Monday, July 28, 2008

இது உங்கள் கதை.

நீங்கள் நல்லவர் தானே?

குறைந்தபட்ச நீதியோடும், நியாயங்களோடும் வாழ வேண்டும் என்று நினைப்பவர் தானே? பள்ளியில் கற்பிக்கப்பட்ட 'பொய் சொல்லக் கூடாது', 'நேர்மையாக வாழ வேண்டும்' போன்ற கொள்கைகள் எல்லாம் அவற்றைத் தாண்டி ஒரு எட்டு குதிக்கும் போது, கொஞ்சமாவது ஒரு சங்கடப் புள்ளியை உங்கள் மனதில் ஏற்படுத்துகின்றன தானே?

எனில் இது உங்கள் கதை தான். ஆனால் முழுதும் உங்களைப் பற்றிய கதை அல்ல. கதையில் நீங்கள் வருகிறீர்கள். அவ்வளவு தான்.

நல்லது.

இப்போது உங்களிடம் ஒரு கேள்வி.

.357 மேக்னம் ரிவால்வரை ஃபுல்லாக லோட் செய்து ஸேஃப்டி லாக்கை ரிலீஸ் செய்து, உங்களிடம் கொடுக்கிறேன். ஒரு குறுகலான சந்தின் ஆரம்ப முனையில் நீங்கள் நிற்கிறீர்கள். இருபதடி வாழ்க்கையே கொண்ட சந்தின் அடுத்த முனையை நோக்கி செல்லும் ஒருவரை சுடச் சொல்கிறேன். நீங்கள் கன்னாபின்னா என்று சுட்டாலும் ஒரு புல்லட்டாவது அவரைத் துளைக்கும்.

என்ன சொல்கிறீர்கள்?

ரு மாத முன் அதிகாலை. அதிசய நிகழ்வு. உங்களுக்கு கொஞ்சம் சீக்கிரமாகவே விழிப்பு வந்து விட்டது. பாத்ரூம் போய் விட்டு வந்து, படுக்கையில் அமர்ந்து இரண்டு தலையணைகளை மடியில் போட்டுக் கொண்டு ரெண்டு கொட்டாவி விடுகிறீர்கள். தூக்கம் வருவது போல் இருக்கின்றது. ஆனால் வரவில்லை. டைம் பீஸ் 4 மணி ரேடியம். ரிமோட்டால் சேனல்களைத் தாண்டித் தாண்டி செல்கிறீர்கள்.

வெண்ணுடை மேட்சுகள், பார்லிமெண்ட் பேச்சுக்கள், பழைய விஜய் படல்கள், ஷாந்தி - ஏக் கர் கா கஹானி, நினைத்தாலே இனிக்கும், ரகசிய நோய் டாக்டர் விளம்பரப்பேட்டி, WWF, இளம் ஷூமேக்கர் கார்...

ச்சட்... சிவப்பு பட்டனை அழுத்தி டி.வி.யைக் கொன்று ரிமோட் தூர விழுகின்றது.

திடீரென்று, வாக்கிங் போனால் என்ன என்ற சிந்தனை பிறக்கின்றது. தூக்கமும் வரவில்லை. டி.வி.யும் போர். இன்றிலிருந்து வாக்கிங் போகும் பழக்கம் கொள்வோம் என்று நினைக்கிறீர்கள். உற்சாகிக்கிறீர்கள். பாத்ரூம் மறுபடியும்.

சுத்தமாக வெளி வந்து போட்டிருக்கும் நைட் ட்ரஸ் போதுமா என்று பார்க்கிறீர்கள். போதும் என்றது மனம்.

தூசு மட்டுமே அழுக்கடையச் செய்திருந்த வொய்ட் கான்வாஸையும் அதனுள் ஒளிந்திருந்த வாங்கிய முதல் இரண்டு நாட்கள் மட்டுமே கற்பு கெட்டிருந்த வொய்ட் சாக்ஸையும் தொட்டுத் தடவி துடைத்து காலில் மாட்டி...கஷ்டப்பட்டு ஒரு மாதிரி செட் ஆனதும் ஒரு ஃப்ரெஷ்னஸை உணர்கிறீர்கள். செல்ஃபோனை எடுத்துக் கொள்ளலாமா வேண்டாமா என்று கொஞ்சம் குழம்பி எடுத்துக் கொள்கிறீர்கள்.

எல்லா ஸ்விட்ச்சையும் அணைத்து மெயின் கதவைத் திறந்து லாக் செய்கிறீர்கள். ஒரு நப்பாசையாக ஐ மிர்ரரில் உள்ளே பார்த்து குழம்பிய இருட்டாகத் தெரிய திருப்தியுறுகிறீர்கள்.

இரண்டு இரண்டு படிகளாகத் தாவி தரைத் தளத்திற்கு வருகிறீர்கள். செக்யூரிட்டி ஒரு மாதிரி ஆழ்நிலைத் தூக்க விழிப்பில் இருப்பதை உணர்ந்து, மெதுவாக கம்பிக் கதவைத் திறந்து வெளி செல்கிறீர்கள்.

புதிதாக இருக்கின்றது உலகம். தினம் பார்க்கும் அதே தெரு. அதே லைட் கம்பம். அதே போஸ்டர்கள். அதே வீடுகள். ஆனால் வித்தியாசங்கள். வானம் இருட்டாக இருக்கின்றது. அதிகாலை நிலவு இரவின் களைத்த நிலவை விட குளிராக இருக்கின்றது. நாய்கள் கைகளுக்குள் முகம் பதித்து ஒரு முறை எட்டிப் பார்த்து மீண்டும் சுருண்டு கொள்கின்றன.

எங்கோ பால்காரரின் மணி சத்தம், வாசல் தெளிக்கும் சத்தம். லேசாக குளிர் காதை ஊடுறுவுகின்றது. சோகையாக மஞ்சல் ஒளி வழிகின்றது.

ச்சே.. இவ்வளவு நாளும் இந்த அழகை மிஸ் செய்து விட்டோமே என்று நினைக்கிறீர்கள். இனிமே தினமும் இந்த நேரத்திற்கு வாக்கிங் வர வேண்டும் என்ற வைராக்கியம் பிறக்கின்றது.

நடக்கிறீர்கள். யாரும் இல்லாத தனிமையினாலோ என்னவோ கைகளைச் சுழற்றுகிறீர்கள். ப்டித்தமான பாடல் ஒன்றை மெல்ல மெல்ல முணுமுணுத்தபடி இலக்கில்லாமல் நடக்கிறீர்கள். மொபைலில் ப்ளேயரை உயிர்ப்பித்து ஓடச் செய்து நீங்கள் நடக்கிறீர்கள்.

