Wednesday, September 17, 2008

அமீரக பாவ்குட்டி ரசிகர்களுக்காக... முக்கியமாக தம்பிக்காக...!

ஜ்..பஜ்.. பாவ் குட்டியின் ஒரு செமி க்ளாஸிக்கல் மல்லு பாட்டு. என்னா ஃபேஸ்... என்னா அழகு... என்னா டான்ஸ்... என்னா சிரிப்பு...! டக்கர்.

கூட யாரோ ஒருத்தர் இருக்காரு, கைய காலை அசைச்சுக்கிட்டு. அவரு பேரு என்னவோ திலீப்பாம். இந்த இன்ஃபர்மேஷன் என்னாத்துக்கு...?

யேஸுதாஸ் அவர்களும், சித்ரா அவர்களும்னு நெனைக்கறேன்.



நல்ல பாட்டு இல்லையா...?

***

மற்றொரு பதிவு ::

பாவ் குட்டியோடு ஒரு வஜனம்.

8 comments:

Thamiz Priyan said...

செமயா இருக்குங்க.. பாட்டு.. :)

Anonymous said...

:)


vetikuntu
murukeesan

Anonymous said...

இந்த பாட்டை நான் 07/10/2007 அன்றே பார்த்து பதிவிறக்கம் செய்துவிட்டேன் . நீங்கள் ஒரு வருடம் லேட். கேரளா போய் இப்பொழுதுதான் இதை பார்க்கிறீர்களா ?? ---நரேஷ்

அகரம் அமுதா said...

பாடல் கேட்பதற்கு நன்றாயிருக்கிறது. முதற்பின்னூட்டக்காரர் "தமிழ்ப்பிரியன்" -இதில் ப் மிகவேண்டும். அவரிடம் குறிப்பிட்டுவிடுங்கள்.

இரா. வசந்த குமார். said...

அன்பு தமிழ்ப்பிரியன்...

மிக்க நன்றிகள் தங்கள் வருகைக்கும், இரசனைக்கும்..! தங்கள் பெயரில் 'ப்' வர வேண்டும் என்று அகரம்.அமுதா சொல்கிறார். கவனியுங்களேன்.

***

அன்பு அனானி 'வெடிகுண்டு முருகேசன்'...

மிக்க நன்றி தங்கள் சிரிப்புக்கு! அப்புறம், ஜோதிர்மயி சவுக்கியமா..? ;-)

***

அன்பு நரேஷ்...

இந்தப் பாட்டு அறிமுகமானதைப் பற்றி சொல்கிறேன். இந்தப் பதிவில் விநாயகர் சதுர்த்திக்கு ஈஸ்ட் ஃபோர்ட் விநாயகர் கோயிலுக்குச் சென்றதைப் பற்றி சொல்லியிருந்தேன் அல்லவா? அங்கே நடனமாடிய சின்ன பெண்கள், இந்தப் பாட்டுக்கும் ஒரு சூப்பர் டான்ஸ் ஆடினார்கள். அப்போது தான் இப்பாட்டைக் கேட்கிறேன், முதன் முறையாக! அப்போதே குறித்து வைத்து, வரிகளை யூட்யூபில் தேடி, பதிந்துள்ளேன். நீங்கள் சொல்வதைப் பார்த்தால், தாங்கள் மல்லுப் பாடல்களைப் பற்றிய தகவல்களில் பெரிய தில்லாலங்கிடி போல் தெரிகிறது. தாங்கள் இன்னும் 2005, 2002, 1985களில் டவுன்லோட் செய்த பாடல்களைப் பற்றியும் சொன்னால் மகிழ்வேன். எல்லோர்க்கும் உதவியாக இருக்குமே..!!
;-))

***

அன்பு அகரம்.அமுதா...

மிக்க நன்றிகள். நீங்கள் குறிப்பிடச் சொன்னதை சொல்லிவிட்டேன். நன்றிகள்.

thamizhparavai said...

பாவனாவையே பார்த்துக்கிட்டிருக்கலாம்..இதுல அவங்க பாட்டும்,ஆட்டமும் சேர்ந்தா கேட்கவா வேணும்..? நல்ல பாட்டு தல... பாவனாவ 'கூடல்நகர்' படத்துல பார்த்துருக்கீங்களா..? செம ஹோம்லியான அழகு... ஆனா எனக்கு ரொம்பப்பிடிச்ச பாவனா படம்னா 'தீபாவளி'தான். அதுக்கு ஏங்க 'தேசிய விருது' தரல..சிரிக்காதீங்க... சீரியஸாச் சொன்னேன்...

இவண்
பாவனா பண்பாடுக்கழகம்,
வ(அ)ட இந்தியக் கிளை...

thamizhparavai said...

thalaivi vaazka...

இரா. வசந்த குமார். said...

அன்பு தமிழ்ப்பறவை...

மிக்க நன்றிகள்.

பாவ் குட்டி 'கூடல் நகர்'ல மட்டும் இல்லைங்க. எல்லாப் படத்திலயும் அழகு தான். எப்படி தான் இந்த மல்லுஸ்களுக்கே இறைவன் இவ்வளவு அழகை வெச்சானோ...?

தீபாவளிக்கு தேசிய விருது குடுத்திருக்கலாம்னு சொல்றீங்க. அது எப்ப நடக்கும்னா, அவார்டு கவுன்சில்ல நம்ம மாதிரி யூத்ஸ் இருந்தா மட்டுமே சாத்தியம்.

உங்களது 'பாவனா பண் பாடு கழகத்தின், வ(அ)ட இந்தியக் கிளை' சார்பா ஏதாவது விரு(ந்)து கொடுக்கலாமே! நல்ல பேர்! பாவனா பண் பாடும் கழகம்.