பஸ் பாஸ் புதுப்பிக்க டிப்போவிற்குப் போவோம். எப்போதும் நான்கைந்து பஸ்கள் பாகங்கள் உரிக்கப்பட்டு ஸ்கெலடன்கள் தெரியும்படி நிற்கும். உருவி விட்ட பழுப்புச் சீருடையில் கறுப்புத் தெறித்த மெக்கானிக்குகளின் கால்கள் மட்டும் வெளியே நீட்டப்பட்டிருக்கும். தூரப்பேருந்துகள் தட்டுத்தடுமாறி நுழைந்து லிட்டர்களாய்க் குடிக்கும். எண்ணெய் கலந்த நீர் பல வர்ணங்களில் சுழித்தோடும். மாமா போன்ற டயர்கள் அடுக்கியிருக்கும் உள்ளறை ஒன்றில், அடுத்த ஒரு மாத ஆயுள் கொண்ட சீட்டு வாங்கிக் கொண்டு வெளியேறும் போது, ஷிப்ட் மாறும் ட்ரைவர்களைக் கடப்போம். காற்றில் டீஸல் வாசம் விரவியிருக்கும்.
பெய்ண்ட் உதிர்ந்த பல கட்சி போர்டுகளையும், முற்பகல் வெயிலில் சுரத்திழந்து சுருண்ட கொடிகளின் கம்பங்களையும் பின் தள்ளிச்சென்றால் ஓர் எஞ்சினியரிங் கல்லூரியும், ஓர் ஆர்ட்ஸ் கல்லூரியும் வரும். தாண்டி கிட்டத்தட்ட மூன்று கி.மீ தள்ளி தான் அடுத்த பஸ் ஸ்டாப் இருக்கும். இடைப் பிரதேசத்தில் காவலர்கள் போல் புளியமரங்களும், சரளைக் கற்களும், இளநீர்ச் சாக்குகளும், விசுக்கென விரையும் பாடி கட்ட வேண்டிய லாரிகளும், மொத்தமாய் ஒற்றை வெயிலும் மற்றும் நாங்களும் தான் இருப்போம்.
சங்கரின் வீடு கிழக்கில் கொஞ்சம் உள்ளே தள்ளி இருந்தது. ஹைவேயிலிருந்து கிளை பிரிந்து மாரியின் பெட்டிக்கடையை ஒட்டிய மண் பாதையில் நடந்து போனால் முதல் வீடு. கிழக்குப் பார்த்திருக்கும். வாசலில் ஊதா நிறத்தில் 'S' என்று பெரிய எழுத்தில் எழுதிய மாருதி. வீடு ஒரு சாதாரண கிராமத்து நடுத்தர அளவில் இருக்கும். இரண்டு முன்னறைகள். ஒரு சமையலறை. ஒரு ஸ்டோர் ரூம். அதில் நிறைய மூட்டைகள் அடுக்கப்பட்டு எப்போதும் ஒரு வித மக்கிய வாசம் வரும். பின்னால் ஒரு அறை, அவன் படிப்பதற்காக ஒரே ஒரு ஜன்னல் மட்டும் வைக்கப்பட்டு பரண்களோடு இருக்கும். அதில் ஒரு கண்ணாடி முகம் பதித்த மர பீரோ. கிரிக்கெட் விளையாடக் கிளம்பும் போதும், அதில் முகம் பார்த்து மேக்கப் செய்து கொண்டு, இரண்டாவது ஓவரிலேயே கலைந்து விடுவான். அதற்கு நேர் எதிரிலேயே மற்றொரு சின்ன அறை. பின்னங்கதவைத் திறந்தால், ஒரு மகா வெளி.
நெடுஞ்சாலைக்கும் வீட்டுக்கும் இடையில் அந்த வெளி இருந்தது. அதில் ஒரு பகுதி வயலாக்கப்பட்டிருக்கும். சீஸனுக்கேற்றாற்போல் அதில் கரும்பு, மஞ்சள், சோளம் என்று வித்தை காட்டி விளைவிப்பார்கள். மறு பாதியில் நிறைய மரங்கள் இருந்தன. கொய்யா, மா, கொன்றை, ஒல்லியாய் ஓர் அரசு இன்னும் பெயர் தெரியாத மரங்கள். ஆடி மாதத்தில் அங்கே ஊஞ்சல் கட்டி அரை வட்டம் செல்வோம். சில சமயம் மைனாக்கள் வந்து கம்பி வேலி கட்டிய கற்களின் மேல் உட்கார்ந்து கூவிப் பறந்து விடும்.
கொய்யா மரங்கள் இருந்ததால் நிறைய கிளிகள் வரும். பச்சையாய், நுனியில் மட்டும் சிகப்பாய் அழகாய் இருக்கும். சின்னச் சின்னதாய்க் கூறு வோட்டு கைகளில் வைத்து 'கிக்கீ...கிக்கீ..' என்று கத்தினால், தோள் மேல் வந்து அமர்ந்து கொத்தி எடுத்துச் செல்லும் அளவிற்கு அந்தக் கிளிகள் எங்களுக்குப் பழக்கமாயிருந்தன. சில கிளிகள் வீடுக்குள்ளேயும் வரும். அந்த தோட்டத்திற்கே நாங்கள் 'கிளி முற்றம்' என்று தான் பெயர் வைத்திருந்தோம். அரச மரத்தில் ஒரு கரும் பொந்து இருக்கும். 'அதில் தான் வந்தனா எனக்கு தரப் போற லவ் லெட்டரை எல்லாம் வெச்சு மறைக்கப் போறேன்' என்ற சேகர் தான் இந்தப் பெயர் வைத்தான். அவனுக்கு லேசான இலக்கிய விபத்து கொஞ்சம் முன்பாகவே நேர்ந்து விட்டிருந்தது. நாங்கள் எல்லோரும் தியேட்டர்களுக்குப் படையெடுத்துக் கொண்டிருந்த போது, அவன் மட்டும் சர்க்கிள் லைப்ரரிக்குச் சென்று மெம்பரானான். அவன் சொன்ன ஐடியா 'சிவகாமியின் சபதத்திலிருந்து' சுடப்பட்டது என்பது வெகு காலங்களுக்கு அப்புறம் தான் எனக்குத் தெரிய வந்தது. சரி, இந்த வந்தனா யார்..? சொல்கிறேன்.
அவர்கள் மூன்று வீடுகள் தள்ளி இருந்தார்கள். கிட்டத்தட்ட சங்கர் வீடு அளவிற்கே செல்வந்தம். ஒரே ஓர் அண்ணன். புல்லட்டில் வருவான். எங்களை வழியில் கோஷ்டியாகப் பார்த்தால் 'என்னடா வீட்டில் சொல்லட்டுமா..?' என்பான். என்னவோ எங்களின் உத்தமத்தன்மைக்கு வீடுகளில் கேரண்டி செய்திருப்பவன் போல்! 'சொல்லிக்கோ போ..!' என்பான் சங்கர். எங்களுக்கு உதறல் எடுக்கும். கேட்டால், 'அவன் தங்கச்சி என்னை ரூட் விடறாடா..! இவன் என்ன செஞ்சிர முடியும்..!' என்பான்.
அவளும் கொஞ்சம் அப்படித் தான் நடந்து கொண்டதாகத் தெரிந்தது. ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். கொஞ்சம் கொஞ்சம் மதுபாலா ஜாடை இருந்தது. அந்த வெக்கைக்கு ரோஸாய் கன்னம் சிவக்கும். நாங்கள் ஆறு மணி வரைக்கும் விளையாடி விட்டு, காய்ந்து போய், ஸ்ரீராம் நகர் தெருக் குழாயில் திருகித் தண்ணீர் குச்சியைக் குடிக்கும் போது, எதிரில் சைக்கிளில் ஜொலிப்பாய் போவாள். கூட சில துணை தேவதைகளும்! ஹிந்தி படிக்கிறாளாம்.
நாங்கள் கொய்யாக்களையும், நாகநந்திப் பூக்களையும் பறித்து, சட்டை, பேண்ட் பாக்கெட்டுகளில் அடைத்துக் கொண்டு அசிங்கமாய் நடக்கும் போது, கரெக்டாக வந்து சேர்ந்தாள். சின்னச் சின்னதாய் பூப்போட்ட பாவாடையும், அலையலையாய்த் திரண்ட பஃப் வைத்த சட்டையும் போட்டிருந்தாள். மஞ்சள் முடிகள் கைகளில் சுருண்டிருந்தது. பெரிய ப்ளாஸ்டிக் வளையல். ஒரு கையில் வாட்ச். டெய்ல் மாதிரி ஏதோ ஒரு சங்கதியில் தலையை முடிந்திருந்தாள். அதில் ஒரே ஒரு ரோஜா, இலையோடு ஈரமாய் இருந்தது. அந்த மாலை நேரத்தில் மஞ்சள் கதிர்கள் முகத்தில் விழுந்து புரண்ட போது, கிட்டத்தட்ட தேவதை போலிருந்தாள். எல்லோரும் அப்படியே ஸ்டன்னாகி நிற்கும் போது, உள்ளேயிருந்து சங்கர் அம்மா வந்து விட்டார்கள்.
"ஆண்ட்டி...! அம்மா இதை உங்ககிட்ட குடுத்திட்டு வரச் சொன்னாங்க.." பின்புறத் திண்ணையில் வைத்திருந்த ஒரு டிபன் பாக்ஸை எடுத்துக் கொடுத்தாள். "ஹரித்வார்ல இருந்து மாமா வந்திருந்தாங்க. ஏதோ ஸ்வீட். உங்களுக்குப் பிடிக்குமேன்னு கொண்டு வந்தேன்.."
"ஸ்வீட்டா வந்து..? நான் சாப்பிட மாட்டேன். அவருக்கும் சுகர் ஆச்சே..!"
'வந்து வந்து... ஸ்வீட் தந்து தந்து..' சேகர் அதற்குள் கவிதை எழுதும் முஸ்தீபில் இறங்கியிருந்தான். அவன் வாரப் பத்திரிக்கைகளைத் தாண்டி, புதுக்கவிதைகளைத் தொடங்கி விட்டதை இது உறுதிப்படுத்தியது.
