Tuesday, July 22, 2008

குருவும் ஐன்ஸ்டீனும்!

மிழ் படங்கள் அறிவியலை வளர்க்கவில்லை என்று யாராவது சொன்னால் நான் கோபப்படுவேன்.

இந்தப் பாடலின் வரிகளை மட்டும் கவனியுங்கள்.



ம்ஹூம்.. சொன்னால் கேட்டால் தானே!! சரி, சரி.. ஸ்ரீதேவியோடு, இரண்டாவது சரணத்தைக் கவனியுங்கள்.

'வானம் விழுந்தது. வளைந்தது.'

ஐன்ஸ்டீன் சொன்னதை எப்படி எளிமையாக நம் மனதில் ஆழப் பதியுமாறு சொல்லி இருக்கிறார்கள், பார்த்தீர்களா..?

இதை எல்லாம் அறிவியல் வகுப்பிலோ, 'காண்போம் கற்போமிலோ' காட்டினால் தானே அறிவு வளரும். நம்ம எஜுகேஷனல் சிஸ்டத்தையே டோட்டலா மாத்தணும் சார்..!

ஹைக்கூவின் ஒன்று விட்ட சகோதரனான ஸைஃபைக்கூ (Scifaiku) பற்றி இன்று கொஞ்சம் படிக்க முடிந்தது. இப்போது சிந்தித்துக் கொண்டிருக்கும் தளத்திற்கு ஏற்றார் போல் இருந்ததால், சில முயற்சிகள்.

1. டாமி குரைத்தது.
எட்டி, "யாரது?".
"பூமியிலிருந்து மனிதன்!".
(Inspiration : இக்கதை!)

2.ஆப்பிள் மரம்.
குழப்பத்தில் கனிந்த பழம்.
சாத்தான் வலையிலா, நியூட்டன் தலையிலா?

3.இரும்பைத் தங்கமாக்க
இச்சையா?
அணு எண் மாற்று!

4.நிலவில் சாம்பல்.
இறங்கிய இந்தியன்,
பூசிக் கொண்டான், "சிவ...சிவ...".

5.முதல் இரட்டை வேடம்.
எந்த நாயகன்?
ஒளி.

6.Schrodingeரிடம் சிக்கிய பூனை.
இருக்குமா, இறக்குமா?
ஃபிஃப்டி ஃபிஃப்டி!

No comments: