இருபது வருடங்களுக்கு முன்பே கமல் சிம்பிளாக விளக்கி காட்டிய Chaos Theory!.
Friday, October 10, 2008
Thursday, October 09, 2008
ARR - இளம் பேட்டி.
அமுல் சுரபியின் கலெக்ஷனில் ஏ.ஆர்.ரஹ்மானின் இளம் பேட்டி.
மற்றும் சில வீடியோஸ் ::
கெட்ட பையன் சார், அவன்!
Thalaivar cries!!!
ஏன் அப்டியெல்லாம் பேசிட்டீங்க?
...இன்னொரு கையால அவங்கம்மா வாயையும் மூடும்!
இவ ஆத்தாளுக்கு தாவணி!
அய்யம்பேட்டே அறிவுடைநம்பி கலியபெருமாள் சந்த்ரன்!

Labels:
பாரு..பாரு..பயாஸ்கோப்பு பாரு.
Tuesday, October 07, 2008
வெண்பா முயற்சிகள் - 4.
மந்திரத்தால் மாங்காய் விழும் என்ற ஈற்றடிக்காக ::
மாமரக்கீழ் சீட்டாடி மண்டபத்தில் சாய்ந்துறங்கி
மாலைவரை காதைபேசும் மந்தமான மாந்தரவர்
எந்தவேலை யுஞ்செயாதோர் என்றென்றும் நம்புவர்
'மந்திரத்தால் மாங்காய் விழும்'.
கருவிழி இல்லாத கண் என்ற ஈற்றடிக்காக ::
முன்னம் அவரது முந்தானைப் பற்றியலைந்(து)
பின்னம் அவரது பேரன்பை! - அன்னை
அருகாமை இன்றி அலைகின்ற பிள்ளை
கருவிழி இல்லாத கண்.
Housing Bank Loan பற்றி முயன்ற வெண்பா ::
ஆதாரம் ஓரில்லம். ஆசையாய்க் கட்டபணம்
போதாமல் யோசிப்போர் தம்மால்மா தாமாதம்
வட்டியோட சற்கட்டும் வாய்ப்பு உறுதியெனில்
கிட்டிடும் வங்கிக் கடன்.

ஐந்து நாள் அனுபவங்கள்.
*புதன் கிழமை ஈரோடு ப.செ.பார்க்கின் பின்புறம் முதல் வலது திருப்பத்தில் இருக்கும் எஸ்.பி.ஐ. தலைமை அலுவலகத்தின் எதிர்ப்புறம் கொஞ்சம் தள்ளி அமைந்துள்ள பாரதி பதிப்பக நூல் நிலையத்தில் இருந்து மூன்று புத்தகங்கள் வாங்கினேன்.
இந்திரா பார்த்தசாரதி அவர்களின் 'குருதிப்புனல்', சிங்கிஸ் ஐத்மாத்தவ் அவர்களின் 'ஜமீலா', அரு.பாலசுப்ரமணியன் அவர்களின் 'பிள்ளையார் அரசியல்'.
நண்பன் கோபாலைத் தேடி திருவாரூர் பேருந்துக்குக் காத்திருக்கும் தில்லி பல்கலை மாணவன் சிவாவில் துவங்கும் கதை, கீழவெண்மணியில் தலித் குடும்பங்கள் ஒரே குடிசையில் கொளுத்தப்பட்டதில் பொங்கிப் பெருகும் இரத்தம் நிறைந்த வாய்க்காலில் இறங்கி சபதம் ஏற்கும் கோபாலில் நிறைகிறது. கோபால், சிவா, கண்ணைய நாயுடு, வடிவேலு, பளநி, பங்கஜம், டாக்டர்.கனகசபை போன்றோர் மூலமாக நகர்கின்ற புனைகதை மனத்தின் வக்கிரங்கள் ஏற்படுத்தும் விளைவுகளில் சமூகம் அடையும் மாற்றங்களைச் சொல்கிறது. சாகித்ய அகாதெமி விருது பெற்றது.
