Tuesday, December 30, 2008
IFFK - 2K8 :: Son of a Lion.
Son of a Lion
Australia/2007/35mm/Colour/92'/Pashu
Direction Screenplay: Benjamin Gilmour
Producer: Carolyn Johnson
Cinematography: Benjamin Gilmour, Haroon John
Editing: Alison Croft
Music: Amanda Brown
Cast: Sher Alam Miskeen Ustad, Niaz Khan Shinwani, Baktiyar Ahmed Afridi
வடமேற்கு பாகிஸ்தானில் அரசாங்கச் சட்டங்கள் செல்லுபடியாகாத மாகாணங்களின் ஒன்று டாரா. இது ஆப்கானிஸ்தானைத் தொட்டு இருக்கின்றது. ப்ரிட்டாஷார்கள் அகண்ட பாரதத்தைக் கட்டமைத்த காலத்தில் இருந்தே இங்கு வாழ்ந்து வரும் பஷ்டூன் என்ற இனத்தவரின் குலத்தொழில், 'ஆயுதம் செய்வோம்'. மட்டுமின்றி துப்பாக்கி கடத்தல், எல்லை தாண்டுதல் என்று அட்வென்ச்சர் ஜீவனம்.
ஆப்கான் சந்தித்து வந்த/வரும் அத்தனை யுத்தங்களிலும் இவர்களது பங்கு எமகாதகம். ரஷ்ய ஆக்ரமிப்பின் போதும், 'அவர்களை எதிர்க்கிறேன் பேர்வழி' என்று சொல்லிக் கொண்டு சி.ஐ.ஏ., பாகிஸ்தானில் குதித்து ஐ.எஸ்.ஐ.யுடன் இணைந்த கைகளாகி, இவர்களை முஜாஹிகிதீன்கள் என்று பேரிட்டு களத்திற்கு அனுப்பிய போதும், பிலேடன் பாயுடன் ஒற்றைக்கண் ஓமர் ஆட்சி செய்த தாலிபான்கள் அரசாட்சியின் போதும், இப்போது அமெரிக்கப் படைகள் தண்டு இறக்கியிருக்கும் போதும் இவர்களது தொழிலின் பிரத்யேகத் தேவை உணரப்பட்டுள்ளது.
இவர்களில் ஒருவரின் மகனான நியாஸ் பள்ளிக்குப் படிக்கப் போகிறேன் என்று முடிவு செய்வதில் இருந்து, அவனது வீரத் தந்தையுடனான மோதலும், பெஷாவரில் இருக்கும் பெரியப்பாவின் பெண்ணான ஆயிஷாவுடனான நட்பும், படம் முழுதும் அவனது தடைகளைத் தாண்டிச் செல்ல வேண்டி, அவனது வாழ்க்கையைக் கூறும் படம் இது - Son of a Lion.
ஆஸ்திரேலிய இயக்குநரான Benjamin Gilmour அறிமுகப் படம் இது!
சி.என்.என். டாகுமெண்ட்ரி::
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment