Wednesday, May 16, 2007

சிறுதுளி - கோவையின் வெற்றிப் பயணம்.



தூய கோவை. பசுமை கோவை. (Clean Kovai. Green Kovai.)

இந்த ஒரு குறிக்கோளோடு, கோவை மக்களால், துவக்கப்பட்டு தற்போது வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கின்றது 'சிறுதுளி' என்ற இயக்கம்.
குளுமையான காலநிலை, அழகான மக்கள், மரியாதையான பேச்சு, அன்பான வரவேற்பு, இனிய சுபாவம், ஊட்டி, கேரளம் அருகிலேயே இருப்பு, கல்வித் திறம், இவற்றோடு நகரின் பெருமைக்கு மேலும் புகழ் சேர்க்கின்றது, 'சிறுதுளி' அமைப்பு.




தமிழகத்தின் பிற பகுதிகளைப் போல், தண்ணீர்ப் பற்றாக்குறை கோவையிலும் நிலவுகின்றது. பெருகி வரும் ஒரு தேசத்தின், மாநிலத்தின், மாநகரின் முதன்மைப் பிரச்னை, அனைவருக்குமான குடிநீர். ஒருகாலத்தில் 'சிறுவாணி', 'பவானி' போன்று பெருகிய நதிகளின் மேல் இப்போதெல்லாம் அரசியல், சாயங்கள் படிந்து விட்டதால், அரசால் எதுவும் செய்ய முடியாத நிலையில், மாநகர மக்களே முன்நின்று நதிகளை, நகரின் நீர்நிலைகளை காக்கத் துவக்கிய அமைப்பு இது.


நகரின் பெருவணிகர்களைத் தலைமையாகக் கொண்டு, சில உயர்ந்த நோக்கங்களை மனதிற்கொண்டு, பணியாற்றி வருகின்றது.


அமைப்பின் குறிக்கோள்கள்:
  1. பழமையான நீர் மேலாண்மை அமைப்பை மேற்கொள்வதன் மூலம், கோவையின் பாரம்பரியத்தை மீட்டல்.

  2. மழைநீர் சேகரிப்பு, குளங்கள், வாய்க்கால்கள், நீர்வழிகளைத் தூர் வாருவதன் மூலம், நிலத்தடி நீ மட்டத்தை அதிகரித்தல்.

  3. காடு வளர்ப்பு.

  4. கல்வி நிகழ்ச்சிகள் மூலம் மக்களிடையே சுற்றுச்சூழல் பாதுகாப்பைப் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.

  5. கழிவுநீர் மேலாண்மை மூலம் சுத்தமான கழிவு நீரகற்று முறைகளை சமூகத்தில் மேம்படுத்துதல்.

  6. சுத்தமான மற்றும் பசுமையான சுற்றுப்புறத்தை ஏற்படுத்துவதற்கான பணிகளைத் துவக்குதல்.

  7. உறுதியான சமூகக் கட்டமைப்பை ஏற்படுத்தவும், மக்களிடையே இணக்கமான உறவை ஏற்படுத்தவும், பெருவாரியான மக்களின் பங்களிப்பை ஏற்படுத்துதல்.

அமைப்பின் முன்னர்ச் செய்த பணிகளையும், தற்போது செய்கின்ற பணிகளையும் இந்தச் சுட்டியில் காணலாம்.


உங்களால் முடிந்த பங்களிப்பையும் வழங்கலாம்.





Get Your Own Music Player at Music Plugin


4 comments:

Anonymous said...

சிறுதுளியா??..அதுவும் கோவையா??..நீங்க கோவையா?

இரா. வசந்த குமார். said...

நான் கோவை இல்லீங்க. நான் வசந்த்.

கோவைக்கு கிட்டக்க, ஒரு நூறு கி.மீ. தள்ளி, பவானினு ஒரு சின்ன ஊருங்க. அது தான் நம்ம ஊருங்க...

வேளராசி said...

சிறுதுளி பற்றி நானும் பதிவு போட்டுள்ளேன்.படித்து பார்க்கவும்.

இரா. வசந்த குமார். said...

அன்பு வேலரசி அவர்களுக்கு... மிக்க நன்றிகள் தங்கள் வருகைக்கு!

தங்களது Profile க்ளிக் செய்தால் வரவில்லை. தங்களது பதிவின் முகவரி கொடுத்தால், பயணிக்கிறேன்.