தெருக்கோடியில் இருக்கும் சாணிப் பிள்ளையார், எப்படி ஏ.கே.47 ஏந்திய ப்ளாஸ்டர் ஆஃப் பாரிஸ் பிரம்மாண்டமாய் திருவல்லிக்கேணி தெருக்களில் நகர்த்தப்படுகிறார் என்பதைச் சொல்லும் ஒல்லி நூல், பிள்ளையார் அரசியல். வடக்கில் இருக்கும் இராமர் பேரிலான பேரலையை ஓட்டுக்களாகப் பதிக்கும் அரசியல், தென்னகத்தில் நிலவும் பல தெய்வ வழிபாடுகளால் அத்தகைய ஒற்றைச் சக்தியை முன்னிறுத்தும் முயற்சி பலிக்காது என உணர்ந்து, அனைவரும் தொழுகின்ற பிள்ளையாரை முதன்மைப்படுத்தும் உள்ளரசியல் சொல்லப்பட்டுள்ளது.
ஜமீலாவை இன்னும் முடிக்காததால் ஒன்றும் சொல்வதற்கில்லை. பின்.
* லக்ஷ்மி நகர் வழியாக சித்தோடு சென்று இடது கட் அடித்து, ஈரோடு சென்று, திரும்பும் போது அக்ரகாரம் வழியாக மீண்டும் லக்ஷ்மி நகர் வந்து குமாரபாளையம் சென்று மீண்டும் ஊர் வந்து.. ஒரு மாதிரி 'g'வடிவில் பயணம் செய்தேன்.
ஜீவா டிப்போவில் இருந்து சேலம் செல்லும் புதுப்பாலம் வரை மேம்பாலம் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருவதால், கோவை - சேலம் நெடுஞ்சாலை சில இடங்களில் 'Take Diversion' போர்டுகளோடும், Reflection Sticker அம்புகளோடும், தெறித்த ஜல்லிகளோடும் இருந்தது.
ஈரோடு பேருந்து நிலையத்தில் நடந்து கொண்டிருந்த காரை போடும் பணிகள் முடிந்து, இன்னும் கலக்கலாகக் காட்சி அளிக்கிறது. மாநகராட்சி ஆகி விட்டதன் அடையாளங்கள் தெரிகின்றன. ட்ராஃபிக் அதிகம் ஆகி இருக்கின்றது. கமிஷனர், மாநகர மேயர் என போஸ்டர்கள் ஆங்காங்கே! எல்லைகளில் ஸ்பீட் ப்ரேக்கர்கள், சினிமா போஸ்டர்கள், மஞ்சள் தூள் வாசனை, வீரப்பன் சத்திரம் பாரதி தியேட்டர், பார்க்கின் நடுவில் தேர் வடிவ ட்ராஃபிக் காவலரின் கையசைத்தல்களில் நகரும் நகரின் இயக்கம், கூட்டம் அப்பும் ஷாப்பிங் சந்துகள், கட்டில் கடை ஷர்ட்கள், கவிழ்த்த குடையில் பனியன், ஜட்டிகள், செயற்கை மலையில் கீழிருந்து மேலேறும் ரொட்டேஷனல் அருவிகள், பெரிய மாரியம்மன், கஸ்தூரிநாதர் கோயில்கள், எதிரெதிர் முகம் காட்டும் செங்குந்தர், கலைமகள் பள்ளிகள், கோவை ரூட்டை ஒற்றை விரலில் காட்டும் தங்க முலாம் எம்.ஜி.ஆர்.... பெரியாரின் ஊர் வளர்ந்து கொண்டிருக்கிறது,வேகமாக!
* ஃபேக்டரிகள் இருப்பதால் காற்றில் கெமிக்கல் நாற்றம் விளாசும் பி.பி.அக்ரஹாரம் ரம்ஜான் கொண்டாட்டங்களில் இருந்தது. பி.பி. என்றால் பிராமண பெரிய என்ற விளக்கம். அக்ரஹாரத்தில் எப்படி இஸ்லாம் மக்களின் குடியிருப்பு என்பது எப்போதும் அந்த வழியில் பயணிக்கையில் எழும் கேள்வி. அம்மக்களிடையே எக்குழப்பமும் இல்லை. மசூதியும் உண்டு; மாரியம்மன் கோயிலும் உண்டு. எல்லோர்க்கும் பொதுவாக மாமிசக் கடைகளும் உள்ளன.
