மீ இளம் வயதின் சில நினைவுகள் என்றும் நினைத்திருக்கக் கூடியன.
சிறு வயதில் கிடைக்கின்ற நண்பர்கள் போல், அந்த நினைவுகள் எத்தனை ஆண்டுகள் தாண்டி வந்தாலும் அல்லது எத்தனை தூரம் தள்ளி வந்தாலும் இனிமையானவை.
பொங்கிய காவேரியில் அடித்துப் போக இருந்து, மயிரிழையில் (உண்மையாகவே) காப்பாற்றப்பட்டது,
தெருவில் இருந்த பையன்களை குழுவாகப் பிரித்துக் கொண்டு விளையாடிய, கண்ணாமூச்சி, ஐஸ் பாய், திருடன் - போலிஸ், மண்டை உடைந்து இரத்தம் வருமளவு நடந்த சண்டைகள், செட் சேர்த்துக் கொண்டு படங்களுக்குச் செல்வது,
சில்லறை மாற்றக் கொடுத்த ஐம்பது ரூபாயை (அப்போதெல்லாம் ரொம்ப பெரிய ரூபாய். இப்போது சத்யத்தில் நாய் படாத பாடு படுகிறது.), அஜாக்கிரதையால் தொலைத்து விட்டு வாங்கிய அடிகள்.
பரிட்சைக்கு படித்தால் 10 மணிக்கே தூக்கம் தள்ளும். படம் பார்க்க என்றால் மட்டும் மூன்று நாள் தூக்கம் வராமல் பார்ப்பது.
போஸ்டர்களிலேயே பல 'படங்களைப்' பார்த்து விட்டு நகர்வது.
என்று பல நினைவுகள் எல்லோர்க்கும் இருக்கும்.
இப்படிப்பட்ட மீ இளம் வயதுப் பையன்களின் உணர்வுகளை யாராவது புரிந்திருக்கிறார்களா?
அவனது தனி உலகம், மாயாஜாலங்கள் நிறைந்த, உலகத்தின் கடும் போக்கை அறியாத அந்த குதூகல வயதைத் தாண்டி வந்த பின் தான், அந்த வயதின் அருமை புரிகின்றது. (ஒரு வேளை இப்போது இருப்பதன் அருமை வயதான பிறகு தெரியுமோ, என்னவோ? அதனால் தான் பெரியவர்கள் சொல்லி இருக்கிறார்கள் : Live Present, Coz Life is Present.)
அப்படிப்பட்ட பையனின் எண்ணங்களை, உணர்வுகளை, வாழ்க்கைப் போக்கை எழுத்தில் அற்புதமாக வெளிக் கொணர்ந்த எழுத்தாளர்கள் பலர் இருக்கலாம். எனக்குத் தெரிந்து இருவர்.
இரஸ்கின் பாண்ட்.
ஆர். கே. நாராயண்.

ஒவ்வொரு முறை இரயில் பயணம் செய்கையிலும் கண்டிப்பாக ஒரு புத்தகம் இருக்க வேண்டும் எனக்கு. சில பேருக்கு, இரயில் பயணம், தாலாட்டு போல் இருக்கும். நான் எப்போதும் முன்பதிவற்ற பெட்டியிலேயே செல்வதால், தூக்கம் எல்லாம் முடியாது. இடம் கிடைப்பதற்கே போராட வேண்டும்.( வேறென்ன Demand and Supply தான்.)
சென்டிரலின் ஹிக்கின்பாதம்ஸ் தான் சரியான வேட்டைக் களம். வித்தியாசமான பல புத்தகங்கள் கிடைக்கும்.
சென்டிரலின் ஹிக்கின்பாதம்ஸ் தான் சரியான வேட்டைக் களம். வித்தியாசமான பல புத்தகங்கள் கிடைக்கும்.
