Tuesday, October 21, 2008

அறிவியல் புனைகதைப் போட்டி - நன்றி!

சிறில் அலெக்ஸ் அவர்கள் நடத்திய அறிவியல் புனைகதைப் போட்டியில் எதிர்பாராத சிறுகதை ஒன்றுக்கு முதல் பரிசு கிடைத்திருக்கின்றது. நிறைய பேருக்கு இதில் அறிவியல் எங்கிருக்கின்றது என்று சந்தேகம். வாத்தியாரின் விளக்கங்கள் கொஞ்சம் குழப்பி அடித்திருப்பது போல் தெரிகின்றது.

கஸின் ஒருவனும் இதையே கேட்டதில்,

'நீ second person narrative-ல் இதுவரை எத்தனை கதைகள் படித்திருக்கிறாய்?'

உதட்டைப் பிதுக்கினான.

'அவ்வகையில் இது நீ படிக்கும் முதல் கதை அல்லவா?'

தலை அசைத்தான்.

'புதிதாக ஏதாவது செய்தால் அது அறிவியல் தானே...! உனக்கு இது புதிது தானே? அது தான் இதில் இருக்கும் விஞ்ஞானக் கூறு'

அரைமனதானான்.

கஸின் உலகத்தின் எத்தனை கதைகளைப் படித்திருக்கிறான் என்பது கேள்விக்குரியது என்றாலும்...!

நடுவர் ஜெயமோகன் அவர்கள் மதிப்பிடுவதற்கு எடுத்துக் கொண்ட புள்ளிகள் இக்கதையில் உள்ளன என்பதில் தெளிவாக இருக்கிறேன்.

நண்பர் யோசிப்பவர் நேற்று இரவு கொஞ்சம் போல் உஷார் பண்ணியதால், இன்று அவர் இடப்போகும் எதிர் வினைக்குத் தயாராக இருந்தேன். ரொம்ப காட்டமாக இல்லாமல், 'பாவம் பையன்' என்று mild ஆக எழுதியுள்ளார்.

மதியம் நடந்த ஈ-மெயில் தொடர்பில் வெள்ளைக் கொடி காட்டிக் கொண்டோம். கடித சமாச்சாரம் கீழே, கொஞ்சம் வெட்டி, ஒட்டி - கீழிருந்து மேல்!::

***

Yeah... That's Sure..!!! ;-)

-----Original Message-----
From:
Sent: Tuesday, October 21, 2008 5:35 PM
To: Vasantha Kumar R.
Subject: RE: HAI :: AN explanation FOR YOUR POST.

No Probs for me Vasanth. But mention my name as Yosippavar;-)
- Yosippavar.

________________________________

From: Vasantha Kumar R.
Sent: Tue 10/21/2008 5:11 PM
To:
Subject: RE: HAI :: AN explanation FOR YOUR POST.



Hai Yosippavar...

Yes. I accepted all the points. Shall I post these mails between us in
my blog with some censorship (especially your reply for point a..!)...?

Vasanth.

-----Original Message-----
From:
Sent: Tuesday, October 21, 2008 3:43 PM
To: Vasantha Kumar R.
Subject: RE: HAI :: AN explanation FOR YOUR POST.

Hi Vasanth,
Thanks for the mail. I dont posts uslually in afternoon. That tricks
were only for some important posts, for which I think, they need more
visibility!!;-))

a) I'll come to this point later!;-)
b) If I have wote the post yesterday night, then it will be more spicy.
But, as the time lag occur, thoughts got mild!!!
c) No. I dont. I just need only to record my views. I dont need to
popularize this thru by any other means.
d) I know about that. At the same time, as per this stupid Democracy,
I've my own rights to criticize any judge's views. Thats what I did.
e) I want to pointout that, You are certainly eligible to get that
credit, but not for this story(as for SCIFI contest. Though the story is
good). May be those lines misleading. I too dont think, the judge was
forced to credit only one story per author.
f) Thanks:-))

And now point A. As JEMOs judgemant is miscrediting, I feel it may mislead the new scifi authors.
I know you are smart. But others?!