ஸெகண்ட் க்ராஸ் முனையில் திரும்பியதும் நீங்கள் எதிர்பார்க்காத ஒன்று நடக்கின்றது.

தடார்.

விழப் பார்த்து சமாளிக்கிறீர்கள். உங்கள் மேல் மோதியவன் ஒரு முறை உங்களைப் பார்க்கிறான். அவன் முகம் தெரு விளக்கின் மஞ்சள் திரையில் பனிப் புகை நடுவே திருத்தமாக உங்கள் மனதில் பதிகின்றது.

குமரேசன். தேர்ட் க்ராஸின் பெரு வீடு ஒன்றில் வாசிக்கின்ற ஒரு பெரு மனிதரின் உதவியாள். நீங்கள் சில முறை அம்மனிதரோடு இவனை பார்த்த நினைவு வருகின்றது. ஆனால் இப்போது உங்கள் கவனத்தை கவர்ந்தது அவன் அணிந்திருந்த செக்கர் ஷர்ட்டின் சிவப்புத் தீற்றல்கள். ஹாட் ப்ரெஷ் வாசம் அடித்ததை உணர்கிறீர்கள்.

நெஞ்சுக்குள் திக்கென்கிறது. வயிற்றுக்குள் அட்ரீனலின் சரக்கென்று இறங்குகின்றது.

சில நொடிகள் தயங்கி நிற்கிறான். அவன் வலதுகை பிடித்திருந்த கத்தியை இறுக்குவதை பார்க்கிறீர்கள். உங்களுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. கத்திக் கூச்சல் இடலாமா என்று யோசிக்க நினைக்கையில், அவன் எதிர்த் திசையில் பறக்கிறான். நொடியில் சிக்ஸ்த் க்ராஸின் முனையில் திரும்பி மறைகிறான். சில நாய்கள் குரைக்கும் சத்தம் மட்டும் கேட்கின்றது.

வியர்வை ஊற்றாய் வழிவதை உணர்கிறீர்கள். மொபைலில் 'தாமரை மேலே நீர்த்துளி போல்...' மென்மையாக அபஸ்வரமாக ஒலிக்கிறது. இப்போது என்ன செய்வது?

கீழ்வானம் சிவக்கத் தொடங்குவதைப் பார்க்கிறீர்கள். சில வீடுகளின் ஜன்னல்களில் ஒளி பரவுவதும், சில காகங்கள் கரைவதும், சுவிட்சுகள் நிலை மாற்றப்படும் சத்தங்களும் ஒரே சமயத்தில் கேட்கின்றன.

விரைவாக உங்கள் அபார்ட்மெண்டுக்குத் திரும்புகிறீர்கள்.

திரும்பும் நேரம் வெறும் ஒரு நிமிடம் தான் என்றாலும் லட்சக்கணக்கான திசைகளுக்கு உங்கள் மனம் பறந்து வருகின்றது.

நல்லவேளை என்னைக் குத்தவில்லை! ஏன் அவன் ஷர்ட்டில் ரத்தம்? கொலை செய்திருப்பானா? யாரை? பெருமாள் சாரையா? ஏன்? சம்பளம் தரவில்லையா? சம்பளம் தராவிட்டால் யாராவது கொல்வார்களா? நமக்கு கூடத் தான் சாலரி பத்தாம் தேதி தான் பாஸாகின்றது. நான் என்ன கொல்கிறேனா? ச்செ.. என்ன இது எண்ணம்? போலிஸுக்கு சொல்ல வேண்டுமா? நாம் தான் சாட்சியா? இன்னிக்கு வா, நாளைக்கு வானு இழுத்தடிப்பாங்களே? எப்படி லீவ் போடறது? நான் பார்க்கவே இல்லை. நான் தூங்கிட்டு இருந்தேன். வேணாம். எனக்கு யாரையும் தெரியாது. நான் யாரையும் பார்க்கலை.

நான் பார்த்ததை யாராவது பார்த்திருப்பாங்களோ? ச்சீ.. இந்த தெருவில நாலரை மணிக்கு யாரும் எழுந்திருக்கறதே இல்லை. ச்சே.. இன்னிக்குனு பார்த்து தூக்கம் வராம போயிடுச்சே! எல்லாம் என் நேரம். எனக்குனு ஏன் இப்படி நடக்கணும்? சத்தமே போடாம போய் படுத்துற வேண்டியது தான். இப்படி ஒரு சம்பவம் நடந்ததாகவே நாம காட்டிக்க கூடாது.

உங்கள் க்ராஸின் முனையில் திரும்பி அபார்ட்மெண்ட்டைப் பார்க்க, அதிர்ச்சி.

செக்யூரிட்டி நன்றாக விழித்து பீடி வலித்துக் கொண்டிருப்பது தெள்ளெனத் தெரிகின்றது. இவன் என்ன அதுக்குள்ள முழிச்சுட்டான்? ச்சே. நம்மள பார்த்துட்டான்னா ஒரு சாட்சி மாதிரி ஆயிடுமே! சமாளிப்போம். அப்போது தான் நிகழ் உலகுக்கே நீங்கள் வருவதால் இன்னும் மொபைலில் 'தங்கத் தாமரை மகளே..'. எடுத்து நிறுத்துகிறீர்கள்.

இயல்பாக நடப்பதாக குழறலாய் நடந்து,

"என்ன சார் வாக்கிங் போய்ட்டு வர்றீங்களா..? நீங்க போகும் போதே கவனிச்சேன். டிஸ்டர்ப் பண்ண வேணாம்னு தான் கூப்பிடல. இந்த முத்து தூக்கத்தில இருந்தாலும் காது தொறந்தே தான் சார் இருக்கும்..?" பீடியை கீழே போட்டு மிச்சப் புகை வசனம்.

என்ன இவ்வளவு வசனம் பேசறான். சமாளிக்கணும்.

"இல்ல முத்து. வாக்கிங் போகல. கிளம்பினேன். பாதி வழில வயிறு ஒரு மாதிரி ஆகிடுச்சு. அதான் திரும்பிட்டேன்." லேசாக வயிற்றை ஒரு தடவு. அப்படியே க்ரில் கேட்டைத் தள்ளிக் கொண்டு உள்ளே போக எத்தனிக்கிறீர்கள்.

"வாக்கிங் போகலங்கறீங்க. இப்படி வேர்த்திருக்கு...?"

"அது வந்து..!"