ஒருமுறை அப்படி தேடுகையில், கிடைத்த ஒரு புத்தகம் தான் இரஸ்கின் பாண்ட் அவர்களின் ஒரு நாவல். (பெயர் மறந்து விட்டது. தற்போது ஒரு நண்பர் அதை படிக்க வாங்கிச் சென்று விட்டதால் (திரும்ப வருமா?), அதை எடுத்துப் பார்க்கவும் முடியவில்லை).
அதற்கு முன் அவர் பெயரைக் கேள்விப்பட்டு இருந்தாலும், அவரது எழுத்துக்கள் வாசிக்க வேண்டும் என்று தோன்றியதில்லை. பார்க்க : நானும் கொஞ்ச புத்தகங்களும்.
ஆனால் அந்த குறுநாவல் படித்தவுடன் தான், அவரது எழுத்துக்களின் மேல் ப்ரேமை எழுந்தது. பின் இந்த ஆண்டு புத்தகக் கண்காட்சியில், அவரது கதைகளின் தொகுப்பு கிடைத்தது. மறக்காமல் வாங்கிக் கொண்டேன்.
என்ன அற்புதமான சிறுகதைகள். நாவல்கள். குறுநாவல்கள்.
பரந்து விரிந்த பிரம்மாண்ட இமயத்தின் மடியில் பிறந்து, வளர்ந்த இந்த ஆங்கிலோ - இந்திய மனிதரின் எழுத்துக்களில் குளிரடிக்கின்றது.
யெளவனத்தில் இருக்கும் சிறுவனின் கதைகளில் பெரும்பாலும், அவரது நிஜ அனுபவமா என்று நம்மை மயங்கச் செய்யும்.
எளிய ஆங்கிலம். மிருதுவான கதைப் போக்கு. வழுக்கிச் செல்லும் நடை. இவையே பாண்டின் கதைகளின் அடிப்படை.
அனைவரும் இவரது படைப்புகளைக் கண்டிப்பாகப் படிக்க வேண்டும்.
அருமை.
( நான் படித்த புத்தகம்:
புத்தகம் : RUSKIN BOND - Collected Fiction.
புத்தக வகை : கதைத் தொகுப்பு.
ஆசிரியர் : Ruskin Bond.
கிடைக்குமிடம் : புத்தகக் கடைகள். பென்குவின் புத்தகங்கள்.
விலை : ரூ. 395/- மட்டுமே. )
மால்குடி. இந்தப் பெயரைக் கேட்டவுடன், ஏதோ திருச்சிக்குப் பக்கத்தில் இருக்கும் லால்குடி போல் ஒரு ஊர் என்று தான் தோன்றும். ஆனால் இது ஒரு கற்பனையூர் என்பது நம்மால் நம்ப முடியாத ஒன்றாய் இருக்கும், ஆர்.கே. நாராயண் அவர்களின் கதைகளைப் படித்து விட்டால்.
அவரது 'சுவாமியும் அவனது நண்பர்களும்' என்ற நாவல், இந்தியச் சிறுவர் இலக்கியத்தின் உச்சம் என்று கூறலாம். அவ்வளவு அற்புதமாக எழுதியிருப்பார். சுவாமிநாதனின் கிரிக்கெட் போட்டிகளும், காட்டில் தனிப் பயணமும், நண்பர்களுக்கிடையேயான பேச்சுக்களும் நம்மை மீண்டும் நம் சிறு உலகத்திற்கே கூட்டிச் சென்று விடுவன.

இதே புத்தகக் கண்காட்சியில் இவரது, 'Malgudi Days என்ற கதைத் தொகுப்பை வாங்கி வந்து படித்துக் கொண்டிருக்கின்றேன்.