"உங்க வீட்ல இருக்கற வேற யாராவது சாப்பிடுவாங்கனா குடுங்க ஆண்ட்டி..!" சொல்லி விட்டு எங்கள் எல்லார் மேலும் ஒரு பார்வையை விசிறி விட்டு மின்னலாய் மறைந்தாள்.
"நிறைய இருக்கும் போல இருக்கு. நீங்க எல்லோரும் எடுத்துக்கோங்க..!" குந்தி தேவி போல் அவர் சொல்லி விட்டுப் போய் விட, இங்கே அடிதடி.
நான்கு பேரும் ஆளுக்கொரு பக்கம் பிடித்திழுக்கப் போராட, சங்கர் 'சைலன்ஸ்' சொல்லி விட்டான்.
"நல்லா கேட்டுக்குங்க. வந்து என்ன சொன்னா? எங்க வீட்ல இருக்கற வேற யாருக்காவது...! அப்டின்னா என்ன அர்த்தம்? என்னைத் தான சொல்லியிருக்கா. எல்லோரும் ஒதுங்கிக்கோங்க..."
"அதெப்படி? இப்ப உங்க வீட்ல நாம எல்லாரும் தான் இருக்கோம். அவ எங்கள்ல யாரையாச்சும் சொல்லியிருக்கலாம்ல..?" சேகர் அந்த வாக்கியத்தில் இருந்த இலக்கண சூட்சுமத்தைப் பிடித்து விட்டான். அவன் லைப்ரரியில் லைஃப் டைம் மெம்பரானது வீணாகவில்லை.
நானும், சுரேந்தரும் அமைதியாக நின்றோம். இது போன்ற உரிமைப் போர்களில் வீணாகத் தலையிட்டுப் பின்னர் கிடைக்கப் போகும் பங்கில் விரிசல் விழ விடக் கூடாது என்பதில் நாங்கள் இருவரும் நிறைய அனுபவங்களில் தெரிந்து கொண்டிருந்தோம். பின்னர் ஒரு வழியாகச் சமாதானமாகிப் பிரித்துப் பார்த்து, நிறைய நிறைய இருந்ததால், எல்லோரும் பங்கிட்டுத் தின்றோம். ஒருவனே தின்றால் வயிற்றுக்கு ஒத்துக்காது என்ற உயிரியல் உண்மை அதற்குள் அவர்களுக்குப் புலப்பட்டிருந்தது.
வந்தனா இது போல் குழப்பமாகத் தான் நடந்து கொண்டாள். சுரேந்தருக்கு ஒரு தங்கை. அமுதா. அவள் ஆறாம் வகுப்பு படிக்கும் போது, அவளிடம் இவனைப் பற்றி ஏதோ சொன்னாளாம். அது வந்து பேச்சு வாக்கில் சொல்லி விட, அண்ணனை இரண்டு வாரங்களுக்கு கையில் பிடிக்க முடியவில்லை. பின் அவளிடம் போட்டுப் பிராய்ந்து பார்த்ததில், இவள் வந்தனாவிடம் எக்ஸாம் ஹாலில் ரப்பர் கேட்டிருக்க, அவள் உன் அண்ணனிடம் வாங்கி வைத்திருக்க வேண்டியது தானே என்று சொல்லியிருக்கிறாள்.
எக்ஸாம் ரெஃபரன்ஸுக்காக லைப்ரரி பக்கம் போனவளிடம், விகடனை மறைத்து, எம்ப்ளாய்மெண்ட் நியூஸை எடுத்து வைத்து, ஐ.ஏ.எஸ். ஆகப் போவதாகவும், அதற்காக சைனிக் பள்ளியில் சேரப் போவதாகவும் பீலா விட்டிருக்கிறான் இன்னொருவன். அவள் 'நாக்பூரில் ஒரு பெரியப்பா இருக்கிறார்கள். ரெஸிடென்ஷியல் சைனிக் ஸ்கூல் நடத்துகிறார்களாம். போகிறாயா?' என்று கேட்டு விட, சைக்கிளை எடுத்து பறந்து விட்டான்.
என்னிடம் வந்து ஒருமுறை சயின்ஸ் படங்கள் வரையக் கஷ்டமாயிருக்கிறது. வரைந்து தருகிறாயா என்று கேட்டாள். அப்போது என் உயிரியல் படங்கள் பாய்ஸ் ஹை ஸ்கூல் தாண்டி இவர்கள் வட்டாரத்திலும் மங்காப் புகழ் பெற்றிருந்தது. என் அக்கா தான் ராத்திரி எல்லாம் உட்கார்ந்து வரைந்து தருகின்ற ரகசியத்தை நான் வெளியிட்டதேயில்லை. வந்தனா கேட்டதும் உள்ளுக்குள் ஜில்லிப்பாய் இருந்தாலும், அக்காவிடம் கெஞ்சிக் கூத்தாடி வரைந்து தரச் சொல்லி ('இரு இரு அம்மாட்ட சொல்லிடறேன்.!') கொடுக்கும் போது, சுரேந்தர் போட்டுக் கொடுத்து விட்டான்.
எங்களில் சங்கருக்கு மட்டுமே கூடுதலாய்ச் சில தகுதிகள் இருப்பதைக் காலக்கிரமத்தில் புரிந்து கொண்டோம். ஒரே தெரு. ஒரே பொருளாதார நிலை. கொஞ்சம் வனப்பு கலந்த நிறம். நாங்கள் பிறகு ஓசி கொய்யாக்கனிகளுக்கு பங்கம் வருவதைக் கருதி, ஒதுங்கிக் கொண்டோம்.
ஒரு நாள் எல்லோருக்கும் ஸ்வீட் கொடுத்தான்.
"என்னடா..?"
"ஓ.கே. சொல்லிட்டாடா. அதுக்கு அடையாளமா நம்ம கிளி முற்றத்துல அரச மரம் இருக்குல்ல. அங்க வெச்சு ஒரு கிஸ் குடுத்தாடா. எங்க தெரியுமா...?"
"அதான் சொன்னியே..! அரச மரத்துல..!" சேகர் கம்மிய குரலில் சொன்னான்.
"ச்சீ! அது இல்லடா.! இங்க..!" உதட்டைக் காட்டினான். கொஞ்சம் லிப்ஸ்டிக் கலர் தெரிந்தது.
"இங்கயா..? உதட்டுலயா..? எப்டிடா இருந்துச்சு..?"
"டேய்..! அவ என் வைஃபா வரப் போறா..! இப்டி எல்லாம் கேக்காதீங்க..!"
"ஓ...! ஸாரிடா..!"
பிறகு அவள் எங்கள் கூட்டத்தில் ஒன்றானாள். கிளி முற்றத்தில் மேலும் ஒரு கிளி சேர்ந்தது. நாங்களும் விகல்பமில்லாமல் பழகினோம். புல்லட் அண்ணனும் நெருக்கமானான். மதீனா டீ ஸ்டாலில் அவன் சிகரெட் பிடித்ததைக் கூட நான் யாரிடமும் சொல்லவில்லை. அவன் எக் பஜ்ஜி வாங்கிக் கொடுத்தான்.
அவனுடைய கிரிக்கெட் குழுவில் எல்லாரும் தடித் தூண்களாக இருப்பார்கள். நாங்கள் ஆர்.கே.நகர் பிட்சில் விளையாடும் போது, லேட்டாகவே வந்து வேண்டுமென்றே எங்களுக்கு குறுக்காகவே பிட்ச் வைத்து இம்சைப்படுத்துவார்கள். இப்போது புல்லட் அண்ணனின் அன்பு வட்டத்துக்குள் நாங்கள் வந்து விட்டதால், 'முஸ்தபா... முஸ்தபா..' ஆனோம். சுரேந்தருக்கு சிகரெட் பிடிக்கக் கற்றுக் கொடுத்து, வளையம் விடும் வரை வளர்ந்தான்.
கிளிமுற்ற அரச மரப் பொந்தில் சிகரெட் துண்டுகள் தேங்கின. உழவுக்கு வருபவர்கள் பார்த்து விட்டு பற்ற வைக்க, க்ரூப் ஸ்டடி இன் கிளி முற்றத்திற்கு கட் விழுந்தது. பிறகு அவன் வீட்டுக்குப் போவதும் கொஞ்சம் கொஞ்சமாய்க் குறைந்து கொண்டே வந்தது. மூன்றாண்டுகள் தொடர் மழையில்லாததால், உழவு நிறுத்தப்பட்டதாம். கிளி முற்றத்து பழ வருமானம் கை கொடுத்ததாம்.
ஸ்கூல் முடிந்ததும் நான் சென்னைக்குக் கிளம்பி விட, சுரேந்தர் திருப்பூரில் மில்லுக்குச் சென்று விட, சேகர் இலக்கியத்திற்கு கமா போட்டு எம்.எம்.ஸி.யில் ஊசி பிடித்தான். சங்கர் அடுத்த ஸ்டாப் ஆர்ட்ஸ் காலேஜிலேயே பி.காம் சேர்ந்தான். அவளும் அங்கேயே சேர்ந்ததாளாம்.
தேர்ட் இயர் செமஸ்டருக்குப் படித்துக் கொண்டிருந்த போது, சுரேந்தர் ஹாஸ்டலுக்குப் போன் செய்து சொன்னான். "ரெண்டு பேர் வீட்லயும் சம்மதிக்காததால சங்கரும் வந்தனாவும் ஓட்டிப் போகப் பார்த்து, புல்லட் அண்ணன் மூணாவது கிலோமீட்டர் பஸ் ஸ்டாப்புக்கு நடந்து போகும் போது புடிச்சுட்டான். வீட்ல செம அடி. அவளை நாக்பூருக்கு அனுப்பிட்டாங்க..."
யாரோ ஒரு சேலம் சேட்டு வீட்டை வாங்கியிருந்தான். "அவங்க அப்பா எல்லாத்தையும் வித்துட்டு தென்காசி பக்கமா போய்ட்டாங்களாம். இவன் படிப்பை நிறுத்திட்டங்க. அய்யம்பாளையத்துல இருந்த பண்ணையை கூட வித்துட்டாங்க.."