"கண்டின்யூவா போனா தான் நல்லா இருக்கும். திடீர்னு ஒரு நாள் போனா இப்படித் தான் ரெண்டு தெரு தாண்டறதுக்குள்ள வேர்த்து ஊத்தும். ஆமா எது வரைக்கும் சார் போனீங்க..?"

பாதி படிகளில் ஏறி விட்ட நீங்கள் கடுப்பாகிறீர்கள். இவன் என்னடா சி.பி.ஐ. மாதிரி இத்தனை கேள்வி கேக்கறான்? கோபப்படாத. அப்புறம் சிக்கல்ல இவனே மாட்டி விட்டுடுவான். சிரி. சமாளி.

"என்ன முத்து..? உன்னோட எல்லா கேள்விக்கும் இப்பயே பதில் சொல்லணுமா? எனக்கே வயிறு ஒரு மாதிரி இருக்குன்னு சொல்றேன்ல. அப்புறம்..."

"சரி சார்.. போங்க..போங்க"

முதல் மாடி வரை மெதுவாக ஏறி, பிறகு விரைவாக படிகளைத் தாவுகிறீர்கள். அபார்ட்மெண்டின் மரங்களின் பறவைகளின் பேரிரைச்சல் உங்கள் மனதிலும்!

லாக்கைத் திறந்து ஷூ , ஷாக்ஸை எறிந்து மொபைலை துறந்து படுக்கையில் விழுகிறீர்கள்.

உங்கள் இதயத் துடிப்பு தெளிவாகக் கேட்கின்றது.

இல்லை. நான் எதையும் பார்க்கவில்லை. நான் இன்று வெளியே போகவே இல்லை. இன்னிக்கு மட்டும் வாக்கிங் போகணும்னு தோணுச்சு பாரு...! எல்லாம் என் நேரம். காலையில வாட்ச்மேன் கேட்டான்னா எய்ட்த் க்ராஸ் வரைக்கும் போனேன்னு சொல்லிட வேண்டியது தான்.

பெட் ஷீட்டை இழுத்துப் போர்த்திக் கொள்கிறீர்கள்.

"மிஸ்டர் குணசேகரன்! டிஃபென்ஸ் தரப்பு குறுக்கு விசாரணையைத் தொடங்கலாம்!"

"தேங்க் யூ மை லார்ட்!" குணசேகரன் கவுன் கறுப்பு கலையாமல் இருந்தது. அவரது நேர்மை கற்பு எப்போதோ கலைந்து விட்டிருந்தது.

கூண்டில் கோழிக் குஞ்சைப் போல் நடுங்கிக் கொண்டு நின்றிருந்த பெண்மணியைக் கழுகுக் கண்ணால் பார்த்தார்.

"ஏம்மா.. உங்க பேரென்ன..?"

"பொன்னம்மாங்க..!"

"கொலை செய்யப்பட்ட பெருமாளுக்கும் உங்களுக்கும் என்ன தொடர்பு..?"

"ஐயா..!"

"ஐ அப்ஜெக்ட் திஸ் யுவர் ஆனர்..! நண்பர் சாட்சியை தவறான கண்ணோட்டத்தில் நகர்த்துகிறார்..!" பப்ளிக் ப்ராஸிக்யூடர்.

"மை லார்டு! நான் அவருக்கு மர்டர் செய்யப்பட்டவருடன் எந்த விதத்தில் தொடர்பு என்று தெரிந்து கொள்ள கேட்கிறேன்! இதில் தவறு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை!"

"அப்ஜக்ஷன் ஓவர் ரூல்ட்!"

"தேங்க் யூ மை லார்டு! சொல்லுங்கம்மா!"

"ஐயா..! நான் ஐயா வீட்டுல வேலைக்காரியா இருக்கறேங்க!"

"எவ்ளோ வருஷமா?"

"ஆறு வருஷமாங்க..!"

"சரி! சம்பவம் நடந்த அன்னிக்கு என்ன பார்த்தீங்க..?"

"வழக்கமா காலையில அஞ்சு மணிக்கு ஐயா விட்டுக்குப் போவேங்க. அன்னிக்கு போனப்போ மெய்ன் கதவு தொறந்தே இருந்துச்சுங்க. உள்ள போய் பார்த்தா ஐயா ரூமும் தெறந்தே இருந்துச்சுங்க. வழக்கமா அப்படி இருக்காது. அம்மாவும் பசங்களும் குன்னூருக்கு அவங்க அப்பா வீட்டுக்கு போயிருந்தாங்க. செக்யூரிட்டியும் அப்ப இல்ல. அவர் ரூமுக்கு போய் பார்த்தா, ஐயா அப்படியே சரிஞ்சு விழுந்திருக்காரு. வயிறெல்லாம் ரத்தம். அப்படியே கத்தி, கீழ விழுந்துட்டேங்க. அப்புறம் அவர் ஆபிஸு கொஞ்சம் பேரு நம்பருக்கு போன் பண்ணி சொன்னேங்க. அவங்க வர்றப்ப போலிஸோட வந்தாங்க..!"

"சரி! அக்யூஸ்ட் குமரேசனை உங்களுக்கு தெரியுமா..?"

"தெரியுங்க! ஐயாவோட பி.ஏ.!"

"இவரு நடத்தைல எப்படி..? அதாவது உங்க ஐயாவுக்கும் இவருக்கும் உறவுகள் எந்த மாதிரி இருந்துச்சு? சண்டைகள் எல்லாம் போட்டிருக்காங்களா..?"

"அதெல்லாம் தெரியாதுங்க. ஆனா அப்பப்போ ஐயா இவரை வெளிய போன்னு ஆத்திரமா கத்தறதும், உடனே இவர் ஐயா கால்ல விழுந்து கெஞ்சறதும் பாத்திருக்கேங்க. அதுக்கு மேலே வெலாவரியா எதுவும் நான் பாத்ததில்லைங்க. என் வேல சமயக்கட்டோட முடிஞ்சுதுங்க. ஹாலுக்கு வந்து துடைக்கறப்ப சில சமயம் சண்டைகள் எல்லாம் காதுல விழுந்திருக்குங்க..!"

"பொய்..! நீங்கள் சொல்வது பொய்! உண்மையில் பெருமாள் வீட்டில் இருந்து அவ்வப்போது பணம் சுருட்டி விட்டு அது அவருக்குத் தெரிய வரும் போது அவரைத் தீர்த்துக் கட்டி இருக்கிறீர்கள். மை லார்டு! இந்தப் பொன்னம்மா என்பவரது வங்கிக் கணக்கில் புதிதாக ரூபாய் ஒரு லட்சம் டெபாஸிட் செய்யப்பட்டு உள்ளது, ஒரு பினாமி பெயரில்! அதற்கான வங்கி சலான் இதோ! (குமாஸ்தாவிடம் கொடுக்கிறார்.) இனி அடுத்து இன்ஸ்பெக்டர் ரவியை சில கேள்விகள் கேட்க விரும்புகிறேன்..."