* காவிரியிலும், பவானியிலும், காளிங்கராயன் வாய்க்காலிலும் நிரம்பி நீர் ஓடிக் கொண்டிருக்கிறது. பேரேஜில் வடிகட்டப்படுவதால் காவிரி சுத்தமாக ஓடிக் கொண்டிருக்க, பவானி ஆகாயத் தாமரைகளின் ஆக்ரமிப்பில் திணறுகிறது.
*வியாழக்கிழமை கூடுதுறைக் கோயிலுக்குச் சென்றிருந்தோம். சங்கமப் பகுதியில் கூட்டம். செவ்வாய் தோஷப் பரிகாரங்கள் நிறைய நடந்து கொண்டிருந்தன. கம்பிகளால் பாதுகாப்பிற்கு விடப்பட்டிருந்த பகுதியில் ஆண்கள், பெண்கள் தனித்தனியாக நீராடிக் கொண்டனர். ஆற்றில் நீர் நிரம்பி ஓடிக் கொண்டிருந்ததால், படிக்கட்டுகள் கொஞ்சம் மூழ்கி, பச்சையாகி இருந்தன. விடுமுறை என்பதால் சிறுவர்கள் கூட்டம் நிறைய இருந்தது. கன்னடம், இந்தி, தெலுங்குகளில் டூரிஸ்டுகள் வந்திறங்கி இருந்ததால் பல குரல்கள் கேட்டன.
பரிகாரப் பகுதியில் உன்னிப்பாகக் கேட்டதில், கங்கை, யமுனை, நர்மதை, கோதாவரி, தபதி பெயர்களெல்லாம் காவிரிக் கரையில் சொல்லப்படுகின்றன. மந்திரம் சொன்னவர்கள் அந்த நதிகளை எல்லாம் ஒருமுறையாவது பார்த்திருப்பார்களா என்பது சந்தேகமே! இந்த நாடு மீண்டும் சமஸ்தானங்களாய்ப் பிரியாமல் ஒன்று படுத்தும் பல முக்கியமான பந்தங்களில் நமது பாரம்பரியம் ஒன்று என்பது மீண்டும் மீண்டும் உறுதியானது. திருவல்லம் பரிகாரத் தலத்திலும் இதே நதிகள் பெயர் சொல்லப்பட்டது நினைவுக்கு வந்தது.
வேதநாயகி அம்மன் கோயிலின் தூண்களில் சில உன்னத சிற்பங்கள் இருப்பதை, கால் நூற்றாண்டு வாழ்வில் இப்போது தான் காண்கிறேன். சில ::
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
* மதியம் கொஞ்சம் வெயில் தணிந்த பின் படித்த பள்ளிக்கு ஒரு பயணம் சென்றோம். கிட்டத்தட்ட பனிரெண்டு ஆண்டுகள் கழித்து!
எத்தனை அனுபவங்கள்! எத்தனை நண்பர்கள்! எத்தனை கனவுகள்! எத்தனை கற்பனைகள்! எத்தனை எத்தனை நிகழ்வுகள்! மழை பெய்ததும் பதுங்கலில் இருந்து எட்டிப் பார்க்கும் வர்ணம் மாறும் பச்சோந்தியாய் மனக் கடலி ஆயிரமாயிரம் உணர்ச்சிகள் அலையடித்தன. நிழல் மேடையில் உருவங்கள் நடமாடின. பிய்த்தெறிந்த காலத்தின் பெருங்கரத்தில் இருந்து விடுபட்டு வேக வேகமாய் வயது குறைந்து போனது.
சிறு வயதில் கண்ட அன்னைக்கும், இப்போது காணும் அன்னைக்கும் உருவ வித்தியாசங்கள் இருப்பினும் அவரது அன்பில் மாறுதல் இருப்பதுண்டோ?
புதுக் கட்டிடங்கள் எழும்பி இருந்தன. எல்லைகள் விஸ்தாரிக்கப்பட்டிருந்தன. சில வகுப்புகள் முகம் மாறி இருந்தன. சில கட்டிடங்கள் காணாமல் போயிருந்தன. கடவுளே!!!
ஈர மண் பறித்து விதைத்து வைத்து, கம்பி வேலிக்குள் காத்து வைத்திருந்த வேப்பஞ் செடிகள் மட்டுமே இன்று பிரம்மாண்டமாய் வளர்ந்து நம்மைச் சுகமாய்த் தாலாட்டுகையில், கண்களில் வந்ததோ இல்லையோ, நெஞ்சினில் கண்ணீர் கசிந்திறங்கியது.