- Yosippavar.

________________________________

From: Vasantha Kumar R.
Sent: Tue 10/21/2008 2:43 PM
To:
Subject: HAI :: AN explanation FOR YOUR POST.

Hai Yosippavar...

Today Morning I checked your blog (sinthanaikal). No post about Sci-fi.

So I checked now and got happy by seeing your post.

a. If you look my nearly 70 short stories, each and everyone will be in
entirely different themes. So don't get afraid about me, that I will
think the story which was praised will be the correct template for sci
fi stories. Don't worry; I will continue my writing in variety of
platforms.

And I believe, you know that I am not the person who runs for approval.

b. I expect much spicy, but your post is very mild in attack. ;-)

c. Did you add the link of this page as a comment in cyrilalex's result
post? So that many people will come and convey their thoughts!

d. Please think that this result is the judge's point of view. As in
democracy, we, each and everyone have their own opinions about the
result.

e. I was slightly affected by only one line.

"Vasanth submitted more or less 15 stories for this competition. Apart
from the selected one, does no other story is good to be praised?"

This line indicates that, 'the judge was forced 'whatever Vasanth wrote,
one story from him MUST be praised..!'...'.

Please think about that line once more.

f. And finally, I understood your thoughts. Don't worry. And I am always
open minded and don't want to break anyone without HIGHLY reasonable
misunderstandings.

As Thalaivar told, "Cooooooooooooooooooooollll"

;-)

Thanking You.

Best Regards,
Vasanth.

***

எனினும் தமது பற்பல வேலைகளுக்கு நடுவிலும் போட்டியை நடத்திச் சென்று, இடையில் ஏற்பட்ட தவிர்க்க இயலாத தாமதத்திற்காக வந்த 'பொன்மொழிகளை' எல்லாம் பொறுத்துக் கொண்டு, சிறப்புற நிறைவு செய்த சிறில் அலெக்ஸிடமும், இடையறாத பணிகளுக்கு இடையிலும் அத்தனை கதைகளையும் படித்து, தேர்வு செய்த எழுத்தாளர் திரு. ஜெயமோகன் அவர்களிடம் இருந்தும் கற்றுக் கொண்ட சில நற்குணங்களையும், போட்டிக்கு அயராது இடுகைகள் இட்ட வலை நண்பர்களையும், சில நல்ல சுவாரஸ்யமான கதைகளையும், இப்போட்டியினால் தொடர்பு கிடைத்த நண்பர்களையும் தான் உண்மையான பரிசு எனலாம்.

தேர்வு செய்யப்படாத கதை நண்பர்களுக்கு ஒரு நினைவூட்டல்!

2006 இறுதி மாதங்களில் நடைபெற்ற தேன்கூடு - தமிழோவியம் சிறுகதைப் போட்டிகளில் அதிகப் படைப்புகள் இட்டும், ஒரு பரிசும் பெறாத அபாக்கியன் நான்! எனினும் போட்டிகள் என்ற சாவியைக் கொண்டு கற்பனைக் கதவைத் திறந்து பயணம் செய்தலே மகிழ்ச்சி என்று எண்ணிக் கொண்டு தொடர்ந்து நடை போட்டு வந்ததால் தான், திரும்பிப் பார்க்கையில் இரண்டு வருடங்களில் குறிப்பிடத் தக்க அளவிற்கு கதைகளில் பக்குவம் வந்திருப்பதை உணர முடிகின்றது.

எனவே சொல்லிக் கொள்ள விரும்பும் கடைசி வரியை JOHNNIE WALKER ஏற்கனவே கூறி விட்டார் ::



கேரளத்தில் இன்று ஹர்த்தால். இதைப் பற்றி எழுதிய முன் பதிவு இங்கே!

ஒவ்வொரு காரியத்திலும் பலன்கள், தீமைகள் இரண்டும் உண்டு என்பார்கள். தீமைகளை ஏற்கனவே கொஞ்சம் சொல்லி விட்டேன். நன்மைகள் இப்போது!