"ஐயா.. ! இது எப்படி வந்துச்சுனே எனக்குத் தெரியாதுங்க..! நான் அப்பாவிங்க..!" பொன்னம்மா சாட்சிக் கூண்டில் இருந்து வெளியேற்றப்படுகிறார்.

"எஸ்! ப்ரொஸீட்..!"

"ரவி! நீங்க எப்ப சம்பவம் நடந்த இடத்துக்கு போனீங்க..?"

"அன்னிக்கு காலையில அஞ்சரைக்கு போனேன். எனக்கு தகவல் அஞ்சு பதினஞ்சுக்கு வந்துச்சு. கொலை செய்யப்பட்டவரோட ஆபீஸ்ல வொர்க் பண்ற ராகவன் தான் ஃபோன் பண்ணி சொன்னார்..."

"ஸ்பாட்ல என்ன பாத்தீங்க..?"

"பாடி பெட்ல இருந்து பாதி கீழ விழுந்திருந்துச்சு. கத்திக்குத்தை சஸ்பெக்ட் பண்ற மாதிரி காயங்கள். ரூம்ல யாரும் இல்லை. பொன்னம்மா மட்டும் வெளிய உக்காந்து அழுதுக்கிட்டு இருந்தாங்க. நான் போன நேரம் தான் செக்யூரிட்டி வந்தான். பெட்டிக் கடை திறந்திருக்கும்னு பீடி வாங்கப் போனேன்னு சொன்னான். டிபார்ட்மெண்ட்டுக்கு போன் பண்ணி சொல்லிட்டு, ஆம்புலன்ஸுக்கும் ஃபிங்கர் ப்ரிண்ட்ஸ் பீபிளுக்கும் சொல்லி விட்டேன். அவரொட ஒய்ஃப் பேமிலிக்கும் போன்ல சொன்னோம். ரூம்ல யாரையும் அலோ பண்ணலை. சீனை டிஸ்டர்ப் பண்ற எந்த செயலையும் அனுமதிக்கலை.."

"சரி! ப்ரிண்ட்ஸ்லயும் அடாப்ஸிலயும் என்ன ரிஸல்ட் வந்தது..?"

"அதை எல்லாம் கோர்ட்ல சப்மிட் பண்ணி இருக்கோம் சார்..!"

"பரவாயில்ல..! இன்னொரு முறை சொல்லுங்க. தப்பில்ல."

"ஃபிங்கர் ப்ரிண்ட்ஸ் படி, அக்யூஸ்ட் குமரேசனோட ஃபிங்கர் ப்ரிண்ட்ஸ் நிறைய இடத்தில இருந்திருக்கு..."

"நிறைய இடம்னா..?"

"அவர் பெட்டை சுற்றி.."

"வேற யாரோட ஃபிங்கர் ப்ரிண்ட்ஸாவது இருந்துச்சா..?"

"எஸ். பொன்னம்மாவோடது.."

"ப்ளீஸ் நோட் திஸ் பாய்ண்ட் மை லார்ட்..!"

"தென் அடாப்ஸி ரிப்போர்ட்..?"

"சில போராட்டங்களுக்குப் பிறகு அவர் கத்தியால் குத்தப்பட்டு இருக்கலாம்னு பி.எம் ரிப்போர்ட்.."

"கத்தின்னா.. பல வெரைட்டி இருக்கு இல்லையா..?"

"எஸ்..!"

"மை கொஸ்டீன் இஸ், இந்த கொலைக்கு யூஸ் பண்ணப்பட்ட கத்தியை சமையலுக்கும் யூஸ் பண்ண முடியும் இல்லையா..?"

"பண்ண..."

"முடியும். பண்ண முடியும். பி.எம். ரிப்போர்ட்ல சஸ்பெக்டட் டூல்ஸ்ல போட்டிருக்கு மிஸ்டர் ரவி..!"

"அப்படின்னா இருக்கலாம் சார்..!"

"ப்ளீஸ், இதையும் நோட் பண்ணுங்க மை லார்ட்..! ஓ.கே. அப்புறம் எந்த அடிப்படையில் மிஸ்டர் குமரேசனை கன்விக்ட் பண்ணினீங்க..?"

"அவரோட ஃபிங்கர் ப்ரிண்ட்ஸ் பெட்ல இருந்ததாலும், அவருக்கும் பெருமாள் சாருக்கும் இடையே பேட் ரிலேஷன்ஸ் இருந்ததுனு விசாரணையில் தெரிந்து கொண்டதாலும்..!"

"இது சரியான ரீஸன் கிடையாது மிஸ்டர் ரவி! ஒரு பெரிய மனுஷன்னா நாலு நண்பர்கள் இருந்தா நாப்பது எதிரிகள் இருக்கத் தான் செய்வாங்க. நீங்க எல்லாரையும் சஸ்பெக்ட் பண்ணி இருக்கணும். பிங்கர் ப்ரிண்ட்ஸ் படி பார்த்தா, பொன்னம்மாவோட பிங்கர் ப்ரிண்ட்ஸையும் நீங்க கணக்கில் எடுத்திருக்கணும்..!"

"சார்! அதெல்லாம் அவங்க ரூமை க்ளீன் பண்ணும் போது பதிவானவை..!"

"அப்படின்னு நீங்க சொல்லக் கூடாது இன்ஸ்பெக்டர்! அதையும் நீங்க சந்தேக கண் கொண்டு தான் பார்த்திருக்கணும்..! நீங்க போகலாம். அடுத்ததா செக்யூரிட்டி மாணிக்கத்தை விசாரிக்க அனுமதி கோருகிறேன்!"

"எஸ் ப்ரொஸீட்..!"

"மிஸ்டர் மாணிக்கம்..! நீங்க எவ்ளோ வருஷமா பெருமாள் சார்கிட்ட ட்யூட்டில இருக்கீங்க..?"

"சார்! நான் வந்து கன்டின்யூஸா இருக்கறது கிடையாது. எங்க கம்பெனியில ரொடேஷன்ல விடுவாங்க. த்ரீ மந்த்ஸ்க்கு ஒருத்தரா மாறிக்கிட்டே இருப்போம். நான் இவர்கிட்ட ரெண்டு மாசமா இருந்தேன். என் நேரம். நான் இருக்கும் போது தான் இப்படி ஆகணுமா..?"

