Sunday, November 02, 2008

Good Bye... Jumbo!



டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் இருந்து, டெஸ்ட் போட்டியில் இருந்து விடை பெறும் போது, அனில் கும்ப்ளே ரசிகர்கள் தனது பெயரை மைதானம் முழுதும் எதிரொலிக்கக் கேட்டார்... கடைசி முறையாக!

JUMBOOO....JUMBOOO....!



களத்தில் எப்படி ஒரு தெளிவான வீரராகவும், வெளியே எப்படி ஒரு சிறந்த ஜென்டில்மேனாகவும் நடந்து கொள்வது என்பதை கும்ப்ளேவிடம் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

கர்நாடக வீரர்களுக்கே உரித்தான அமைதி, அலட்டிக் கொள்ளாத தன்மை (ஸ்ரீநாத், ட்ராவிட்) கும்ப்ளேவிடமும் இருக்கின்றது.

என்னால் மறக்க முடியாத நிகழ்வுகள் ::

* டைட்டன் கோப்பைப் போட்டியில், பெங்களூருவில் ஸ்ரீநாத்தோடு, பேட்டிங்கில் விளாசித் தள்ளி அணியை வெற்றி பெறச் செய்தது.

* தாடை பெயர்ந்த பின்னும், ஓவல் டெஸ்டில் ('02) லாராவை காலி செய்தது.

* பாகிஸ்தானுடனான 10 விக்கெட் (74 - 10)...! என்ன ஒரு பெர்ஃபார்மென்ஸ்...!

* சென்ற ஆஸ்திரேலிய டூரில் எவ்வளவு பண்பாக நடந்து கொண்டார்..!

* 11 தையல்கள் போட்டும் நேற்றைய டெஸ்டில் விளையாடியது.

Hats off Kumbleji....! Thanks for a Great Entertaining Cricket for the Years. We have learnt not only the sportsmanship but also humanship from You....!!!

Good Bye, Sir....! :-((

பிக்சர் கலெக்ஷன்!





நாக்பூர் டெஸ்டில் அடுத்த அவுட்...!

தாதா...!!! :-((

6 comments:

வெண்பூ said...

இந்தியாவிற்கு இவர் போல இன்னொரு ஸ்பின்னர் கிடைப்பது கடினமே.. ஆனாலும் இவரது ரிடயர்மென்ட் கொஞ்சம் லேட் என்பது என் கருத்து.. அவர் சாதித்த, அவருக்கு ராசியான டெல்லி மைதானத்திலேயே அவர் ரிடயர்மென்ட் அறிவித்தது மனதுக்கு சந்தோசமாக இருக்கிறது.. ஹாட்ஸ் ஆஃப் கும்ளே..

இரா. வசந்த குமார். said...

அன்பு வெண்பூ...

என்ன சொன்னாலும், இவர் ஒரு மகா திறமைசாலியான் லெக் ஸ்பின்னர். வார்னேக்குப் பின் மற்றொரு ரிட்டையர்மெண்ட்டில், முரளி மட்டுமே இனி தனி கிங்...!

கதம்..கதம்..! ;-)

தமிழ்நாட்டு மாப்பிள்ளையான அனிலுக்கு வாழ்த்தி விடை கொடுப்போம்..!

முரளிகண்ணன் said...

\\தமிழ்நாட்டு மாப்பிள்ளையான அனிலுக்கு வாழ்த்தி விடை கொடுப்போம்..!
\\

melathika thakaval please....

இரா. வசந்த குமார். said...

Hai MuraliKannan,

At some time i read from somwhere (probably not during internet days)that Kumble's wife is a tamil girl. Now i am searching in the net, nowhere it is mentioned.

sorry, if this is wrong.

வெண்பூ said...

//
இரா. வசந்த குமார். said...
Hai MuraliKannan,

At some time i read from somwhere (probably not during internet days)that Kumble's wife is a tamil girl. Now i am searching in the net, nowhere it is mentioned.

sorry, if this is wrong.
//

Vasanth,

Not sure you are aware, Muralitharan married a tamil girl, daughter of Chennai Malar Hospital owner. He is Tamilnattu maapillai..

இரா. வசந்த குமார். said...

அன்பு வெண்பூ...

நீங்கள் அறிந்தோ அறியாமலோ முரளி வீட்டம்மாவின் பேரையும் சொல்லி விட்டீர்கள். ஆம், அவர் பெயர் 'மலர்'.

முரளி தமிழ்நாட்டு மாப்பிள்ளை ஆவதில் என்ன இருக்கிறது? முரளி தமிழ்ப் பிள்ளை தானே..! அவர் தமிழ்ப் பெண்ணை மணந்து கொண்டதில் சொல்ல என்ன இருக்கிறது...?

எனவே அனிலும், முரளியும் தமிழ் மாப்பிள்ளைகள் தாம்..!

வார்னேக்கு இந்த மேட்டர் தெரியாமப் போயிடுச்சுனு நினைக்கிறேன்..! தெரிந்திருந்தால், அவரது அதிரடி நடவடிக்கைகளால், அவரும் இந்த லிஸ்டில் சேர்ந்திருப்பார்...!!

;-))