Saturday, May 26, 2007

நீயாட்சி செய்யும் மதுரையில் மீனாட்சி என்ற பெயர் உனக்கு.

சென்றாண்டு இறுதியில் மதுரை செல்ல நேர்ந்தது. அப்போது கைபேசியில் கிளிக்கிய மீனாட்சி அம்மன் கோயில் படங்கள்.

கிழக்கு கோபுரம் - தெற்கு வாசலில் நுழைந்து எடுத்தது :

கோயிலின் முழு மாதிரி - அதற்காக, பிள்ளையார் போல் இதை மட்டும் சுற்றி வந்தால் , கோயிலைச் சுற்றிப் பார்த்த திருப்தி கிடைக்குமா என்ன? நாங்கள் முழுக் (உண்மைக்) கோயிலையும் சுற்றிப் பார்த்து விட்டு தான் திரும்பினோம்.


யிரந் தூண் மண்டபம் - தூண்கள் ஆயிரம் இருக்கிறதா என்று எண்ணிப் பார்க்கவில்லை. ஆனால், ஆயிரந் தூண்களிலும் அன்னையின் அருள் இருப்பதை எண்ணிப் பார்த்தோம்.


டராஜரும், உமையும். பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படிபட்ட பிரானும், அவர் மனதில் உறைந்திருக்கும் உமையன்னையும், ஆயிரந் தூண் மண்டபத்தில் உற்சவமூர்த்திகளாய்.


ரதத்தின் அருகில் மீனம்மை. தானாட்சி செய்து வரும் மாநகர் மதுரையில் மீனாட்சி என்ற பெயரோடு தேரின் அருகில் நிற்கின்ற அன்னை.

பொற்றாமரைக் குளத்தை வலம் வருகையில் எடுத்த திருக்கோயில் முற்றத்தின் படங்கள் :

குள முற்றத்தின் கிழக்குப் பகுதி :


குள முற்றத்தின் மேற்குப் பகுதி :



கிழக்கு முனையிலிருந்து தென் கோபுரத்தை எடுத்தது. நெடுந்தெழுந்த தென் கோபுரமும், அதன் கொண்டையில், அன்னையின் முத்துமணி போல் மின்னும் மின்விளக்கும், திருப் பாதத்தில் தொழுதேத்தும் அடியார் போல் தோற்றம் காட்டும் தென்னைக் கூட்டமும், திருக் கோயிலின் ஒளிவெள்ளமும், இவற்றையெல்லாம் தாண்டிய இருள் சூழ்ந்த நட்சத்திரங்கள் நிரம்பிய இரவின் வானும், எங்களை தெய்வீக உணர்வில் ஆழ்த்தின.


தெற்கு கோபுரம். - கோயிலை விட்டு வெளிவந்த பின், எடுத்த தெற்கு கோபுரத்தின் ஒளிக் கோலம்.


6 comments:

sathish said...

Good Work

இரா. வசந்த குமார். said...

Dear Sathish... Thanks for your kind words...

Anonymous said...

elaa padangalum azhaga iruku...aana unga blog-oda dark blue background konjam disturbing-a iruku... :)

இரா. வசந்த குமார். said...

அன்பு மல்லிகை... வாழ்த்துக்கு நன்றிகள். இப்போது பின்புலம் மாற்றி விட்டேன். எப்படி இருக்கிறது என்று பதிலவும்..

Anonymous said...

எல்லாம் மிகவும் அழகாக இருக்கிறது. ஜொளிக்கும் கோபுரம் பிரம்மாதம்.

இரா. வசந்த குமார். said...

அனானி ஐயா.. மிக்க நன்றிகள்..