த.ஆசிரியராகி விட்டிருந்த கணித ஆசிரியர் திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் மட்டும் அந்த விடுமுறை நாளிலும் வந்திருந்து பள்ளி குறித்த அவரது ஆசைகளைப் பகிர்ந்து கொண்டார்.

* பள்ளியில் இருந்து கிளம்பி அத்தாணி சென்று, அங்கிருந்து கோபி சென்று கிழக்காகத் திரும்பி ஈரோடு செல்லும் வழியில் வந்து கவுந்தப்பாடி வழியாக, காளிங்கராயன்பாளையத்தைக் கடந்து நகருக்குள் நுழைவதாகத் திட்டம்.
அருமையான வயல்கள். விதவிதமான பச்சை நிறங்கள். இளம் பச்சை, நிமிர்ந்த பச்சை, முதிர்ந்த பச்சை என! பின்புலமாக மேற்குத் தொடர்ச்சி மலைகள் லேயர் லேயராக ஒன்றுக்குள் ஒன்றாக விழுந்து படர்ந்திருந்தன. வாய்க்கால்களில் நீர் சுழித்துக் கொண்டு ஓடியது. மஞ்சள் வெயில் கதிர்கள் அடிவானெங்கும் சிவக்கப் படுத்தி இருந்தது.
மனம் முழுதும் ஒரு பாடல் தனக்குத் தானே ஒலிபரப்பி எதிரொலித்துக் கொண்டே வந்தது. வெகு காலங்களுக்கு முன்னால் இவ்வழியே ஒரு நாளின் மீ அதிகாலையில் சென்ற போது பதிந்த பாடல் அது!
'எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு!
அதைத் தானே கொண்டு வந்தேன் நான் என்னோடு!
என் கண்ணோடு!'
வளைந்து வளைந்து செல்லும் தார்ச் சாலைகள். அவ்வப்போது எதிர்ப்படும் கிராமங்கள். பழைய ரஜினி, விஜயகாந்த ரசிகர் மன்ற போர்டுகள்.
பாரியூர் தாண்டியவுடன் ரிஸர்வில் விழுந்த வண்டியை 60. கி.மீ. வேகத்துக்கு முறுக்கியதில், கோபியை நெருங்கும் போது ஒரு பங்க் வரை ஓட்டி வந்து விட்டோம்.

* வெள்ளிக் கிழமை காலையில் ஈரோடு சென்று திருச்செங்கோடு வழியாக ராசிபுரம், சேலம் செல்லும் பேருந்தில் ஏறி மல்லசமுத்திரம் செல்வதாக ப்ளான்.
பொன்னி நதி பிரிக்கின்ற கொங்கு மண்டலத்தின் இரு பெரும் பிரிவுகளின் நில, வாழ்வு முறை, வெயில் வேறுபாடுகள் தெள்ளெனத் தெரிகின்றன.
கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், சத்தி, கோபி, பவானி, ஈரோடு, கரூர் என்பன ஒரு குழு. காவேரி, பவானி, நொய்யல், சிறுவாணி, அமராவதி நதிகள் பாயும் வளப் பிரதேசம். மேற்கு மலைத் தொடர்கள் எல்லைகளாக இருப்பதால், காற்றில் குளிர் கரைந்திருக்கும். நெல், மஞ்சள், கரும்பு, பருத்தி, தென்னை வயற் பயிர்கள். மேட்டூர், பவானிசாகர் அணைக்கட்டுகள்.
சேலம், நாமக்கல், சங்ககிரி, ராசிபுரம், திருச்செங்கோடு, வீரபாண்டி, ஆத்தூர், கள்ளக்குறிச்சி வரை மற்றொரு குழு. அனலடிக்கும் வெயில். மேட்டூர் அணையில் இருந்து வரும் காவேரி நீர் மட்டுமே நீராதாரம். இன்றேல், நிலத்தடி நீர். விவசாயத்தை விடவும் விசைத்தறிகள், கைத்தறிகள் அதிகமான தொழில் வாய்ப்புகள். காற்றில் எப்போதும் ஒரு பஞ்சு வாசம். வறண்ட மொட்டை சிமெண்ட் மலைகள்.
பேச்சுத் தமிழிலும் எளிதாக வேறுபாடுகளைக் கண்டு கொள்ளலாம்.

* எங்கள் பகுதியில் காலை 9 முதல் 12 மணி வரை முதல் ஸ்லாட். அலுவலக நேரத்தில் அரை நாள் காலி! பின் மாலை 6 டு 7. கடைசி ஸ்லாட் நள்ளிரவு 1 முதல் 2 வரை!
இது தீபாவளிக் காலமாம்! பொட்டுத் துளி மழை வரவில்லை. பட்டாசு சத்தங்கள் கேட்கவில்லை. இதுவா மழைக்காலம்? தமிழகத்தில் வெயில்காலம், குளிர்காலம், மழைக்காலம், வசந்தகாலம் எல்லாம் மாறிப் போய் ஒரே கொளுத்தும் அனல் பொழுதுகள் மட்டுமே அவதரித்துள்ளன.
இருள் வந்து கவ்விய பின் பிறை நிலா நில்லாது உருண்டு ஓடிக் கொண்டிருந்தது. தொப்பியைப் போல் கருப்பு எங்கும் கவிழ்த்திருந்தது.

* தீராக் கொசு ரீங்காரத்திலும், நசநசக்கும் வேர்வையிலும், கரும்புகை கொப்புளிக்கும் சீமெண்ணெய் சீசா விளக்கின் நுனி நடனமிடும் நெருப்பின் ஒளியில், இரட்டை வரித் தாட்களில், அ, ஆ, இ, ஈ எழுதும் குட்டிச் சிறுமி, அந்த விளக்கைப் போல் எதிர்காலத்தின் மேல் ஒரு ஒளியைப் பாய்ச்சுகிறாள்.

* சனிக்கிழமை கதைகள் பேசிக் கொண்டிருந்ததன் வாயிலாக மனவெளியில் காலத் தடை தாண்டி எங்கெங்கோ பயணம் சென்று கொண்டிருந்தேன். அடுத்த நாள் மூட்டை முடிச்சுகளோடு, கோவை, பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம், கொல்லம் வழியாகத் திருவனந்தபுரம் செல்லக் கிளம்பினேன்.

Sunday, September 28, 2008
திருவல்லம், திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கம்.
இன்று புரட்டாசி அமாவாசை. பித்ரு தர்ப்பணங்களுக்கும், திதிகளுக்கும் உகந்த நாள் என்று சொல்லப்பட்டது. இங்கே திருவனந்தபுரத்தின் அருகே திருவல்லம் என்ற க்ஷேத்ரம் உள்ளது. இத்தலம் இவ்விஷயங்களுக்கு பிரசித்தமானது. 'சண்டே தானே சென்று வா' என்று அம்மா சொல்லி இருந்ததால், இன்று அங்கே போனேன்.
இங்கே கேரளத்தை உருவாக்கியவர் என்ற ஐதீக வீரர் பரசுராமர் கோயில் உள்ளது. புராணப்படி ராமருக்கு முந்தியவர். விசுவாமித்திரரின் யாகங்களுக்கு உதவி விட்டு, மிதிலைக்குச் செல்லும் வழியில் பரசுராமருக்கும் இராமருக்கும் சின்ன கலகம் வர, இராமர் வெல்ல, பரசுராமர் அவரது சக்திகளை எல்லாம் இராமருக்கு வழங்கி தனிமைத் தவம் இயற்ற சென்று விட, அதுவரை சாதாரண இளவரசனான இராமன் அவதாரமாக மாறினார் என்று சிறுவர்மலரில் படித்தது தோன்றியது.
இரு காயல்களின் சங்கமப் புள்ளியில் இத்தலம் உள்ளது.
பலி, திலக்ஹோமம், அர்ச்சனை, ப்ரசாதம் என்று ஒவ்வொறுக்கும் ஒரு டோக்கன். பலி என்றால் பித்ரு தர்ப்பணம். நான்கிற்கும் சேர்த்து ரூ 102.50 ஆகிறது. டோக்கன் வாங்கும் போதே இறந்தவரின் மரித்த நட்சத்திரம் கேட்கிறார்கள். தெரியாவிட்டால் பாதகமில்லை. பகவானின் நட்சத்திரமான திருவோணம் வைத்துக் கொள்ளலாம் என்கிறர்கள்.