"ஸு..! கேக்கறதுக்கு மட்டும் பதில் சொன்னா போதும். அவர் எப்படி? இந்த பொன்னம்மா எப்படி? அவர் பேமிலி எப்படி?"

"ரொம்ப நல்லவர் சார்! ரொம்ப மரியாதை எல்லாம் எதிர்பார்க்க மாட்டாரு. இந்த பொன்னம்மாவும் சரி, சாரோட பேமிலியும் சரி ரொம்ப நல்லா தான் பழகுவாங்க..!"

"சரி! சம்பவம் நடந்த அன்னிக்கு ஏன் அந்த டைம் பார்த்து காணாம போனீங்க..? உங்களுக்கு இப்படி நடக்கப் போறது முன்னாடி தெரியுமா..?"

"சார்..! அப்படி எல்லாம் கிடையாதுங்க..! வழக்கமா பீடி வாங்க அந்த நேரம் ரெண்டு தெரு தள்ளி இருக்கற கடைக்கு போய்ட்டு வருவேங்க. அதே மாதிரி தான் அன்னிக்கும் போனேங்க..!"

"சரி! மெய்ன் கேட்டோட சாவி யார் கிட்ட எல்லாம் இருக்கும்?"

"நாலு பேர்கிட்டங்க. ஐயாகிட்ட, அம்மா கிட்ட, என்கிட்ட அப்புறம் பொன்னம்மா கிட்ட..! ஆனா சாவி தயாரிக்கறது ஒண்ணும் பெரிய.."

"கேட்டதுக்கு மட்டும் பதில்! எப்பவுமே நீ இருக்கும் போது தான் பொன்னம்மா வருவாங்களா..?"

"ஆமாங்க..!"

"அன்னிக்கு?"

"அன்னிக்கு நான் வரும் போது கதவு தொறந்து இருந்துச்சுங்க. கலவரமா உள்ள போய் பார்த்தா பொன்னம்மா அளுதுகிட்டு இருக்கு. ஐயா ரூம் திறந்து போட்டிருக்கு..!"

"சரி, நீங்க போகலாம்..! நெக்ஸ்ட் மிஸ்டர் குமரேசனை விசாரணை செய்ய அனுமதிக்குமாறு கனம் கோர்ட்டாரைத் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்!"

"எஸ் ப்ரொஸீட்!"

"மிஸ்டர் குமரேசன்! நீங்க எவ்வளவு நாளா பெருமாள் சார்கிட்ட அசிஸ்டெண்ட்டா இருக்கீங்க?"

"அஞ்சு வருஷமா..?"

"உங்களுக்கும் சாருக்கும் இடையில தகராறுகள் இருந்ததா பொன்னம்மா சொல்றாங்களே..?"

"அது வந்துங்க... சார் கொஞ்சம் இல்லீகலா பணம் பே பண்ண சொல்வாரு. அது எனக்குப் பிடிக்காது. அது வேண்டாம்பேன். அப்ப கோபமாய் கத்துவாரு..!"

"இல்லீகல்னா..?"

"வேண்டாங்க..! அவர் ஃபேமிலி எல்லாம் இருக்காங்க..!"

"கமான் டெல்! கோர்ட்டுக்கு வந்ததுக்கு அப்புறம் எல்லாமே பேசியாகணும்..!"

"பெங்களூர்ல ஒரு பொண்ணுங்க! பத்மானு பேரு! அப்பப்ப பிஸினஸ் விசிட் போகும் போது எப்படியோ பழக்கமாய்டுச்சுங்க இவருக்கு! அதுக்கு பணம் குடுன்னு சொல்வாருங்க. அதெல்லாம் கணக்குல வரக்கூடதும்பாருங்க. நான் வேண்டாம்பேன். அப்படி தகராறு வருங்க..!"

"சரி..! சம்பவம் நடந்த சமயத்துல நீங்க எங்க இருந்தீங்க..?"

"தேனாம்பேட்டைல என் ஃப்ரெண்டு சரவணன் வீட்ல இருந்தேங்க..!"

"மை லார்டு! அந்த சரவணன் எழுத்து பூர்வமான சாட்சியத்தில் இதை உறுதிபடுத்தி இருக்கிறார். அது கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. அதையும் தவிர அந்த தெரு மளிகைக் கடைக்காரரின் சாட்சியம், காலையில் பால் ஊற்றிய பால்காரரிடம் குமரேசனே வந்து பால் வாங்கியதற்கான ருசு எல்லாம் ஏற்கனவே கொடுக்கப்பட்டு உள்ளது..!"

"தட்ஸ் ஆல் யுவர் ஆனர்..!"

"ப்ராஸிக்யூஷன் தரப்பில் சம்மரி கொடுக்கலாம்!"

"மை லார்டு! கொலை செய்யப்பட்ட பெருமாள் சாருக்கும் அவரது பி.ஏ.வான குமரேசனுக்கும் சின்ன தகராறுகள் இருந்திருக்கின்றன. அந்த அறையில் அவரது கைரேகைகள் இருந்தன. வலிமையாக சண்டை போடப்பட்டுள்ளது அடாப்ஸியில் தெரிகின்றது. கொலை செய்யப்பட்ட நேரத்தில் குமரேசன் எங்கு இருந்தார் என்பதற்கு வலுவான சாட்சியங்கள் இல்லை. மேலும் வேறு எவருக்கும் பெருமாள் சாரை கொலை செய்ய வலுவான காரணங்கள் இல்லை என்பதும் குமரேசன் சில திருட்டுகளை அலுவலகத்தில் செய்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. எனவே காரணங்கள் அனைத்தும் அவருக்கு எதிராகவே உள்ளதால் அவருக்கு அதிகபட்ச தண்டனை அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்!"

"டிஃபென்ஸ் தரப்பு தமது சம்மரி கொடுக்கலாம்!"