தென் இந்தியாவின் ஒரு சிறு கிராமமாக அவர் வர்ணிக்கின்ற, களனாக எடுத்துக் கொண்ட மால்குடி, நம் ஒவ்வொருவரது கிராமத்தையும் நினைவூட்டும். அவரே கூறியிருப்பது போல்,
தென் இந்தியாவின் ஒரு சிறு கிராமமாக அவர் வர்ணிக்கின்ற, களனாக எடுத்துக் கொண்ட மால்குடி, நம் ஒவ்வொருவரது கிராமத்தையும் நினைவூட்டும். அவரே கூறியிருப்பது போல்,
.....
I am often asked, "Where is Malgudi?" All I can say is that it is imaginary and not to be found on any map .....
If I explain that Malgudi is a small town in South India I shall only be expressing a half-truth, for the characteristics of Malgudi seem to me universal.
(Malgudi Days - Author's Introduction)
.....
முந்தைய புத்தகத்தோடு ஒப்பிடுகையில், இத் தொகுப்பு சிறியதாக இருந்தாலும், அது போலவே சுவையானது. இதையும் நான் கட்டாயம் படிப்பதற்கான வரிசையில் சிபாரிசிக்கிறேன்.
(சிபாரிசு எல்லாம் தேவையேயில்லை. ஒரு கதையை படிக்க ஆரம்பித்தாலே போதுமே..)
புத்தகம் : Malgudi Days.
புத்தக வகை : கதைத் தொகுப்பு.
ஆசிரியர் : ஆர்.கே. நாராயண்.
கிடைக்குமிடம் : புத்தகக் கடைகள். Indian Thought Publications, 38, Thanikachalam Road, T.Nagar, Chennai - 17.
விலை : ரூ. 100/- மட்டுமே.
இந்த இருவரையும் ஒப்பிட்டுப் பார்ப்பது கொஞ்சம் சுவாரஸ்யமான நிகழ்வாகவே இருக்கும்.
பாண்ட், வட இந்தியாவில், இமயத்தின் மடியில் இருக்கின்ற டேஹ்ராடூன், முஸோரி என்று பனியும், குளிரும் உறவாடும் பூலியில் வாழ்ந்தவ்ர். இலண்டன் வரை சென்று படித்து, பாரதம் திரும்பியவர்.
அவரது எழுத்துக்களில் ஈரம் நம் கண்களில் ஒட்டிக் கொள்ளும் அளவுக்குப் படர்ந்திருக்கும். இமயத்தில் அடிக்கின்ற குளிர் வாடைக் காற்று நம் மேனியில் படர்வதை நாம் உணர முடியும். நாம் கண்டிராத வட இந்தியாவின் பனி படர்ந்த மலைச் சிகரங்களும், அடர்ந்த மரங்கள் நிரம்பிய காடுகளும், ரெஸிடென்ஷியல் பள்ளியின் கட்டுப்பாடுகளும், தில்லியின் பழைய பஜாரும், டேஹ்ராடூனின் உற்சாகமான சந்தையும், நம் கண் முன்னே தோன்றச் செய்யும் மாய எழுத்துக்கள், இவருடையது. இப்போது அமைதியாக முஸோரியில் வாழ்கிறார். இவரைச் சந்திக்க வேண்டும் என்பது என்னுடைய விருப்பங்களில் ஒன்று.
இராசிபுரம் கிருஷ்ணசுவாமி நாராயண் நம் ஊர்க்காரர். சென்னையில் பிறந்து, கர்நாடகத்தின் சென்னபட்டினா, ஹஸன் என்றெல்லாம் வாழ்ந்து விட்டு, தம் இளம் பருவத்தை பெரும்பாலும் மைசூரில் கழித்தவர்.
இவரது எழுத்துக்களில் நம் ஊர் வாசம் தான். தென் இந்தியாவின் சூடான, வறண்ட வழ்க்கை முறைகள், அதில் அவ்வப்போது வந்து போகும் நீர்த் துளிகள் போன்ற இன்ப நிகழ்வுகள், கிராமத்துப் பள்ளிக்கூடங்கள், குடும்ப சூழலுக்குக் கட்டுப்பட்ட சிறுவர்கள் என்று மற்றுமொரு வேறுபட்ட களத்தை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார்.
