Thursday, September 18, 2008

பாடல் தொகுப்பு.

ன்று திடீரென்று பழைய பாடல்கள் கேட்க வேண்டும் என்றார்ப் போல் தோன்றியது. நீங்களும் கேளுங்களேன்.







என்னா ட்ரான்ஸ்லேஷன்..? ஐயா, மொழிபெயர்த்த புண்ணியவானே! எங்கே ஐயா இருக்கிறீர் நீர்..?



இப்படி எல்லாம் பாட வேண்டும் என்று நினைப்பு தான். ஆனால் நிலைமை..?

ஒன்று, இப்படி இருக்கின்றது.



இல்லையென்றால், இப்படி ::



என்ன தான் செய்வது..? குவார்ட்டர் அடிச்சிட்டு குப்புறப் படுத்து விட வேண்டியது தான்...!! இது போல் ::

2 comments:

thamizhparavai said...

நண்பர் வசந்த்....
இனிமையான பாடல் தொகுப்பு.
1.தேன் நிலவு பாடல். எவர் கிரீன். ஏ.எம்.ராஜாவின் குரல் மற்றும் இசையில் இனித்தது.அதையெல்லாம் விட அழகு, வைஜந்திமாலாதான்.('வாழ்க்கை'படம் பார்த்திருக்கிறீர்களா..? she was very beautய்)
2. காதலிக்க நேரமில்லை பாடல். இதுவும் ஸ்ரீதரின் படம். எப்பொழுது கேட்டாலும் இன்பத்தை மட்டுமே அள்ளிக் கொடுக்கும் பாடல். யாரது நாயகி..ராஜஸ்ரீ ,..? இப்படத்தைப் பற்றிச் சொல்லிகொண்டே போகலாம்.. இசை, நகைச்சுவை, ரொமான்ஸ். எனக்கு இப்படத்தில் எல்லப் பாடல்களும் மிகப் பிடிக்கும்.
3.ப்டகோட்டி‍ ,விஸ்வநாதனின் இனிய,எளிய‌ மெட்டு..
4.'யமுனா நதி இங்கே'‍‍ நான் அடிக்கடிக் கேட்டிராத பாடல். தந்ததற்கு நன்றி. ந்ல்லதொரு பாடல் எப்படி மிஸ் செய்தேன் எனத் தெரியவில்லை. இப்பொழுது உடனே தரவிறக்கி விட்டேன்.
5. சீர்காழியின் கணீர்க் குரலும், காஞ்சனாவின் அழகுக் கோபமும் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது.
6 & 7 . இப்போதைக்கு இப்பாடல்களின் தேவை எனக்கு இல்லை. இவற்றில் ஆறாவது பாடல் காலம் கடந்து நின்றது. ஏழாவது பாடலைப் பற்றி இப்போது கருத்துச் சொல்ல இயலாது.

thamizhparavai said...

இப்பாடல்களையெல்லாம் கேட்கையில் பள்ளிப்பிராயத்தில் செவ்வாய்தோறும் இரவு மதுரை வானொலியில் 'மனோரஞ்சிதம்' எனும் நிகழ்ச்சியில் பழைய பாடல்கள் ,சிறிய டிரான்சிஸ்டர் ரேடியோவில் கேட்டது நினைவில் வந்தது.
அப்பொழுது ஒரே பொழுதுபோக்கு மதுரை வானொலியும் இலங்கை வானொலியும்தான்.