அக்கா பையனுக்கு காது குத்துவதற்காக இந்த முறை ஊருக்குப் போயிருந்த போது பஸ்ஸில் இருந்து எட்டிப் பார்த்தேன். வயல் முழுக்க நிரவப்பட்டு, சமவெளிகள் சுத்தம் செய்யப்பட்டிருந்தன. மஞ்சள் பிள்ளையாராய் HD கல் அம்புக்குறியோடு உள்ளே தள்ளி இருந்தது. சர்வேயர்கள் தத்தம் கருவிகளுக்குள் தலை புதைத்திருந்தார்கள். கிளி முற்றத்தில் ஜல்லிகள் கொட்டப்பட்டிருந்தன. பக்கத்து சீட்டில் வெற்றிலை மடித்துக் கொண்டிருந்தவர் சொன்னார். பஸ் ஸ்டாப் வரப் போகிறதாம்.
Thursday, August 27, 2009
Tuesday, August 25, 2009
Thursday, August 20, 2009
கோடானு கோடி!
வலது பக்கம் வழிவிட்ட டிம்பரில், படுத்திருந்த மரங்களின் மேல் செங்கொடிக் கிழிசல்கள் மினுங்கின. தாபாக்களின் வாசல்களில் ஜிகினாக்கள் அணிந்த லாரிகளின் இண்டிகேட்டர்கள் சிணுங்கின. ஜூவல்லர்ஸ் மங்கை மஞ்சளாய்ச் சிரித்தாள். கோல்டை லாலேட்டன் சிபாரிசித்தார். சட்டென கடந்த அபார்ட்மெண்ட்டில் ஒரே ஒரு வீட்டில் வெளிச்சம் எரிந்தது. பெட்ரோல் பங்குகள் சொர்க்கமாய் ஒளிர்ந்தன. மெல்லமாய் நிலா மட்டும் அவ்வப்போது மேகக் கொத்திலிருந்து எட்டிப் பார்த்து உடனே மறைந்தது. பக்கத்திலேயே மழை பெய்து கொண்டிருப்பதை வாசம் சொல்லியது. திருச்சூரைத் தொட்டுத் தொடாமல், பைபாஸ் ஜங்ஷனில் வளைத்து, என்.ஹெச்.சிலேயே ஓட்டினான் சேது. காதுகளை அடைத்து துண்டால் இறுக்கியிருந்தான். ஸ்டியரிங் மேல் பீடிச் சாம்பல் விழுந்து கொண்டிருந்தது.
சாய்ந்திருந்த ரிவ்யூ மிரர் பக்கத்தில் பிள்ளையார், ஏசு, மெக்கா சுற்றிலும் கும்பலாய் ஒளித்துகள்கள் ஓடிக் கொண்டேயிருந்தன. காய்ந்த மல்லிகை முழம் சுருண்டிருந்தது. முல்லா பனியன், லுங்கியோடு 'S' ஆக கைகளை கால்களுக்குள் செருகிப் படுத்திருந்தான். தார்ப்பாய் காற்றில் படபடத்துக் கொண்டேயிருந்தது. பனிரெண்டரை மணி காற்று இருளாய்க் குளிராய் லாரிக்குள் செருகி வெளியேறியது.
1100 துள்ளியது. லேசாக இடது காதில் ஒதுக்கி விட்டு, ரெண்டாவது கியருக்கு குறைத்து விட்டுப் பேசினான்.
"ஐயா..!"
"நான் தான்..! எங்க இருக்க..?"
"திருச்சூர் தாண்டி பத்து நிமிஷம் ஆச்சுங்க.."
"எந்த ரூட்ல கொண்டு வர்ற..?"
"வழக்கமா வர்றது தாங்க..! வாளையார் வழி..!"
"வேணாம்..! இன்னிக்கு செக்கிங் ஜாஸ்தியா இருக்கு. உஷாரா இருக்கச் சொல்லி போன் வந்திச்சு. முன்னாடியே சொல்றதுக்குள்ள அமீர் மாட்டிக்கிட்டான். நீயும் மாட்டிக்க வேணாம். ரூட் மூணுல வா..!"
"ஐயா..! அந்த வழில பொய்க்கரட்டுப் பள்ளம் பாலம் இன்னும் சரி பண்ணலைங்க. நம்ம லோடு தாங்குமாங்கறது டவுட்டு தாங்க..!"
"இந்த நேரத்துக்கு எதுத்தாப்ல ஒண்ணும் வராது. அங்க மட்டும் மெதுவா ஓட்டி வந்திடு. தாண்டிரலாம். பார்டர்ல அங்க மட்டும் தான் இன்னிக்கு செக்கிங் இருக்காதுன்னு தகவல் வந்திருக்கு. சரக்க உள்ள கொண்டு வர அது தான் இப்ப சரியான வழி..! வந்திடு..!"
போனை வைத்து விட்டு, பீடியை எறிந்து விட்டு, துப்பினான். ஹெட் லைட்டை இன்னும் கொஞ்சம் டிம் செய்தான்.
முல்லாவைத் தட்டினான்.
"டேய்...! டேய்...!"
வாரிச் சுருட்டி எழுந்த முல்லா லுங்கியைச் சரி செய்து விட்டுக் கொஞ்ச நேரம் சுற்றுமுற்றும் பார்த்தான்.
"என்னண்ணே...?"
"முளிச்சுக்கோ..! தூங்கிடாத..! ரூட் மாத்தப் போறேன். பாணர்பாளையம் வழியா. ரோடு க்ளியர் பண்ணிச் சொல்லிட்டே வா. இன்னும் அரை மணி நேரத்துல சிட்டி செக் பாய்ண்ட் வந்திடும். பாலக்காடு தாண்டி லெப்ட் கட் பண்ணி ஊருக்குள்ள போகணும்..!"
கண்களைத் தேய்த்துக் கொண்டே தலையாட்டினான் முல்லா.
முருகன் சவுண்ட் அண்டு லைட் சர்வீஸ் என்று அந்தக் கருவியில் எழுதியிருந்தது. இட்லித் தட்டு போல வட்ட வட்டமாய்க் குழிகள் இருந்தன. அவற்றை அடைத்து பச்சை, சிகப்பு, மஞ்சள், வெள்ளை, ரோஸ் ஜிகினாக் கண்ணாடித் தாள்கள் ஒட்டப்பட்டிருந்தன. அவற்றை வேகமாகச் சுற்றிட, ஒளி பாய்ந்து, மேடையில் வர்ணங்களாய் மாறி மாறி விழுந்தன.
கன்னியப்பன் சீதையின் சீலையைப் பிடித்து இழுத்து அகங்காரமாய்ச் சிரித்தான். தேன்மொழி ராவணனின் கைகளிலிருந்து சீலையைக் காப்பாற்றப் போராடினாள். மண்தரையில் உட்கார்ந்திருந்தவர்கள் கொட்டாவி விட்டார்கள். பனி மொத்தமாய் விழுந்தது. துண்டால் தலையை முக்காடிட்டிருந்த பெருசுகள் ஆல மரத்தடியிலேயே ஒண்டியிருந்தார்கள். அம்மாக்கள் மடியிலேயே சிறுவர்கள் தூங்கி விட்டிருந்தனர். பக்கத்துக் கோயிலின் தூண்களில் பெண்கள் ஒட்டியிருந்தனர்.
"ஆ..! விடு என்னை..!! காவி அணிந்த துறவி என அன்னம் இட வந்தேன். பாவி நீ, என் கன்னம் தொட வந்தாய்..!" என்று ராகமாய்ப் பாடினாள் சீதேன்மொழி.
"சீதா..! வாவா..! என்னோடு லங்கைக்கே..! வந்தால் நீ என் அரசி..!! உன்னோடு உரசி...!" கன்னியராவணன் அபசுரமாய்க் கத்தினான்.
இழுபிடிப் போராட்டம் ஒருவழியாக ஓய்ந்து, அவளை முதுகில் தூக்கிக் கொண்டு சீனிலிருந்து விலகினார்கள். அடுத்ததாக மேடை பின்படுதா மாற்றப்பட்டு, ஒரு பஸ் ஸ்டாப் வருகின்றது. ஒரு பெண் தோளில் கயிறு கட்டி, இரு பானைகளை முன் தொங்க வைத்து வருகிறாள். ஒருவன் டீக்காய் பேண்ட் ஷர்ட் போட்டு, அவளிடம் பானைகளைச் சுட்டிக் காட்டி,
"இதுல என்ன இருக்கு...?" மைக் முன்னாடி வந்து சத்தமாய்க் கேட்டான்.
"ம்..! பாலு..! ஏன், உனக்கு வேணுமா...?" அவளும் மைக் தலையில் கத்தினாள். அங்கங்கே இருந்த இளவட்டங்கள் விசிலடித்தன. அரைத்தூக்க கிழவர்கள் சட்டென தெளிந்து, உன்னிப்பாகப் பார்த்தார்கள்.
கன்னியப்பன் கண்ணாடி முன் அலங்காரத்தைச் சரி பார்த்துக் கொண்டான். மீசை கூர்மையாக இருக்கின்றது. க்ரீடம் ஒடிகிறது. ரப்பர் பேண்டால் இழுத்துக் கட்ட வேண்டும். நெஞ்சு முடிகளை அந்த வளையங்கள் இறுக்குகின்றன. கொஞ்சம் லூசாக்க வேண்டும். இறுக்கிய தடங்களை மீனாச்சியிடம் சொல்லி எண்ணெய் தேய்க்கச் சொல்ல வேண்டும். எழுந்து, ஓலைகளைக் கொஞ்சம் விலக்கி வெளியே பார்த்தான்.
மீனாச்சி இல்லை.
விரல்களால் இன்னும் துளையை அகலமாக்கி, உற்றுப் பார்த்தான். அங்கங்கே கொத்துக் கொத்தாய் உட்கார்ந்திருந்தவர்களிடம் பார்த்தான்; கோயில் மண்டபத்தில் பார்த்தான்; அரசமேடையில், சுடுகாட்டுப் பாதையில், ஓடைக் கரையில்... மீனாச்சி இல்லை. அவன் கண்கள் சூடேறின.
