Friday, January 23, 2009

பிரிவோம் சந்திப்போம் - சுஜாதா.

நெல்லையில் இருக்கும் நண்பனின் தங்கை திருமணம் பாபநாசம் கோயிலின் அருகே நடந்தது. அதற்காக அதிகாலையில் வீட்டில் இருந்து கிளம்பி, வேனில் கொஞ்சம் தூக்கத்தோடு மிதந்து, பாய்கின்ற ஆற்றங்கரையில் திருமணத்திற்கு கலந்து கொள்வதற்கு முன் நினைவுகள் பறந்தன.

பாபநாசம்... அப்பர் டேம்... அம்பை... ரகுபதி... மதுமிதா... ரத்னா... சுஜாதா...பிரிவோம், சந்திப்போம்..!

சிறுவனாக இருந்த போது அத்தை வீட்டில் வாராவாரம் வெள்ளிக்கிழமை ஒளியும் ஒலியும் பார்த்துக் கேட்டுக் கொண்டே படித்த ஞாபகங்கள்.

விசா பப்ளிகேஷன்ஸ்ஸில் இருந்து வாங்கிய இரண்டு பாகங்களையும் இந்த வருட சென்னை நூல அழகத்தில் வாங்கிப் படித்த போது, அத்தனை இனிமை..!

இளமை துள்ளத் துள்ள ஒரு சூப்பர் காதல் கதை..! நமக்கு ஆச்சரியம் தருகின்ற எழுத்துக்கள். தொடர்கதையாக வந்த படியால், அத்தியாயக் கடைசி வரிகள் கொக்கி போடுகின்றன.

ஆனந்த விகடனில் இவருக்கு அண்ணா சாலையில் பெரிய கட் அவுட் வைக்கப்பட்டது. 'அமெரிக்க சென்று வந்து எழுதுங்கள்' என்று எஸ்.பாலசுப்ரமணியன் அனுப்பி வைத்து இரண்டாம் பாகம் முளைத்து வந்தது.

இப்போது படமாக எடுத்துக் கொண்டிருக்கிறார்களாம். பயமாக இருக்கின்றது!

புத்துணர்ச்சி பெற படிக்க வேண்டிய நாவல், Fresh வாத்தியாரின் எழுத்துக்களில்..!

புத்தகம் : பிரிவோம்... ...சந்திப்போம் 1 & 2

புத்தக வகை : நாவல்.

ஆசிரியர் : சுஜாதா.

கிடைக்குமிடம் : விசா பப்ளிகேஷன்ஸ்.

பதிப்பகம் : விசா பப்ளிகேஷன்ஸ்.

விலை : 65 & 115 ரூ.

4 comments:

வெட்டிப்பயல் said...

Thats true... Its an excellent novel...

Unga collegemate Dhana ippa en roomie.. avan part 2 ippa padichitu irukaan :)

Karthik said...

//இப்போது படமாக எடுத்துக் கொண்டிருக்கிறார்களாம். பயமாக இருக்கின்றது!

முதலில் நாவலைப் படித்துவிட்டால் படம் எவ்வளவு நன்றாக எடுத்தாலும் பிடிக்காது என்று நினைக்கிறேன். எனக்கு அப்படித்தான்.

Anonymous said...

///இப்போது படமாக எடுத்துக் கொண்டிருக்கிறார்களாம். பயமாக இருக்கின்றது!///

நியாயமான பயம்தான்!

இரா. வசந்த குமார். said...

Dear Vettiji...

Thanks. Dhana is a very very good boy. I hope he only reads the second part.. not trying to implement that...!! :)))

***

அன்பு கார்த்திக்...

அப்படித் தான். இருந்தாலும் ஒரு நப்பாசை. தமன்னாவைப் பார்த்தால் சரியாகத் தான் தேர்வு செய்திருக்கிறார்கள் என்று தோன்றுகிறது. வெயிட் செய்து பார்க்கலாம்.

***

அன்பு சுந்தர்...

நன்றி. நியாயமான பயம் அநியாயமானதாக மாறி விடக் கூடாது...!!