கொஞ்சம் லிப்ட் கிடைக்குமா?
விதை மண்ணைக் கேட்பதில்லை.
முட்டி மோதி,
மண்ணைக் கிழித்து
வெளிவருகிறது.
கதிர் இரவைக் கேட்பதில்லை.
ஆயிரம் கரங்கள் கொண்டு
வானை ஊடுறுவி
பகலாகிறது.
கடல் கரையைக் கேட்பதில்லை.
ஆண்டாண்டு காலமாய்
அலைகள் கொண்டு
உள் நுழைகிறது.
நாம் மட்டும் ஏன்
அடுத்தவரைக் கேட்டுக்
கொண்டேயிருக்கிறோம்?
விழித்து,
எழுந்து,
உழைப்போம்.
ஞான முனி
சொன்னபடி
நடப்போம்.
(தேன்கூடு - செப் 06 - போட்டிக்கான பதிவு.)
2 comments:
சின்னஞ் சிறிய கவிதை. அளவாக, அழகாக இருக்கிறது.
வாழ்த்துக்கள் !!
***
கவிதை, கருத்துச் சிறப்பு !!
***
போட்டியில் கலந்து கொள்ளும் படைப்புகளுக்கான விமர்சனங்களை இங்கே
பாருங்கள்
நன்றி...சோம்பேறிப் பையன்...
Post a Comment