மேடையின் மேக்கப் வாசலில் ராஜப்பா நின்றிருந்தான். அவனைத் தோள் தட்டி,
"ராசு..! கொஞ்சம் வீடு வரிக்கும் போய்ட்டு வந்திடட்டுமா..?"
"டேய்..! அடுத்த ஸீன் உனக்கு தான். சூர்ப்பனகைகிட்ட சீதாவ காட்டணும்.."
"இல்ல..! வயிறு ஒரு மாதிரி இருக்கு..! போய்ட்டு சுருக்க வந்திடறேன்..! நீ இந்த காமெடி சீனை இன்னும் கொஞ்ச நேரம் இழுத்தடிச்சிட்டிரு..! இல்லாட்டி ராமனும் லச்சுமணனும் பொலம்பற சீன் அடுத்து வருதுல்ல..? அத இங்கே இளுத்து வுட்டுரு. தோ, வந்திடறேன்..!"
டவுனிலிருந்து வந்திருந்த 'ஸ்ரீ அங்காளம்மன் நாடக ட்ரூப்'பின் தளதள பெண் இன்னும் பச்சை பச்சையாய் மைக்கில் பொழிந்து கொண்டிருக்க, அவர்கள் குடித்துக் காலியாக கிடந்த இளநீர்கள் ஒரு மூலையில் குழுமியிருந்தன. வெட்டி வெட்டி, ஏறிய வழுவழுப்பு காய்ந்திருந்த அரிவாள் ஓரமாய்க் கிடந்தது. எடுத்து, இடுப்பில் செருகிக் கொண்டு, மேல் அங்கியில் மறைத்துக் கொண்டான். வெளியே வந்து, கொட்டாயின் பின் நின்றிருந்த சைக்கிளில் ஏறி அழுத்தினான். க்ரீடம் காற்றில் நடுங்கியது.
சாலையோரப் புளியன்கள் மேல் தகர போர்டுகளில் அபார்ட்மெண்ட் விளம்பரங்கள் மடங்கியிருந்தன. ஏர் பஸ்கள் ஜிவ் ஜிவ்வென்று கடந்து பறந்தன. இரண்டு சுற்றுலா பேருந்துகள் எதிர்த்திசையில் ஓடின. ஜிப்ஸி ஒன்று தடத்திலிருந்து விலகி, உள் விளக்குப் போட்டு ஓய்வெடுத்தது. கொஞ்சம் கொஞ்சமாக மேடேறுவதை உணர்ந்து கியரை இரண்டிலேயே வைத்து ஓட்டினான் சேது. பாலக்காடு இன்னும் பத்து நிமிடத்தில் வந்து விடும்.
கருப்பண்ணசாமி கோயிலில் மண் விளக்குகள் மிகக் கொஞ்சமாய்த் துளிர்த்து உயிர் பிடித்துக் கொண்டிருந்தன. அது தெருவின் ஆரம்ப எல்லையில் இருந்தது. கடைசியில் பூங்காவனத்தின் வீடு இருந்தது. அடுத்து, காடு ஆரம்பித்து விடும். கரும்பு போட்டிருந்தார்கள். ஒற்றையடிப் பாதைகள் வரப்புகளாய்ப் போகும். பிடித்து, சென்றால் அரை கி.மீ.யில் என்.ஹெச் சிக்கி விடும்.
தெரு கொஞ்சம் மேடான இடத்தில் அமைந்திருந்தது. கோயிலின் பக்கத்திலேயே பச்சைப் பூஞ்சை படர்ந்த படிக்கட்டுகள் பொய்க்கரட்டுப் பள்ளத்திற்கு கொண்டு சேர்க்கும். எப்போதும் அதில் வரும் தண்ணீர் பழுப்பாய்த் தான் இருக்கும். மலைநிலங்களில், அடிவாரங்களில் சடசடவென மழை பெய்தால், பள்ளத்தில் சலசலத்து, வாளையாற்று நீரோட்டத்தில் சென்று சங்கமித்து விடும். மற்ற நாட்களின் ஈரப்பிசுபிசுப்பில் கால் வைக்கப் பிதுங்கும்.
கோயிலிலிருந்து சரியும் பாதை கரட்டின் மேல் பாலத்தில் வந்து சேரும். சுதந்திரத்திற்கு முன் கட்டியது என்று பறை சாற்றும் ஒரு இங்கிலீஷ் கல்வெட்டு, காலத்தால் கொறிக்கப்பட்டு மூல, பெளத்ர போஸ்டர்களால் பாதி மறைபட்டிருக்கும். இழுத்துக் கொண்டிருக்கும் ஒரு கிழவனைப் போல் காற்றில் முனகும் பாலத்தின் அகலம் ஒரு பதினாறு வயது பெண் இடை போல் குறுகலாய் இருக்கும். போன குறுவைப்பட்டத்து மழையில் மண் பாலம் கரைந்தழிந்து விட, மாட்டு வண்டிகள் கூட துரைமார்கள் பாலத்தின் வழிதான் பயணிக்கின்றன. எச்சில் ஒழுக, மாடுகள் சாவகாசமாய் நடக்கையில், கடக்கையில், காத்திருக்கும் நான்கு சக்கர வாகனர்கள் ஹாரனை அழுத்தியே கதறுவார்கள். எதிர் முனையில் ஒரு முள் காடு இருக்கும். இடது புறமாய்த் திரும்ப, 'சரஸ்வதி' தியேட்டர் வரும். கடந்தால், பச்சைமாரியம்மன் கோயிலும், ஒட்டிய திடலும், அரச மரத்தடியும் வருகின்றன. திடலில் தான் பண்டிகைக் காலங்களில் நாடகங்கள் நடக்கும். 'தேடி வந்த இளவரசி' அல்லது 'மகத நாட்டு வியாபாரி' போன்ற செட்கள் தேவைப்படும் சரித்திர நாடகங்கள் அல்லது 'காதல் என்ன கத்திரிக்காயா?' என்ற சமூகக் கருத்து நாடகங்கள் மட்டுமே திரும்பத் திரும்ப நடத்தப்படும். அறுவடை சுமுகமாக நடந்து, கோ-ஆப்ரேட்டிவ் பேங்கிலும், சொசைட்டியிலும் தவணை கட்டி விட்ட பின்பும், எல்லோர் கையிலும் காசு புரண்டால், டவுனில் இருந்து ட்ரூப்பைக் கூட்டி வந்து வேஷம் பார்ப்பார்கள். அப்போது 'தாலியா? வேலியா?' 'சீதையின் கற்பு' போன்ற புதிய நாடகங்கள் அரங்கேறும். ராஜப்பா ஊரின் கலை இன்சார்ஜ். சீதையைக் கடத்திச் சென்றவுடன், மீனாச்சியைத் தேடி கிளம்பிய கன்னியப்பன், பாலத்தைக் கடந்து தெருவிற்குள் நுழைந்தான். பூங்காவனத்திற்கு முந்திய வீடு அவனுடையது. மீனாச்சி அவன் மனைவி.
கல்மண்டபம் தாண்டி சீரான வேகத்தில் லாரி ஓடத் தொடங்கியது. முல்லா முகம் கழுவி விட்டு பளிச்சென்றானான். அவனுக்கு இது புதிதாக இருந்தது. வழக்கமாக ஹைவேயிலேயே, பைபாஸிலேயே தான் போவார்கள். முதன் முறையாக ஊருக்குள் செல்ல வேண்டும். அவனுக்கு கொஞ்சம் பயம் வந்தது. ஒரு வாரத்திற்கு முன் சர்வீஸுக்கு விட்டிருந்த போது, சொல்லியிருந்தார்கள்.
"யாருப்பா..? நீ தான் க்ளீனர் பையனா..? ட்ரைவர் வரலையா..? எந்த கம்பெனி வண்டி இது..? கே.எஸ்.பி.யா..? நல்லா கேட்டுக்கோ. இஞ்சினுக்கு பக்கத்துல நாலஞ்சு பார்ட்ஸ் ரொம்ப ரஸ்டாகி இருக்கு. எப்ப வேணா களண்டு வுளலாம். இப்பத்திக்கு டைட் பண்ணி வெச்சிருக்கேன். மாத்திக்கறது நல்லது.."
சேதுவுடம் சொல்லி லாரி ஆபிஸில் மேனேஜரைப் பார்த்த போது,
"சார்..! எஞ்சின்ல ஏதோ சிக்கலாம்..."
"எந்த வண்டி சொல்ற சேது..?"
"வெங்கடேஸ்வரரு. ரியாஸ்ல க்ளீன் பண்ணும் போது முல்லாகிட்ட சொல்லியிருக்காங்க.."
"ரிப்பேர் பார்த்துரு. அடுத்த வாரம் கொச்சின் போக வேண்டியிருக்கும். பெரிய சரக்கு எடுத்திட்டு வரணும்..." சொல்லி ரெண்டாயிரம் கொடுத்தார்.
வெளியே வந்து, ஸ்ரீதுர்கா ஹோட்டலில் சாப்பிடும் போது, ரெண்டாவது பஜ்ஜியில்,
"எப்பண்ணே ரிப்பேருக்கு வுடப் போறோம்..?"
"த பாரு முல்லா. ரிப்பேரெல்லாம் கெடயாது..!"
"சரி பண்ணனும்னு சொன்னாங்களே..!"
"அவனுங்க கெடக்கறாங்க. இப்டி எதுனா துரு புடிச்சிருக்கு, தூசு அடச்சிருக்குன்னு சொல்லி காசு புடுங்குவானுங்க. அதெல்லாம் சமாளிச்சுக்கலாம். மேனேஜர்கிட்ட சொல்லாத. ரிப்பேர் பாத்தாச்சுனு சொல்லிரலாம். உனக்கு நூறு ரூபா. பயப்படாத, இதெல்லாம் சின்ன பிரச்னை. மெட்ராஸ்ல இருந்தப்ப, ப்ரேக்கே இல்லாம நாக்பூர் வரைக்கும் போய் பேல் எடுத்துட்டு வந்திருக்கேன்..!"
