Saturday, November 01, 2008

ஒரு பயணம், ஒரு கவிதை!

ழுத்து வலித்தது. காரணம் கடைசியில்!மாலை ஆறு மணி சுமாருக்கு பாளயம் நிறுத்தத்தில் இறங்கி ஸ்டேடியத்தின் முகப்பில் இருந்த ஆர்ச்சின் வழி நுழைந்தால், ப்ராக்டிஸ் மேட்ச் நடந்து கொண்டிருந்தது. கேலரியில் இரண்டு அடுக்குகளில் நூல் அழகம் அமைக்கப்பட்டு இருந்தது. தரைத்தளத்தில் பொது நூல்கள் மற்றும் முதல் தளத்தில் டெக்னிக்கல் நூல்கள்.தரையில் நுழைந்து அப்படியே எல்லா ஸ்டால்களையும் பார்த்து படிக்கட்டுகள் வழி செல்லும் போது, இடையில் குறுக்கிடும் ம்யூசிக் சி.டி. ஸ்டால்களையும் பார்த்து விட்டு, தரிசனக் க்யூ போல் வளைந்து வளைந்து புத்தகங்களுக்கு இடையில் சென்று, முதல் தளத்தின் தலையணை டெக்னிக்கல் புத்தகங்களைத் தாண்டி பைசா செலுத்த வேண்டும்.

எல்லாமே தலைகீழ்.

க்ரவுண்டைச் சுற்றி ஒரு புறத்தில் சர்ச்சும், மசூதியும் இருக்கும். இரண்டையும் சேர்த்து வைத்து ஒரு ஸ்நாப் அடிக்க வேண்டும் என்பதற்காக சரியான லொகேஷன் தேடி, கேலரியில் இரண்டு வரிசைகள் ஏறிப் பிடித்து விட்டு, அப்படியே முதல் தளத்திற்குச் சென்று விட்டேன். எல்லோரும் எதிரில் வருகிறார்கள். 'சரி, வந்தது வந்து விட்டொம். இப்படியே தொடர்வோம்..' என்று அப்படியே நடந்தேன்.நிறைய ஸ்டால்கள். ஒவ்வொன்றிலும் டி.சி.புக்ஸ் பேட்ஜ் அணிந்த ஒருவர் பொறுப்பாகப் பார்த்துக் கொண்டு, 'May i help you sir?' என்கிறார்கள். பயந்தது போல் இன்றி, பெரும்பாலும் ஆங்கில நூல்கள் தான். ஒரு குட்டிப் பகுதியில் மட்டும் முழுக்க முழுக்க மலையாளம். ஒரே மூச்சாய்க் கடந்தேன்.ஒரு ஸ்டாலில் வாங்கிய சி.டி. இரண்டை வைத்து விட்டு வந்து, மீண்டும் கொஞ்ச நேரத்தில் உணர்ந்து, அங்கே செல்ல பொறுப்பாளரே எடுத்துத் தந்தார். அந்த ஸ்டாலில் ரேர் விசிட்டர்ஸ் போல!

புத்தகங்களை மேய்ந்து கொண்டிருக்கும் போது, தரைத் தளத்தில் ஃப்ளூட் இசை நிகழ்ச்சி முடிந்து விட்டு, சாக்ஸ் மற்றும் கீ-போர்ட் நடக்கத் தொடங்கி இருந்தது.நிறைய நிறைய பெண்கள்..! கொஞ்சமாய் ஆண்கள்...! மாடர்ன் பாட்டிகள், ஜீன்ஸ் சிறுவர்கள், கவுன் சிறுமிகள், எலெக்ட்ரிக் குக்கர் டெமோ மக்கள், மலையாள மனோரமா லக்கி ட்ரா ஸ்டாலில் மிகை கூட்டம், தாஜ் மஹால் பிட்சர்ஸ்க் ஃபோட்டோ புத்தகத்தைப் புரட்டியே அத்தனையையும் பார்த்து விட்ட நான்கு இளைஞர்கள், 'ஞான் .... கம்யூட்டர் சென்டரிலே ஆனு கம்ப்யூட்டர் படிச்சு' என்ற நடிகர் சீனிவாசனின் (கத பறயும் போள்) தொடர் விளம்பர வீடியோ ஓடிய எஜுகேஷனல் சி.டி. ஸ்டாலில் போட்டொஷாப் சொல்லிக் கொடுத்த உதாரணத்தில் கலர் பூசப்பட்ட த்ரிஷா முகம், பீம்சேன் ஜோஷியின் மெமரபிள் கலெக்ஷன், கானக் கந்தர்வன் கே.ஜே.யேசுதாஸின் சூப்பர் ஹிட்ஸ், மதர் இண்டியா, ரோசாப்பூ ரவிக்கைக்காரி ஆடியோ சி.டி அருகிலேயே ம்யூசிக் டுடேயின் அருவ நீர் சி.டி., விரைவில் அலுத்துப் போய் அப்பா சட்டையை இழுத்துக் கொண்டிருந்த அந்த சிறுவன், இருட்டிய பின் ரிலாக்ஸாக ட்ராக் அருகின் புல்வெளியில் முழுக்கப் படுத்துக் கொண்ட குடும்பத் தலைவன், வாசல் மரத்தில் தொங்கிய சீரியல் செட் புள்ளிகள், வேர்க்க வேர்க்க இரவு நடை போட்ட கிழத் தொந்தியர், கனத்த புத்தக கவரைக் கையில் பிடித்து பாட்டி உட்கார்ந்து கவனிக்க, பக்கத்தில் இருந்த பேத்தி விரல் விட்டு எதையோ எண்ணிக் கொண்டிருக்க, சாக்ஸில் 'கண்ணே கலைமானே...', 'என்னவளே...என்னவளே...' வாசித்து விட்டுக் கடைசியாக கனமாக வாசித்து முடித்தார், 'வந்தே மாதரம்... சுஜலாம்...சுபலாம்...'!