"மை லார்டு! ஃபிங்கர் ப்ரிண்ட்ஸை பொறுத்தவரை பொன்னம்மாளின் ஃபிங்கர் ப்ரிண்ட்ஸும் அறையில் இருக்கின்றன. கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட கத்தி சமையலுக்கும் பயன்படுத்தப்படலாம் என்று அடாப்ஸி ரிப்போர்ட் கூறுகிறது. குமரேசன் மிகச் சரியாக கொலை செய்யப்பட்ட சமயத்தில் எங்கிருந்தார் எனில் அவர் அவரது நண்பர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். இப்படி ஒரு சம்பவம் நடக்கும் என்று முன்பே தெரிந்திருந்தால் அந்த சமயத்தில் ஒரு சாட்சியம் தயார் பண்ணி இருக்கலாம். அது சாத்தியம் அற்றது. கொலையை முதலில் பார்த்த ஆசாமி பொன்னம்மாள் தான். அவருடைய பேங்க் அக்கவுண்டில் புதிதாக பணம் அதுவும் ஒரு லட்சம் எப்படி வந்தது என்பதை போலீஸ் விசாரிக்க வேண்டும். கோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கொலை செய்ய பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் கத்தியில் பொன்னம்மாளின் கைரேகை உள்ளது. எனவே என் கட்சிக்காரர் குமரேசன் நிரபராதி என்று தீர்ப்பளித்து அவருக்கு ஜாமீன் கொடுத்து இந்த வழக்கில் இருந்து விடுவிக்கவும், பொன்னம்மாளின் மேல் விசாரணையை கடுமையாக்கவும் கனம் கோர்ட்டார் உத்தரவிட வேண்டும் என தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்."

கோர்ட்டில் சில நிமிடங்கள் அமைதி.

"இரு தரப்பு வாதங்களை கூர்மையாக கேட்டதில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் மிஸ்டர் குமரேசன் குற்றமற்றவர் என்பது விசாரிக்கப்பட்ட சாட்சியங்களின் கூற்றுகளில் இருந்து தெளிவாகி அவருக்கு ஜாமீன் வழங்கவும், பொன்னம்மாளின் மேல் விசாரணையை தொடரவும் இக்கோர்ட்டு காவல் துறைக்கு உத்தரவிடுகிறது. தி கோர்ட் இஸ் அட்ஜர்ண்ட்..!"

"ன்ன குமரேசன்! ஜாமீன்ல போறீங்க! கன்கிராட்ஸ்! தேசநாயகத்துகூட உடனே சேர்ந்துக்காதீங்க. அது நமக்கு எதிராகிடும். கொஞ்சம் கேஸ் ஆறட்டும். இல்லாட்டி அவர் பணம் கொடுத்து உங்களை யூஸ் பண்ணி பெருமாள் சாரை காலி பண்ணினது தெரிய வாய்ப்பாகிடும். டேக் கேர். என்னோட அக்கவுண்ட்ல செக் டெபாஸிட் பண்ண சொல்லிடுங்க. பொன்னம்மாவுக்கு பினாமி பேர்ல போட்டு சிக்க வெச்ச மாதிரி என்னையும் மாட்டி விட்டுடாதீங்க. உங்க பேர்ல போட்டுடுங்க. ஹாஃப். ஹாஃபா!"

"சார்! நீங்க தெய்வம் சார்..! அவங்க எல்லாரையும் அப்படியே உடைச்சிட்டீங்களே!"

"அப்படி இல்லய்யா! அவங்க கொண்டு வந்த சாட்சி எல்லாம் அப்படி சொத்தை..! ஒரே ஒரு சாட்சி! உன்னைய அந்த டைம்ல அங்க பார்த்ததா வந்து சொன்னா போதும். கேஸ் காலி. நாம முடிஞ்சோம். பட் அந்த மாதிரி யாரையும் அவங்களால ப்ரொட்யூஸ் பண்ண முடியாததுனால நீ தப்பிச்சு இருக்க..!"

"சரி, போய்ட்டு வரேன் சார்..!"

"போ! கோர்ட்டுக்கும் போலிஸ் ஸ்டேஷனுக்கும் போய்ட்டு வரேன்னு சொல்லக் கூடாது..!"

..! சாரி சார்...!

மன்னிச்சுடுங்க. கோர்ட்ல ஆர்க்யூமெண்ட்ஸ் சுவாரஸ்யத்துல உங்களை மறந்துட்டேன்.

ஆமா.. நீங்க குமரேசனை அந்த டைம்ல பாத்தீங்கள்ல சார்! என்னை மன்னிச்சுடுங்க. உங்களை சாட்சியா பப்ளிக் ப்ராஸிக்யூடர்கிட்ட இண்ட்ரடியூஸ் பண்ண மறந்துட்டேன். இட்ஸ் மை ஃபால்ட்.

அந்த தப்புக்கு ப்ராயச்சித்தம் பண்ணிடறேன். என்கிட்ட ஸேப்டிக்கு லைசென்ஸ் போட்டு வாங்கி வெச்ச .375 மேக்னம் ரிவால்வர் இருக்கு.

அதோ.. குமரேசன் போறான். கீழ்க்குரலில் சீட்டி அடிச்சுட்டு, அநியாயமா ஒரு உயிரைக் கொன்னுட்டு, ஓர் அப்பாவியை மாட்டி விட்டுட்டு, ஜாலியா போறான்.

சார்.. நீங்க நியாவான் தான? ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாதுன்னு நம்பறவர் தான? நல்லவர் தான?

துப்பாக்கியை தர்றேன். அவனை சுட்டுக் கொல்கிறீர்களா?

என்ன சொல்றீங்க..?

(தேன் சிறில் அலெக்ஸ் அறிவியல் சிறுகதை போட்டிக்காக.)

28 comments:

யோசிப்பவர் said...

வசந்த் கதையும், நடையும் அருமை. ஆனால் அறிவியல் புனைக் கதைக்கும், இதற்கும் என்ன சம்பந்தம்?

Anonymous said...

கதை அருமை :) சுவாரஸ்யம், பரபரப்பு. அடுத்த வாரமே ஒரு சிறுகதைத் தொகுப்பு வெளியிடலாம் போல :)

பைதவே...

"இதையும் நோட் பண்ணுங்க மை லார்ட்" இப்படியெல்லாம் கோர்ட்ல சொல்லக் கூடாது தெரியுமா :D

இரா. வசந்த குமார். said...

அன்பு யோசிப்பவர்...

நன்றிகள் தங்கள் வருகைக்கும், வாழ்த்துக்கும், கேள்விக்கும்! ;-)

இந்தக் கதையைப் பொறுத்தவரை படிக்கின்ற உங்களின் பங்கு இரண்டு இடத்தில் நிகழ்கிறது.

ஒன்று கதையைப் படிக்கின்ற வாசகனாக உங்களின் பங்கு. இரண்டு கதைக்குள் ஒரு கேரக்டராக உங்களின் பங்கு.

முதல் பொறுப்பில் உங்களை ஈடுபடுத்திக் கொள்வது உங்கள் கையில் இருக்கின்றது. ஆனால் இரண்டாம் இடத்தில் உங்களைக் கொண்டு வருவதும், தள்ளி வைப்பதும் கதாசிரியரின் கையில் இருக்கின்றது.