அர்த்த ராத்திரி தாண்டி ரெண்டு மணி நெருங்கிக் கொண்டிருந்தது. ஊதற்காற்று விசிறியடித்தது. அதெப்படி ப்ரேக்கே பிடிக்காமல் அவ்வளவு தூரம் போக முடியும் என்று யோசித்தான் முல்லா. வைப்பரைத் தேய்க்க விட்டான் சேது. தெறித்தாற் போல் விழுந்திருந்த கொஞ்சம் துளிகள் படர்ந்தன. தலைக்கு மேல் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரேடியோ கரகரத்துக் கொண்டே இருந்தது. முல்லாவுக்கு இனிமேல் தூக்கம் கிடையாது என்பது தெரிந்து போனது. தூங்க முயன்றாலும் சேது விட மாட்டான். சேது விட்டாலும் இந்த ரேடியோ விடாது. அதற்காகவே இப்போது அதைப் போட்டு விட்டிருக்கிறான். எப்படி தூங்காமல் இருப்பது..?
"லாரில்ல சரக்கு என்னண்ணே இருக்கு...?"
"தம்பி. இதெல்லாம் நீ கேட்கக் கூடாது. எனக்கும் தெரியாது. கொச்சின்ல இருந்து கொண்டு வர்றது மட்டும் தான் நம்ம வேலை. உக்கடம் தாண்டி குடோன்ல சேத்துரணும்..! அவ்வளவு தான்..!
"மதிப்பு எவ்ளோண்ணே இருக்கும்?"
"பல கோடி..!"
இதற்கு மேல் அவன் எதுவும் சொல்ல மாட்டான். முரட்டுக்கயிறுக்குள் இறுக்கமாய்க் கட்ட்ப்பட்டிருந்த மூட்டைகளுக்குள் என்ன இருக்கும்..? யோசித்துப் பார்த்தால், இன்னும் தூக்கம் வந்தது. கண் சொக்கும் போது, லாரிக்கடியில் எங்கோ லேசான இருமல் கேட்டது போல் இருந்தது.
"கெனா கண்டிருப்ப..!" என்றான் சேது.
அத்தனை விளக்குகளும் அணைக்கப்பட்டிருந்தன. அதில் ஒரு ஜாக்கிரதைத் தன்மை இருந்தது. வீட்டுக்குள் யாரும் இல்லை என்ற தோற்றத்தை ஏற்படுத்துவது அதன் இலக்கு போல்...! ஆனாலும் அவன் வீட்டை அவனுக்குத் தெரியாதா..? படலையின் வேலியை மெ..ல்..ல.... விலக்கி, புழக்கடை வாசலில் நுழைந்து, சமையலறை ஜன்னலைத் திறந்து பார்த்தான்.
பட்டாசாலை தெரிந்தது. மூலையில் ஒரு லாந்தர் விளக்கு இருந்தது; எரிந்தது. பக்கத்தில் ஒரு புடவை கசங்கி சுருண்டிருந்தது. பூக்கள் போட்ட இளஞ்சிவப்பு புடவை. மேட்சாக ஒரு ரவிக்கை கலைந்து கிடந்தது. அதன் பொய்யான மேட்டில் விளக்கொளி நரம்பாய் ஊடுறுவியது. கட்டிலின் ஒரு காலில் ஒரு வெண் உள்ளாடை தொங்கிக் கொண்டிருந்தது. துணிக்கயிற்றில் ஒரு லுங்கி வீசப்பட்டிருந்தது. சத்தியமாய், அது அவனுடையது இல்லை.
ஏதோ ஒரு தெருவில் ஏதோ ஒரு நாய் ஏதோ ஒன்றுக்காக ஊளையிட்டது. திடலிலிருந்து அள்ளிக் கொண்டு வந்த ராமனின் புலம்பலைக் காற்று கன்னியப்பனிடம் சேர்த்தது.
"ஏனடா தம்பி..? ஈதென்ன நீ செய்தது...? அய்யோ சீதா..! உன்னை இழக்கவா இங்கு வந்தேன்..! சீதாஆஆஆ...!"
அடுத்த காட்சி வசனங்களை அனிச்சையாய் அவன் உதடுகள் உச்சரித்தன.
'தங்காய் சூர்ப்பனகை..! பார் இந்த சீதையை..!'
மீனாச்சி புரண்டு படுத்தாள். அவள் வெள்ளை முழங்கால்கள் தெரிந்தன.
'அயோத்தி ராமனின் மனைவி..! உன்னை மூக்கறுத்தானே, அவன் பொண்டாட்டி..! இன்று என் கையில்..! இவள் கற்புக்கரசி! ஹா..! ஹா..! ஹா..!'
அவள் மார்புகளை ஒரு வலுவான கை மறைத்து இயங்கியது. அதில் கொசகொசவென முடிகள் சுற்றியிருந்தன.
'இவள் எத்தனை அழகு..! இவளை நானே மணந்து கொள்ளப் போகிறேன்..! இவள் முகத்தைப் பார்..! அந்தக் கூந்தல்...'
கட்டிலிலிருந்து இறங்கித் தரையில் பரவியிருந்தது. மல்லிகைப் பூக்கள் குழப்பமாய்க் கலந்திருந்தன. அவள் விரல்கள் கட்டிலை இறுக்கிப் பிடித்திருந்தன.
'இவள் முகத்தைப் பார்...! தேன் தேடும் வண்டுகள் கண்டால் குழம்பி விடும் தாமரைக் கண்கள்..!'
கிறங்கியிருந்தன. ஒரு மயக்கத்தின் மதுரசம் முகம் முழுதும் கிளைத்து எழுகின்ற பரவசத்தில் அவள் உதடுகளை ஒருவன் தின்று கொண்டிருந்தான்.
'இப்போது அந்த ராமன் என்ன செய்வான்..? என் அருமைத் தங்கையை அழ வைத்த இவன் கொழுந்தன் ஏது செய்குவான்..? ஹா..! ஹா..! ஹா..!'
கன்னியப்பன் முடிவு செய்தான். இடுப்பில் செருகியிருந்த அரிவாள் வேர்வையில் நனைந்திருந்தது. ரொம்ப நாளாகச் சந்தேகப்பட்டிருந்தது இன்று உண்மையாக.. கண்ணெதிரிலேயே..! ராத்திரி முழுதும் நாடகம் நடக்கும் என்று தெரிந்து கொண்டு, நான் அங்கே இருக்க வேண்டிய கட்டாயத்தைப் பயன்படுத்தி, என்னோடு வந்து பாதி நாடகம் பார்த்து விட்டு, சத்தமில்லாமல் கிளம்பி... முதலில் இவனை! பிறகு அவளை...!!
படலையை மூடி விட்டு, நடந்தே வந்து கருப்பண்ணசாமி கோயிலின் திட்டில் மறைந்து கொண்டான்.
என்ன தவறு செய்தேன்..? அழகான மனைவிக்கு ஆசைப்பட்டது தவறா..? முத்தான ரெண்டு மகள்கள் இருக்க...! ச்சீ...! அரிவாளை எடுத்து ஒரு வீசு வீசினான். காற்று கிழிந்தது. காத்திருக்கத் தொடங்கினான்.
அரை மணி நேரம் கழிந்தது. நாடகம் ராவணன் இல்லாமலேயே நடக்கத் தொடங்கியது. இவனைத் தேடி வந்த குமரப்பன் கன்னியப்பனைக் கடந்து, வீட்டைப் பார்த்து, உடனே திரும்பி போய் 'காணோம்' என்று சொல்லி, ராவணனாகத் தொடங்கினான். கருப்பண்ணசாமி கோயில் விளக்குகள் இறந்து பட்டு, கருமை கனமாய் அப்பியிருந்தது. ஒரே ஒரு தெரு விளக்கு மட்டும் மங்கலாய் எரிந்தது. மிக லேசாய் காற்று வீசியது. கொஞ்சம் புழுக்கமாகவே இருந்தது. இந்த ராவண வேஷத்தைக் கழட்டி விடலாமா என்று யோசித்தான். வீட்டுக் கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டு அமைதியானான்.
எங்கோ ஒரு தெரு நாய் வேகமாய் குரைத்து ஓடியது. ஏதோ ஒரு வாகனம் ஊருக்குள் நுழைவது போல் இரைச்சல் கேட்டது. லாரி.
அவன் களைப்பாய் நடந்து வந்தான். அதில் ஒரு துள்ளல் இருந்தது. கன்னியப்பன் அரிவாளை எடுத்துக் கொண்டான். கருப்பண்ணசாமி கோயிலிலிருந்து ஏழு வீடுகள் முன்னே வந்து கொண்டிருந்தான். சேது இடையில் புகுகின்ற முள் செடிகளை விலக்கி விலக்கி ஓட்டி வந்தான். அவன் ஐந்தாவது வீட்டுக்கு வந்து விட்டான். முல்லா ரோட்டின் முன் இருக்கும் குழிகளை எட்டிப் பார்த்தான். நான்கு வீடுகள். கன்னியப்பன் இடுப்பை இறுக்கினான். மூன்று வீடுகள். சேது பாலத்தை அடைவதற்குள் கியர் மாற்றி, க்ளெச்சை விடுவித்து, ஆக்ஸிலரேட்டரை அழுத்தினான். லாரி இன்னும் கொஞ்சம் சீறியது. இரண்டு வீடுகள். முல்லா கருப்பண்ணசாமி கோயிலைக் கண்டான். முதல் வீடு. கன்னியப்பன் பூனையாய் முன் கால்களால் நடந்தான். லாரி வேகமாய்ப் பாய்ந்தது. முன்னே வந்து விட்டான் அவன்.
"பரதேசி நாயேஏஏஏ....!" கத்திக் கொண்டே அரிவாளை ஓங்கிக் கொண்டே அவனை நோக்கி கன்னியப்பன் ஓடி வர, எதிர்பாராத அதிர்ச்சியால் விதிர்த்துப் போன அவன், சடுதியில் நோக்கம் புரிந்து, சுற்றுப்புறம் மறந்து, ரோட்டின் குறுக்கே பாய, சேது அதிர்ந்து ப்ரேக்குகளை அழுத்த, குழிகள் கொண்ட சாலையில் எகிறி எகிறி, இறுக்கம் கலைந்திருந்த எஞ்சினின் பாகங்கள் மறுத்து விட, முல்லா பார்த்துக் கொண்டிருக்கும் போதே....ச்ச்ச்ச்சட்...!!
