Thursday, July 26, 2007

அர்ச்சனை.


"ம்மி.. வாட் இஸ் திஸ்..?" கேட்டான் ஹரி.

"திஸ் இஸ் சிவலிங்கா.. நான் சொல்லி இருக்கென் இல்லையா, லார்டு சிவா. அவர் தான் இவர்." சொன்னாள் வித்யா.

"மம்மி.. மம்மி.. இந்த ப்ளேஸ் நாம பிட்ஸ்பெர்க்ல ஒரு டெம்பிளுக்குப் போனோமில்லையா.. அது போலவே இருக்கு.."

"எஸ்.. இதுவும் கோயில் தான். பட் அங்கே நாம் பார்த்தது வெங்கடேஸ்வர் டெம்பிள். இவர் அவ்ரோட ரிலேஷன். ஓ.கே. இப்போ நம்ம ஷூஸ் எல்லம் ரிமூவ் பண்ணி, கார்லயே வெச்சிடுவோம்."

"மம்மி.. இந்த டெம்பிளுக்கு நாம ஷூ போட்டூக்கிட்டே போகக் கூடாதா? டாடி கூட சர்ச்க்கு போகும் போதெல்லாம் ஷூ போட்டுக்கிட்டு தான் போறேன். வொய் நாட் ஹியர்..?"

"அது வேற டெம்பிள். அங்க அப்படிப் போகலாம். இது வேற டெம்பிள். இங்க இப்படித் தான் போகணும்னு ரூல்ஸ் இருக்கு. நம்ம வீட்ல நாம ஸ்பூன்ல தான் சாப்பிடறோம். ஆனா, இங்க ஆண்டி வீட்ல கையில எடுத்து தானே சாப்பிடறோம். அது மாதிரி.."

"ஓகே மாம்.."

"சொல்லுங்கோ. யார் பேருக்கு அர்ச்சனை பண்ணனும்..?"

"ஹரி வில்லியம்ஸ்.."

"என்ன சொன்னேள்..? வில்லியம்ஸா..? இந்தப் பேருக்கெல்லாம் இங்க அர்ச்சனை பண்றதில்ல.."

"என்ன பண்ண மாட்டேளா..? என்னை யாருன்னு நெனச்சிண்டேள்..? திருவாரூர் சுவாமிநாதப் பிள்ளை தெரியுமோ நோக்கு? அந்தக் காலத்துல அவர் பாட ஆரம்பிச்சா, ஊருல இருக்கிற எல்லாக் குழந்தையும் தூங்கிடும். ஒரு தடவை, தஞ்சாவூர் மஹாராஜாவே நின்னு அவர் பட்டை ரசிச்சிண்டு அரசவைக்கு கூப்பீடு முந்நூறு ஏக்கரா எழுதி வெச்சார் தெரியுமா..? அவரோட பேத்தி வயிற்று மக நான். என் பையன் பேருல அர்ச்சனை பண்ண மாட்டேளா?"

"க்ஷமிக்கணும். நீங்க நம்மவானு தெரியாம போயிடுத்து. இருந்தாலும் பையன் பேருல துரைமார் பேர் இருக்கு. அதை எப்படி பகவான் கருவறையில சொல்றது..?"

"ஏன்..? நம்ம பகவான் தொரைமார்க்கெல்லாம் கருணை காட்ட மாட்டேன்னுட்டாரா..? நான் லண்டன் போய் படிச்சு, அங்கேயே வெள்ளைக்காரர் ஒருத்தரை விரும்பி கல்யாணம் செஞ்சுட்டேன். எங்களுக்குப் பிறந்த பையன் பேருக்கு நீங்க அர்ச்சனை பண்ண மாட்டேளா..?"

"இதோ பண்றேன்.."

"ம்மி..! எப்படி நீ இவ்ளோ அழகா இந்த லாங்குவேஜ்லாம் பேசறே..? வொய் நீ இந்த கண்ட்ரிய விட்டுட்டு, லண்டன் போனே?"

"அது ஒரு பிக் ஸ்டோரி ஹரி..! ஐ வில் டெல் யூ லேட்டர். இப்போ ப்ரே பண்ணலாமா..?"

கணினி ஓவியப் போட்டி.

No comments: