Monday, July 23, 2007

Thinkers of the East. (கிழக்கின் சிந்தனையாளர்கள்.)


சென்னை நூல் அழகத்திற்கு இவ்வாண்டு சென்றிருந்த போது, Islamic Foundation Trust பதிப்பாளர்கள் திருக் குர் ஆனை வெளியிட்டு விற்பனைக்கு வைத்திருந்தனர். அதுவும் இப் புத்தகத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகின்ற இந்துக்களுக்கு, மிகக் குறைந்த விலையில் விற்கப்பட்டது. உடனே வாங்கி விட்டேன்.

அவ்வப்போது மட்டும் கொஞ்சம் கொஞ்சமாய்ப் படித்து வருகின்றேன்.

அதற்கு முன்பாக, பா. ராகவன் அவர்களின் 'நிலமெல்லாம் இரத்தம்' நூலைப் படித்த பின்பு, இசுலாம் மார்க்கத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் தோன்றி இருந்தது.

சிறுவயதில் மெட்ரிக்கில் படிக்கும் போது, பைபிள் பற்றி சிறு அறிமுகம் இருந்தது. மேலும் 'கருணாமூர்த்தி' போன்ற டி.டி. தொடர்களும், டிசம்பர்- 25 அன்று (ஒரு காலத்தில்) டி.டி.யில் போடப்படும் 'அன்னை வேளாங்கன்னி' போன்ற படங்களாலும் ஓரளவு கிறித்துவ வரலாறும், இயேசுவின் வரலாறும் தெரிந்திருந்தது.

ஆனால் இசுலாமியத்தைப் பற்றிய அறிமுகம் எப்படிக் கிடைத்தது? 'அலிபாபாவும் 40 திருடர்களும்', 'அலாவுதீனும் அற்புத விளக்கும்' போன்ற படங்களாலும், 'அலிப்லைலா',' திப்பு சுல்தான்' ஆகிய தொடர்களாலும் தான் கிடைத்தது. ஆனால் அவற்றில் இறைக் கருத்துக்கள் பற்றிய காட்சிகள் இன்றி, நாயகனின் சாகசங்கள் மட்டுமே இருந்தது.

'எதைத் தேடிப் போகின்றோமே, அது தானே நம்மைத் தேடி வரும்'(WYSIWYG) என்பது முன்னோர் வாக்கு.

அது போல், திருக் குர் ஆன் படிக்கத் தொடங்கிய சிறு காலத்திலேயே, ஒருமுறை சென்னை மத்திய புகைவண்டி நிலையத்திற்குச் சென்ற போது, ஹிக்கின்பாதம்ஸில் கிடைத்த புத்தகம் தான் - Thinkers of the East.

இசுலாமியத்தின் ஒரு பிரிவான சுஃபியிசத்தில் சிறந்த அக்கால அறிஞர்களின் கருத்துக்கள் மட்டுமே உள்ள இந்நூல், அற்புதமான கருத்துக்களை எளிய வடிவில் கூறுகிறது.

நூலில் இருந்து சில சிறிய நிகழ்வுகள்.

THE BOOK OF WISDOM

SIMAB said:

' I shall sell the Book of Wisdom for a thousand gold pieces, and some people will say that it is cheap.'

Yunus Marmar said to him:

' And I shall give away the key to understanding it, and almost none shall take it, even free of charge.'

ALMOST AN APPLE

NAJRANI said:

' If you say that you can "nearly understand", you are talking nonsense.'

A theologian who liked this phrase asked:

'Can you give us an equivalent of this in ordinary life?'

'Certainly,' said Najrani; 'it is equivalent to saying that something is "almost an apple".'

FEELING

UWAIS was asked:

'How do you feel?'

He said:

'Like one who has risen in the morning and does not know whether he will be dead in the evening.'

The other man said:

'But this is the situation of all men.'

Uwais said:

'Yes. But how many of them feel it?'


THE QUESTION


A RICH braggart once took a Sufi on a tour of his house.


He showed him room after room filled with valuable works of art, priceless carpets and heirlooms of every kind.


At the end he asked:


'What impressed you most of all?'


The Sufi answered:


'The fact that the earth is strong enough to support the weight of such a massive building.'


SEEING


IT is reported that Avicenna the philosopher said to a Sufi:


'What would there be to be seen if there were nobody present to see it?'


The Sufi answered:


'What could not be seen, if there were a seer present to see it?'


***
புத்தகம் : Thinkers of the East.

புத்தக வகை : கதைத் தொகுப்பு. தத்துவம். (ஆங்கிலம்)

ஆசிரியர் : Idries Shah (தொகுப்பு).

கிடைக்குமிடம் : புத்தகக் கடைகள்.

விலை : ரூ. 195/- மட்டுமே.

5 comments:

Anonymous said...

O.Holy Kuran-um padikareengala??..nice..

idhil irundhu onnu nalla theriyudhu ungala pathi...:))))

neenga quote seidhirukum nigalvugal elaam very thought provoking & interesting...:)

இரா. வசந்த குமார். said...

அன்பு மல்லிகை...

//O.Holy Kuran-um padikareengala??..nice..
//

நன்றி தங்கள் வாழ்த்துக்கு...!

//idhil irundhu onnu nalla theriyudhu ungala pathi...:))))
//
ஆனால் இதில் இருந்து தாங்கள் என்னைப் பற்றி என்ன தெரிந்து கொண்டீர்கள் என்று தான் புரியவில்லை..!

//neenga quote seidhirukum nigalvugal elaam very thought provoking & interesting...:)
//

நன்றி, சுஃபியிசம் புத்தகம் படித்ததில் இருந்து, அதன் கருத்துக்களைத் தேடிப் படிக்க வேண்டும் என்று நினைத்துள்ளேன்...!

Anonymous said...

///ஆனால் இதில் இருந்து தாங்கள் என்னைப் பற்றி என்ன தெரிந்து கொண்டீர்கள் என்று தான் புரியவில்லை..!///


naladhu thaan vasanth..just that u have lotsss of free time...:)))

idhai sonnadhum idhilirundhu innonum purindhadhu...:)))

இரா. வசந்த குமார். said...

அன்பு மல்லிகை...

/*
idhai sonnadhum idhilirundhu innonum purindhadhu...:)))
*/

ஐயையோ.. இது ஒரு தொடர்க் கண்ணியாகி விடும் போல் இருக்கிறது...

எனக்குப் புரிந்து விட்டது... இப்போது என்ன சொல்லப் போகிறீர்கள் என்று.. 'னான் வெட்டியாகத் தான் இருக்கிறேன்' என்பது தானே..?

தமிழநம்பி said...

இரா.வசந்தகுமார்,
உங்களின் இந்தக்கட்டுரையும் வேறு படைப்பும் 'மாற்று' தொகுப்பில் என் பெயரில் தொகுக்கப்பட்டுள்ளது.
முகவரி : http://maatru.net/http://maatru.net/author/தமிழநம்பி/

இந்தச் சிக்கலால் என் பதிவுகள் 'மாற்று'
தொகுப்பில் சரியாக இடம்பெறவில்லை.

சரியாகத் தொகுக்குமாறு 'மாற்று' குழுவினரிடம் சொல்ல வேண்டும். எனக்கு அவர்கள் முகவரி தெரியவில்லை.

முறைப்படுத்த நீங்களும் முயற்சி செய்தால் சிக்கல் தீரும் என்று கருதுகிறேன்.
அன்பன்,
தமிழநம்பி.
என் வலை :http://thamizhanambi.blogspot.com
என் மின்னஞ்சல் முகவரி:
thamizhanambi44@gmail.com