அவன் உயரமாய்ப் பறந்தான். சுற்றினான். கீழே விழுந்த போது, சில சிவப்புத் துளிகள் வைப்பர் மேல் தெறித்தன. தடுமாறிய லாரி கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் மோதியது. முல்லா "அய்யோ...!" என்று கத்தினான். கன்னியப்பன் பிரமிப்படைந்து, "கருப்பண்ணசாமி உன்ன தண்டிச்சுட்டாருடா.." என்று கத்திக் கொண்டே பாலத்தை நோக்கி ஓட, லாரி பெருத்த வேகத்தோடு சுற்றுச் சுவர்களை இடித்துத் தள்ளி, மேலிருந்து அப்படியே செங்குத்தாய் இறங்கியது.
"கண்டேன் சீதையை..! ராமா கலங்காதே..! லச்சுமணா அழாதே..! சுக்ரீவா சமாதானம் கொள்..! அங்கதா அமைதியாயிரு...!" ஸ்பீக்கரில் வடிந்து கொண்டிருந்த அனுமனை மீறி, நாடகத் திடல் முழுதும் அத்தனை பெரிய சத்தம் கேட்டது.
***
காலப்பயணியாய் வலையுலகில் எழுதத் தொடங்கி இன்றோடு (21.August.2009 ) மூன்றாண்டுகள் ஆகி விட்டதை முன்னிட்டு, இதை birthday special சிறுகதையாகக் கொள்ளலாம். :)

Tuesday, August 18, 2009
சுதந்திர நாளில்...மதுரையில்..!
பாகிஸ்தான் சுதந்திர நாளில், வழக்கமான 22:30 திருச்சி பேருந்தைப் பிடித்து மாட்டுத்தாவணிக்கு வந்து சேர்ந்த போது, ஆண்கள் கட்டணக் கழிப்பிடத்தைக் கழுவிக் கொண்டிருந்தார்கள். நின்றவுடன் சூழ்ந்த ஆட்டோக்காரர்கள் ஆளுக்கொருபக்கம் இழுத்தார்கள். பெஞ்சுகளில் பொதிந்தவர்கள் பண்பலைகளுள் உறங்கினர். லேசான தூறல் இருந்தது. முந்தின இரவின் நல்ல மழை, சேறுகளாகத் தேங்கியிருந்ததில் சோடியம் வேப்பர் தலைகீழாக எரிந்தது. பூரிகள் உடைசலாய் இருந்தன. 'வாழும் பாரி வள்ளல்' போஸ்டர்களில் சிரித்தார். வைகை சாக்கடையாய் நகர முயன்று, தீர்ந்தது. மண்டிகளில் அவசர அவசரமாகப் பழங்கள் இறங்கின. ட்ராபிக் முனைகளில் எல்.ஈ.டி.க்கள் மினுக்கின. வறண்ட சாலைகளில் ஏர் பஸ்ஸில் மிதந்து, மாமா வீட்டை அடைவதற்குள் தூக்கம் மீண்டும் வந்த போது, கிழக்குக் கரை ஆரஞ்சானது.

தமிழ்த் தொலைக்காட்சிகளின் டெம்ப்ளேட் கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் தொலைந்து போவதைத் தவிர்க்க, எங்காவது செல்லலாம் என்று திட்டம் போட்டோம். மீனாட்சி கோயில் சில முறை சென்று விட்டதால், இம்முறை காந்தி நினைவு நிலையம் போகலாம் என்று நானும், கார்த்திக்கும் கிளம்பினோம். தமுக்கம் மைதானத்தில் இறங்கி, எங்கோ தூரத்தில் தெரிந்த வெண் பங்களாவை நோக்கி நடக்கத் தொடங்கினோம். மைதானத்தில் பொருட்காட்சி போட்டிருந்தார்கள். ஸ்பீக்கர்களில் விளம்பரக் குரல்கள் தெறித்துக் கொண்டேயிருந்தன. கரும்பு ஜூஸ் தள்ளுவண்டியில் விற்கப்பட்டது. வறு கடலை, பட்டாணி புகையாய்ப் பரவியது. இராஜாஜி பூங்காவில் நிறைய ஆண்கள், பெண்கள், குழந்தைகள். ரோலர் கோஸ்டரில் வட்டமடித்த பெண் செல்லில் பேசிக் கொண்டேயிருந்தார். ஊஞ்சல்கள் நிரம்பியிருந்தன. டைனோசர் பொம்மைகளில் நுழையும் வாசல் முன் டிக்கெட் கவுண்ட்டர் இருந்தது.
காந்தியை மறக்காமலோ, சுதந்திர தின நினைவோ காந்தி மியூஸியத்தில்(?) வல்லிய கூட்டம் இருந்தது. தலை குனிந்து நின்ற மகாத்மாவை க்ளிக்கி விட்டு, உள்ளே செல்ல முயல, 'CLOSED' போர்ட் சங்கிலியில் தொங்கியது. அன்று அரசு விடுமுறை தினமென்பதால், மூடப்படிருக்கிறதாம். என்ன ஒரு சிந்தனை! ஆச்சரியமாய் அன்று மட்டுமாவது நாட்டை நினைக்கும் எங்களைப் போன்றவர்கள் வருத்தத்துடன் நகர்ந்தோம். நூலகம், நூல் விற்பனை நிலையம், ஓவியக் கண்காட்சி.. எல்லாவற்றிற்கும் விடுமுறை. சுற்றி வந்து, சபர்மதி ஆசிரம மாதிரியைப் பார்த்து, வியந்து, ராஜ்கோட்டில் இருக்கும் காந்தி சமாதியின் மாடலையும் பார்த்து விட்டு வெளியேறினோம். சமாதியின் வாசலில் 'செருப்புகளை இங்கே விடவும்' என்று சொல்லப்பட்ட போர்டின் மிக அருகிலேயே ஒரு ஜோடி செருப்பு இருந்தது.

நாடகசாலை
இவ்வகன்ற கூடம் நாடகசாலை அல்லது நாட்டிய மண்டபம் என்றழைக்கப்பட்டது. இவ்விடத்தில் அரசர் தம் தேவியருடன் மாலை நேரங்களில் அழகிய நாட்டிய மகளிர் ஆடும் நாட்டியங்களைக் கண்டு களித்தார். இந்நடனங்கள் பல்வேறு இசைக்கருவிகள் முழங்க தீவர்த்தி வெளிச்சத்தில் நடைபெற்றன. இக்கூடத்தின் மேற்கு மூலையில் இரண்டு படிக்கட்டுகள் மேல் தளத்திற்குச் செல்லும் வகையில் கட்டப்பட்டுள்ளன. இம்மாளிகையின் வடபுறம் பூந்தோட்டம் ஒன்றிருந்தது. அரண்மனையின் ஒரு பகுதி இரங்கவிலாசம் என்றழைக்கப்பட்டது. வடகிழக்குப் பகுதியில் இராஜராஜேஸ்வரி அம்மன் கோயில் அமைந்திருந்தது. இவை அனைத்தும் இப்போது இல்லை.
ஒரு டிபிக்கல் சிறுகதை போன்ற திடுக் கடைசி வரியில் முடிகின்ற இப்பத்தி திருமலை நாயக்கர் மஹாலில் ஒரு போர்டில் எழுதப்பட்டிருக்கின்றது.
காந்தியைக் காண முடியாத கடுப்பில், மீண்டும் தமுக்கத்திற்கு நடந்து வந்தோம். கோரிப்பாளையம் நிறுத்தத்திற்கு நடக்கும் போது, அமெரிக்கன் காலேஜ் Washburn Gate அருகில் ஒரு பிச்சிக் கிழவி சுருண்டு படுத்திருந்தாள்.
மீண்டும் ஏர்பஸ்ஸில் ஏறி, மிஷன் ஆஸ்பத்திரி நிறுத்தத்தில் இறங்கி நடந்தால், மஹால். மிகுந்த பொருட்செலவில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. நாயக்கர் சிலையில் கம்பீரமாக நின்றார். எனக்குத் திருமலை நாயக்கர் என்றால் ஒரு கதை நினைவுக்கு வரும். எஸ்.பாலசுப்ரமணியம் எழுதிய 'சந்திரவதனா'. நாயக்கரின் வாரிசான மதுரைச் சொக்கநாத நாயக்கருக்கும், தஞ்சை இளவரசி சந்திரவதனாவுக்குமான ஓர் ஆத்மார்த்த காதல், எவ்வாறு தஞ்சை அரசராலும், இளவரசனாலும் பிய்த்தெறியப்பட்டது என்ற அருமையான நாவல். விறுவிறுப்பான திரைக்கதை வடிவில் செறிவான வேகத்தில் பாயும் கதை. எல்லாக் காதல்களையும் போல், கொடூரமாகப் பிரிக்கப்பட்ட காதலனைத் தேற்றி மணம் செய்து கொள்ளும் பெண் தான் பிற்காலத்தில் இராணி மங்கம்மாள் ஆகின்றாள்.
பிரம்மாண்டமான தூண்கள்; உச்சிகளில் செதுக்கப்பட்ட பொம்மைகள்; இந்து, இத்தாலிய, இஸ்லாமியக் கூட்டணியில் கட்டப்பட்ட அரண்மனை முற்றப்பகுதி; நாடக சாலையில் பழங்காலச் சிலைகள்; கல்வெட்டுகள். சொற்களை விட, படங்களில் பார்க்கலாமே!!!

தெற்குவாசலுக்குச் சென்று சில புத்தகங்களைத் துழாவிய போது, கிடைத்த கோபுரப் படம் ::

Tuesday, August 11, 2009
உரையாடல் போட்டி முடிவுகள் மற்றும் பிற.
கழிந்த சனிக்கிழமை காலை கரூரைக் கடந்து சாலைப்புதூரில் திரும்பிக் கொண்டிருக்கும் போது தமிழ்ப்பறவையின் அழைப்பு வந்தது. அப்போதே ஒருவாறு விவரத்தை ஊகித்துக் கொண்டு விட்டாலும், ஆதாரபூர்வமாக அறிந்து கொள்வதில் ஒரு மகிழ்ச்சி இருக்கின்றது தானே..?