ஆபீஸ் தினம் துவங்கும் நேரம் அதிகாலை 08:30 மணி. அதற்கு சோம்பேறித்தனமாய் 09:00 அல்லது 09:30 மணிக்குச் செல்லும் வழக்கம். ஆனால் பந்த அன்று, அலுவலகப் பேருந்துகள் மட்டுமே ஓடும் என்பதால், வேறு வழியே இல்லை! அலாரம் எல்லாம் வைத்து எழுந்து, எப்படியாவது கஷ்டப்பட்டு 08:00 மணிக்கு பஸ் ஸ்டாப்புக்குச் சென்று விடுவேன். பந்திற்கு அடுத்த நாளும் இதைத் தொடர முயன்று இதுவரை தோற்று வந்திருக்கிறேன். நாளையும் முயல்வேன்.

எப்போதும் லஞ்ச் உண்ணும் 'ஹோட்டல் சென்னை' இந்த நாட்களில் மூடி இருக்கும் என்பதால், வேறு வகை வித்தியாசமான உணவகங்களைத் தேடி டெக்னோபார்க்கின் உள்ளேயே அலைந்து புதிய உணவுகளைக் கண்டறியும் வாய்ப்பு கிடைக்கின்றது.

வெயில் வருவதற்கு முன்பேயே ஆபீஸ் ஏ.ஸி.க்குள் சென்று விடுவதால், ஆரம்ப ஃப்ரெஷ்னெஸ் அரை மணி நேரம் கூடுதலாக நீடிக்கின்றது.

அலுவலகப் பேருந்துகளிலேயே சென்று விடுவதால், சில சமயம் ஆறு ரூபாயோ அல்லது இருபத்தொன்று ரூபாயோ (6 + ஆட்டோ சார்ஜ்!) அனாவசியச் செலவாகுவதில் இருந்து மீள்கிறது.

மிக முக்கியமான நன்மை இது தான்! ஆட்கள் அதிகம். பேருந்துகள் குறைவு என்பதால், பந்த் நாட்களில் மட்டும் எந்த கம்பெனி உழைப்பாளியும் எந்த கம்பெனி பஸ்ஸிலும் ஏறிக் கொள்ளலாம். போதாதா? இந்த நாட்களை விட்டால், 'மாற்றான் தோட்டத்து மல்லிகைகளை' எப்படி உரிமையோடு காண்பது? உஷாராகப் பார்த்து வேலை பார்க்கும் கம்பெனி பஸ் தவிர்த்து வேறு கம்பெனி பஸ்ஸில் தான் செல்வோம்.

கம்யூனிஸ்ட் ஆட்சியில் இருப்பதால் தான் அவ்வப்போது பந்த்! அவர்கள் எதிர்க்கட்சியாக இருக்கும் காலங்களில் வாரம் இரண்டு நாட்கள் அடைப்பு இருக்கும். எங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் எல்லாம் வாரம் மூன்று நாட்கள் தான் இருக்கும். ஹூம்! ஆஃபீஸில் இதெற்கெல்லாம் வழியே இல்லாமல் போய் விட்டதே! அந்த பொன்னான நாட்கள் இனி வருமா? என்று அங்கலாய்ப்பான் அவ்வப்போது ஒரு Fresher!

'ங்கே வந்து ஒரு வருடம் ஆகப் போகின்றது? தமிழ்நாட்டிற்கும், கேரளத்திற்கும் என்ன வித்தியாசம் காண்கிறாய்?' என்று ஒருவர் அலுவலகத்தில் கேட்டார்.

தாமதமே இன்றி, 'பெண்கள்!' என்றேன்.