கொஞ்சமாய் வாங்கியன ::

: Quantum Revolution III - What is Reality? - G.Venkataraman.

: Quantum Revolution II - QED : The Jewel of Physics. - G.Venkataraman.

: Wavelets - Theory, Applications, Implementation. - M.V.Altaisky.

: Manorama Music - Heritage Series - Madhava Murali - Flute Music CD by Kudamaloor Janardanan.

: Scintillating Sounds of Nadaswaram. - T.N.Rajarathinam Pillai - Audio CD.

: The Company of Women - Kushwant Singh.

: The last thousand days of the British Empire (The demise of a superpower, 1944 - 47) - Peter Clarke.

: Selected Short Stories of Guy de Maupassant.

: Whistling Steam (Romance of Indian Rails) - Pocket Art Series.

நாளைக்கே யாரும் இவற்றை எல்லாம் படிச்சாச்சான்னு கேட்டு விடக் கூடாது. ஒரு பதிவுக்காக இங்கு போட்டுக் கொள்வது தான்.கழுத்து வலித்த காரணம், வலது பக்கமும், இடது பக்கமும், குனிந்தும் , நிமிர்ந்தும் புத்தகங்களை ஒரு இரண்டு மணி நேரங்கள் பார்த்துக் கொண்டே இருந்ததனால் தான்...!

***
இப்போது ஒரு கவிதை!

வலி!

வலி கொடுத்தது,
எப்போதும்
எண்ணெய் தடவிய
ஒற்றைச் சடையில்
நடந்து வரும்
மறுத்த காதலி,
ஒருவனோடு
கை கோர்த்துக்
கொண்டு
போகையில்
போட்டிருந்த
போனி டெய்ல்!

6 comments:

தமிழ்ப்பறவை said...

கவிதையில் வரும் கழுத்துவலி கவர்ந்தது...
நிறையப் புத்தகங்கள் வாங்கிவிட்டீர்கள்.. இனிப் பதிவுகள் ஒரு நாளிற்கு இரண்டிற்கு மேல் வரும் என எதிர்பார்க்கலாம்...

தமிழ்ப்பறவை said...

மூன்றாவது மற்றும் கடைசிப் புகைப்படங்கள் அருமை வசந்த்...

Veera said...

Are there any Tamil books also in book fair ?

இரா. வசந்த குமார். said...

அன்பு தமிழ்ப்பறவை...

கவிதையில் சொன்னது கழுத்துவலி இல்லைங்க. காதல் வலி. ;-)

புத்தகங்கள் ஒவ்வொன்றும் தடித்தடியாக இருக்கின்றன. படிப்பதற்கே ரொம்ப நாள் ஆகும் போல் இருக்கின்றது. அவற்றை வைத்து எப்போது பதிவெழுதுவது...?

மூன்றாவது மற்றும் கடைசி பிக்சர்ஸில் கவிதைகள் இருக்கின்றன. எனவே அவை நம் மனத்தை இன்னும் நன்றாக கவர்கின்றன.

***

அன்பு சுந்தர்...

நான் பார்த்த வரைக்கும் தமிழ் நூல்கள் இல்லை. இன்னும் நன்றாகத் தேடிப் பார்த்தால் கண்ணில் பட்டிருக்குமோ, என்னவோ...? ஆனால், ஆங்கிலப் புத்தகங்கள் எக்கச்சக்கம்.

வெண்பூ said...

என்னாது கொஞ்சமா வாங்குனது 9 புத்தகமா? இருக்கட்டும்.. இருக்கட்டும்.. ஆனாலும் ரொம்ப அதிகமாத்தான் படிக்குற புள்ள போல.. ஆச்சர்யமா இருக்கு வசந்த்..

இரா. வசந்த குமார். said...

அன்பு வெண்பூ...

ரொம்ப ஓவராத் தான் பண்ணிட்டு இருக்கேன்னு சொல்றீங்க போல...! ;-)