Monday, July 23, 2007

பூச்சி பிடித்தல் முறைகள்.


பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பது எப்படி?

சிறிய தொல்லைகளில் இருந்து, அஸ்திவாரத்தையே ஆட்டம் காண வைக்கின்ற பிரச்னைகளில் இருந்து தப்பியோடாமல், அவற்றை முறியடித்து வெற்றி பெறுவது எப்படி?

ஒவ்வொரு செயலுக்கும் ஏதாவதொரு காரணம் இருக்கும். கண்டிப்பாக அது ஒரு பிரச்னையின் முடிவை நோக்கிப் போகின்ற பயணமாகத் தான் இருக்கும்.

காலையில் மார்க்கெட்டிற்குப் போகின்றோம். எதற்கு? வீட்டில் சமைக்க காய்கறிகள் இல்லை. வாங்கி வந்தால் அந்தப் பிரச்னை ஓவர். சுபம்.

அவசர அவசரமாகக் காலையில் கிளம்புகையில், பெட்ரோல் இல்லை. இது ஒரு பிரச்னை. இதைத் தீர்ப்பது எப்படி? பெட்ரோல் போடலாம். வண்டியை ஓரக்கட்டி, நடக்கலாம். ஏதோவொன்று செய்ய, சற்றுமுன் பிரச்னையாய் நம் முன் இருந்தது, தீர்ந்தது.

இப்படிச் சின்னச் சின்ன சிக்கல்களில் இருந்து, பெரிய, பெரிய பிரச்னைகள் வரை தீர்ப்பதற்காக ஏதாவது பொதுவான சூத்திரங்கள் இருக்கின்றனவா? அப்படி இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

'இந்த எல்லாப் பிரச்னையும் ஒரே மாத்திரையில் தீரணும்' என்றால், அப்படி ஒரு மாத்திரை கிடைக்குமா?

இருக்கின்றது.

கிடைத்திருக்கின்றது. பலரால் உபயோகப் படுத்தப்படுகின்றது வெற்றிகரமாக ...!

DEBUGGING RULES.

ஒன்பது சூத்திரங்கள். பிரச்னையின் மூலத்தைக் கண்டறிவதற்கும், தீர்வுக்கான வழிமுறைகளை எளிதாகக் கண்டறிவதற்கும், பயன்படுத்துவதற்கும்..!

1.Understand The System.

2.Make it Fail.

3.Quit Thinking and Look.

4.Divide and Conquer

5.Change one thing at a time.

6.Keep an audit trail.

7.Check the Plug.

8.Get a fresh view.

9.If you didn't fix, it ain't fixed.

பெரும்பாலும் நாம் அறிந்த, சிலவற்றை மட்டுமே உபயோகித்துப் பார்க்கின்ற முறைகள் தாம்.

ஆனால், வரிசைக்கிரமமாக உபயோகித்துப் பார்க்கையில், ஒரு மேம்பட்ட, தொழில்முறை பயன்பாடாக இருப்பதை நாமே உணர்வோம்.

புத்தகத்தில், அத்தனை முறைகளுக்கும் வலிய நகைச்சுவையோடான உதாரணங்கள், ஆசிரியரால் தரப்பட்டுள்ளன. பெரும்பாலும் அவரது நெடிய தொழில் வாழ்வில் நிகழ்ந்த அனுபவங்களைக் கொண்டு இந்நூல் எழுதப்பட்டுள்ளதால், இப்போது தான் பணி செய்யத் துவங்கியிருக்கும் நமக்கு மிக்கத் துணையாய் இருக்கும் என்பது திண்ணம்.

பணியில் சேர்ந்த முதலில், இந்த புத்தகம் வடிவில் இணையத் தபாலில் கிடைத்தது. இப்போது இது அமேஸான் - ல் மட்டுமே கிடைப்பதாகத் தெரிகின்றது. விரும்புவோர், பின்னூட்டத்தில் தெரிவிப்பின் அனுப்பி வைக்கப்படும்.

5 comments:

Anonymous said...

"பூச்சி பிடித்தல் முறைகள்"???..

:))))

இரா. வசந்த குமார். said...

அன்பு மல்லிகை...

Debugging அப்படிங்கறதைத் தான், இப்படிச் சொல்லியிருக்கேன்...

Anonymous said...

தலைப்பை படிச்சதும் ஏதோ பூச்சி பிடிப்பதைப்பற்றி எழுதியிருக்கீங்கன்னு நெனைச்சேன்...பின்பு புரிந்தது..:)

Anonymous said...

Hi

Today i happend to read your blog. I love your travelogs and infact i am reading all your blogs today. Excellent. Keep up the good work. I already book marked it.

Could you please send me this book to ramg75@rediffmail.com id ?

thanks
Ramkumar

தமிழநம்பி said...

இரா.வசந்தகுமார்,
உங்களின் இந்தக்கட்டுரையும் வேறு படைப்பும் 'மாற்று' தொகுப்பில் என் பெயரில் தொகுக்கப்பட்டுள்ளது.
முகவரி : http://maatru.net/http://maatru.net/author/தமிழநம்பி/

இந்தச் சிக்கலால் என் பதிவுகள் 'மாற்று'
தொகுப்பில் சரியாக இடம்பெறவில்லை.

சரியாகத் தொகுக்குமாறு 'மாற்று' குழுவினரிடம் சொல்ல வேண்டும். எனக்கு அவர்கள் முகவரி தெரியவில்லை.

முறைப்படுத்த நீங்களும் முயற்சி செய்தால் சிக்கல் தீரும் என்று கருதுகிறேன்.
அன்பன்,
தமிழநம்பி.
என் வலை :http://thamizhanambi.blogspot.com
என் மின்னஞ்சல் முகவரி:
thamizhanambi44@gmail.com