'பொதுவாகக் கேரளப் பெண்களை இப்படி வகைப்படுத்தலாம். சாதாரண அழகு, அழகு, சூப்பர் அழகு, அதுக்கும் மேல! மென் மஞ்சள் நிறம், அதற்கும் மேல் மஞ்சளாக சந்தனக் கீற்று, பெரிய கண்கள், அலையலையாய் அல்லது நேரான கருங்கூந்தல், ஆரோக்கியம் (இதற்கு நெறஞ்ச மனசு என்று பொருள்!) கள்ளமில்லாது பழகுதல், புடவை உடுத்தினால் ஓரழகு, மாடர்னானால் பேரழகு! திருத்தமான முகக் களை, ஒரு பூரணத்துவம் எனக் காட்டும் நிறை முகங்கள் அவை.

தமிழ்நாட்டில் 1:100 என்றிருக்கும் இந்த அழகு ரேஷியோ, இங்கே 1:20 என்ற அளவில் இருப்பது தான் என்னைக் கவர்ந்த விஷயம்.

ஆனால் இப்போது அலுத்துப் போகத் துவங்கி இருக்கிறார்கள்!'

மெல்ல அதிர்ந்து, 'ஏன்?'

'மேற் சொன்ன அதே காரணங்கள் தான். எல்லோரும் ஒரே மாதிரி பண்புகளோடு இருப்பதால், மலையாள மங்கை என்றால் இப்படித் தான் என ஒரு டெம்ப்ளேட் செய்து விட முடிகின்றது.' என்றேன்.

சென்ற வாரம் ஒரு மின்னல் விசிட்டாக ஊருக்குச் சென்றிருந்த போது, 'சம்பந்தம் இருக்கு.. ஆனால் இல்லை' என்பது போன்ற இரு நிகழ்வுகளை கவனிக்க நேர்ந்தது.

முதலாவது, டாஸ்மாக் கடைகளை மூடச் சொல்லியும், மக்களை அவற்றைப் புறக்கணிக்கச் சொல்லியும் பா.ம.க. நிறுவனர் திரு.இராமதாஸ் அவர்கள் முனியப்பன் சாமி கோயிலின் எதிர்ப்புறம் இருக்கும் மைதானத்தில் மீட்டிங் நடத்தினார். நகர் முழுதும் கோன் ஸ்பீக்கர் கட்டி பேச்சுக்களை பரப்பினர். குடியால் பாதிக்கப்பட்ட பெண்கள் மேடையில் பேசப் பேச, அவர் வார்த்தைகளைச் சோகமாக வர வைத்தார்.

ஊரெங்கும் மின்சாரம் காணாமல் போயிருந்த போதும், மீட்டிங்கிற்கு மட்டும் தடங்கல் மிகக் கொஞ்ச நேரம் மட்டும் ஏற்பட்டது.

இரண்டாவது, நீங்களே பாருங்களேன். மழையில் சரியாக விழவில்லை. ::



சில இடங்களில், 'சந்தன வீரப்பனார்' என்றும் எழுதப்பட்டிருந்தது.

5 comments:

சென்ஷி said...

எம்மாம் பெரிய்ய்ய்ய பதிவு :(

இரா. வசந்த குமார். said...

அன்பு சென்ஷி...

ஏங்க..? அண்ணன் உண்மைத் தமிழன் அவர்களின் பதிவுகளை விட நீளமா யாராவது எழுதிட முடியுமா, என்ன...?

Anonymous said...

மீண்டும், வெற்றிக்கு வாழ்த்துக்கள் வசந்தகுமார்! :)

கேரள ஹர்த்தால்களை பற்றி பதிவு போட ஆரம்பித்தால், தமிழ்மணத்தில் வரும் தொடர்பதிவுகளையும் அது தாண்டிச் செல்லும்! :)

thamizhparavai said...

நண்பர் வசந்த்துக்கு...
அ) எழுத்தாளர் ஜெயமோகன் பார்வையில்(மற்ற கதைகள் அனைத்தையும் படிக்க வில்லை) பரிசு என்பதில் நான் உடன்படுகிறேன்.
//அறிவியல்கதை என்பது வியப்பு, மர்மம் ஆகிய உணர்வுகளை மட்டும் கொண்டதாக இருக்கலாகாது என்பது என் எண்ணம். அறிவியலின் செய்திகளைக் குறியீடுகளாக ஆக்கி நாம் இன்றைய நமது வாழ்க்கையை பரிசீலனைசெய்ய முடியும்.மரணம், காலம், உறவுகள் சார்ந்த தத்துவார்த்தமான அடிபப்டைக்கேள்விகளை விசாரணைசெய்ய முடியும். அத்தகைய அறிவியல் கதைகள் தமிழில் மிகக்குறைவே.//
வித்தியாசமான அறிபுனைக் கதைகளுக்கு வித்தியாசமான அளவுகோல்கள் இருக்கலாம்தானே.