வேஷ்டி அவசியம். கேரளக் கோயில் ஆதலால், நோ மேலாடை for ஆண்கள். பெண்களும் இடுப்புக்கு வேஷ்டி அல்லது துண்டு சுற்றிக் கொள்ள வேண்டும்.
பலி காலை 6.30 முதல் முற்பகல் 10.00 வரையும், திலக்ஹோமம் 6.30 முதல் 10.30 வரை.
சின்ன கோயில் தான். நெருக்கமாக அமர்ந்து அவர்கள் சொல்லும் மலையாள மந்திரங்களைப் பாதி புரிந்தும் புரியாமலும் சொல்லி முடிக்கிறோம். பின் முன்னோர்களுக்கு வைக்கும் உணவை கோயிலின் முன் உள்ள ஒன்பது பீடங்களில் உருட்டி வைக்கிறோம். ஏராள காகங்களும், புறாக்களும் வந்து வந்து கொத்தித் தின்பதைக் கண்டு மனம் நிம்மதியுறுகிறது. மிச்ச உணவை வெளியே ஓடிக் கொண்டிருக்கும் காயலில் திரும்பி பார்க்காமல் வீசி விட்டு கை, கால்களை கழுவி விட்டு (முடிந்தால் அதிலேயே குளித்து விட்டும்) கோயிலுக்குச் சென்று வழிபட வேண்டும்.
தனியாகப் போனால் நிறைய கஷ்டப்பட வேண்டியிருக்கும். கூட ஒருவரைக் கூட்டிப் போவது உதவும். நம் பொருட்களை அவர் வசம் ஒப்படைத்து நிம்மதியாக நம் வேலையைப் பார்க்கலாம். இல்லவிடில் கவனம் முழுதும் பூஜையில் இருக்காது.
திலக் ஹோமத்தில் பெயர் சொல்லி ஹோமத்தில் எள் இறைக்கப்படுகிறது. வினோதமாக ஹோமம் நடக்கும் இடத்தைச் சுற்றிலும் சோப்பு டப்பாக்கள் கயிற்றில் முடிச்சிட்டு தொங்க விட்டிருக்கிறார்கள். என்ன அர்த்தம் என்று தெரியவில்லை.
முக்கிய சன்னிதியில் பரசுராமர் முகம் சந்தனத்தில் வரையப்பட்டிருக்கிறது. வடக்கு பார்த்து இருக்கிறார். பரமசிவன் கிழக்கு பார்த்து. பகவதி, கணபதி கோயில்கள் இருக்கின்றன.
நல்லவேளையாக ஆறு மணிக்கு கிளம்பி ஏழு மணிக்குள் கோயிலை அடைந்து விட்டதால், ஒன்பது மணிக்குள் என்னால் முடித்து கொண்டு வெளி வர முடிந்து விட்டது. நான் வெளி வந்த போது, வடிவில் வரிசை வெயிலில் நின்றிருந்தது.

திருவனந்தபுரம் தமிழ்ச்சங்கம் நாகர்கோயில் செல்லும் வழியில் கிள்ளிப்பாலம் தாண்டி பி.எஸ்.ஆர் மருத்துவமனையின் எதிரே செல்லும் ஒரு தார்ச் சாலையின் வழியே செல்ல, முதலாம் வளைவைத் தாண்டினால் தெரிகிறது.
திருவள்ளுவரும், பாரதியாரும் இருபுறமும் இருந்து ஞான முகம் காட்ட வாசல் நடுவில் உள்ளது. உறுப்பினர் ஆக வேண்டுமெனில் இரு ஆப்ஷன்கள் உள்ளன. ஆண்டு சந்தா 100 ரூ. ஆயுள் சந்தா 1000 ரூ, ஒரு முறை மட்டும். நான் ஆண்டு டிக் செய்தேன்.
மேலே நூலகம் இருக்கிறது. கவிதை, மொழிபெயர்ப்பு, நாவல், உரைநடை, வாரப் பத்திரிக்கைகள் என்று அழகாகத் தொகுத்து வைத்திருக்கிறார்கள். நாவல் வரிசையில் பாக்கெட் நாவல், உங்கள் ஜூனியரில் இருந்து, காவல்கேர் வரை இருக்கிறது. வழக்கம் போல் வாத்தியார் புத்தகங்கள் பெரும்பாலானவை சர்க்குலேஷனிலேயே இருக்கிறது.
