Friday, July 25, 2008

எப்போ அடுத்த ரெண்டு கல்யாணங்கள்?

தாஜ் மகாலுக்குள் சென்று பூஜை செய்த சிவசேனைக்கு எதிர்ப்பாகவோ, அதை தடுத்து கைது செய்த மதச்சார்பற்ற மத்திய அரசுக்கு எதிர்ப்பாகவோ, அமர்நாத் கோயிலுக்கு கொடுத்த நிலத்தை திரும்ப பெற்றுக்கொண்டதற்கு எதிர்ப்பாகவோ, அமெரிக்காவுடனான ஒப்பந்தத்திற்கு எதிர்ப்பாகவோ, மாநிலத்தை குஜராத்தாக மாற்றும் திட்ட முதற்படியாகவோ வைத்த குண்டுகளில் அதிர்ந்து போன பெங்களூருவுக்கும், அதன் மக்களுக்கும் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவிப்பதுடன், 'இது கண்டனத்துக்குரியது' என்ற வழக்கமான டெம்ப்ளேட்டை எடுத்துப் போட்ட சிவராஜ் பாட்டீலுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொண்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போகிறேன்.

ண்மையில் ஷேக்ஸ்பியரின் ஃப்ரேஸஸ் படித்துப் பார்த்த போது, பல நாம் தினம் பயன்படுத்துவனவாக இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. இனி தைரியமாக நாமும் சொல்லிக் கொள்ளலாம், "ஷேக்ஸ்பியர் என்ன சொன்னாருனா...".

All that glitters is not gold / All that glisters is not gold

Love is blind

If music be the food of love, play on

Some are born great, some achieve greatness, and some have greatness thrust upon 'em

Stony hearted

To be or not to be, that is the question

Too much of a good thing

What a piece of work is man

When sorrows come, they come not single spies, but in battalions

What's in a name? That which we call a rose by any other name would smell as sweet.

நன்றி :: Phrases தொகுப்பு..

ழாம் வகுப்பில் இருந்து பனிரெண்டாம் வகுப்பு வரை பவானியில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் வழியில் 14-வது கி.மீ.யில் இருக்கும் சக்தி க்ரூப்ஸுக்கு சொந்தமான பள்ளியில் தான் படித்தேன். சுகர்ஸ் ஃபேக்டரி அமைந்திருக்கும் பிரம்மாண்ட பகுதி ஆப்பக்கூடல்.

இதன் முழுப் பொருளாதாரமும் ஃபேக்டரியை நம்பியே இருக்கும். கரும்பு கொண்டு வரும் விவசாய வண்டிகள், மொலாசஸ் எடுத்துச் செல்லும் ட்ராக்டர்கள், முக்கியமான ஜங்ஷனில் இருப்பதால் பலதரப்பட்ட ஊர்க்காரர்கள் வந்து செல்வதால் அவர்களை நம்பி ஹோட்டல், மளிகைக் கடைகள், பெட்ரோல் பங்கு, தள்ளுவண்டி, லாட்டரிக் கடை, ஃபேன்சி ஸ்டோர், டெய்லரிங் ஷாப்ஸ், தியேட்டர்கள், குன்று, குன்றின் மேல் குமரன், கிரிக்கெட் விளையாட்டு காடு, ட்யூஷன் சென்டர், எலெக்ட்ரானிக்ஸ் ஷாப், மாவரைக்கும் மில், டெலிஃபோன் பூத் இவற்றோடு சில கட்சிக் கொடிகள்.

இங்கு சொல்லப் போவது ஒரு நண்பனின் வீட்டைப் பற்றியது.

நால்ரோட்டில் இறங்கி கொஞ்சம் போல் மேடேறி, பெட்ரோல் பங்கை கடந்து, விவேகானந்தா பள்ளியைத் தாண்டி வலச் சந்துக்குள் புகுந்து செல்ல அவன் வீடு வரும். அவர்கள் பயோகேஸ் தயாரித்து அதன் மூலம் அடுப்பெரித்தது அந்நாட்களில் அதிசயமாகத் தெரிந்தது. ஒரு பெருங்குடையைக் கவிழ்த்தாற் போல் சேம்பர். அதற்கு மாட்டுச் சாணியைக் (எஸ்! த ஸேம் புல்ஷிட்!) கரைத்து குழாய் வழியாக இணைப்பில் இணைத்து, வெயிலில் சூட்டைக் கிளப்பி, இன்னும் எனக்குப் புரியாத சில மெதட்கள் வழியாக கேஸ் எடுத்து மற்றொரு பைப்லைன் வழியாக வீட்டுக்குள் எடுத்துச் சென்று எனக்கு பருப்புக் குழம்பும், பூசணிக்காய் கூட்டும் செய்து தருவார்கள்.

இதைப் போல் பல வீடுகளிலும் கேஸேம்பர்கள் இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. இன்னும் டீப்பான கிராமப் பகுதிகளில் சென்று பார்த்திருந்தால் இருந்திருக்கலாம்.

அமெரிக்காவின் மொத்த மின்சாரத் தேவையில் 3%-ஐ மாட்டுச் சாணிகளிலும், வீணாகும் தொழுவப் பொருட்களிலும் இருந்து பெற்று மில்லியன் கணக்கான நாட்டின் வீடுகளுக்கும், தொழிற்சாலைகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மைக்கெல் வெபர், அமண்டா டி க்யூலர் ரிப்போர்ட் கொடுத்துள்ளனர்.

காண்க :: மாட்டுச் சாணியில் இருந்து மின்.

அணு மின்சார அவசரக்காரர்கள் பார்க்க வேண்டிய விஷயம் இது.

செம ஹிட்டாக தலைகால் புரியாமல், பின்னங்கால் பிடரியில் இடிக்க, விழுந்தடித்துக் கொண்டு ஓடிய ஹாலிவுட் படங்கள் சிலவற்றில் இருக்கும் அறிவியல் அபத்தங்களை பட்டியல் போட்டுக் காட்டுகின்றது யாஹூ மூவீஸ்.

இவர்கள் பேரரசு படங்களையும், கேப்டன் மீசையை முறுக்க ஆள் பறக்கும், பாலண்ணா 'ஜெய் ஆஞ்சநேயா' சொல்லி தொடை தட்ட, இரயில் ஓடும் அற்புதங்களையும், இன்ன பிற சங்கதிகளையும் பார்க்கவில்லை போலும்!

இரண்டு செய்திகளுக்கும் நன்றி :: இயற்பியல் மற்றும் இயற்பியன்.





மிச்சமிருக்கும் ரெண்டு பேருடைய திருமணங்கள் எப்போன்னு கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்க சேரன் சார்!

No comments: