முத்து மற்றும் படையப்பாவின் பிரம்மாண்ட வெற்றிகளுக்கு இடையே சுமார் என்று சொல்லத்தக்க வகையில் வெளிவந்து ஓடிய படம், அருணாச்சலம் என்று நினைக்கிறேன். அதனால், பாடல்களும் அவ்வளவாக எனக்குப் பழக்கமில்லாமல் போய் விட்டன.
இன்று மிக யதேச்சையாக 'நகுமோ' பாடலைப் பார்த்த போது, இவ்வளவு அழகான மெலடியாக இருக்கின்றதை எப்படி மிஸ் செய்தேன் என்று ஆச்சரியப்பட்டேன்.
சரணங்கள் என்ன ஒரு துள்ளலான இசை..! வரிகளும் இசையின் குறுக்கும் நெடுக்குமான இடைவெளிகளுக்குள் எவ்வளவு இயல்பாகத் தெளிக்கப்பட்டிருக்கின்றன!!
ஹரிஹரன், சித்ராவின் தேன் குரல்களில் அவர்களே சொல்வது போல், கேட்பதற்குச் 'சுஹமாகத்' தான் இருக்கிறது.
2 comments:
பாடல் வெளியான போது எனக்கும் பிடித்த பாடல்... ஆனால் போகப் போகப் பிடிக்காமல் போய்விட்டது... ரொம்ப ஸ்லோ...
அன்பு தமிழ்ப்பறவை...
எனக்கு இப்போது தான் பிடிக்கின்றது. :)
Post a Comment