இவரது வெற்றிகரமான ரீச்சுக்கு பெரிய உதாரணம், மால்குடி என்ற கிராமம் உண்மை என்றே பலரை நம்பச் செய்ததுதான்.
....
Malgudi has been only a concept but has proved good enough for my purposes. I can't make it more concrete however much I might be interrogated. When an enthusiastic television producer in London asked me recently if I would cooperate by showing him around Malgudi and introducing him to the characters in my novels for the purpose of producing an hour-long feature, I felt shaken for a moment and said out of politeness, " I am going to be busy working on a new novel..."
"Another Malgudi Novel?" he asked.
"Yes," I said.
"What will it be about?"
"About a tiger possessing a human soul...."
"Oh, that sounds interesting! I think I will wait. It will be marvellus to include the tiger in my documentary...."
R.K.N.
September 1981.
(Malgudi Days - Author's Introduction)
.....
இருவரும் எப்படி வேறுபட்டிருந்தால் என்ன?
சின்னஞ்சிறு பாலகனின் உள்ளத்தின் உணர்வுகளை எழுத்துக்களில் கொண்டு வந்த ப்ரம்மாக்கள் அல்லவா அவர்கள்? உலகத்தின் ஒவ்வொன்றைப் பற்றியும் ஆர்வம் பொங்க, புத்துணர்வோடும், உற்சாகமாகவும் இளமையோடும் துள்ளித் திரிந்த அந்த சிறுவரின் உலகத்துக்குள் நம்மை அணைத்து, அழைத்துச் செல்வதில் இருவரும் மன்னர்கள் அல்லவா?
நமக்கும் ஒன்றும் இவர்களது உலகில் நுழைந்து விடுவது அவ்வளவு கடினமாக இருப்பதில்லை. நாமும் அந்த உலகத்தில் வாழ்ந்து வந்தவர்கள் தானே..?
நாராயண் :
பாண்ட் :
5 comments:
"Malgudi Days" pathi solavum venumaa??...RKN -oda simplicity in style and language is captivating!!
Ruskin Bond pathi theriyaadhu...:)
naan MD padichu rompa naal aachu...but oru coincidence enanaa, ipothaan library-la irundhu andha dvd borrow paninen..innum paarkala..:(
aana book-oda vilai Rs 100 thaana??..ithanai nalla puthakathin vilai ivalavu kamiyaa irupadhu rompa aachiryamaa iruku...
அன்பு மல்லிகை... ஆர்.கே.என் -ஐ உங்களால் இரசிக்க முடிந்தது என்றால், கண்டிப்பாக உங்களால் ரஸ்கின் பாண்டையும் ரசிக்க முடியும்.. கண்டிப்பாக நீங்கள் அவரது கதைகளையும் படிக்க வேண்டும்..
கதைகள் படிப்பதா???
ம்ம்ம்...எனக்கும் ஆசைதான்..ஆனா நேரம்தான் இல்லை வசந்த்..என்னோட reading habbits எல்லாம் திருப்பி ஆரம்பிக்கனும்..விரைவில்...:)
ruskin bond , RKN rendu peroda 1/2 sirukathai naan siru vayathil padichirukken. ana appa ellam atha romba rasikkala. but now when i read RKN i enjoy much. It creates a kind of nostalgia. Have to pick ruskin and read..may started with the book you referred.
அன்பு மல்லிகை.. விரைவில் உங்களுக்கு நேரம் கிடைத்து, புத்தகங்கள் படிக்க வாழ்த்துக்கள்...
அன்பு சக்தி... தங்கள் வருகைக்கு மிக்க நன்றிகள். அவர்களின் மற்ற 1/2 படைப்புகளையும் படித்து விடுங்கள்.. பாவம், அவை மட்டும் என்ன தவறு செய்தன.. ;-)
Post a Comment