படிக்கின்ற உங்களுக்கு யார் கொலையாளி என்று தெரியும். ஆனால் உங்களை கதாசிரியர் கோர்ட்டில் வழக்கு நடைபெறுகின்ற மிக முக்கியமான சாட்சி தேவைப்படுகின்ற கட்டத்தில் கொண்டு வர 'மறந்து விடுகிறார்'.

அதனால் நிரபராதி சிக்கிக் கொள்ளவும் குற்றவாளி தப்பிக்கவும் ஏதுவாகிப் போகின்றது.

கோர்ட்டில் நடக்கின்ற விசாரணையை உங்களால் பார்க்க முடியும். ஆனால் உங்களால் பங்கு பெற முடியாது.

ஏனெனில் அங்கே உங்களை கண்ட்ரோல் செய்வது கதாசிரியனே!

கேஸ் முடிந்த பிறகு உங்களை மீண்டும் கதைக்குள் கொண்டு வருகிறார். அப்போது நிலைமை கை மீறி இருகின்றது.

உண்மை தெரிந்தும் உங்களால் கோர்ட்டில் வந்து சாட்சி சொல்ல முடியாத இக்கட்டில் சிக்க வைக்கப்படுகிறீர்கள். கதாசிரியர் செய்த தவறுக்கு வருந்தி, உங்கள் கோபத்தை குற்றவாளியைக் கொல்ல திருப்புமாறு கதாசிரியர் கேட்கிறார்.

இதே நிலையை ரியல் லைஃபில் கொண்டு வாருங்கள். 'அந்த ஒரு செகண்டில் எல்லாமே கை மீறிப்போச்சு'. அந்த ஒரு செகண்டில் உங்களை நீங்கள் அத்யாவசியம் தேவைப்படுகின்ற சீனுக்குள் கொண்டு வராத 'அந்த கதாசிரியனை' நினைத்துப் பாருங்கள். ;-)

முதலில் இந்த கதைக்கு 'கையறு நிலை'னு தான் பேர் வைக்கலாம் என்று இருந்தேன்.

***

இதை சம்பிரதாயக் கதை சொல்லும் முறையிலிருந்து மாறுபட்டு சொல்லி இருக்கிறேன் என்று நினைக்கிறேன்.

வாத்தியார் சொன்னது ::

http://desikann.blogspot.com/2004_10_29_desikann_archive.html
-ல்,

கேள்வி :
1. விஞ்ஞானச் சிறுகதை என்பது என்ன ? அதை எழுத எதாவது விதி இருக்கிறதா ?
நீங்கள் எழுதிய 'முடிவு' என்ற சிறுகதையை விஞ்ஞானச் சிறுகதை என்று வகைப்படுத்தியது எந்த அடிப்படையில் என்பதை கொஞ்சம் சிம்பிளாக விளக்குங்களேன் ?
"epistolary literary technique"' (different style of writing) ' சார்ந்திருப்பதால் முடிவு ஒரு sci-fi கதை என்கிறீர்களா?

பதில்:
விஞ்ஞானச் சிறுகதை என்பது என்ன என்பதைப் பற்றி பக்கம் பக்கமாக எனது தொகுதியின் முன்னுரையில் எழுதியுள்ளேன். அதைக் கொஞ்சம் படித்துப்பாருங்கள். இல்லை net-ல் தேடிப்பாருங்கள். நிறைய விளக்கம் கிடைக்கும். ' முடிவு' என்கிற கதை முழுவதும் நானே எழுதியது. அதன் வடிவமைப்பில் முன்று பேர் எழுதிய கடிதங்கள் என்பதை நம்ப வைக்க செய்த தந்திரங்கள் ஒரு விஞ்ஞானக் கதைக்குரியது. இந்தக் கதையை பத்திரிகையில் வெளிவந்த வடிவத்தில் நீங்கள் பார்ககவேண்டும். சம்பிரதாயக் கதை சொல்லும் முறையிலிருந்து மாறுபட்ட எந்தக் கதையும் விஞ்ஞானக் கதையின் நவீன அறுதியில் சேரும். கதைமாந்தரே இல்லாத ஒரு விஞ்ஞானக்கதை கூட இருக்கிறது. நடுக்கடலில் ஒரு காலியான படகில் நடைபெறுவது!
(பி.கு: சமயம் கிடைக்கும் போது, குங்குமத்தில் வந்த 'முடிவு' வி. கதையை ஸ்கேன் செய்து போடுகிறேன் - தேசிகன்)

***

கதைகளை இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்ற விழிப்புணர்வை உங்கள் கேள்வி ஏற்படுத்தி உள்ளது. அதற்கு ஒரு தனி தேங்க்ஸுங்கோ!!

***

அன்பு xavier...

கதை ஃப்ளோவில் ஸ்பீடாக போகும் போது இந்த மாதிரி வந்து விட்டது. உண்மையில் இப்போதெல்லாம் 'மை லார்டு' என்பதே சொல்லப்படக் கூடாது என்று வந்து விட்டதாக , கதை எழுதிக் கொண்டிருக்கும் போதே நினைவுக்கு வந்தது. ஆனா ஸ்டோரி ஃப்ளோவில கை வெச்சா கதைக்கு கோபம் வந்திடும்(?)னு டிஸ்டர்ப் பண்ணலைங்க...! ;-)

உங்க வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிங்க..! தொகுப்பெல்லாம் நெம்ப கஷ்டமுங்க...!

இரா. வசந்த குமார். said...

மன்னிக்கவும். வாத்தியாரைத் தொடர்பு கொள்ளும் லிங்க் பாதியில் கட்டாகி இருந்தது. ;-(

http://desikann.blogspot.com/2004_10_29_desikann_archive.html

இரா. வசந்த குமார். said...

மறுபடியும் சொதப்பல். இப்ப இதை க்ளிக்.

சிறில் அலெக்ஸ் said...

மறுபடியும் கதை அருமை.. ஆனா அறிவியல் மிஸ்ஸிங். வாத்தியாரின் விளக்கத்துக்கு விளக்கம் தேவை என்றே படுகிறது.

இரா. வசந்த குமார். said...

அன்பு சிறில் அலெக்ஸ்...

மிக்க நன்றிகள் தங்கள் வாழ்த்துக்கு...!

/*
வாத்தியாரின் விளக்கத்துக்கு விளக்கம் தேவை என்றே படுகிறது.
*/

யாரிடம் கேட்க...? அடுத்த வாத்தியார் ஆக வேண்டும் என்று அனலிட்ட புழுவாய்த் துடிப்பவர்களிடமா...?

