Monday, April 30, 2007

மாயக்கயிறு.


யாரோ
விரும்பிய
பாடலை
நானும் ஏன்
கேட்க வேண்டும்?
யாரோ
இறக்க
என் வானொலி
ஏன்
கதற வேண்டும்?
யாரோ
ஒருவருக்காக
நான் ஏன்
சேமிக்க வேண்டும்?
எங்கோ
பெய்யும் மழைக்காக
என் வீட்டுக் கிணறு
ஏன்
ஆவியாக வேண்டும்?
யாரோ
கூந்தலில் சூட்ட
என் தோட்டம்
ஏன்
பூக்க வேண்டும்?
தனித்திருப்பதில்ல,
நீயும், நானும்!
தள்ளி நிற்பதில்லை
நாமும், உலகும்!
வலைப்பின்னலின்
இரு முனைகளில்
நாமிருப்பினும்,
இணைத்து இறுக்குகிறது
ஒரு
மாயக்கயிறு!

2 comments:

Anonymous said...

வாவ்...கலக்கலா இருக்கு இந்தக் கவிதை...

///தனித்திருப்பதில்ல,
நீயும், நானும்!
தள்ளி நிற்பதில்லை
நாமும், உலகும்!//

இந்த வரிகள் கொஞ்சம் புரிந்தும் புரியாமலும் இருக்கு...:)

'வலைப்பின்னல்'னா கயிறா??

இரா. வசந்த குமார். said...

கண்ணுக்குத் தெரியாத உறவுப் பின்னல்கள்.... பெற்றோர், நட்பு, என்ற பின்னலகள்... வேறு ஒன்றும் இல்லை யெனினும், மனிதர்கள் என்ற பொதுப்பின்னலகள்... ஆமா... நானும் கேட்டுக் கிட்டே இருக்கேன்.. உங்க குழுவைக் கொஞ்சம் சொல்லுங்கன்னு.. ம்ஹூம்... இது ஆவறதில்ல.