Sunday, July 22, 2007

வாழ்த்துக்கள்...!


ஸ்டார் விஜய்யில் 'ஏர்டெல் சூப்பர் சிங்கர் - ஜூனியர்' நிகழ்ச்சி ஒரு வெற்றியால்ரைத் தேர்ந்தெடுப்பதோடு அருமையாக முடிந்து விட்டது. இருந்தாலும் தமிழ் மக்களிடையே பெற்றுள்ள பெரும் வரவேற்பினால், அதனை இன்னும் வளர்த்துக் கொண்டு இருக்கிறார்கள். சிறுவர்கள் செய்த குறும்புகள், அவர்களது செல்லச் சண்டைகள் மற்றும் சின்மயியின் சொதப்பல்கள் என்று வெற்றி நடை போடுகிறது.

பங்கு பெற்ற அனைத்துக் குழந்தைகளுக்கும் வாழ்த்துக்கள். வெற்றி பெற்றவர்களுக்கும், வெற்றியை விட்டுக் கொடுத்தவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

இதெல்லாம் ஒரு தோல்வியா என்ன? தட்டி விட்டு எழுந்து ஓட வேண்டியது தான் நான் சொல்கின்ற வார்த்தைகள். இன்னும் வெல்வதற்கு இருக்கிறது ஒரு வாழ்க்கை.

கமல் ஒருமுறை சொன்னார். ' நாம் எல்லோரும் வெற்றி பெறுவதற்கே வந்தவர்கள். எப்படி யென்றால், தாயின் கருப்பையை அடைவதற்கு நம்மோடு போட்டி போட்டு ஓடி வந்த நம் மில்லியன் கணக்கான சகோதரர்களையும், சகோதரிகளையும் மீறித் தானே நாம் எல்லோரும் இப்பூவுலகிற்கே வந்துள்ளோம். பிறகு எப்படி நம்மால் தோல்வி அடைய முடியும்..?'.

அது போல், உத்வேகம் கொள்ள வேண்டுகிறேன்.

சச்சின் - வினோத் காம்ளி ஜோடியாக சாதனை படைத்த போது, அந்த ஆண்டிற்கான 'ஜூனியர் கிரிக்கெட்டர்' விருது சச்சினுக்கு கிடைக்கும் என்று எண்ணியிருந்தார். ஆனால் அந்த வருட விருது வேறு ஒருவருக்கு கொடுக்கப்பட்டது. அதனால் சச்சின் வருத்தத்தில் இருக்கிறார் என்று கேள்விப்பட்டார், அப்போதைய பிரபல கிரிக்கெட்டர் ஒருவர். அவர் சச்சினுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அதில்,

'உன்னைப் போல தான் ஒருவன் சிறு வயதில், ஜூனியர் கிரிக்கெட்டர் விருது கிடைக்கவில்லையே என்று வருத்தத்தில் இருந்தான். இன்னும் கடுமையாக உழைத்து இந்திய அணியிலேயே இணைந்தான்.பிறகு அவன் அப்படியொன்றும் மோசமாக விளையாடவில்லை.' என்றார்.

அவ்வாறு தன்னைப் பற்றிக் கூறி, சச்சினின் மன வருத்தத்தைப் போக்கியவர், சுனில் கவாஸ்கர்.

அது போல் விருது கிடைக்கவில்லையே என்று கவலைப்பட்டுக் கொண்டிருக்காமல், இன்னும் முயற்சி செய்தால், முன்னேறலாம் அல்லவா..?

ன்னராக வந்த விக்னேஷுக்கு ஒரு கதை.

1994-ல் இந்திய அழகிப் போட்டியில் ஒரு பெண் இரண்டாவதாக வந்தார். ஆனால் அவர்தான் பிற்காலத்தில் முதலாவதாக வந்த பெண்ணை விட பெரும்புகழ் பெற்றார். இரண்டாவதாக வந்த 'ஐஸ்வர்யா ராயை' விட உனக்கு முதலாவதாக வந்த 'சுஷ்மிதா சென்'னை நன்றாகத் தெரியுமா, என்ன?

இவ்வளவு ஏன்?

தலைவரே என்ன சொல்லி இருக்கிறார்?

'ஒரு குழந்தைகிட்ட போய் உனக்கு ஒரு பிஸ்கெட் வேணுமா, ரெண்டு பிஸ்கெட் வேணுமானு கேட்டா என்ன சொல்லும்?'

'ரெண்டு பிஸ்கெட்னு தான் சொல்லும்'

'ஒரு குரங்குகிட்ட போய் உனக்கு ஒரு பழம் வேணுமா, ரெண்டு பழம் வேணுமானு கேட்டா என்ன சொல்லும்?'

'ரெண்டு பழம்னு தான் சொல்லும்'

'இப்ப உங்ககிட்ட ஒரு ருபா வேணுமா, ரெண்டு ருபா வேணுமானு கேட்டா என்ன சொல்லுவீங்க?'

'ரெண்டு ரூபானு தான் சொல்லுவேன்'

'அப்ப ஒண்ணு பெருசா, ரெண்டு பெருசா?'

'ரெண்டு தான் பெருசு'

'அப்ப நான் தான் பெருசு'

(தலைவா.. தலைவா.. உய்ய்ய்ய்...)

அது போல் விடாதே, தூள் கிளப்பு.

வெற்றி பெற்ற கிருஷ்ணமூர்த்திக்குச் சொல்லிக் கொள்வது ஒன்று தான்.


'SUCCESS IS NOT THE DESTINATION. IT IS A JOURNEY'.

1 comment:

தமிழநம்பி said...

இரா.வசந்தகுமார்,
உங்களின் இந்தக்கட்டுரையும் வேறு படைப்பும் 'மாற்று' தொகுப்பில் என் பெயரில் தொகுக்கப்பட்டுள்ளது.
முகவரி : http://maatru.net/http://maatru.net/author/தமிழநம்பி/

இந்தச் சிக்கலால் என் பதிவுகள் 'மாற்று'
தொகுப்பில் சரியாக இடம்பெறவில்லை.

சரியாகத் தொகுக்குமாறு 'மாற்று' குழுவினரிடம் சொல்ல வேண்டும். எனக்கு அவர்கள் முகவரி தெரியவில்லை.

முறைப்படுத்த நீங்களும் முயற்சி செய்தால் சிக்கல் தீரும் என்று கருதுகிறேன்.
அன்பன்,
தமிழநம்பி.
என் வலை :http://thamizhanambi.blogspot.com
என் மின்னஞ்சல் முகவரி:
thamizhanambi44@gmail.com