நிஜம் போல் பொழிகின்ற நடன நிழல்கள். உருவம் பொறுத்து உறைக்கின்ற உணர்வுகள். தளர்வுற்றும், கடினமாகியும் நரம்புகள் கடத்தும் அமிலக் காரக் கரைசல்கள் நடத்திச் செல்லும் வாழ்க்கைச் சொற்களை!
கணக்கீடுகளாலும், குறியீடுகளாலும் எத்தனையோ சொல்லப்படாமல் காணாமல் போகின்றன எண்ணங்கள். நிலை பெயர்ந்து, நிலை மாறிய கணங்களில் நிகழ்ந்திருக்கலாம், நிகழாமல் போன நிகழ்ச்சிகள்.
தவற விட்ட பயணிகளை எண்ணிக் கையில் இருக்கும் துளிகளைத் தொலைக்காமல் இருக்கலாம். புரிதலின் பாற்பட்டு சொல்கின்ற மாறுதல்கள், மட்டும் சுட்டுச் சுட்டுச் சொல்லி வைக்கும், ஒளிப் பொட்டுக்களை!
மாறா மாற்றம் நிறம் பெறும் மேகத் துணுக்குகளில் நித்தம் நித்தம் வடிவம் மாறும்; துகள் மாறும்; திசை மாறும்; பொடிப் பொடியாகிப் பிசிறுப் பிசிறாய்ப் பிரிந்து, கலைந்து, காணாமல் போகும். புகைப் பிரதேசங்களில் பிழைத்திருக்கச் செய்ய பூரணமாக, புள்ளியாகப் பொறிந்து, நுரைத்து எரி கோலங்களாய்ப் புதைந்து போகும்.
9 comments:
:|
சத்தியமா ஒண்ணுமே புரியல வசந்த்....
உங்களை சினிமா தொடர்பதிவுக்குக் கூப்பிட்டிருக்கேன்..முடிந்தால் தொடரவும்...
http://thamizhparavai.blogspot.com/2008/10/blog-post_27.html
இந்தப் பக்கம் போயிட்டு,கமெண்ட்ட எனக்குத் தனி மின்னஞ்சல் அனுப்பிருங்க உங்களுக்கு நேரமிருந்தா...
நீங்க கொடுத்திருந்த வீடியோ பார்த்தாலாவது ஏதாச்சும் புரியும்ன்னு பார்த்தென். புரியலை...எனக்கு வயசாயிடிச்சோ என்னமோ...?!
அன்பு சுந்தர்...
;-).
***
அன்பு தமிழ்ப்பறவை...
ஊருக்குப் போகப் போகின்றோம் என்ற நினைப்பிலேயே, ப்ளாக்கர் டெம்ப்ளேட்டை மாற்றியுள்ளீர்கள் போல் இருக்கின்றதே! எளிமையாக, அழகாக (redundant?) இருக்கின்றது, உப்பு பருப்பு போல்...!
அன்பு தமிழ்ப்பறவை...
வீடியோவும், வரிகளும் புரியாமல் இருப்பதற்கு வருத்தப்பட ஏதும் இல்லை. காலப் போக்கில் புரியலாம். ;-)
நண்பர் வசந்த்துக்கு...
//ஊருக்குப் போகப் போகின்றோம் என்ற நினைப்பிலேயே, ப்ளாக்கர் டெம்ப்ளேட்டை மாற்றியுள்ளீர்கள் போல் இருக்கின்றதே! எளிமையாக, அழகாக (redundant?) இருக்கின்றது, உப்பு பருப்பு போல்...!//
அது ரொம்ம்பத் தாமதமாகும் போல...
டெம்ப்ளேட் மாற்றியதற்கு தொழில்நுட்பக் கோளாறுதான் காரணம். whenever im trying to change my page elements in blogger, i couldnt see the page elemnts. so gadgets are placed unwanted places. now somewhat ok va...?
உப்பு பருப்பு போல...இதுக்கும் ஒரு உவமையா...அந்த உவமையை நான் என்னோட டேஸ்ட்டுக்கு மாத்திக்கிறேன் உப்புக்கறிகுழம்பு போல.(கலர் கலர் மசாலா இல்லாமல், வெறும் வெங்காயம்,சீரகத்துடன் வைக்கப் படும் கறிக்குழம்பு டேஸ்டே தனிதான்).
+2 படிக்கையில் 15நாள் அம்மையின் முடிவில் தலைக்கு வேப்பிலை நீர் ஊற்றியபின் சாப்பிட்ட அந்த உப்புக்கறிக்குழம்பை நினைவூட்டி விட்டீர்கள்.(அந்த அம்மை விடுமுறையில்தான் வேதியியல் செகண்ட் வால்யூமைப் படித்தேன். கரிம வேதியியல்.)
//காலப் போக்கில் புரியலாம். ;)//
காத்திருக்கிறேன்....
உங்க பதிவுக்கு வீரசுந்தர் போட்டிருந்த ஸ்மைலி(....?!) சூப்பர்...
உங்கள் ஐயமற்று ஐ ஐயமற படித்தேன். அதற்கு இந்த viede வை example ஆக போட்டிருக்க வேண்டியதில்லை. ஏன் எனில் உங்களுடைய imagil சிறிதும் மாசு வரக்கூடதல்லவா
அன்பு அனானி...
மிக்க நன்றிகள் தங்கள் பார்வைக்கு! வெறும் வரிகள் என்றால் எளிதில் வெறுப்பு வரும். வீடியோவுடன் படிக்கையில் எண்ணங்கள் எங்கும் செல்லும் அல்லவா..? அதற்காகத் தான்.
நல்ல பாடல் அது!
Post a Comment