Saturday, April 18, 2009

எங்கு போனார்கள் சிலர்?

ட்டுக்குட்படா
காட்டாறு என
காவியம் பாட
எனை
அழைத்த
காவியத் தாயே
உனை
மெட்டற்ற பாட்டாய்
மேடற்ற பாதையாய்
எட்டப் போகாது
கிட்டப் போயுன்
முட்டிக் கீழ் விழுந்து
தட்டுகிறேன் பாதம்
உன்
அருள் தா!
- வசந்த்.

பழைய டைரிகளுக்குள் எதையோ தேடிக் கொண்டிருந்த போது, முதல் பக்கத்திலேயே எழுதியிருந்த கவிதை இது. ஆச்சரியப்பட்டு, டைரி ஆயுட்காலம் பார்த்தால், 1992 என்று போட்டிருக்கிறது.

தே பழையன தேடல்களுக்குள் இறங்கிய போது, 2002-ம் ஆண்டில் விகடன் நிறுவனத்தினர் கொண்டாடிய பவள விழா பரிசுத் திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட முத்திரைச் சிறுகதைகள், ஓவியங்கள், கவிதைகள் என்று மூன்று தொகுப்புகள் கிடைத்தன.

முதலில் கவிதைகள்.

படித்தவுடன் மனதில் இன்னும் நிலைத்திருக்கின்ற வரிகள் மீண்டு வந்தன.

1 comment:

thamizhparavai said...

அந்த முத்திரைக் கவிதைகளுள் முதலிடம் பிடித்த.,’அம்மா கவிதை’ சிம்ப்ள் பட் சூப்பர்ப். பட் என்னோட சாய்ஸ், வித்யாஷங்கர் எழுதிய ‘கொடை(பெயர் நினைவிலில்லை)’
“ பதினெட்டுப்பட்டி புடை சூழ
சன்னதம் கொண்ட மாரியாத்தா
சட்டென இறங்கினாள்
பெரிய வீட்டு சாந்தி மீது..
‘என்ன வேண்டும் கேள் மகனே’
என்றாள்..
ஆவேசங்கொண்டாலும்,
அழகு ததும்பும் அவளிடம்
அத்தனை பேர் முன் எப்படிக் கேட்பது
நீதான் வேண்டுமென்று..?”
இதன் ஓவியம் அருமையாக இருக்கும். பேனாவில் நானும் ஒரு பிரதி எடுத்து வைத்திருக்கிறேன்.

‘பிரகாரத்தில் சுற்றுக்கள் எண்ணுவதிலேயே , சுற்றுக்கள் முடிந்து விடுவதைச் ‘ சொல்லும் கவிதையும்,
‘எதையும் ரசிக்க விடாமல் செய்து விட்ட கண்டக்டரின் சில்லறை பாக்கி’ பற்றிய கவிதையும்,
‘வாயில் குருட்டுப் பிச்சைகாரனைக் கடந்து, உண்டியலில் பணம் போடும் புண்ணியத்தைச் ‘ சொல்லும் கவிதையும் இன்னும் என் மனதை விட்டகலா.

ஓவியங்கள்:
‘கொடியில் தொங்கும் கொடி’, கனவுத் தோழன், சிவாஜி ஓவியம்(வெகு தத்ரூபம்), ரமணர் ஓவியம், ஆடு, குட்டிகள்(கோட்டோவியம்), குகைக்குள் பட்டுச்சேலையில் இருக்கும் பெண்...
எல்லாம் நினைவுபடுத்தி விட்டீர்கள் வசந்த்...
இவை எல்லாவற்றையும் உங்கள் பார்வையிலிருந்தும் பார்க்கவிழைகிறேன்...