Monday, April 07, 2008

ஒரு குழப்பம்.

பாரதத்துல ஒரு கத வருது.

ஒரு தபா நம்ம கிஸ்னனை பாக்க துரியோதனனும், தர்மராசாவும் போயிருக்காங்கோ. கிஸ்னன் குஜாலா பெட்டுல படுத்துக்கினுகீறாரு. ரெண்டு பேரும் வர்றாங்கோ. 'வாங்க ப்ரெண்ட்சு.வணக்கம்' அப்டீனு நூஸுல சொல்ற மாரி சொல்றாரு.'வணக்கம் அல்லாம் அப்பால சொல்லிக்கலாம். கிஸ்னா, சண்டயில நீ எந்த சைடு இருக்கப் போற? அத்த சொல்லு மொதல்ல..' அப்டீனு கேக்கறாரு துரியோதனர். தருமராசாவும் அத்தயே
கேக்கறாரு.

இப்டி கேட்டு ரெண்டு பேரும் கிஸ்னனை மெர்சல்ல வுட்டுட்டாங்கோ.

கிஸ்னனுக்கு சங்கடமாப் போச்சு. 'இன்னாடா, ரெண்டு பேரும் நம்ம பங்காளிப் பசங்க ஆயிடுச்சே. இப்ப ஒர்த்தன் பக்கமா போனா, இன்னொருத்தம் மூஞ்சியை தூக்கி வெச்சுக்குவானே. இன்னா பண்றது..?' அப்டினு கொஞ்ச நேரம் திங்க் பண்றாரு. 'டபார்'னு ஒரு ரோசன.

'இன்னா பசங்களா.. நீங்க ரெண்டு பேரும் எனிக்கு க்ளோஸ் தோஸ்து. நான் யாரு பக்கமா போனாலும் இன்னொருத்தனுக்கு கஷ்டமா தான் இருக்கும். அதுனால ஒரு சின்ன டெஸ்டு.
ஊருல இருக்கற சனமெல்லாம் எப்படிப்பட்டவனுங்க அப்டினு கண்டுகினு வாங்க. அப்பால என்னோட முடிவ சொல்றன். இன்னா சேலஞ்சுக்கு ரெடியா?' அப்டினு கேக்கறாரு.

கிஸ்னனே சொன்னப்புறம் ஏதாவது மறுவார்த்த பேச முடியுமா?

ரெண்டு பேரும் ஆளுக்கொரு தெசயா போறாங்கோ.

ஆஃப் அவரு போச்சு. ரெண்டு பேரும் ரிடர்ன் ஆகறாங்கோ.

கிஸ்னன் கேக்கறாரு. 'ஃபர்ஸ்ட் மூத்தவரு. இன்னா தருமா, ஊருல இருக்கறவனெல்லாம் எப்டிப்பட்டவனா இருக்கான்..?'

தர்மர் ரிப்ள பண்றாரு..' கிஸ்னா இன்னா இப்டி கேக்கற..? அல்லா ஆளுங்களும் சொக்கத் தங்கமா இல்ல இருக்காங்கோ? ட்வென்டி ஃபோர் காரட் கோல்ட் தான் அல்லாரும்..' அப்டின்றாரு.

'நீ இன்னாபா சொல்ற..?' அப்டினு துரியோதனர பாத்த்து கேக்க..

'அத்த ஏன் கேக்கற கிஸ்னா. அல்லா பேரும் சுத்த பொறுக்கிங்க. பேமானி, கசுமாலம், கலிசட, அத்தன மாரி, இப்டித்தான் இருக்கானுங்க. அல்லா பேரும் சுத்த கயவாணிப் பயலுக. வாட்சிங்கா இருக்கணும் கிஸ்னா. அல்லாங்காட்டி அண்ட்ராயர் வரிக்கும் உருவிக்கினு போய்க்கினே இருப்பானுங்க...' அப்டினு கிஸ்னனையே உசாரா இருக்கச் சொல்றாரு.

