தனக்குரிய ஒரு கலைத்துறையை அடையாளம் கண்டு கொள்ளும் முன், பெரும்பாலான கலைஞர்கள் எடுத்துக் கொள்ளும் defaultஆன (தமிழில் என்ன?) ஒன்று ஓவியம். இந்த தப்பான ஆரம்பத்தில் தம்மை வெளிப்படுத்திக் கொண்டு, பின் தத்தம் துறையை அறிந்து ஓவியத்தில் இருந்து வெளியேறி விடுகிறார்கள்.
மாருதி அவர்களின் ரியலிஸ்டிக் ஓவியங்களின் மேல், அந்த அழகான பெண்கள் மேல் கொண்ட ப்ரேமை என்னையும் ஓவியத்தில் தள்ளி, அவ்வப்போது சில வரைந்து பழகி, வாட்டர் கலர், ஸ்கெட்ச், பென்சில், லைன் ட்ராயிங்குகளில் இறங்கி, ஹெச், ஹெச்.பி, பி, அப்சரா, நட்ராஜ், கேமல் மாத்திரை கலர் பாக்ஸ், இண்டியன் இங்க், பாட்டில்கள், இண்டியன் வொய்ட் போன்ற டெக்னிக் வார்த்தைகளில் மிரள வைத்து, பிசிறடிக்கும் பிரெஷ் நுனிகளைச் சேர்த்து நூல் கட்டுதல் போன்ற நுணுக்கங்கள் புரிந்து, ஆயில் பெய்ண்டிங்கிற்கான ஆயத்தங்களில் இறங்கும் போது, தீவிரமாக எழுத்தின் மேல் கவனம் சென்று, இப்போது MS பெய்ண்ட் ப்ரெஷ் கூட தொடுவதில்லை.
சின்னஞ்சிறு காலே, சிற்சில பொழுதுகளில் வரைந்த சில படங்கள் கீழே :
படங்களைப் பார்த்து விட்டு, யாரு என்றெல்லாம் கேட்கப்படாது.
'அண்ணன் காட்டிய வழியம்மா' என்று பாடிக் கொண்டே என் தம்பியும் படங்கள் வரையத் துவங்கி என்னை விடவும்(?) நன்றாக வரைகிறான். அவனது படங்கள் :
தமிழ்ப்பறவை போன்றவர்கள் இன்னும் விடாப்பிடியாகத் தொடர்வது ஆச்சர்யம் அளிக்கின்றது.
4 comments:
//
வாட்டர் கலர், ஸ்கெட்ச், பென்சில், லைன் ட்ராயிங்குகளில் இறங்கி, ஹெச், ஹெச்.பி, பி, அப்சரா, நட்ராஜ், கேமல் மாத்திரை கலர் பாக்ஸ், இண்டியன் இங்க், பாட்டில்கள், இண்டியன் வொய்ட் போன்ற டெக்னிக் வார்த்தைகளில் மிரள வைத்து
//
இதில் இவ்வளவு விஷயங்கள் இருக்கிற்தா?
மிரள வைக்கிறீர்கள்.
//
படங்களைப் பார்த்து விட்டு, யாரு என்றெல்லாம் கேட்கப்படாது.
//
அது சரி ..!
நான் கேட்க வந்தது என்னன்னா..
:(
வசந்த்...
அந்தா, இந்தான்னு கடைசியா ஒருவழியா படங்களைக் கொண்டு வந்திட்டீங்க.. நன்றி...
காந்தி படம் நல்லா இருக்கு வசந்த்..
ஐன்ஸ்டீன் கூட நல்லா இருக்கார். என்ன ஓவரா ஃபேர் அண்ட் லவ்லி போட்டு ‘ரோஸ்’ கலராயிட்டார். ‘காந்தி’ படத்தில் ராட்டை சூப்பர்...நான் எதிர்பார்த்ததை விட அழகான படங்கள்..(9 அல்லது 10ம் வகுப்பு படிக்கையில் வரைந்திருப்பீர்கள் என நினைக்கிறேன்).
தங்கள் தம்பியின் படங்கள் சூப்பர். நீங்கள் மனிதத்தைத் தேடுகையில் அவர் தெய்வங்களை நாடியிருக்கிறார் அப்பொழுதே..இன்னும் படங்கள் வரைகிறாரா...? ஆம் எனில் பதிவிடுங்கள்.. இல்லையெனில் வரையச் செய்து பதிவிடுங்கள்..
படம் வரைந்த சூழலைச் சுவாரஸ்யமாகச் சொல்லி இருப்பீர்கள் என நினைத்தேன். சொல்லி இருந்தால் இன்னும் நன்றாக் இருந்திருக்கும்..
அன்பு மெனக்கெட்டு..
நன்றிகள். இன்னும் பலவாறு மிரள, தமிழ்ப்பறவையைக் கேளுங்களேன்.
***
அன்பு தமிழ்ப்பறவை...
நன்றிகள். தேடிப் பார்க்கிறேன். கிடைத்தால் பதிவிடுகிறேன்.
Post a Comment