முந்தின இரவு முழுதும் செய்த பேருந்துப் பயணம் முழுதும், டாக்டர்கள் செக் செய்வதற்காக பீய்ச்சிப் பார்க்கும் சிரஞ்சு போல் சரக்.. சரக்.. என சுரந்து கொண்டே இருந்தது அட்ரீனலின். கதை தேர்வு பெறுமா...?
தமிழ்ப்பறவை வாழ்த்தியதும் சந்தோஷமாக இருந்தது. பஸ்ஸில் கேட்டுக் கொண்டு வந்த 'கல்லெலாம் மாணிக்கக் கல்லாகுமா..?' வகையறா பாடல்களும் பிடித்துப் போயின. ஈரோட்டை நெருங்கும் போது, தூத்துக்குடியில் இருந்து மற்றொரு நண்பரும் தகவல் சொல்லி வாழ்த்தினார். அவருக்கும் திருப்பி வாழ்த்தினேன்.
'ஜூலை முடியட்டும், எல்லாக் கதைகளுக்கும் விமர்சனம் எழுதுகிறேன்' என்று ஜம்பமாகச் சொல்லி விட்டு, 250 கதைகள் என்றானதும், சொல்லாமல் கொள்ளாமல் ஜகா வாங்கி ஒதுங்கி விட்டேன். அத்தனை கதைகளையும் படித்துப் பார்த்து, அலசி, இருபது கதைகளைத் தேர்வு செய்வது என்பது மெய்யாலுமே மெர்சலான வேலை தான்..! அதைத் துணிந்து செய்து, நிகழ்வை அழகாக நிறைவு செய்த உரையாடல் குழுவினருக்கும், குறிப்பாக பைத்தியக்காரன் மற்றும் சுந்தருக்கு வணக்கங்கள்.
முடிவுகளை அறிவித்த பதிவுக்கு வந்த அத்தனை விமர்சனங்கள், வாழ்த்துக்கள், வாழ்த்தை ஒட்டிய ஒரு சர்ச்சை, எதிர்பார்த்த கதை வராத ஏமாற்றங்கள், எஸ்டாப்ளிஷ் ஆகிவிட்ட எழுத்தாளர்கள் பதிவர் போட்டியில் பங்கேற்கலாமா விவாதங்கள் அனைத்தும் தமிழ்ப் பதிவுலகம், ஓர் இயங்குகின்ற சமூகமாக இருக்கின்றது என்பதன் அடையாளம்.
அ. கதை தேர்வு பெறாதவர்கள் வருத்தத்தில் இருப்பது இயல்பு. ஆனால் போட்டிக்காக மட்டும் கதை எழுத வருவது, முந்தின இரவில் படித்து விட்டு, பரீட்சை எழுதுவது போன்றது; தேர்வாகலாம். முதல் மதிப்பெண் பெறுவதற்கு வாய்ப்பு மிகக் குறைவு தானே? சிறுகதை நுட்பங்கள் பற்றிய கட்டுரைகள் படிப்பது, நிறைய நிறைய சிறுகதைகள் தொடர்ந்து படிப்பது போன்ற அடித்தளங்கள் மட்டுமே ஒரு நல்ல சிறுகதையை எழுத, காணும் நிகழ்ச்சியில் இருக்கும் சிறுகதையைக் கண்டுகொள்ள உதவும் என்பது என் அனுபவத்திலிருந்தே தெரிகின்றது.
சுய விளம்பரம் என்றே வைத்துக் கொள்ளுங்கள். சிறுகதை எழுதுவது தொடர்பாக முன்பே எழுதியிருக்கும் சில பதிவுகள் ::
நானும் எழுதுகிறேன் 10!
கதைகள் வந்த கதைகள்.
புதிய எழுத்தாளர்களுக்கு 11 யோசனைகள்.
சிறுகதைப் போட்டியாளர்களுக்கு ஓர் உதவி!.2.
சிறுகதைப் போட்டியாளர்களுக்கு ஓர் உதவி!
இவற்றில் சொல்லப்பட்டிருக்கும் வழிமுறைகளை, குறைந்தது இருமுறையாவது படித்துப் பாருங்கள். அவற்றை அப்படியே பின்பற்ற வேண்டும் என்ற அவசியமில்லை. ஆனால் இலக்கணம் முதலில் தெரிந்து கொண்டு அதில் எழுதிப் பழகிய பின் இலக்கணம் மீறலாம்.
ஆ. அடுத்த 17 கதைகளையும் வெளியிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கலாம். மிரட்ட முடியாது என்றே நினைக்கிறேன். ஏனெனில் விதிமுறைகளின் படி 20 கதைகளைத் தேர்வு செய்வோம் என்று சொல்லப்பட்டது. சொல்லியாகிவிட்டது. மேலும் அவற்றையும் வெளியிட்டு அதிலும் நம் கதை இல்லையென்றால், இன்னும் சோர்வு தான் ஏற்படும். விட்டு விடுவோமே..! அந்த 17-ல் நம் கதை இருக்கும் என்று பொய்யாக நம்புவது கொஞ்சம் தளரச் செய்யாமல் இருக்கும் அல்லவா..? தேர்வு பெற்ற கதைகள் நல்ல கதைகள் தான் போலும் என்று நான் நம்புவதைப் போன்று தான் அதுவும்...!!
இ. மீண்டும் மீண்டும் சொல்வது தான். தோல்வி என்று ஒன்றும் இல்லை. இந்தப் போட்டியில் வெற்றி பெற்ற கதைகள் எழுதியவர்கள், முந்தைய பல போட்டிகளுக்கு அனுப்பிய கதைகள், கடைசி இடத்திற்கு கூட தேர்வு செய்யப்படாமல் துரத்தப்பட்டிருக்கின்றன. என்னை வைத்து மட்டுமே நிறைய சொல்ல முடியும். வாழ்க்கைக்கே சொல்லிக் கொள்ளும் ஒரே மந்திரம் தான் இங்கும் செல்லுபடியாகக் கூடிய ஒன்று ::
Never Never Never Give up..!
அடுத்த போட்டிகளுக்கு இன்னும் பல தரமான கதைகளை எதிர்நோக்குகிறேன்.
***
இரவுப் பேருந்தில் ஜன்னல் வழி எட்டிப் பார்த்து கிறுக்கிய இரு கவிதைகள்.
1. மின் கம்பிகளின்
குறுக்கே
மீட்டப்படுகின்றது
நிலா!
2.என்
விரல்களுக்கப்பால்
ஒரு வானம்
விரிகின்றது.
சொற்கள் எனும்
செங்-
-கற்கள் கொண்டு
ஏணி கட்டி
எட்ட முயல்கிறேன்.
உயிர்கள்
மெய்களைத் தழுவிட,
மெய்கள்
உயிர் விட்டு விட,
உயிர்மெய்கள்
உயிர் மெய்களாய்த்
திரிந்து
அடித்துக் கொண்டன.
சிலவற்றின்
கொம்புகள்
உடைக்கப்பட்டன;
கொக்கிகள்
நொறுக்கப்பட்டன.
கால்கள் இழந்து
முடமான
சில
மெல்ல மெல்ல
நடந்தன!
பொட்டுக்கள்
களவாடப்பட்டவை
கைம்பெண்களாகி
கலங்கின.
சுழிகளை
நொந்து கொண்டு
முட்டிக் கொண்டன.
உதிர்ந்தவற்றைக்
கொத்தாய் அள்ளி
வீசி உதறினேன்.
ஜன்னலுக்கு வெளியே
விழுந்தவை,
ஒன்றுகூடி
'கவிதையாவதிலிருந்து
தப்பினோம்'
என்று ஓட்டமெடுக்க,
வானம்
எப்போதும் போல்
எழுதப்படுகிறது.
***
ஈரோட்டில் மக்கள் சிந்தனைப் பேரவையின் நூல் அழகம் நடந்து கொண்டிருந்தது. அங்கே வால்பையன், ஈரோடு - கதிர், கார்த்திகைப் பாண்டியன் மற்றும் ஸ்ரீதரை போதை ஸ்தலத்தில் சந்தித்துப் பேசினேன். வெகு நேரம் பேச முடியாமல், கிளம்ப வேண்டியதாகப் போனதில் வருத்தம் தான். எத்தனை பைசாவுக்கு புத்தகங்கள் வாங்குவது என்று பட்ஜெட் போட்டுக் கொண்டு வந்தேன். உரையாடலில் 1500/- ரூ தருகிறார்கள் என்றதும், பட்ஜெட் துண்டை உதறி தோளில் போட்டுக் கொண்டு கிளம்பினேன். ஆம், அதே 1500/-க்கு தான் புத்தகங்கள் வாங்கினேன். உரையாடல் குழுவினரே, கொக்கி போட்றாதீங்கப்பா..!!
என் கஸின் பாலாஜியிடம் 'கதை பரிசு பெற்றிருக்கிறது' என்றேன். அசுவாரஸ்யமாய், 'எந்த கதை?' என்று கேட்டான். 'அதான்.. அந்த ட்ரெய்ன்.. தாத்தா வருவாரே..! அது..!' என்றேன். 'அதுக்கா..? ஒரு பைத்தியக்காரன் தான் அதுக்கெல்லாம் ப்ரைஸ் குடுப்பான்...!' என்றான். ;)
என்னென்ன புத்தகங்கள் வாங்கினேன் என்பதெல்லாம் அவ்வப்போது படித்த அனுபவத்தில் பந்தாவாக சொல்லப்படும். இப்போது ஒன்றே ஒன்று..!
நேஷனல் புக் ட்ரஸ்ட்டில் எப்போதும் தரமான மொழிபெயர்ப்புகள், நல்ல புத்தகங்கள் வெளியிடப்படும் என்று கேள்விப்பட்டிருந்தேன். அவர்களின் நூல் வைப்பியில் தேடும் போது, பைசா கிட்டத்தட்ட காலி என்பதால், ஒரே ஒரு 'கன்னடச் சிறுகதைகள்' தொகுப்பு மட்டும் வாங்கினேன். ரசீது எழுதும் போது, அங்கிருந்த ஒருவர் பொருள்விளங்கா கனி போல் என்னையே ஒருமாதிரி பார்த்து விட்டு, 'ஒருவேளை இலக்கியவியாதியோ?' என்ற நினைப்பில் கையில் காதுகளைக் கொடுத்து மாட்டியிருந்த கைப்பைகளைப் பார்த்தார். அதில் ஒன்று உயிர்மை. ஐயம் அறவே தீர்ந்தவராக,
'உயிர்மையில் என்ன வாங்கினீங்க..?'