'அப்டி வாங்க. தருமர் ரொம்ப நல்லவரு. அதால ஊருல இருக்கறவன் எல்லாம் நல்லவனா தெரியுது அவருக்கு. துரியோதனன் கெட்ட பய. அதனால அவனுக்கு... எல்லாப் பயலையும் கெட்டவனா பாக்கறான். நான் என்னிக்கும் நல்லவங்க பக்கமா தான் இருப்பேன்னு சனங்களுக்கு தெர்யணும். அதுக்காண்டி நானே உங்க ரெண்டு பேர்ல ஆரு நல்லவன்னு டிசைட் பண்ணுனா அப்பால என்கிட்டயே சண்டைக்கு வருவாங்கோ! எத்த வெச்சு நீயே டிசை பண்ற பவர் எடுத்துக்கினே? அப்டினு.. அதுனால் இப்டி ஒரு டெஸ்ட் வெச்சேன். அதுனால நான் ஃபைட்ல தருமர் பக்கம் தான் இருப்பேன். அர்ஜுனுக்கு ட்ரைவரா இருப்பேன். அதுக்காண்டி துர்யோதனா ஃபீலாகாத.. உனிக்கு என்னோட படை, குருத, ஆன அல்லாமே உனக்கு தான்..!

இன்ன ஹேப்பி தான ரெண்டு பேருக்கும்..? குஜாலா போய்ட்டு வாங்க.

நல்லவன் கண்ணுக்கு அல்லாமே நல்லதா தெர்யும். அல்லாங்காட்டி கெட்டவன் கண்ணுக்கு எல்லாமே கெட்டதா தான் தெர்யும். இது தான் இந்த சீன்ல நான் சொல்ற மெஸேஜ். இன்னா எல்லாரும் நோட் பண்ணிட்டீங்களா..? அப்பால ஆரும் வந்து நோட்ஸ் எடுக்கல, ஒரு ரீப்ளே காட்டுனு எல்லாம் சொல்லக் கூடாது. எனக்கு கோபம் வந்தா இன்னா செய்வேன் தெர்யுமில்ல..? தீவாளிக்கு வுடற சங்கு சக்கரம் அப்டியே சுத்தி சுத்தி வந்து தொரத்தற மாரி பண்ணிடுவேன்...'

துரியோதனர் கெட்ட செயல்களைச் செய்பவன் என்பதால் அவருக்கு மக்களிடம் இருக்கின்ற கெட்ட குணங்களே கண்ணில் பட, அனைவரும் கெட்டவர்கள் என்று முடிவு செய்கிறார் என்று கிருஷ்ணர் கூறுகிறார்.

அப்படி தான் செய்கின்ற செயல்களைக் கொண்டு பிற மக்கள் அதைச் செய்கையில் அவர்கள் கெட்டவர்கள் என்று துரியோதனர் முடிவு செய்தால், தான் கெட்டதே செய்து கொண்டிருக்கிறோம் என்பது துரியோதனருக்கு தெரிந்திருக்கின்றது என்று தானே பொருள்? தான் செய்வது தவறு என்று தெரிந்தே அவர் செய்து கொண்டிருந்தாரா?

'நான் நல்லவனுக்கு நல்லவன்; கெட்டவனுக்கு கெட்டவன்' என்று நடிகர்கள் பஞ்ச் சொல்லி முகத்தின் மேலேயே குத்துகிறார்களே, அவர்களது டயலாக்கில் இந்த லாஜிக் முரண்படுகின்றதே..!

'நான் நல்லவனுக்கு நல்லவன்; கெட்டவவனுக்கும் நல்லவன்' அப்படித் தானே சொல்ல வேண்டும்.

நல்லவனுக்கு நல்லவனாய் இருப்பது, கெட்டவனுக்கு கெட்டவனாய் இருப்பது சரியா? இல்லை நல்லவனுக்கு கெட்டவனாய், கெட்டவனுக்கு நல்லவனாய் இருப்பதும் சரியா? இல்லை நல்லவனுக்கு நல்லவனாய், கெட்டவனுக்கு நல்லவனாய் இருப்ப்பதும் சரியா?
இல்லை நல்லவனுக்கும் நல்லவனாய், கெட்டவனுக்கும் நல்லவனாய் இருப்பது தான் சரியா..?

'உங்களுக்கெல்லாம் ஒரே கொழப்பமா இருக்குமே...!'

'Delicate Position....'

'whos the disturbance...?'

No comments: