Wednesday, October 04, 2006

விடுதலைத் திரு நாளில்...

"இந்த சுதந்திர நன்னாளில்..."

பிரதமர் பேசிக் கொண்டிருந்தார். ஒவ்வொரு வருஷமும் இதையே தான் சொல்றாங்க. நானும் மூணு வருஷமா பார்த்துக்கிட்டு தான் இருக்கேன். வருஷா வருஷம் எங்க இருந்தாலும் புடிச்சிட்டு கொண்டு வந்திடுவாங்க. நானும் எங்க போகப் போறேன்? இதே டெல்லியிலேயே தான் சுத்திக்கிட்டு இருப்பேன். ஜும்மா மசூதி, கன்னாட் ப்ளேஸ்னு இங்க தான் இருப்பேன்.

வருஷா வருஷம் பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகமாகிட்டே வருது. விடுதலை வாங்கிட்டமானே புரியல. பிரதமர் கண்ணாடிக் கூண்டுக்குள்ள நின்னு பேசறார். பத்தடிக்குப் பத்தடியில போலீஸ்காரர் துப்பாக்கியோட போற, வர்றவனையெல்லாம் சந்தேகத்தோட தான் பார்க்கறாங்க.

என்னமோ போங்க. இப்படித்தான் போன வருஷம், ஜூம்மா மசூதி பக்கமா போய்க்கிட்டு இருந்தேன். கப்புனு வந்து புடிச்சிட்டாங்க. அதுக்கு முந்தின வருஷம் பார்லிமெண்ட் கிட்டக்க. இப்ப எல்லாம் எனக்கு இது பழகிப் போச்சுங்க. அவங்களும் தான் பாவம், என்ன செய்வாங்க..? ஒவ்வொரு விடுதலை நாளுக்கும், கொஞ்சம் பேரை விடுதலை பண்ணனுமாம். ஜெயில்ல புடிச்சு வெச்சிருக்கவென் எல்லாம், விடுதலை பண்றவன் மாதிரியா இருக்கான்? வுட்டா, பார்லிமெண்ட்டுக்கே குண்டு வெச்சிருவானுங்கள்ள, அவனுங்களை எல்லாம் எவ்ளோ கஷ்டப்பட்டு புடிச்சிருப்பாங்க. அவனுங்களை எல்லாம் வெளிய வுட்டா, நெலமை என்னாகிறது? அதனால நம்மள மாதிரி அப்பாவிகளை ஒவ்வொரு வருஷமும், நான் எங்க இருந்தாலும் புடிச்சிட்டு வந்து, கொஞ்ச நாள் உள்ள வெச்சிருந்து, விடுதலை நாளுக்கு வெளிய விட்டிடுவாங்க.

"பாகிஸ்தானை எச்சரிக்கிறோம். தாக்குதல்கள் தொடர்ந்தால், பேச்சுவார்த்தை.."

இதையே தான் ரொம்ப வருஷமா பேசிக்கிட்டு இருக்காங்க. என்னத்த பேச்சுவார்த்தை நடத்தி..? போன வருஷம் சாணக்யபுரியில இருந்து ஒருத்தன் வந்திருந்தான். அவனை இந்த வருஷம் காணோம். இருக்கானா இல்லை துப்பாக்கியில சுட்டுக் கொன்னுட்டாங்களா, என்கவுண்டர்னு? சரி விடுங்க.. ரொம்ப நேரமாச்சு போல. இதோ கூப்பிடறாங்க.

"பிரதமர் இப்போது அமைதிப் புறாக்களைப் பறக்க விடுவார்.."

நேரு காலத்திலிருந்து இதே வேலையாப் போச்சு. ஓ.கே. அடுத்த வருஷம் பார்க்கலாம். அதுவரைக்கும் எவனும் என்னைச் சுட்டு சாப்பிடாம இருந்தா!


(தேன்கூடு - அக்டோபர் 06 - போட்டிக்கான பதிவு.)

7 comments:

ராசுக்குட்டி said...

யூகிக்க முடிந்தது என்றாலும் ரசிக்கவும் முடிந்தது ;-)

பழூர் கார்த்தி said...

மீண்டும் கலக்கலாக களமிறங்கி இருக்கிறீர்கள், வாழ்த்துக்கள் !!

***

புறாவின் பார்வையில் யதார்தத்தை சொல்லியிருப்பது நச்...

***

போட்டிக்கான நம்ம கார்ட்டூனையும் வந்து பாத்து, கருத்து சொல்லுங்க..

பழூர் கார்த்தி said...

மீண்டும் கலக்கலாக களமிறங்கி இருக்கிறீர்கள், வாழ்த்துக்கள் !!

***

புறாவின் பார்வையில் யதார்தத்தை சொல்லியிருப்பது நச்...

***

போட்டிக்கான நம்ம கார்ட்டூனையும் வந்து பாத்து, கருத்து சொல்லுங்க..

senthil.c.kumaran@gmail.com (செந்தில் குமரன்) said...

வித்தியாசமான கோணத்தில் கதை.

இரா. வசந்த குமார். said...

நன்றி நிர்மல் மற்றும் குமரன்.

ராம்குமார் அமுதன் said...

Ada vithiyaasama Nalla irukkunga.... Naan ennenavo nenachen.... Aaana pura nu mudichathu nach ragam... Kalakkunga...

Pottikaaga Vaazthukkal....

இரா. வசந்த குமார். said...

நன்றி அமுதன்.