'ஜெயமோகனின் கண்ணீரைப் பின் தொடர்தல், ஆதவனின் என் பெயர் ராமசேஷன்'
'ஆதவனா..? நல்ல ரைட்டர். இதை விட காகித மலர்கள் படிங்க. நல்லாயிருக்கும்..'
ரசீது எழுதிக் கொண்டிருந்தவர் தலையுயர்த்தி, 'ஆதவன் வைஃபும் நானும் ஒரே ஆஃபீஸ்' என்று சொல்லி விட்டு, எந்த ஆஃபீஸ் என்று கேட்பதற்குள், பில்களுக்குள் தலை புதைத்துக் கொண்டார்.
'சரிங்க..! இதில் ஆரம்பிக்கிறேன். பிடிச்சிருந்தா மத்ததையும் படிக்கறன்..' சொல்லி விட்டு விடுபட்டேன்.
ஒரு படைப்பாளி அந்தத் துறையில் சிறந்தவர் எனில், அவரது ஒரு படைப்பு அவரது மற்ற படைப்புகளை நம்மைத் தேட வைக்க வேண்டும். இன்று மாலையிலிருந்து நானும் ஆதவனைத் தேடுபவர்களில் ஒருவன்.
'என் பெயர் ராமசேஷனில்' நம் இயல்பான மனநிலைகளையும், அதில் போடுகின்ற வேஷங்களையும் கதறக் கதறப் பிய்த்துக் காட்டுகிறார். சில பத்திகள் ::
...
ஸீட்டின் கைப்பிடி மேலிருந்த அவள் கைமீது படுகிறாற் போல என் கையை வைத்துக் கொண்டேன். அவள் எதுவுமே நடக்காதது போலத் திரையையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
அ. அவளுக்கு ஆட்சேபணையில்லாமல் இருக்கலாம்.
ஆ. அவளுக்குப் பிடிக்கவில்லை. ஆனால் உடனே கையை விலக்கி என்னைப் புண்படுத்த வேண்டாமென்று கையை அப்படியே வைத்துக் கொண்டிருக்கிறாள்.
இ. ஒருவேளை தற்செயலாக என் கை அந்த நிலையில் இருப்பதாக நினைத்து என் அடுத்த இயக்கத்துக்காகக் காத்திருக்கிறாள்.
ஈ. கை தொடப்படுவது அவளுக்குப் பெரிய விஷயமேயில்லை. நான் வேறு எதையாவது தொட வேண்டும் அல்லது பேசாமலிருக்க வேண்டும்.
...
...
"நீ ஒரு மேல் ஷாவனிஸ்ட்."
"நான் ஒரு நார்மல் மனிதன். உன்னைப் போல இன்ஹிபிஷன்ஸ் உள்ளவனில்லை" என்றேன் நான். "உடலுறவு பற்றிய உன்னுடைய குற்ற உணர்ச்சிகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக, அல்லது நீ புழங்கும் சூழ்நிலையில் ஆரோக்கியமான ஸெக்ஸ் அனுபவங்களுக்கான வாய்ப்புகள் இல்லாததையே ஒரு virtueவாகக் காண்கிற முயற்சியில் ஆண்-பெண் இண்டலெக்சுவல் பரிமாற்றங்களைப் பற்றிய பெரிதுபடுத்தப்பட்ட கற்பனைகளில் நீ திளைக்கிறாய்-உன்னுடைய தரத்துக்கு எந்தப் பெண்ணும் வராதது போலவும், எனவே உன் இயலாமை மன்னிக்கப்படுவது போலும்! இது உன்னை நீயே ஏமாற்றிக் கொள்வதே தவிர வேறில்லை... லுக், உன்னை ஒரு பெண் நேசிக்க வேண்டுமென்றால் உனக்கு எஸ்கிமோக்களைப் பற்றியும் சூரியப் பொட்டுகள் பற்றியும் தெரியுமென்று அவளிடம் நிரூபிக்க முயல்வதால் எந்தப் பிரயோஜனமுமில்லை... பேசாமல் ஒரு தனியிடத்துக்கு அவளை எப்படியாவது அழைத்துச் சென்று, எனக்கு உன்னை ரொம்பப் பிடித்திருக்கிறது, எனக்கு உன்னைத் தவிர இந்த உலகத்தில் வேறெதுவும் வேண்டியதில்லை என்று சொல்லு. நீ ரொம்ப அழகாயிருக்கிறாய், உன்னுடைய எல்லாமே அழகாயிருக்கிறது என்று அவளுடைய மாரை அமுக்கு...."
"என்ன?" என்றான் மூர்த்தி.
...
...
சினிமாவில் வேறு வழியில்லை, விளக்குகளை அணைத்துவிடுவதால் திரையைத் தான் பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் அங்கும் எல்லாரும் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருந்தால் நான் இன்னொன்றைப் பார்த்துக் கொண்டிருப்பேன். 'டாக்டர் நோ'வில் உர்ஸூலா ஆண்ட்ரெஸ் பீச்சில் குளித்து விட்டு செல்லுகிற காட்சி உங்களுக்கு நினைவிருக்கும். இந்தக் காட்சியில் எல்லோரும் உர்ஸூலாவைத் தானே பார்த்துக் கொண்டிருப்பார்கள்! ஆனால் நான் ஸீன் கானரியின் இடுப்புக்குக் கீழே ஏதாவது அசைவு தென்படுகிறதா என்று அங்கேயே பார்த்துக் கொண்டிருந்தேன்.
...
மேற்கண்டவற்றைப் படித்து விட்டு ஒரு முடிவுக்கு வந்து விடாதீர்கள். சொல்லியவை கூழாங்கற்கள்; நதியின் போக்கோ வேறு!
பல நாட்களுக்குப் பின் விழுந்து விழுந்து சிரிக்க வைத்த நாவல். இன்று இரவு ஹோட்டலுக்கு சாப்பிடச் சென்று அங்கே ஸீன் கானரி பாராவைப் படித்து விட்டு நான் மட்டும் கிறுக்கு போல் சிரித்துக் கொண்டிருந்தேன்.
புத்தகம் : என் பெயர் ராமசேஷன்
புத்தக வகை : நாவல்.
ஆசிரியர் : ஆதவன்.
பதிப்பகம் : உயிர்மை பதிப்பகம்.
கிடைக்குமிடம் : உயிர்மை பதிப்பகம். நூற்கடைகள்.
விலை : 100 ரூ. (ஆனால் ஸ்டிக்கரில் 120 போட்டு அது தான் வாங்கினார்கள்.)
***

13 ஆகஸ்ட் 2009 குங்குமத்தில் ஒரு சிறுகதைக்கு வரையப்பட்ட ஓர் ஓவியம். இந்த மனிதரின் தூரிகைக்கு மட்டும் உயிர் கொடுக்கும் திறன் இருந்தால் எத்தனை அழகிகள் கிடைப்பார்கள்...! என் ஓவிய ஆர்வத்திற்கு முதல் குருஜி மாருதி தான். அந்தப் பித்து பற்றி பிறகு பேசுவோம்..! :)
***
சேர்க்கப்பட்டது :: 7:19 PM 8/12/2009
கூச்சமாகத் தான் இருக்கின்றது. ஆனால் பாபாஜி போன்ற பதிவுலகில் எனக்கு மூத்தவர்கள் சொல்வது மிகவும் மகிழ்ச்சி தருவதால், அந்த மகிழ்ச்சியை நீங்களும் பெறுவதற்காக இங்கே சேர்க்கிறேன்.
/*
இரா வசந்தகுமார் :: என் பயணத்தின் பிம்பங்கள்…!: மனையியல்.: வெளியானவுடன் வாசித்தது. அப்போதைக்கு இதுதான் #1. இப்போதைய வாசிப்பிலும் தலை மூன்றில் ஒன்று. மிக கச்சிதமாக, சொல்ல வந்ததை ஆயிரம் வார்த்தைக்குள் முழுமையாக கொடுப்பது லேசுப்பட்ட காரியம் இல்லை. வெகு நேர்த்தியாக செய்திருக்கிறார்.
*/
மற்ற கதைகளைப் பற்றிய பாபாஜியின் 'உண்மையான' கருத்துக்களுக்கு இந்தக் கண்ணியைத் தொடருங்கள்.
***
மறுபடியும் சேர்க்கப்பட்டது :: 6:46 PM 8/13/2009
கே.ரவிஷங்கர் என்ற பதிவர் அதே பாபாஜி பதிவில் 'மனையியல்' பற்றி ஒரு விமர்சனம் வைத்திருக்கிறார். அதையும் படிக்கலாமே!
/*
//இரா வசந்தகுமார் :: என் பயணத்தின் பிம்பங்கள்…!: மனையியல்.: மிக கச்சிதமாக, சொல்ல வந்ததை ஆயிரம் வார்த்தைக்குள் முழுமையாக கொடுப்பது லேசுப்பட்ட காரியம் இல்லை. வெகு நேர்த்தியாக செய்திருக்கிறார்.//
இந்தக் கதையில் சுஜாதா நடை நெடி தாள முடியவில்லை.அவர் சொந்த நடையிலேயே எழுதலாமே!இது லேசுப்பட்ட காரியம் அல்ல??????????
கடைசியில் ஒரு hardcore
பாசாங்குத்தனம்.அவருடைய பயணத்தின் பிம்பங்கள் ஒட்டவில்லை.
இடலி விற்பவரின் உரையாடலோடு கதையை ஆரம்பித்து எதிலாவது முடித்திருக்கலாம்.
பிடித்த வரிகள்:
//புது வெப்பம், புது ஸ்பரிசம் உணர்ந்த டெய்ஸி அவரை உற்றுப் பார்த்தாள். //

Subscribe to:
Posts (Atom)