வெண்பூ said...

மனமார்ந்த வாழ்த்துக்கள் வசந்த். அறிவியல் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றதற்காக.

இரா. வசந்த குமார். said...

அன்பு வெண்பூ...

மிக்க நன்றிகள் தங்கள் வாழ்த்துகளுக்கு..!!

Naresh said...

இப்பதான் கதையைப் படித்தேன் . Super.. சிறில் சொல்வதுபோல் "வாத்தியாரின் விளக்கத்துக்கு விளக்கம் தேவை என்றே படுகிறது" .. ஜெயமோகன் சாரின் selection process யையும் படித்தேன்.. முடிவுகள் சரியே..

Anonymous said...

வாழ்த்துக்கள் தல !!! முதல் பரிசு வாங்கியமைக்கு !

இரா. வசந்த குமார். said...

நன்றி நரேஷ்...!!

அன்பு சேவியர்...

மிக்க நன்றிகள் தங்கள் வாழ்த்துக்கு! உங்களுக்கும் வாழ்த்துக்கள்!

Sridhar V said...

வசந்த்,

பரிசு பெற்றதற்கு வாழ்த்துகள்.

இன்னமும் ஒரு திருப்பத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்க முடிந்துவிட்டது போல ஒரு உணர்வு :-) ஒருவேளை அதைத்தான் உண்டாக்க நினைத்தீர்களோ?

போட்டியின் போது அதிக கதைகள் எழுதியவர் நீங்கள்தான். தொடர்ந்து புனைவுகள் மட்டுமின்றி அனுபவங்க, வெண்பாக்கள் என்று அருமையாக எழுதுகிறீர்கள். வாழ்த்துகள் பல

Anonymous said...

This story deserves the first place.
Congrats Vasanth! :-)

வெட்டிப்பயல் said...

வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள் தல :)

இரா. வசந்த குமார். said...

அன்பு ஸ்ரீதர்...

மிக்க நன்றிகள் தங்கள் வாழ்த்துகளுக்கு!

அப்படி எல்லாம் எதுவும் திங்க் பண்ணி எழுதலீங்க! கதை அப்படியே ஆரம்பிச்சு அதுவா முடிஞ்சிடுச்சு! நாம என்ன பண்றது...?

***

Dear Sundar...

Great for your wishes..!!!

***

அன்பு வெட்டிஜி...

மிக்க நன்றிகள் தங்கள் வாழ்த்துக்கு...!!

நிலாரசிகன் said...

வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள் வசந்த்! :)

இரா. வசந்த குமார். said...

அன்பு நிலாரசிகன்...

மிக்க நன்றிகள் தங்கள் வாழ்த்துகளுக்கு...!!!

Wandering Dervish said...

வசந்த்,
மனோதத்துவம் - இதையும் அறிவியலின் ஒரு பகுதியாக எடுத்து கொண்டால் இது அருமையான அறிவியல் புனை கதை

இல்லையேல் நல்ல அருமையா க்ரைம் கதை

வாத்தியாரின் முழு சாயல் இல்லாமல் ஒரு க்ரைம் அறிவியல் புனை கதை எழுதுடா. என் வேண்டுகோள் .

வாழ்த்துக்கள் வசந்த் .

இரா. வசந்த குமார். said...

அன்பு நாடோடி...

மிக்க நன்றிகள் வந்ததற்கும், வாழ்த்தியதற்கும்!

/*
வாத்தியாரின் முழு சாயல் இல்லாமல் ஒரு க்ரைம் அறிவியல் புனை கதை எழுதுடா. என் வேண்டுகோள் .
*/

கண்டிப்பாக முயல்கிறேன்.

Venkat Ramanan said...

என்னருமை நண்பனே! நீ எழுதிய கதை படித்து யாம் புளகாங்கிதம் அடைந்தோம்! வாழ்த்துக்கள். மேலும் மேலும் பல நற்கதைகள் எழுதி வெற்றி பெற என் நல்வாழ்த்துக்கள்!!!

இரா. வசந்த குமார். said...

அன்பு வெங்கி...

மிகவும் நன்றி நண்ப...! உனது வாழ்த்துக்கள் கொண்டு மேன்மேலும் சாதனைகள் புரிய விழைகிறேன். நன்றி...!

Saro said...

It is so nice to read vasanth. Will look at your other blogs shortly. Can you tell me how to type in tamil?

Saro

இரா. வசந்த குமார். said...

ரொம்ப சந்தோஷம் நீயும் என் ப்ளாக்கைப் பார்க்கறது! தேங்க்ஸ் டா..!!

இந்த வெப் சைட்டை யூஸ் பண்ணலாம்.

தமிழ் யூனிகோட் ரைட்டர்.

தமிங்கிலீஷ் ஆப்ஷன் செலக்ட் பண்ணி... யூ வில் நோ இட் மேன்..!!! ;-)

வாழ்த்துக்கள், நீயும் விரைவில் தமிழ் ப்ளாக் துவங்க...!!!

Osai Chella said...

I am not writing much! JeMo and science.. light year distance! So I am really disappointed by the selection of this story as science fiction cause in no way i felt so though i have a deep understanding of the length and breath of the science fiction scenario from the days of Clarke to Contemporary ppl. Forget the genre and prize/competion issue.. then the story is a class act!! Cheers and best wishes!

இரா. வசந்த குமார். said...

Dear OSAI Chella...

Thanks for your visit and wishes. Atleast in some point every1 consider this is a good story..!

ரவி said...

:((((

சிறுகதை கொஞ்சம் வளவளா.

ஆமாம்

அறிவியல் சிறுகதை போட்டிக்கி இதை ஏன் ???

இரா. வசந்த குமார். said...

அன்பு செந்தழல் ரவி...

மிக்க நன்றிகள் தங்கள் கம்மிங்குக்கும், கருத்துக்கும்..!

இது அறிவியல் புனைகதையா, இல்லையா என்பதைப் பற்றி ஒரு ரவுண்டு விமர்சனங்கள் வந்து, விளக்கங்கள் கொடுத்து, சிலர் அரைமனதோடு ஒத்துக் கொண்டு, சிலர் நிராகரித்து..... நிறைய நடந்து முடிந்து விட்டன.

நீங்க கொஞ்சம் லேட்டாக வந்திருக்கிறீர்கள். இக்கதையின் கமெண்ட்டுகளை ஒரு தபா பார்த்து விடுங்களேன்...!

நன்றி..!