Monday, January 18, 2010

பதிவர் கார்க்கியின் விருப்பத்திற்காக...

மீபத்தில் பதிவர் கார்க்கி, 'தமிழ் சினிமாவில் இசை சுனாமி' என்ற பதிவில் ஓர் ஆதங்கப்பட்டிருந்தார்.

/* ஒ மகசியா நல்ல பகடி என்றாலும் ஒரு அருமையான மெலடியை வீணடித்து விட்டார்களோ என்று தோன்றுகிறது. */

வீணடித்த மெலடிக்குத் தகுந்த வரிகள் கொடுத்து உயிர் கொடுக்க விரும்பினேன். அது கீழே..!

***



நேற்றைய மழையே
க்ரேக்கத்து சிலையே
தொட்டவுடன் நானாய் சொக்கிடுவேன் தானாய், வந்திடுநீ!

தாஜ்மஹல் பூவே
தாமரைத் தீவே
தங்கநிறமேனி நெஞ்சுத் தலகாணி, தந்திடுநீ!

வெட்கங்கள் ஆடைசூடும்
வேனில்மழைக் காலம் காலம்
நிலா குளிர் வேதனைக் கூட்டம் கூட்டும்
விரலாலே எனை மீட்டிப் போ..!


சரணம்.1 ::

மேக மெத்தைமேல்
முத்துக்கள்
மழையாய்த் தூங்கும்

மின்னல் பட்டாலே
முத்தமாய்த்
தூறல் தூவும்

நீலப் பட்டாடை
நீங்கிடக்
காலையில் காயும்

நில்லாக் கதிரொளி
மாலையில்
மங்கையுள் பாயும்

நீ வர நான் தர முத்தம்நூறு
நீ பட நான் தொட சத்தம் ஏது?

பட்டுத் தொட்டு ஓட
மெட்டுக் கட்டிப் பாடத்
தீ ராகமே...!!!


சரணம்.2 ::

வேண்டும் போதெல்லாம்
வேண்டிக் கொண்டாற்போல்
வந்திடும் தேவி

வெட்கப்பூ தாங்கி
வெப்பத்தில்
கொன்றிடென் ஆவி

காணும் போதெல்லாம்
கண்களுக்குள்ளே
கலந்திடும் போது

கைகள் இணைந்து
கலவிடக்
காரணம் ஏது?

பொன் துளி போதைத் தேன் நீயுமென
தென் மலர் தேயிலை நீயுமென

மச்சம் தொட்டுப் பார்க்க
மிச்சம் இன்றி வேர்க்க
பெய் மழையே...!!!

***

கார்க்கி, ஹேப்பி..?

11 comments:

கார்க்கிபவா said...

சகா நம்பிடுங்க.. அந்த பதிவு எழுதும்போதே நானும் யோசிச்சேன்..

அந்த வரிகள் அப்புறமா போடறேன்..

உங்களது நல்லாவே இருக்கு..

/மேக மெத்தைமேல்
முத்துக்கள்
மழையாய்த் தூங்கும்

மின்னல் பட்டாலே
முத்தமாய்த்
தூறல் தூவு// எனக்கு பிடிச்ச வரிகள்

கார்க்கிபவா said...

ரொம்பவே ஹேப்பி..

என்னுள்ளே வந்தாய்
எதற்காக வந்தாய்
விழிவழி நுழைந்து
உதிரத்தில் கலந்து
உயிர் பறித்தாய்

உனக்குள்ளே வந்தேன்
உயிர் கொண்டு வந்தேன்
உன்னையும் என்னையும்
ஒன்றென சேர்த்து
காதல் செய்தேன்

thamizhparavai said...

புலவர்களுக்குள் தமிழ்ப்போட்டியா? நடக்கட்டும்.. பலே... நல்ல விருந்துதான்

thamizhparavai said...

//வெட்கப்பூ தாங்கி
வெப்பத்தில்
கொன்றிடென் ஆவி//
பிடித்த வரிகள் வசந்த்... இன்னும் பாடல் அதிகம் கேட்கவில்லையாதலால் எவ்வாறு மெட்டுக்குள் உட்கார்கிறது வரிகள் எனக் கவனிக்க இயலவில்லை... கவனிக்கிறேன்...

பரிசல்காரன் said...

கேபிள்ஜி

ஓடி வாங்க. உங்க படத்துக்கு ஓசில பாட்டெழுத ஆள் கேட்டீங்கள்ல.. ஒருத்தர் சிக்கிருக்காரு. அருமையா எழுதறாரு.. வாங்க வாங்க...

பரிசல்காரன் said...

@ கார்க்கி

தளை தட்டுது சகா..

இரா. வசந்த குமார். said...

அன்பு கார்க்கி...

நன்றிகள். உங்கள் பாடலும் நன்றாகவே உள்ளது. ஆனால் கொஞ்சம் கொஞ்சம் தளை தட்டுகின்றது. ;)

***

அன்பு தமிழ்ப்பறவை...

நன்றிகள்.

***

அன்பு பரிசல்ஜி...

நன்றிகள். கேபிள்ஜிக்கு சிபாரிசு செய்துட்டீங்க. நன்றிகள்.

☼ வெயிலான் said...

நல்லாருக்கு வசந்த்!

இரா. வசந்த குமார். said...

அன்பு வெயிலான் ஐயா...

நன்றிகள்..!!!

அகரம் அமுதா said...

அடடே! இதுவரை உங்களை ஒரு கவிஞர் என்றுமட்டும்தான் நினைத்திருந்தேன். பாடலாசிரியரும்கூட என்பதை இன்றே உணர்ந்தேன். நல்ல திறமையுள்ளது. தொடர்ந்து இதுபோல் முயலுங்கள்.

திரைப்படத்துல பாட்டெழுத வாய்ப்பு கிடைச்சிப் பெரியாளானா பேட்டிகளில் எங்கள் பெயரையெல்லாம் மறக்காம சொல்லுவீங்கல்ல????

இரா. வசந்த குமார். said...

அன்பு அகரம் அமுதா...

நன்றிகள்.

சொல்லுவோம்ல..!!!:)