ஆ) நல்ல கம்யூனிசச் சிந்தனை.கொடுத்துவச்ச ஆளுங்க...ம்ம்ம்ம்....

இ)//பொதுவாகக் கேரளப் பெண்களை இப்படி வகைப்படுத்தலாம். சாதாரண அழகு, அழகு, சூப்பர் அழகு, அதுக்கும் மேல! மென் மஞ்சள் நிறம், அதற்கும் மேல் மஞ்சளாக சந்தனக் கீற்று, பெரிய கண்கள், அலையலையாய் அல்லது நேரான கருங்கூந்தல், ஆரோக்கியம் (இதற்கு நெறஞ்ச மனசு என்று பொருள்!) கள்ளமில்லாது பழகுதல், புடவை உடுத்தினால் ஓரழகு, மாடர்னானால் பேரழகு! திருத்தமான முகக் களை, ஒரு பூரணத்துவம் எனக் காட்டும் நிறை முகங்கள் அவை.//
அப்பாடா இப்போதான் வசந்த் கேரளாவில இருக்காருங்கிறதே தெரியுது. இந்தப் பகுதியையே தனிப் பதிவாக போட வேண்டுகிறேன்.விளக்கப் படங்கள் அவசியம்...
//மலையாள மங்கை என்றால் இப்படித் தான் என ஒரு டெம்ப்ளேட் செய்து விட முடிகின்றது.' என்றேன்//
நம்க்குத்தான் டெம்ப்ளேட் பிரச்சினைனா அங்கயுமா...?விடுங்க பாஸூ...
//இங்கே 1:20 //
இங்கல்லாம் ரேஷியோ 1:3.5 தெரிஞ்சுக்கோங்க....
ஈ) அரசியல்ல இதெல்லாம் சாதாரண'மப்பா...?!'

இரா. வசந்த குமார். said...

அன்பு சுந்தர்...

நீங்களும் கேரள பந்த்களைப் பற்றி அனுபவப்பட்டதை எழுதலாமே! சுவாரஸ்யமாக இருக்கும்...!

***

அன்பு தமிழ்ப்பறவை...

அ. பிரச்னையே, நாம் அறிவியல் புனைகதை என்றால் என்ன என்பதைப் புரிந்து கொண்ட விதம் வேறு. பெரும் எழுத்தாளர்கள் அப்புரிதலைக் கடந்து இன்னும் வேறு தளங்களுக்கு அந்த இலக்கணத்தை விரிவுபடுத்திச் சென்று, அந்த தளத்தில் படைப்புகளை எதிர்பார்க்கிறார்கள்.

எனவே ஒரு சின்ன .

இப்போது எல்லாம் சுபமே என்று நம்புகிறேன்.

எனது நினைவூட்டல், தளர்வுற்றவர்களுக்கு நம்பிக்கை தரும் எனவும் விரும்புகிறேன்.

ஆ. என்னது கொடுத்து வெச்ச ஆளுங்களா? ரொம்ப தப்பான வழிமுறை இது!

இ. மலையாள மங்கைகளைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம். நாணம் தடுக்கின்றது. படம் போட்டு விளக்குவதெல்லாம் பொது இடத்தில் சரியல்ல, நண்பரே..!! ;-(

ஈ. இரண்டு நிகழ்ச்சிகளிலும் இருக்கும் உள் அரசியலைச் சிந்தித்துச் சென்றால் அது பல திசைகளுக்கு நம்மை இழுத்துச் செல்லும்.