காகிதச் சங்கிலிகள், வஸந்த் வஸந்த் மட்டுமே என் கண்களில் தட்டுப்பட்டது.
நூலகப் பார்வையாளர் நன்றாகப் பேசினார். மூவாயிரத்திற்கும் மேல் உறுப்பினர்கள் இருக்கிறார்களாம். பெரும்பாலும் இங்கே உறுப்பினராகச் சேர்ந்து, நன்கு பயிற்சி பெற்று தலைக்கு ஒரு புத்தகம் பப்ளிஷ் செய்த பின்னர் வேறு ஊருக்கு ட்ரான்ஸ்பராகிப் போய் விடுகிறார்கள் என்று பட்டது.
அவள் விகடன், மங்கையர் மலரில் இருந்து உண்மை, கருப்பு வெள்ளை பெரியார் பத்திரிக்கைகள வரை வாங்குகிறார்கள். 'எடுத்துப் படிக்கலாமே' என்று கேட்டார். நானே வாரா வாரம் வாங்கி விடுகிறேன் என்றேன். 'எனில் அந்தப் பழைய புத்தகங்களை இங்கே வந்து சேர்த்து விடுங்கள்' என்றார். அல்பாயுசே கொண்ட (ஒரே வாரம் ஆயுள்!) பத்திரிக்கைகளுக்கு டிமாண்ட் பழைய எடிஷன்களுக்கே அதிகம் இருப்பதால், ஆர்க்கியாலஜி போல் எவ்வளவுக்கு எவ்வளவு பழசோ அவ்வளவு உத்தமம் என்றார்.
மாதக் கடை ஞாயிறு என்பதால், கவியரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஒரு கவிதை புத்தகத்தை எடுத்து பிடித்த கவிதைகளை வாசித்துக் காட்டல், தாம் எழுதிய கவிதைகளை படித்துக் காட்டல் என்று இரு பிரிவுகள். புதிய கவிதைகளைத் தொகுத்து சிறந்த கவிதைக்கு நீல பத்மம் பரிசு மற்றும் சில பரிசுகள் தரப்படுகின்றன.
இன்று 180-வது கவியரங்கம். கணக்கு போட்டு பார்த்தால் 15 வருடங்களுக்கு மேலாக நடத்துகிறார்கள். யப்பா..!
சிற்பி பாலசுப்ரமணியன் அவர்களின் 'மண்ணில் தெரியுது வானம்' என்ற கவிதை தொகுப்பு நூல் இன்றைய வாசிப்புக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. பேராசிரியர் வானமாமலை அவர்கள் தலைமை. திரு நீல. பத்மநாபன் அவர்களும் கலந்து கொண்டார். மற்றும் சில பெரியவர்களும் இருந்தார்கள். மன்னிக்கவும், அவர்கள் பெயர்களை மறந்து விட்டேன். அடுத்த முறை கண்டிப்பாக நினைவில் வைத்துக் கொள்ளும் வகையில் கேட்டுக் குறித்துக் கொள்கிறேன்.
ம.தெ.வானம் கடந்த நூற்றாண்டு தமிழ்க் கவிதை இலக்கியப் பரப்பில் தடம் பதித்த கவிஞர்களின் கவிதைகள் கொண்ட கலெக்ஷன். பாரதி, பாரதிதாசனில் துவங்கி, புதுமைப்பித்தன், க.நா.சு., கண்ணதாசன், மு.மேத்தா, அறிவுமதி, வைரமுத்து, வசந்தன் செந்தில், மனுஷ்யபுத்திரனென்று ஒரு Broad Spectrum கவிஞர்களின் Sample Pieceகள் இருந்தன.
ஒவ்வொருவரும் தாம் குறித்து வைத்திருந்த கவிதைகளைப் படித்து, அவை எப்படி தங்கள் கவனத்தை ஈர்த்தன என்பதைச் சொல்லினர். 'இப்படியும் ரசிக்கலாமா' என்ற வகையில் அமைதியாக கேட்டுக் கொண்டு மனதிற்குள் பதித்து கொண்டேன்.
