Saturday, July 26, 2008

ஆனந்தப் பிரவாகம்!



"நேற்று யமுனையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதாமே..!"

"ஆம்..! அதை ஏன் கேட்கின்றாய்! என் பசுக்களையும், கன்றுகளையும் ஆற்றங்கரையுல் மேய விட்டு விட்டு இன்றைய வைபவத்தை எண்ணி இன்பூதி கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில் 'அம்மா.. அம்மா' என்று குரல்கள் கேட்டன. கண் திறந்து பார்த்தால், ஆஹா..! அதை எப்படி சொல்லுவேன். கரைகளைக் கரைத்துக் கொண்டு ஆங்காரமாய், அலங்காரமாய் யமுனா வந்து கொண்டிருந்தாள்..."

"ஆங்காரமாய்... தெரிகின்றது. அது என்ன அலங்காரமாய்..?"

"நீ அறிந்ததில்லையா..? இமயம் முதல் தன் கரையெங்கும் பூத்திருக்கும் , காய்த்திருக்கும் , கனிந்திருக்கும் பூக்களையும், காய்களையும், கனிகளையும் அள்ளிக் கொண்டு, தன் உடலெங்கும் மணக்கவும் யமுனா வந்தாள்..!"

"ஓஹோ! நீ என்ன செய்தாய்..?"

"முன் நின்று கேட்டேன்! 'ஹேய் யமுனே! என்ன செய்கின்றாய்? நந்தரின் ஊருக்குள், கோபாலனின் நகரத்திற்குள் நீ இப்படி தறிகெட்டு, பாயலாமோ? இது உனக்குத் தகுமோ?'. அவள் வெட்கத்துடன் கூறினாள்.'ஐயா..! நாளை நடக்க இருக்கும் கண்ணனின் திருநீராட்டு வைபவத்தைக் காணவே ஓடோடி வந்துள்ளேன். அவனுக்காகவே நான் இத்தனை மலர்களையும், பழங்களையும் அள்ளிக் கொண்டு வந்துள்ளேன். தயவித்து என்னை அனுமதிக்க வேண்டும்..'"

"அடடே..! பிறகு நீ என்ன செய்தாய்..?"

"உண்மையைக் கூறினேன்! "அம்ம..! யமுன தேவி! கண்ணன் மேல் எத்தனை அன்படி உனக்கு! எத்தனை ப்ரேமையடி உனக்கு! ஆஹா! எங்களுக்கு உன்னை நினைத்தால் பெருமையாக இருக்கின்றது. நீ இப்படி கண்ணனின் நீராட்டு வைபவத்திற்கு வர வேண்டிய அவசியம் என்னடி? இன்னும் கொஞ்ச காலம் சென்றால், அவன் பாலகனான பின் தினம் ஸ்நானிக்கவும், கொஞ்சிக் குதூகலித்து விளையாடவும், குதித்து கும்மாளமிடவும், நர்த்தனம் ஆடவும் உன்னிடத்திலே தான் வரப் போகிறான். அப்போது முழு ஆனந்தம் கொள்ளடி தேவி! உன் வெண் நுரைகளால், அந்தக் கார் வண்ணனை அள்ளிக் கொஞ்சு! பனிநீரால் அவனைக் குளிப்பாட்டு! ஆநிரைகள் மேய்த்து வந்து ஆசுவாசப்படுத்திக் கொள்பவனுக்கு ஆனந்தம் கொடு! எங்களுக்கெல்லாம் உன்னைக் காண ஆனந்த அழுக்காறடி! இப்போது சென்று வாயடி!' என்றேன். மகிழ்வுடன் திரும்பிச் சென்றாள்.."

"நன் காரியம் செய்தாய்...!"

"டியே..! செய்தி அறிந்தனையோ?"

"என்னடி..!"

"இதோ இவள் இருக்கின்றாளே, எனக்கு வலது புறமாய் இருக்கின்றாளே! இவல் நேற்று மோர் கடைந்து வெண்ணெய் எடுத்தாளாம். எடுத்து உறியில் பானைகளில் இட்டு, கட்டி வைத்து, காலையில் கண்டால் காணவில்லையாம்..இது என்னடி..? ஏதேனும் மந்திர மாயமா இல்லை இந்திர ஜாலமா..?"

"நீ இன்னும் விஷயம் அறியாதவளாக இருக்கிறாயே..! ஈதெல்லாம் அந்த கண்ணனின் விளையாட்டுகள் தான்..!"

"யார்..? இன்று நீராட்டு வைபவம் நடக்கும் நந்தகோபனையா சொல்கிறாய்..? அந்த சிறு பிள்ளையையா?"

"அவன் சிறு பிள்ளை இல்லையடி! மாயப் போக்கிரி!





























படம் உதவி நன்றி ::http://www.astrologyforu.com/img/festivals/lord-krishna.jpg

No comments: