்படி ஒரு பெயர். அழகான தமிழ்ப் பெயரை வைத்து விட்டு, ஓர் இங்கிலீஷ் ஃபிலிம் எப்படி எடுப்பது என்பது கெளதமுக்கு மட்டுமே சாத்தியம்.//
நினைச்சேன் இந்தமாதிரித்தான் ஏதாச்சும் பண்ணுவாருன்னு. 'வேட்டையாடு விளையாடு' படத்துல் முக்கியமான கேரக்டர்களுக்கு மட்டும் தூய தமிழ்ப்பெயர் வச்ச புண்ணியவானாச்சே..
தலைப்பு சூப்பர் வசந்த்....(தலைப்பும், பதிவின் கடைசிப் பத்தியும் கூட வசந்த் 'டச்')
அன்பு தமிழ்ப்பறவை...
நானாகச் செல்லவில்லை. அலுவலகத் தமிழ் நண்பர்கள் வற்புறுத்தியதால், நேற்று சென்றோம். தனியாகச் செல்லக் கூடாது என்பதால், வீரசுந்தரையும் கூட்டிக் கொண்டு போனோம்.
நானும் சரி, தியேட்டருக்குச் சென்று பல மாதங்கள் ஆகின்றனவே என்று தான் சென்றேன்.
Dear Ramesh...
Actually I dont see ForestGump. So no opinions in that direction.
Chennai Bus..? I cant get u. :)
nice review
//So why no one compared it with Forest Gump? Is it not the same oneline?//
தயவு செய்து என்னுடய விமர்சனத்தை பார்கவும் பாரஸ்ட் கம்ப் ப்டத்தை நான் ஓப்பிட்டு எழுதிய பதிவு ரமேஷ் http://cablesankar.blogspot.com/2008/11/blog-post_15.html
//ப்ரூக்ளின் ப்ரிட்ஜ், //
=
golden gate bridge, san francisco.
Forrest Gumpம் இதுவும் எப்படி ஒண்ணாகும்னு ரூம் போட்டு யோசிச்சும் ஒண்ணும் தோணலை. ஏன், சில பேர் அப்படி கேக்கராங்கன்னு தெரியலை ;)
:))Nice
அந்த கண்டக்டர்-பயணி சண்டையை கூட்டத்தின் காரணமாக தவற விட்டு விட்டேன். :) முடிவு என்னாயிற்று என்று தெரியவில்லை.
உங்களது இந்தப் பதிவை எனது “வாரணம் ஆயிரம் விமர்சனம்” பதிவில் இணைத்துள்ளேன். :D
Dear MuraliKannan...
Thanks for the Coming and Comment.:)
***
அன்பு கேபிள்சங்கர்...
நன்றிகள். தங்களது பதிவையும் பார்த்தோம். படம் ரொம்ப ஒன்றும் மோசம் இல்லை. பட், ஓ.கே. ஆனால் சூர்யாவின் உழைப்புக்கு பிரமித்த வகையில் ஃபெண்டாஸ்டிக்..!
***
Dear Surveysan...
Thanks for the info.
கொளதமே சொல்லி விட்டாரே, 'Forest Gump' இதற்கான இன்ஸ்ப்ரேஷன் என்று...! அதுக்கு மேல நாம டிஸ்டர்ப் பண்ணக் கூடாது...!
***
அன்பு ஸ்ரீமதி...
நன்றிகள்.
***
அன்பு சுந்தர்...
கவனித்தோம்..! கவனித்தோம்..! என்ன செய்ய..? ஐ.டி. கொடுக்கும் சொத்துகளில் 'அது'வும் ஒன்றல்லவா...!
திரைப்படத்தை பார்த்ததும் எனக்கு என்னென்ன தோன்றியதோ, அதை அப்படியே தந்திருக்கிறீர்கள். ஒரு தற்போதைய அப்பா எப்படியெல்லாம் இருப்பாரோ அப்படித்தான் அப்பா சூர்யாவும் இருக்கிறார். சூர்யாவின் நடிப்பு, ரத்னவேலுவின் ஒளிப்பதிவு, ஹாரிஸீன் இசை ஆகியவை தான், படத்தினை இரண்டரை (இன்னும் கூடுதல்?) மணி நேரத்துக்கு நம்மை உட்கார வைக்கிறது.
ஓவர் பிரிட்ஜ் அஞ்சலி தியேட்டர் இருப்பது திருவனந்தபுரமா?
Post a Comment