எனக்கு ஒரு சந்தேகம் வந்தது. சாதாரணமாக பேசிக் கொள்கிறோம். ஆனால் அரங்கைத் துவக்கலாம் என்று சொன்னவுடன் சட்டென்று அடுத்த எக்ஸ்ட்ரீமுக்கு ஜம்ப் பண்ணி, 'மேடைத் தமிழுக்கு' போய் விடுகிறோம். ஏன்? அப்படியே தொடர்ந்தால் என்ன? அடுத்த மீட்டிங்கில் கேட்போம் என்று விட்டு விட்டேன்.
பாரதியின் ஷெல்லி பாதிப்பிலான 'குயில் பாட்டு', அவர்தாசனின் திராவிடச் சிந்தனைகள் கொண்ட கவிதை, புதுமைப்பித்தனின் கவிதை எழுதுவதைப் பற்றியே ஒரு கவிதை (இதைக் கேட்டதும் அவரது 'கருச்சிதைவு' நினைவுக்கு வந்தது), நீல.பத்மநாபனின் 'பவளமல்லி', மு.மேத்தாவின் 'பூக்கள், அருவிகள், இயற்கை பற்றிப் பேசுவீர்களா? வாருங்கள். மனிதர்களைப் பற்றி பேசுவதானால் வேண்டாம்' வகை கவிதை, வசந்தன் செந்திலின் 'மயானத்தின் வழி ஓடும் இரயில்வண்டி', மனுஷ்யபுத்திரனின் 'கால்களின் ஆல்பம்',இரு ஆச்சிக் கவிதைகள் ஆகியன இன்றைய மதியத்தின் முழுத்தூக்கம், வேறு புத்தகங்கள் படிப்பு, இணைய வானொலிப் பாடல்கள், இரவு உணவிற்குச் சென்று வருதலைத் தாண்டி என் நினைவில் நிற்கின்றன. (எல்லோர்க்கும் அவர்கள் போட்டுக் கொண்டிருந்தால் பக்கம் இன்னும் வளரும். இது சரியா தப்பா..?)
கவிதை படித்தலில், வானமாமலை அவர்கள் கன்ஸ்யூமர் நாகரீகம் வளர்வதால் எழும் பிரச்னைகளைக் கவி பாடினார். சாமிநாதன் அவர்கள் வயதான தந்தை மகனுக்கு எழுதும் கடித மாடலில் தலைமுறை இடைவெளி பற்றியும், மணி அவர்கள் 'நாட்டில் வாழ்வதை விட காட்டில் சவுக்கியமாக வாழலாம்' என்றும் கவி படித்தார்கள். 'இரண்டாம் சத்தம்' கவிதையை (?) சோகையாகப் படித்தேன். பலமாகப் பாராட்டினார்கள். நன்றிகள் ஐயன்மாரே!
அடுத்த முறை இன்னும் நல்ல கவிதை எழுதிப் போக வேண்டும்.
நீல. பத்மநாபன் அவர்கள் எல்லோரிடமும் 'இவர் ப்ளாகைப் பாருங்கள். அற்புதமாக எழுதுகிறார். நல்ல கதைகள். நல்ல கவிதைகள்' என்று சொன்னார். போன வாரமே கேட்டிருக்கிறார், 'இப்படி ஒருத்தன் வந்தானா?' என்று! அவர் வருவதற்கு முன்னரே, அங்கிருந்தவர்கள் 'ஓ! நீங்களா? பத்மநாபன் சார் சொல்லி இருக்கிறார்!' என்றார்கள். எனக்கு வெட்கமாகப் போய் விட்டது.
ப்ளாக்கைப் பற்றி இவர் இவ்வளவு உயர்வாகச் சொல்லச் சொல்ல, இதில் இருக்கும் வெட்டி மொக்கைகள் பற்றி எல்லாம் என்ன சொல்வார்களோ என்று பெருங்கவலையே வந்து விட்டது.
ஒரு மணி சுமாருக்கு எல்லோரும் கலைந்து சென்றோம்.
அடுத்த வாரம் கதையரங்கம். புதிதாக ஏதாவது சிறுகதை எழுத முயல வேண்டும். இல்லாவிட்டால், பழைய கதைகளில் ஏதேனும் ஒன்றை தூசிதட்டி வாசித்து விட வேண்டியது தான்.

Subscribe to:
Posts (Atom)