Saturday, April 12, 2008

வர்றேண்டா சென்னைக்கு...!



மாலை 5:30க்கு TVCயில் இருந்து சென்னை செல்லும் எக்ஸ்பிரஸ் கிளம்புகின்றது. டிக்கெட் பதிவு செய்தாகி விட்டது. கண்டிப்பாக கிளம்பியாக வேண்டும். ஒரு வாரமாக அவ்வப்போது PNR Status பார்த்து குறைந்து கொண்டே வந்து இன்று காலை தான் S4 - 47 என்று உறுதி ஆனது. அவ்வளவு சுலபமாக விட்டு விட முடியாது.

4 மணிக்கு டெக்னோபார்க்கில் இருந்து கிளம்பினேன். திடீரென்று ஒரு சந்தேகம். இரயில் 17:30க்கா இல்லை 17:25க்கா என்று. வீட்டுக்கு ஆட்டோவைப் பிடித்து வந்து அவசர அவசரமாக பெட்டியை அடைத்து, நடை வேகமாக நடந்து கழக்குட்டம் பேருந்து நிறுத்தம் அடைந்தேன்.

தம்பானூர் செல்லும் பேருந்து வரவே 16:30 ஆகி விட்டிருந்தது. ஏறி டிக்கெட் எடுத்து, செல்லில் நெட் தொடர்பி, செக் செய்யப் பார்க்க பைசா காலி ஆகி இருந்தது தெரிய வந்தது. வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டே செல்லலானேன்.

பேருந்து ஓட்டுநர் Relativity Theoryயை நிரூபித்துக் கொண்டே ஓட்டினார்.

காரியவட்டம், காரியம், கேசவதாசபுரம், உல்லூர், பட்டம், பேக்கரி ஜங்ஷன் என்று திரும்பி மிகப் பொறுமையாக ஓட்டிக் கொண்டே வந்தார். அவரையும் ரொம்பவும் குறை சொல்ல முடியாது. மாலை நேர நெரிசல், வார விடுமுறை, திங்கட்கிழமை வருகின்ற விஷூ கொண்டட்ட ஷாப்பிங் என்று நகரம் கொஞ்சம் பரபரப்பாகத் தான் இருந்தது.

ஒவ்வொரு நிறுத்தத்திலும் ஊருக்குச் செல்லும் அலுவலக மக்கள், மாணவர்கள் என்று கையில் பைகளுடனும், கண்களில் ஆர்வத்தோடும் , மகிழ்வோடும் பேருந்துகளில் ஏறினர்; இறங்கினர்.

தம்பானூர் வந்து சேர்கையில் 17:20 ஆகி இருந்தது. விரைவாக இறங்கி, பேருந்து நிலையத்தைக் கடந்து, (அந்த கேப்பிலும் கேட்க இல்லையென சொல்லப்பட்டு நாளைக்குத் தான் வரும் என்று சொல்லப்பட, கிடைத்த துக்ளக், ஜூ.வி. என்று வாங்கிக் கொண்டு) சாலையைத் தாண்டி, இரயில் நிலையத்தை அடைந்தேன். சரியான கோச்சைக் கண்டுபிடித்து உள்ளே சென்று இருக்கையைப் பிடித்த பின் தான் 'அப்பாடா...' என்ற பெருமூச்சு வந்தது.

அமர்ந்த இரண்டு நொடிகளில் கிளம்பியது சென்னையை நோக்கி...!

இதற்காகத் தான் முன்பதிவு எல்லாம் செய்ய மாட்டேன். கிடைத்த பேருந்துகளில் தாவித் தாவிப் போனோமா, இரவில் என்காவது பேருந்து நிலையத்தில் காத்திருந்து அடுத்த பேருந்து பிடித்தோமா என்று இருந்திருக்கலாம், அதை விடுத்து, முன்பதிவு செய்து ,அதைப் பிடித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் அடித்துப் பிடித்துக் கிளம்பி... சல்லைடா...!

ப்பயணத்தில் ஒரு சுவாரஸ்யமான சந்திப்பு.

எலெக்ட்ரீஷியன் வேலை பார்க்கும் க்ரேடு 'பி'யில் பணியாற்றும் ஒரு சதர்ன் ரெயில்வே எம்ப்ளாயீ கூட சாலக்குடி வரை பயணித்தார். அவர் பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டே வந்தார்.

கேரளா ஆண்கள் பலர் கல்ஃப் நாடுகளுக்கு வேலைக்கு சென்று விடுவதால், பணியாளர் பற்றாக்குறை என்பதால் கேரளா கோட்டம் முழுதும் தமிழர்கள் தான் பெரும்பான்மையாக் இருக்கிறார்கள். இப்போது லல்லு வந்த பின்பு, பாதிக்கு பாதி வட இந்தியர்கள் ஆதிக்கம் அதிகமாகி விட்டதாம். ப்ரொமோட் ஆகி இங்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகின்றதாம். பயங்கர போர். அட்லீஸ்ட் டீப்ரொமோட் செய்து மீண்டும் சென்னைக்கே அனுப்புங்கள் என்று கேட்டுக் கொண்டிருக்கிறாராம்.

எப்படித்தான் லல்லு இலாபம் காட்டுகிறார் என்பதே ஆச்சரியமாக இருக்கிறது என்றார். தினமலரில் வந்த ஆர்டிக்கிள் படித்தீர்களா என்று கேட்டேன். குறித்து வைத்துக் கொண்டார்.

கலாச்சாரமே இங்கு ஃபாரின் கல்ச்சர் போல் இருக்கிறது. எனவே உஷாராக இரு என்றார். அவர்கள் கொஞ்சம் அழகாக வேறு இருந்து தொலைப்பது பேச்சிலர்களுக்கு எஞ்சாய் தான்! ஆனால், குடும்பமாக செட்டில் ஆவது சிரமமான வேலை என்றார்.

காலை 10 மணிக்கு சென்னை வந்தது. சென்ட்ரல் பழகிப் போன வெயிலோடும், குப்பைகளோடும், இரைச்சல்களோடும் வரவேற்றது.

No comments: