Wednesday, May 02, 2007

சில துளிக் காதல்கள்.


கர்ந்து
நீ வலம் வரும்
நகர்வலத்தால்
இடம் பெயர்ந்து
சுழல்கிறது
பூமி
இடமிருந்து
வலமாய்.

பிரிந்து செல்கையில்
என் கண்களையும்
உன்னோடு எடுத்துச் செல்.
நீ வரும்வரை
எதையும்
பார்க்க விரும்பாதவனாய்
இருப்பதை விட,
கண்கள் அற்ற
குருடனாய்
இருப்பது
மேல் அல்லவா..?

ழிப்பயணியாய் என்னை
ஏற்றிக் கொண்டது
காதல்.
பயணம் முழுதும்
உறங்கி விட்டு,
திடீர் நிறுத்தத்தில்
அழுகின்ற
குழந்தையாய்
நான்.

4 comments:

Jarvis said...

Can you speak English?

இரா. வசந்த குமார். said...

Hai.. I think i can speak English little...

சென்ஷி said...

பின்னூட்ட பெட்டி பாப் - அப் விண்டோவில் இல்லாமல் அதிலேயே திறக்க வழி செய்யுங்கள் :(

//நகர்ந்து
நீ வலம் வரும்
நகர்வலத்தால்
இடம் பெயர்ந்து
சுழல்கிறது
பூமி
இடமிருந்து
வலமாய்.//

கலக்கல்..

சிந்தாநதியின் கவிதைப்போட்டியில் கலந்து கொள்ளுங்கள்
முகவரி:http://tamiltalk.blogspot.com/2007/04/blog-post_30.html

சென்ஷி

இரா. வசந்த குமார். said...

அன்பு சென்ஷிக்கு... தாங்கள் குறிப்பிட்ட போட்டியில் இரு கவிதைகளை அனுப்பியுள்ளேன்... நன்றி அறிமுகத்திற்கு...